|
||||
|
சம்பந்தன் ஐயாவின்
காலம்கடந்த
ஞானம்
தமிழர் தேசிய
கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்
அவர்கள் திரிகோணமலையில்
நடைபெற்ற
கிழக்கு மாகாணசபைக்;
தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்
22 வருடங்களின்
பின்னர் தன்னை மறந்து சில கசப்பான
உண்மைகளை
இப்போது கூறியுள்ளார்.
வீரகேசரிப்பத்திரிகையில்
அவரது பேச்சு இடம்பெற்று
இருந்தது
சம்பந்தன் அவர்கள்
என்ன கூறியிருக்கின்றார்
என்றால் : “2000ம் ஆண்டில்
சந்திரிகா
அரசியல் அமைப்பு திருத்தம்
ஒன்றை முன் மொழிந்தார்
அது அதிகாரதீர்வை
அடிப்படையாகக்
கொண்டிருந்தது.
அதில் அதிகாரப்பகிர்வு
பச்சையாக
சமஸ்டி என்று கூறாவிட்டாலும்
இந்திய மாநில அதிகாரங்களை
விட அதிகாரங்களைக்கொண்டதாக
அது அமைந்திருந்தது.
ஆனால் அதுவும்
ஐக்கியதேசியக்கட்சியின்
எதிர்ப்பால்
தடைபட்டுப்போனது.”
(நன்றி வீரகேசரி ).
ஐனாதிபதி சந்திரிக்கா
அவர்கள் யு.என்.பி கட்சியை நம்பித் தீர்வுத்திட்டத்தை
கொண்டுவரவில்லை
சந்திரிக்கா
அரசு சிறுபான்மை
அரசு என்பதால்
சம்பந்தன்
கொடுத்த உத்தரவாத்தின்
நம்பிக்கையிலும்
அவரின் கட்சியிடம் இருந்த ஐந்து பாராளுமன்ற
உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி
கட்சியிடம்
இருந்த நான்கு பாராளுமன்ற
உறுப்பினர்களையும்
அதாவது மொத்தமாக இந்த ஒன்பது
வாக்குகளையும்
மனதில் வைத்துக்கொண்டுதான்
தீர்வைக்கொண்டு
வந்தார். சந்திரிக்கா
அவர்கள் தமிழ்மக்களுக்கு
மிகவும் தரமான கௌரவமான
அதாவது தகரம் போன்று
இல்லாமல்
தங்கமான தீர்வை பாராளுமன்றத்தில்
கொண்டுவந்தார்.
ஐனாதிபதி சந்திரிக்கா
அவர்கள் சம்பந்தன்
மேல் நன்றாகவே
அக்கறை கொண்டிருந்தார்.
அதேபோல நம்பிக்கையையும்
கொண்டிருந்தார். சம்பந்தன்
அவர்களை சாம் என்று
அன்பாக அழைப்பது மட்டுமல்ல
புலிகளினால்
சம்பந்தன்
அவர்களுக்கு
உயிர் ஆபத்து இருப்பதால்
ஜேர்மனியில்
இருந்து குண்டு துளைக்கமுடியாத
வாகனத்தை
தருவித்து
கொடுத்து
உச்சகட்ட
பாதுகாப்பையும்
வழங்கினார்.
ஆனால் சம்பந்தனோ
கடைசிநேரத்தில் தமிழர் தீர்வுக்கு
ஆதரவு தரமுடியாது
என்று சந்திரிகாவின்
காலைவாரிவிட்டார் தமிழர்களுக்கு
கிடைக்கவிருந்த
கிட்டத்தட்ட
சமஸ்டிக்கு
ஒப்பான தீர்வை எதிர்க்கட்சியுடன்
இணைந்து எதிர்த்தார்.
ஆமாம் அன்று
கிடைத்த பொன்னானவாய்ப்பை
கைநழுவவிட்டு
தமிழ்மக்களின்
வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு
இப்போது தமிழ்மக்களின்
வாக்குகளுக்காக
யு.என்.பி கட்சியால்
அரசியல் தீர்வு அடிபட்டுபோனதாம்
என்று அவர்கள் மேல் பழியைப்போட்டு
தப்பிவிடப்பார்க்கின்றார்.
வடக்கில் இனவாதம்
பேசி அதிக
ஆசனங்களை
பெற்றும்
மக்களுக்கு
எவ்வித பிரயோசனமும்
இல்லாத இந்த கூட்டமைப்பினர் இப்போது கிழக்கு
மாகாணத்தில்
தாம் ஆட்சியைப்
பிடிப்பதற்காக
இனவாதத்தை
விதைத்து
வருகின்றார்கள்.
கிழக்கு முதலமைச்சர்
சந்திரகாந்தன்
தலைமையில்
அனைத்து இன மக்களுக்கும்
வேறுபாடுகாட்டாமல்
கிழக்கை முன்னேற்றி
வருகின்றார்.
இதனைப் பொறுக்கமுடியாத
இந்த கூட்டமைப்பினர்
குழப்பியடிக்கவருகின்றனர்.
அப்பாவி முஸ்லிம்
மக்கள் புலிகளால்
படுகொலைசெய்யப்பட்டபோது
கண்டிக்காமல்
கண்மூடிக்கொண்டு
இருந்துவிட்டு
இப்போது தாம் ஆட்சியைப்பிடிப்பதற்காக
முஸ்லீம்
காங்கிரசின்
உதவியுடன்
ஆட்சியமைக்கப்
போகிறார்களாம்.
தமிழ் இளைஞர்களை
உசுப்பேத்தி
அந்த அழிவை
வைத்து பாராளுமன்றம்
சென்றவர்கள்
கிழக்கிலும்
அதே பாணியைப்பின்பற்றி முஸ்லீம் இளைஞர்களையும்
பலிக்கடாவாக்கப்போகின்றார்கள்.
ஏன் என்றால்
நீர் இன்றி
மீன் உயிர்வாழ
முடியாதோ
அதுபோல இந்த கூட்டமைப்பினருக்கும்
போர் போராட்டம்
இன்றி பதவியைப்பிடிக்கமுடியாது.
இல்லாவிட்டால்
தமிழ்மக்களின்மேல்
அக்கறை உள்ளவர்களாக
இருந்திருந்தால்
இப்போது இருக்கும்
நல்ல சூழ்நிலையில்
தமிழ்மக்களுக்கு
ஆரோக்கியமான
வாழ்க்கையை
பெற்றுக்கொடுக்கலாம்.
இந்தியா அமெரிக்கா
உட்பட சர்வதேச சமூகம் கூட இந்த
கூட்டமைப்பு
சம்பந்தனுக்கு
என்ன கூறியிருக்கின்றார்கள்
என்றால் பாராளுமன்றத்தெரிவுக்குழுவில்
முதலில் பங்குபற்றுங்கள்
அதன்பின்னர்
பார்க்கலாம்
என்கிறார்கள்.
ஆனால் இவர்கள்
நொண்டிச்சாட்டுக்களை
சொல்லிக்கொண்டு
எந்த தீர்வுக்கும்
செல்லமாட்டர்கள். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து
எதிர்த்துக்கொண்டே
இருப்பார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில்
ஆளுங்கட்சி
தமிழ் மக்களுக்கு
தீர்வைக்கொண்டு
வரும்போது
எதிர்க்கட்சி
எதிர்ப்பதுதான்
கடந்தகால
வரலாறு. சந்திரிக்கா
அவர்கள் தீர்வைக்கொண்டு
வந்தபோது
எதிர்க்கட்சித்தலைவர்
ரணில் அவர்கள் தமிழர்களுக்கான
தீர்வை எதிர்த்தது
மட்டுமல்ல
பாராளுமன்றத்தில்
வைத்து எரித்தும்
தனது எதிர்ப்பைக்காட்டினார்.
அதே ரணிலுடன்
இணைந்து சம்பந்தன்
சரத்பொன்சேகாவை
ஜனாதிபதி
ஆக்குவதற்காக
தமிழ்மக்களிடத்தில்
வாக்குகள்
கேட்டார்
யாழ்ப்பாணத்தில்
ரணில் அவர்களுடன்
இணைந்து சிங்கக்கொடியை
ஏற்றியிருந்தார்
சம்பந்தன்.
கடந்த கிழக்கு மாகாணசபைத்தேர்தலில்
தமிழர் தேசிய கூட்டமைப்பு
போட்டியிடாமல்
விலகி இருந்ததிற்கு
காரணம் சொன்னார், இத்தேர்தலில்
போட்டியிட்டால்
வடக்கு-கிழக்கு
பிரிப்புக்கு
தாங்கள் துணைபோவதாக
போய்விடும்
என்று வீரமான அறிக்கைவிட்டுவிட்டு
இப்போது அதே கிழக்குமாகாணத்
தேர்தலில்
போட்டியிடுகின்றார்கள்.
மூன்றாம்தர அரசியல்தனம்
புரியும்
சம்பந்தன்
அவர்கள் தமிழர் நலனை முன்னிறுத்தி
எப்படி ஒரு
தீர்வை பெற்றுத்தருவார்.
காலம்காலங்களாக
எதிர்க்கட்சிகளுடன்
இணைந்து ஆளுங்கட்சியை
எதிர்ப்பது
தேர்தல்வரும்போது
தமிழ்மக்களின்
வாக்குகளுக்காக
அந்த எதிர்க்கட்சிகளைத்திட்டி
இனவாதம் பேசுவது இப்படியாக
உள்ளத்தில்
ஒன்றும் உதட்டில் வேறொன்றுமாகப்
பேசி 60 வருடங்களாக
தமிழ்மக்களை
ஏமாற்றி தங்கள் பதவிக்காலத்தை
ஓட்டியவர்களின்
கபடத்தனத்தை
அனைவரும்
புரிந்துகொள்ளும்
காலம் வந்துவிட்டது.
டென்சில்(கனடா) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |