Contact us at: sooddram@gmail.com

 

அழகிய இடைக்காடு

யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 751ம் நம்பர் ஊவுடீ பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாற்றில். இந்த இரண்டு 'பெரிய' சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது எங்களூர். றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.

751 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது 'வளலாய்' பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு - வளலாய் வரைஓடியது. பிறகு நின்றுவிட்டது. 'லோக்கல்' பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு 'மவுசு'. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.

பஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 751ம் பஸ்ஸில்தான் 'பெல்பொட்டம்' காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் 'பருத்துறை' போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை 'பெடியன் ரியூசன் போய்விட்டான்' என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப 'நிறம் மாறாத பூக்கள்' என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். (ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 'தெறி'களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் 'சுப்பிரமணியபுரம்' படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.

'அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் 'குப்பை கூட்டுற' காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டும(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன? பார் இவங்கடை தலையை? காகக்கூடு மாதிரி' என்று அப்பா சொல்லுவார். நான் இளந்தாரியாக வந்த காலத்தில் 'தொள தொள' டியபபல ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் 'சூஇயக்கக்' கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.

ஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் 'வெளி' இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரஙகளும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.

சாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் 'நொழுக் நொழுக்' என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.

செல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் 'சுடலை வீதி' ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். 'உங்கடை ஊரிலை தார்போட்ட றோட் இல்லையே' என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு 'திறில்' தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே? போதாக்குறைக்கு 'முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன' சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். 'முருகேசர் பேயுடன் தண்ணி' இறைக்காதபோது, 'அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்' என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும(!), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். 'நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே?' என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் 'நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே' என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

சீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை - இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்டவிதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு 'மினுக்கப்பட்ட' சைககிள்களில் திரிவினம். 'இறைப்பு மிசின்'தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.

ஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் 'நகர்ந்து' பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி?. சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.

குச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் 'வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்' என்று கேட்கக்கூடாது.

சொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் 'கோப்பிறேசன்' என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.

இப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.

பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள்.

ஆருக்கு கையில் 'மசில்' கூட என்று கையை 'ட' போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.

 

அழுக்கு ஐஸ்பழ வியாபாரி, 'சீசனுக்கு' மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, 'போஓஓஓத்தல் பித்த்தளை அலுமினியமிருக்கா' ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, 'ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு' என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என் உணர்கின்றேன்.

அவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு 'மருந்து' அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து 'இண்டைக்கு 'சிக் லீவு' எடுக்கவேணும்' என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.

முள்முருக்கு - கல்யாண முருங்கை

சூஇயக்கம் -விடுதலை இயக்கம் ஃஇயக்கங்கள்

பத்தைக்காடு - பற்றைக்காடு

தெறி - பொத்தான்ஃபித்தான் - டிரவவழn

அப்புக்காத்து - வக்கீல், வழக்குரைஞர்

குச்சொழுங்கை ஸ்ரீ குச்சூஒழுங்கை - சிறிய ஒழுங்கைஃபாதை

(எஸ் சக்திவேல்)

நன்றிகள்:

(1) புகைப்படங்கள்: சுகேசன் கேதீஸ்வரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com