|
||||
|
ஹகீம் காக்காவுக்கு
வன்னியிலிருந்து ஒரு கடிதம் எஸ். ஹமீத் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! அன்புள்ள ஹக்கீம் காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். மனம் திறந்து உங்களிடம் சில கேள்விகள் கேட்பதற்காக இந்தப் பகிரங்க மடலை வரைகிறேன்.அத்துடன் சில வேண்டுகோள்களையும் முன்வைக்கலாமென விரும்புகிறேன் . எப்பொழுதாவது நிகழும் கல்யாணத்திற்கும் கத்தத்திற்கும் வரும் அன்னியர் போல தேர்தல் காலங்களில் மட்டும் வன்னிக்கு வந்து, மூச்சு முட்ட 'வாக்குகளை' விழுங்கி ஏப்பம் விட்டுப் போவது நியாயமா என்ற எங்களின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா, ஹக்கீம் காக்கா...? வன்னியின் கண்ணீரையும் கஷ்டத்தையும் என்றுமே காணாத உங்களுக்கு வன்னியைப் பற்றிப் பேசுவதற்கு எவ்விதத் தார்மீக உரிமையும் இல்லை என்பது தெரியாதா,காக்கா? பசியோடும் பட்டினியோடும் வாழும் வன்னி மாவட்ட மக்களுக்கு ஒரு கைப்பிடி அரிசியைக் கூட வழங்க வக்கில்லாத நீங்கள், இப்பொழுது வாய் திறந்து வாக்குக் கேட்கிறீர்களே, உங்கள் நா கூசவில்லையா, காக்கா..? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் நீங்கள் வன்னியில் களமிறக்கியுள்ளவர்களில் எத்தனை பேர் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் என்று உங்களால் கூற முடியுமா, காக்கா..? வன்னி மக்களுக்காக ஒரு வார்த்தையேனும் பேசியிராத-ஒரு செப்புக் காசைக் கூடச் செலவு செய்திராத- எந்த ஒருசேவையையேனும் செய்திராத-மக்கன், மடையன், செக்கன், கேனையனையெல்லாம் வன்னியில் களமிறக்கிவிட்டு, இப்பொழுது வாக்குப் போடுங்கள் என்று சொல்வதன் உள்ளர்த்தம் என்ன காக்கா...? சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸில் வன்னியில் வாக்குக் கேட்கும் வேட்பாளர்களில் வன்னி மக்களுக்காகப் பாராளுமன்றத்தில் பேசக்கூடியவன் என்று சொல்லக் கூடிய ஒருவனை உங்களால் காட்ட முடியுமா, காக்கா...? ஒரு மேடையில் தன்னைப் பற்றியே பத்து நிமிஷம் ஒழுங்காகப் பேசத் தெரியாதவனெல்லாம் பாராளுமன்றம் போய் சமூகத்தைப் பற்றி என்ன பேசிக் கிழிக்கப் போகிறான் என்று உங்களால் சொல்ல முடியுமா, காக்கா...? 1989ம் ஆண்டிலிருந்து ஒரு பிரதிநிதித்துவத்தைத் தந்த வன்னி முஸ்லிம்களுக்கு நீங்கள் காட்டிய நன்றி என்னவென்று உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கேளுங்கள், காக்கா. புலிகளினால் வெறுங்கையுடன் விரட்டியடிக்கப்பட்ட- தமது தாயகத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட இந்த அகதி மக்களை , பிரபாகரனுடன் தேனிலவு கொண்டாடிய நீங்கள் வெறுமனே ''இடம்பெயர்ந்தவர்கள்'' என்று எழுதிக் கையொப்பமிட்டு நயவஞ்சக நாடகமாடியதைத் தவிர, நல்லது ஏதேனும் செய்யவில்லையே, அது ஏன் காக்கா...? மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் மரணித்ததோடு, கட்சியின் கொள்கை, துணிவு, வீரம், சேவை, அறிவார்ந்த திட்டமிடல், ஆக்கபூர்வமான அணுகுமுறை, அசராத தலைமைத்துவப் பண்பு என எல்லாவற்றையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டீர்களே, காக்கா. இந்த நேரத்தில் ஒரு மூலையின் ஓரமாய் உட்கார்ந்து தலையில் அடித்து அழுவதைத் தவிர, போராளிகளாகிய எங்களால் என்ன செய்ய முடியும் காக்கா..? எனினும் அல்லாஹ் பெரியவன்; கருணை மிக்கவன். அந்த அல்லாஹ்வின் அன்பினாலும் இரக்கத்தினாலும் பெரும் கிருபையினாலும் ரிசாத் என்னும் அரசியல் ஆளுமை வன்னிக்குக் கிடைத்தது. அல்லாஹ்வுக்கன்றி எதற்குமே அஞ்சிடாத நெஞ்சமும் அகதி மக்களின் மீது இயல்பாகவே கொண்ட பாசமும் முஸ்லிம்களின் வாழ்வு மீதான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறியும் வேட்கையும் வீரமும் கொண்ட தலைவன் அவன். தன்னம்பிக்கையும் தளராத இதயமும் கொண்டவன் அவன்; சாணக்கியமும் சதிகளை முறியடிக்கும் சாமர்த்தியமும் மிக்கவன் அவன்; எத்தனை பொதுபல சேனாக்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடும் வல்லமை மிக்க வன்னிச் சிங்கம் அவன். தன்னுடைய சமூகத்துக்கெதிராக அநியாயங்கள் நிகழும் போதெல்லாம் தைரியமாக எழுந்து நிற்கும் தானைத் தளபதி அவன்; எங்கள் இதயங்களின் தண்மதி அவன். ரிசாத் பதியுதீன் எனும் அவனாலன்றோ, அகதிகளின் அவலம் ஓரளவேனும் தீர்ந்தது; அவனாலன்றோ அபிவிருத்தி நடந்தது. அவனாலன்றோ, ஆயிரமாயிரம் வீடுகளின் இளைஞர்கள் தொழில் பெற்றுத் தமது குடும்பத்தில் ஒளியேற்றினர். அவனாலன்றோ,ஓலைக் குடிசைகள் கல் வீடுகளாகிக் கொண்டிருக்கின்றன; அவனாலன்றோ களிமண் வீதிகள் கார்ப்பட் வீதிகளாகின்றன. அவனாலன்றோ கல்விக்கூடங்களும் பள்ளிவாசல்களும் புனரமைக்கப்படுகின்றன.அவனாலன்றோ தொழிற் பயிற்சிக் கூடங்களும் சுயதொழில் முயற்சிகளும் உருவாகின்றன; அவனாலன்றோ சிங்களப் பெருந் தேசியவாதத்தின்அச்சுறுத்தல்களிலிருந்துபாதுகாப்புக்கிடைக்கின்றது. அவனாலன்றோஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான உரிமைக் குரல் ஓங்கி, உரத்து, ஒலிக்கின்றது. எனவே, ரிசாதைப் பற்றியும் அவரது கட்சியைப் பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு, வன்னியில் போட்டியிடுவதிலிருந்தும் வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு உங்களை வினயமாகவும் மன்றாட்டமாகவும் கேட்டுக் கொள்கிறேன். அந்த அகதி மக்களுக்கு நீங்கள் ஏதேனும் உபகாரம் செய்வதாக இருந்தால், நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் பதில் சொல்வதில் அச்சம் உள்ளவராக இருந்தால் வன்னித் தேர்தற் களத்திலிருந்து வாபஸ் பெறுவதைத் தவிர இப்போதைக்குவேறு தெரிவுகள் எதுவும் உங்களுக்குக் கிடையாது என்பதே எனதும் மிகப் பெரும்பாலான வன்னி மக்களினதும் கருத்தாகும். ''உங்கள் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்'' (அல்- குர்ஆன்) இப்படிக்கு, வன்னித் தம்பி, எஸ். ஹமீத். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |