|
||||
|
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா
அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல் ........ மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கம் . நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ எல்லாம்வல்ல இயற்கையை வேண்டிக்கொள்கிறேன். இந்த கடிதத்தை யாராவது உங்களிடம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். உண்மையிலேயே நான் அறிந்தவரை நீங்கள்…….. மனிதப்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதர், அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர், சிறந்த ஆன்மீகவாதி. தமிழ் மொழிமீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர். தொழில்சார் வாழ்வில் அப்பழுக்கில்லாது கடைமையை செய்தவர். சட்ட நுணுக்கங்கள் மீது புலைமை கொண்டவர். இலங்கை அரசியலில் அடிமுதல் நுனி வரை ஆழமாக தெரிந்தவர் . மேற்சொன்ன உயர் தகைமைகளை கருத்தில் கொண்டு எத்தனையோ விமர்சனகளுக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களை முதலமைச்சர் ஆக்கினார்கள்.. உங்கள் தேர்தல் பிரச்சாரங்களும் அப்படியே இருந்தது . எங்கே நீங்கள் தமிழீழத்தை பெற்றுக் கொடுத்துவிடுவீர்களோ என தென்னிலங்கை மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் . Second செல்வநாயகம் என உங்களை தென்னிலங்கை ஆய்வாளர்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள். மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எனக்கு தாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் நான் தீர்த்து வைக்கிறேன் என மேடைகளில் வீரமுழக்கம் செய்தீர்கள். ஒரு கணம் மகிந்த கூட தடுமாறித்தான் போனார் . அவ்வளவுக்கு உங்கள் மேடைப்பேச்சுக்கள் இருந்தது . நீங்கள் கேட்டதைவிட அபார வெற்றியடையச் செய்து அரியாசனம் ஏற்றினார்கள் எம்மக்கள். உங்கள் மூலமாக தங்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என தமிழ் மக்கள் ஆழமாக நம்பினார்கள் . அப்படி தீவிரமாக நம்பியவர்களில் நானும் ஒருவன். இது உங்களுக்கான எனது அறிமுகம். PERFORMANCE EVALUATION அடுத்து நீங்கள் இதுவரை செய்ததது என்ன? உங்கள் மீது மக்களின் தற்போதய அபிப்பிராயம் என்ன என்பதை சொல்ல விளைகிறேன். உங்கள் மீதான இந்த PERFORMANCE EVALUATION ஐ இரண்டு வகையாகப்பார்க்கலாம். 1) மாகாண சபை மீதான உங்கள் நிர்வாகம். 2) தமிழர் பிரச்சினை மீதான உங்கள் அரசியல் நிலைப்பாடு மாகாண சபை மீதான உங்கள் நிர்வாகம் . மாகாண சபையினூடாக இதுவரை நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என பார்க்கலாம். ஆரம்பத்தில் மஹிந்த அரசாங்கம் என்னை ஒன்றுமே செய்யவிடவில்லை என்றீர்கள். வடமாகாண ஆளுநர் அவர்கள் உங்கள் நிர்வாகதிற்கு பெரும் தடையையாய் இருக்கிறார் என்றீர்கள். அதில் ஓரளவு உண்மை இருந்தது. மைத்திரி ஜனாதிபதியானவுடன் ஓடிப்போய் சந்தித்தீர்கள். மைத்திரி அரசு உடனடியாக அவரை மாற்றியது . அப்பாடா இனியொரு தடையுமில்லை .எங்கள் முதல்வர் சுதந்திரமாக இனி செயல்படுவார் என நம்பினோம். ஆனாலும் பழையகிழவி கதவைத்திறவடி என்றபடி ரணில் உங்களுக்கு தடையாய் இருப்பதைப்போல உங்கள் நடவடிக்கைகள் இருந்தன. பிரச்சினைப்பட்ட புருஷன்- பெண்சாதி போல ஒரேமேடையில் ரணிலும் நீங்களும் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தீர்கள். சரி அவர்களை விடுவோம் . உங்கள் கட்சிக்குள்ளேயே உங்களை சுயமாக இயங்க விடவில்லை என புகார் செய்தீர்கள். .சரவணபவன் ஊடகவியலார்களை உங்களுக்கெதிராக தூண்டிவிடுகிறார் என்றீர்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற முன்னாள் ஆயுததாரிகள் உங்களுக்கு இடையூறு செய்வதாக சொன்னீர்கள். டக்லஸ் தேவானந்தா அவர்கள் உங்களுக்கெதிராக சூழ்ச்சிகள் செய்கிறார் என்றீர்கள்......... இப்படியே போனால் யாரோடுதான் நீங்கள் இணைந்து செயல் படுவீர்கள் ? எப்போதுதான் நீங்கள் செயல்படதொடங்குவீர்கள்? . ஒருவேளை தமிழீழம் கிடைத்தால்தான் உங்களால் ஒழுங்காக செயற்படமுடியுமா ? சாட்டுக்களை சொல்லி கடைமையிலிருந்து தவறுவதற்கு நீங்கள் எதற்கு? ஓ -லெவல் பெயில் விட்ட ஒரு சிறுவனே முதலமைச்சராக இருந்துவிடலாமே? சரி உங்கள் வழிக்கே வருகிறேன். அரசாங்கம் முதற்கொண்டு உங்கள் கட்சி உட்பட தமிழ்கட்சிகளில் உள்ளவர்கள் உங்களை சுயமாக இயங்க விடவில்லை என்பதில் உண்மையிருக்கிறது. நான் மறுக்கவில்லை. எல்லா விடயங்களிலும் அவர்கள் தடைகளை ஏற்படுத்துவதில்லை? அவர்கள் தடைஏற்படுதும் விடயங்ககளை விட்டுவிடுங்கள் . அவைமட்டுமா உங்கள் முன்னுள்ள பணிகள்? . மாகாண சபைக்கு கீழ் எத்தனையோ திணைக்களங்கள், நிறுவனங்கள் , அமைப்புகள் நிறையவே உள்ளன. அவையெல்லாம் உங்கள் ஆணைக்கு உட்பட்டவை. இந்த நிறுவனங்களின் முன் எவ்வளவோ பணிகள் குவிந்து கிடக்கின்றன. உங்கள் உத்தரவு இன்றி அவை எதுவும் செய்யமுடியாது. உங்கள் ஆணைக்குட்பட்ட இந்த பணிகளை நீங்கள் செய்வதை மத்திய அரசு கூட தடுக்க முடியாது. அவ்வாறு, நீங்கள் செய்யக்கூடிய நிர்வாகம் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பணிகள் உங்கள் முன் நிறையவே இருக்கின்றனவே . அவற்றுள் எத்தனை பணிகளை நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள் ?செய்துள்ளீர்கள் ? அவற்றுக்குகூட மகிந்தவையும் , ரணிலையும், சுரேஷ் ஐயும் , சரவணாபவனையும், டக்லஸ் ஐயும் காரணம் சொல்லப்போகிறீர்களா ? உங்கள் நிர்வாகத்திறைமை இன்மையையும், அந்தந்த துறைசார் அறிவின்மையையும் பயன்படுத்தி உங்கள் ஆணைக்குட்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் உங்களுக்கு தெரியுமா? இந்த தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து யாழ்பாணத்தில் " தண்ணியடிக்கும்" போது நிறை வெறியில் எப்படியெல்லாம் உங்களையும் உங்கள் அமைச்சர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை கேலிசெய்வது உங்கள் காதுகளுக்கு வருவதில்லையா? இவற்றை நான் எழுந்தமானமாகவோ ,கற்பனையிலோ எழுதவில்லை. இந்த ஊழல் திணைக்கள தலைவர்களினால் மக்களுக்கு செல்லவேண்டிய கோடிக்கணக்கான பணம் மிகவும் நுட்பமான முறையில் முடக்கப்படுவதை நீங்களோ சரி உங்கள் அமைச்சர்களோ சரி அறிவீர்களா? எல்லா தவறுகளையும் கண்டறியும் எல்லாத் துறைசார் அறிவும் உங்களிடம் இருக்காது. ஒரு முதலமைச்சருக்கு அது தேவையும் இல்லை. ஆனால் அந்தந்த துறைகளின் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களை ( CONSULTANTS) நீங்கள் அணுகலாம் அல்லவா? நான் கேட்கிறேன் உங்களிடம் எத்தனை ஆலோசகர்கள் இருக்கிறார்கள்? உங்கள் இந்த பலவீனத்தை பயன்படுத்தி ஆழ்ந்த அறிவும் அனுபவுமும் உள்ள அந்தந்த திணைக்கள தலைவர்கள் எப்படியெல்லாம் உங்களையும் உங்கள் அமைச்சர்களையும் மிகவும் இலகுவாக ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் ஆணைகுட்பட்ட நிறுவனங்களில் நடக்கும் இதற்கும் மத்திய அரசாங்கதிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு முற்றுமுழுதாக நீங்கள் தானே பொறுப்பு? இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய எவ்வளவோ சலுகைகள் கிடைக்காமல் போகின்றன அல்லது குறைந்த தரத்தில் குறைவான எண்ணிக்கையில் கிடக்கின்றன ? இது உங்ககளை நம்பி வாக்களித்த அப்பாவிமக்களுக்கு நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பச்சை துரோகமல்லவா? இதுவும் பஞ்சமா பாதகங்களுள் ஒன்றெனத்தானே கருதப்படவேண்டும். உங்கள் ஆணைகுட்பட்ட செயக்கூடியவற்றை செய்வதற்கு தகைமையற்ற நீங்கள் சுயநிர்ணய உரிமை, சமஸ்டி தீர்வு ,தமிழர் தன்னாட்சி என்பவற்றை பெறுவதைப்பற்றி பேசுவது மலினமாக தெரியவில்லையா ? மக்களின் நிர்வாக நிறுவனம் ஒன்றுக்கு தலைமை ஏற்பவர் மக்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வரும்போது அவற்றுக்கான தீர்வை சொல்லவேண்டுமே ஒழிய அவற்றை செய்யமுடியாமைக்கான காரணங்களை சொல்லக்கூடாது. செய்ய முடியாவிடில் அந்த பதவியில் இருக்க கூடாது. உங்களை நாடிவரும் மக்களிடம் "நானே ஒண்டும் செய்யேலாமல் இருக்கிறன், நீங்கள் வேற ......." என்று மனம் சலித்து பலரிடமும் கூறிவருகிறீர்கள். அண்மையில் கரவெட்டியில் இருந்து மணல் பிரச்னை சம்மந்தமாக உங்களுடன் பேச வந்த மக்களிடம் நீங்கள் இவ்வாறான பதில்களைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடன் சற்று நெருங்கி பழகுபவர்களுடன் " நான் ஏன் இதுக்குள்ள வந்தன் ....." என்ற சலிப்புடன் பேசுகிறீர்கள். இதுதான் ஒரு முதலமைச்சருக்கு அழகா? உங்களை சலிப்படையச் செய்வது யார் என்று வெளிப்படையாக மக்களிடம் சொல்லுங்கள்? தனியே மத்திய அரசாங்கத்தை குறைசொல்லி தப்பித்து கொள்ளாதீர்கள். உங்கள் கட்சிக்குள்ளேயேயும் வெளியேயும் உங்களை செயற்படாமல் தடுப்பவர்களை மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். தேர்தலில் இவர்களை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துங்கள். மக்களுக்காக முதலமைச்சர் பதவியே ஒழிய கட்சிக்கானதல்ல. மாகாண சபை சம்பந்தமாக இறுதியாக ஒன்றை சொல்லுகின்றேன். மத்திய அரசாலும் தமிழ் கட்சிகளாலும் தடைகள் ஏற்படுதப்படும் விடயங்களை சரிசெய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபடும் அதேவேளை உங்களால் செய்யக்கூடிய, உங்கள் ஆளுகைக்குட்பட்ட, அதிகாரதிற்குட்பட்ட பணிகளை திறமையாகவும் வினைத்திறனுடனும்(EFFICENTLY AND EFFECTIVLY) செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருநாட்டின், ஒரு மாகாணத்தின் இயக்கதிற்கான உயிர் மூச்சான ,அடிநாதமான "ADMINISTRATIVE MACHINERY" ஐ - "GOVERNMENT MECHANISM" த்தை "PRODUCTIVITY" யுடன் இயங்கச் செய்யுங்கள். இந்த விடயத்தில் இதுவரைக்கும் நீங்கள் தோல்விகண்ட ஒரு முதலமைச்சரே. உங்கள் நிர்வாக திறன் சம்பந்தமாக பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன். 1) இதுவரைக்கும் உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட நிறுவனக்களின் எத்தனை தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருக்கிறீர்கள் ? 2) அந்தந்த நிறுவங்களின் தலைமை செயலகங்களுக்கு எத்தனை முறை நீங்களோ அன்றில் உங்கள் அமைச்சர்களோ சென்றிருக்கிறீர்கள்? அங்கே எத்தனை வினைத்திறன் மிக்க கூட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள்.? 3) அந்தந்த நிறுவனங்களின்/தலைவர்களின்/ அதிகாரிகளின் “PERFORMANCE EVALUATION”ஐ அறிவதற்கான என்ன “MECHANISM” த்தை நீங்கள் கடைப்பிடிகிறீர்கள் ? 4) இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் முகாமைத்துவத்தை எப்படி நீங்கள் CROSS CHECK பண்ணுகிறீர்கள்? 5) உங்கள் தலைமைச் செயலாளரால் கையெழுத்து இடப்பட்டு இந்த நிறுவனக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடக்கிறது? அதை மிக நுட்பமாக இந்த நிறுவன தலைவர்கள் சுருட்டிகொள்வதை ஏன் நீங்கள் அறிந்திருக்கவில்லை?. Tender Procedure, Quality Assurance இவற்றில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி யாருமே கண்டு பிடிக்காத முறையில் அந்தந்த துறைகளில் பழம்தின்று கொட்டை போட்ட இந்த நிறுவனத்தலைவர்களால் மக்களுக்கு போய் சேரவேண்டிய பெருமளவு பணம் அல்லது பொருட்கள்/சேவைகள் முடக்கப்படுவதை நீங்கள் அறிவீர்களா ? 6) இவை ஒன்றும் நிகழவில்லை என்கிறீர்களா? 7) தேர்தலுக்காக உங்கள் மீது சுமப்பத்தப்படும் அபாண்ட குற்றச்சாட்டுகள் என்கிறீர்களா? நீதியின் பாலும் தர்மதின்பாலும் அடித்து கூறுகின்றேன் மேலே நான் சொன்னவை உண்மையென்று. தமிழர் பிரச்சினை மீதான உங்கள் அரசியல் நிலைப்பாடு .அடுத்து சர்ச்சைக்குரிய உங்கள் அரசியல் நிலைப்பாட்டை பற்றி எழுதுகிறேன். மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் வீரமுழக்கம் செய்தீர்கள். நாலாபக்கமும் ராணுவமும் பொலிசாரும் சூழ்ந்திருக்க பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிரசாரமேடையில் பிரபாகரன் ஒரு சுத்த மாவீரன் என நீங்கள் வீரவசனம் பேசியதைக்கேட்டு நாங்கள் எல்லோருமே மெய்சிலிர்த்துப்போனோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எனக்கு தாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் நான் சட்டரீதியாக தீர்த்து வைக்கிறேன் என வாக்குறிதியை வழங்கினீர்கள். இராணுவத்தை உடனடியாக வெளியேற்றுகிறேன் என்றீர்கள் , மீள்குடியேற்றம் இந்தா நடைபெறப்போகிறது என்றீர்கள் , காணி, போலீஸ் அதிகாரங்களைஎல்லாம் சட்டரீதியாக பெறமுடியும் என்றீர்கள், எதைஎடுத்தாலும் சட்டரீதியாக சமாளிக்க முடியும் என்று வாக்குறிதி அளித்தீர்கள்.. உங்கள் பிரசார மேடையில் சலுகைகளைக்காட்டிலும், உரிமைகளைப்பற்றிதான் அதிகம் கர்ச்சித்தீர்கள். உண்மையிலேயே தந்தை செல்வா மீண்டும் வந்துவிட்டார் என தென்னிலங்கையே பயப்பிட்டது. நீங்கள் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த ஓரிரு நாட்களில் மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளீர்கள் என அறிவித்தீர்கள். பல்லாண்டுகால இனமுரண்பாட்டிற்கு இணக்க அரசியலே சிறந்த தீர்வாக அமையுமென அடித்து சொன்னீர்கள். இணக்க அரசியலுக்கான வரைவிலக்கணத்தையும் வரையறை செய்தீர்கள். "இணக்க அர¬சியல் என்று கூறும் போது இதற்கு முன்னர் இருந்¬த¬வர்கள் இணக்க அர-சி¬ய¬லுக்குக் கொடுத்த வியாக்¬கி¬யா¬னத்தை நாங்கள் கூற முன்¬வ¬ர¬வில்லை. சரி¬சம உரித்¬துக்¬க¬ளை¬யு¬டைய இரு மக்கட் கூட்¬டங்கள் என்ற அடிப்¬ப¬டையில் எமக்¬கி¬ருக்கும் உரி¬மை¬களை உள¬மாற எடுத்¬து¬ரைத்து மனி¬தா¬பி¬மான அடிப்¬ப¬டையில் அவற்றை அர-சாங்¬கத்¬துடன் பேசிப் பெற்றுக்கொள்¬¬வ¬தையே நான் இணக்க அர¬சியல் என்று கூறு-கின்றேன். இதற்கு இரு தரப்¬பா¬ரி¬டமும் கொடுத்¬தெ¬டுக்கும் அந்த மனோ பக்¬குவம் இருக்க வேண்டும்". என்று இணக்க அரசியலை வரையறை செய்தீர்கள். ஆரம்பகாலத்தில் உங்கள் நடவடிக்கைகள் நம்பிக்கைதருவதாக இருந்தது. இணக்க அரசியல் மூலமே தமிழ்மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஆரம்பகாலங்களில் நீங்கள் தீவிரமாக நம்பியிருந்தீர்கள். உங்கள் நடவடிக்கைகள் கூட அதற்கு அமைவாகவே அமைந்தன. பின்னர் ஏனோ தெரியவில்லை மஹிந்த அரசுடன் முரண்பட்டுக்கொண்டீர்கள். மஹிந்த உங்களை ஏமாற்றிவிட்டார் என அடிக்கடி சொன்னீர்கள். இணக்க அரசியல் என்ற உங்கள் நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகுவதைப்போல உங்கள் செயல்பாடுகள் அமையலாயின. எதிர்ப்பு அரசியலில் மெல்ல மெல்ல இறங்குவதைப்போல ஒருபிரேமையை ஏற்படுத்தினீர்கள். காலங்காலமாக எதிர்ப்பு அரசியலுக்கே மூளைச்சலவை செய்யப்பட்டுபோன தமிழ் மக்களிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் உங்களுக்கு நல்ல பெயர் வர ஆரம்பித்தது. பின்னர் மைத்திரி அரசு வந்தபின்னர் மீண்டும் இணக்க அரசியலே சிறந்தது என ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் அரசியல் நிலைப்பாடுதான் என்ன.? கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் உள்ளக ,புற அழுதங்களுக்கமைய உங்கள் அரசியல் கொள்கயை நீங்கள் மாற்றிகொள்கிறீர்களா ? அவ்வாறு உங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்துபவர்களை ஏன் உங்களை நம்பி வாக்குப்போட்ட மக்களுக்கு தெரிவிக்கவில்லை ? சரி,அதைவிடுங்கள் அண்மையில் 20 நாட்கள் வெளிநாட்டில் இருந்து வந்த உடனேயே சூட்டோடு சூடாக நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என அறிக்கை விட்டீர்களே, உங்களை யார்கேட்டது நீங்கள் யாரை ஆதரிக்கின்றீர்கள் என்று.? எவ்வளுவு ஒரு மோசமான அறிக்கை அது. நீங்கள் நடுநிலையாக நிற்கப்போவதாக கூறியிருக்கிறீர்களே, நடுநிலையாக நின்று தீர்ப்புசொல்ல நீங்கள் என்ன நீதவானா? ஒருகட்சியினால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் நீங்கள். ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கூட தன் கட்சிக்காரனாக இருந்தாலும் மஹிந்த தோற்பார் எனக்கூறியதன் மூலம் தன் நிலைப்பாடை தெளிவாக வெளிப்படுத்தினார். தர்மத்தின் பக்கம் நின்றார். எல்லோரிடமும் நல்ல பிள்ளை பெயர் எடுப்பதற்கான முயற்சியா உங்கள் நடுநிலைமை நிலைப்பாடு? உங்களின் இந்த பிழையான " நடுநிலை"ப் பிரகடனத்தினை ஒவ்வொரு கட்சியினரும் தத்தமக்கு ஏற்றவாறு அர்த்தம் கற்பிப்பது (interpretation) எவ்வளவு ஒரு மோசமான நிலைக்கு மக்களை இட்டுச்சென்றிருக்கிறது. உங்கள் கட்சிதான் சிறந்ததென்றால் மக்களுக்கு சொல்லி அவர்களுக்கு நல்வழியைச் காட்டுங்கள். உங்கள் கட்சி மக்களுக்கு துரோகம் செய்கின்றதென்றால் அதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்லுங்கள். மக்களை சரியாக வழிநடத்தக்கூடிய மாற்றுகட்சியை சுட்டி காட்டுங்கள். மக்களுக்கு சரியான தீர்ப்பை சொல்லுவதற்கு முதலமைச்சர் பதவி தடையாக இருந்தால் அதை தூக்கி எறிந்துவிட்டு ,மக்களை சரியாக வழிநடத்துங்கள். அதைவிடுத்து நடுநிலைமை என்று நாடகமாடாதீர்கள். உங்களின் இன்னுமொரு வரலாற்று தவறை சுட்டிக்காட்டுகிறேன். மேலேசொன்ன உங்களின் தேர்தல் சம்பந்தமான அறிக்கையில் தமிழ் எம்.பி கள் யாருமே அமைச்சர் பதவிகளை வகிக்கக்கூடாது என்றும் அதற்கான வியாக்கியானத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். இது இராஜதந்திர அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஒரு பாமரக்கூற்று. போரினால் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய கொஞ்ச நஞ்சத்தை கூட கிடைக்கவிடாது தடுக்கும் COLOMBO-7 சிந்தனை இது. அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் சரியோ பிழையோ அங்கையன் ராமநாதன்,விஜய கலா மகேஸ்வரன், டக்லஸ் தேவானந்தா போன்றோர் தம்மை சார்ந்தவர்களுக்கு செய்த நன்மைகளை விட எந்த ஒரு தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை. மத்திய அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை ஏற்று மக்களுக்கான இயலுமானவற்றை செய்துகொண்டு , தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்தலுக்கான ராஜதந்திரம், அரசியல் சாணக்கியம், மதிநுட்பம் உங்களுக்கு இல்லை என்றால் மெளனமாக இருங்கள். இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து நீங்களும் நாங்களும் எவ்வளவோ கற்கவேண்டும். உங்கள் இறுதி இலக்கு மக்கள் சேவையையே தவிர மக்களை உசுப்பேற்றும் வீர வசனங்களல்ல. யார் குத்தினாலும், எப்படிக்குத்தினாலும் மக்கள் பசிதீர்க்கும் அரிசியானால் சரி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மேலும் அந்த அறிக்கையில் "தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்" என்று கூறியிருக்கிறீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள் ? தமிழர்களின் பிரச்சினைக்குரிய உங்கள் உறுதியான தீர்வு என்ன ? சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமா? சஷ்டி முறையிலான தீர்வா ? வடக்குகிழக்கு இணைப்பா ? ஒரு நாடு இருதேசமா ?. இணக்க அரசியலா ? ஒற்றையாட்சிக்குள் தீர்வா ? அல்லது தமிழீழமா? ........ என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். பட்டும் படாமலுமான நீங்கள் அறிக்கை விடுவதால் ஒவ்வொருவரும் தங்களுகேற்றபடி உங்கள் அறிக்கையை அர்த்தப்படுத்துகிறார்கள் . ஏன் இந்த ஒளிவுமறைவு? உங்கள் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன். 1) மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தாருங்கள் ஆளுநரை மாற்றுவது முதல்கொண்டு பெரும்பாலானபிரச்சினைகளை எல்லாம் நான் சட்டரீதியாக தீர்க்கிறேன் என்றீர்களே, எத்தனை பிரச்சினைகளை சட்டரீதியாக நீங்கள் தீர்த்தீர்கள்?.தீர்க்கமுடியாது என தெரிந்துகொண்டே சொன்னீர்களா? அல்லது சட்டம் உங்களுக்கு தெரியவில்லையா? 2) காலம்காலமா தீர்கப்பபட முடியாமல் போன தமிழர் பிரச்சினைக்கான உங்கள் தீர்வு என்ன ? 3) இணக்க அரசியலினூடாகத்தான் எம்பிரச்சினை தீர்க்கப்படமுடியுமா ? 4) எதிர்ப்பு அரசியலினூடாகத்தான் எம்பிரச்சினை தீர்க்கப்பட முடியுமா? 5) சர்வதேசம் எங்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் என நீங்ககள் நம்புகிறீர்களா? 6) சிங்கள மக்களோ சரி தென்னிலங்கை அரசுகளோ சரி மாகாண சபைக்கும் மேலாக எந்த ஒரு தீர்வையாவது தரும் என்று சிங்கள மக்களின் மன நிலையை நன்குணர்ந்த,சிங்களத்தின் நண்பனான,சம்மந்தியான நீங்கள் நினைக்கின்றீர்களா ? 7) மாகாண சபையை திறம்பட நிர்வகித்து ,போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றி ஒன்று பட்ட இலங்கைக்குள் கிடைக்ககூடிய நடைமுறைச் சாத்தியமான உரிமைகளைப்பெற்று எமது பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என நினைக்கிறீர்களா? மதிப்புக்குரிய ஐயா நான் மேலே சொன்னவை உங்களை பாதித்திருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் மேலே சொன்னவை தனிப்பட்ட என் கருத்துமட்டுமல்ல பலபேரின் கண்ணீரும் கவலையும் அவை. தயவு செய்து கிடைக்க முடியாது என உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களை விட்டுவிட்டு உங்கள் கையிலிருக்கும் மாகாண சபையையும் அதன் நிர்வாகத்தையும் வினைத்திறனுடன் செய்து அதனால் மக்களுக்கு போய் சேரக்கூடிய உச்சக்கட்ட பலன்களை உறுதிப்படுத்துங்கள். மக்களை ஏமாற்றுவதை அரசியற்கட்சிகளிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் மகானாய் மட்டும் இருங்கள்,அவர்களின் மகனாய் இருக்காதீர்கள்...... நன்றி வணக்கம் அன்புடன் சி.நவாதரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |