ஒக்ஸ்போட் சங்கத்தால் மகிந்தவுக்கு
சுதந்திர பேச்சுரிமை
மறுக்கப் பட்டது
(டி.பி.எஸ். ஜெயராஜ்)
ஜனாதிபதியின்
ஒக்ஸ்போட் பேச்சு
இரத்துச் செய்யப்பட்டதால்
ஸ்ரீலங்காவில்
இன்னலுறும் தமிழர்கள்
ஏதாவது பயனடைந்தார்களா? பின்விளைவுகளால்
எந்தவித பயனுமற்ற
இதை நீங்கள் எதற்காக
பெரிய வெற்றியாகக்
கொண்டாடுகிறீர்கள்?
இந்த நேரத்தில்
தேசிய நல்லிணக்கத்துக்கும்
இன ஒற்றுமைக்கும்
இது அவசியப் படுமா?
ஐக்கிய
இராச்சியத்தின்
“டைம்ஸ்” பத்திரிகையி;ன் பத்திரிகையாளர்கள்,
ஜேம்ஸ் ஹார்டிங்
மற்றும் பென் மக்கின்ரயர்
ஆகியோர் 2010 டிசம்பர்
1ந் திகதியன்று
லண்டனின் டொச்சஸ்ரர்
ஹோட்டலை விட்டு
வெளியேறத் தயாராகும்போது,
ஸ்ரீலங்கா ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸவின்
உதவியாளர் அவசரமாக
வரவேற்புத் தளத்துக்கு
ஓடிவந்து அவர்களைத்
தொடர்பு கொண்டார்.
“ஜனாதிபதி ராஜபக்ஸ
உங்களை அவசரமாகச்
சந்திக்க விரும்புகிறார்.
தயவு செய்து
உங்களால் வரமுடியுமா?”
ஜனாதிபதியின்
தூதுவர் கேட்டுக்
கொண்டார்.
இரண்டு பத்திரிகையாளர்களும்
இப்போதுதான் ஸ்ரீலங்கா
ஜனாதிபதியுடனான
ஒரு மணிநேர நேர்காணலை
ஹோட்டலில் அவரது
தங்கும் அறைத்
தொகுதியில் வைத்து
முடித்து விட்டு
போவதற்கு தயாரானார்கள்.
இப்போது அவர்கள்
திரும்பவும் அழைக்கப்
படுகிறார்கள்.
அந்த அழைப்புக்கு
இணங்கிய “டைம்ஸ்”
எழுத்தாளர்கள்
திரும்பவும் மேலே
சென்றபோது பதற்றமான
ராஜபக்ஸ இவர்களுக்காக
நடைக் கூடத்திலேயே
காத்து நிற்பதைகண்டார்கள்.
நோகாணல் நடத்திய
போது இருந்த மனங்கவர்
போக்குக்கு முரண்பாடாக
இப்போது ஸ்ரீலங்கா
ஜனாதிபதி கோபமும்
மற்றும் உற்சாகமிழந்து
மனச்சோர்வடைந்தவராகக்
காணப்பட்டார்.
ஒக்ஸ்போட் யூனியன்
அமைப்பின் தலைவர்
ஜேம்ஸ் கிங்ஸ்டன்
இப்போதுதான் மறுநாள
;(டிசம்பர் 2) நிகழ்த்துவதற்கு
நிச்சயிக்கப்
பட்டிருந்த சொற்பொழிவு
இரத்துச் செய்யப்பட்டு
விட்டதாக தனக்கு
தெரியப் படுத்தியதாக
ராஜபக்ஸ இரு பத்திரிகையாளர்களுக்கு
தெரிவித்தார்.
தமிழ் அரசியற்
செயற்பாட்டாளர்களால்
மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கும்
எதிர்ப்பு நடவடிக்கைகளினால்
ஒக்ஸ்போட் சங்கம்,
ஜனாதிபதி ராஜபக்ஸவின்
பாதுகாப்புக்கு
உத்தரவாதம் வழங்க
முடியாது என்பதே
திடீரென இரத்துச்
செய்யப்பட்டதற்காக
கூறப்பட்ட காரணம்.
“ நான் நினைக்கிறேன்
அவர் (ஒக்ஸ்போட்
யூனியன் அமைப்பின்
தலைவர் ஜேம்ஸ்
கிங்ஸ்டன் ஜேம்ஸ்
கிங்ஸ்டன்) இந்த
நபர்களால் அச்சுறுத்தப்
பட்டிருக்கலாம்”
என்றார் ஸ்ரீலங்கா
ஜனாதிபதி.
ஒக்ஸ்போட்
சங்கம்;
ஜனாதிபதி
ராஜபக்ஸாவின்
மனநிலை விளங்கிக்
கொள்ளக் கூடியதாக
இருந்தது. ஸ்ரீலங்கா
தலைவர் தனது பெரிய
உதவியாளர்கள்
பட்டாளத்துடன்
பிரித்தானியாவுக்கு
வந்திருந்ததன்
பிரதான நோக்கம்
ஒக்ஸ்பேர்ட்டின்
மதிப்பு மிக்க
ஒக்ஸ்பேர்ட் சங்கத்தில்
சொற்பொழிவாற்றுவதற்கே.
இப்போது சங்கம்
ஒருதலைப் பட்சமாக
மிகவும் குறகிய
முன்னறிவித்தலுடன்
அதை இரத்துச் செய்துள்ளது.
இது ஸ்ரீலங்காவில்
தமிழீழ விடுதலைப்
புலிகளின் இராணுவத்தை
வெற்றிகரமாகத்
தோற்கடித்த மனிதரை
நிச்சயமாக அரசியல்
ரீதியில் மட்டம்
தட்டும் செயலாகும்.
பிரித்தானியாவுக்குள்
வாழும் தமிழீழ
விடுதலைப் புலிகளின்
ஆதரவாளர்கள் ஒன்றாக
முறுக்கியெடுத்த
தமது பலமான எதிர்ப்பினால்
ஒக்ஸ்போட் சங்கத்தை
திணறடித்து அதனால்
வழங்கப் பட்ட அழைப்பை
மாற்றியமைக்க
கட்டாயப் படுத்தியிருக்கிறார்கள்.
இந்த ஒருதலைப்படசமான
இரத்துச் செய்த
நிகழ்ச்சி உண்மையில்
ஜனாதிபதி ராஜபக்ஸவிற்கு
ஒரு அரசியல் தலைகுனிவை
ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய
காலங்களில் அவர்
வெற்றி அலைகளின்
சிகரத்தில் பவனி
வந்து கொண்டிருந்தார்.
இப்போது அவர் எளிய
உணவான இலைக் கஞ்சியை
அருந்தும்படி
அவரது நிச்சயிக்கப்
பட்ட உரையை ஒருதலைப்
பட்சமாக இரத்துச்
செய்த ஒக்ஸ்போட்
சங்கத்தினால்
பலவந்தப் படுத்தப்பட்டிருக்கிறார்.
ஒக்ஸ்போட் சங்கத்தில்
சொற்பொழிவு ஆற்றுவதற்காகவே
இவ்வளவு தூரம்
பிரித்தானியா
வரை வந்த ஸ்ரீலங்காவின்
பிரபலமான ஒரு அரச
தலைவருக்கு கீழ்த்தரமான
உபசாரம் பரிசாக
வழங்கப் பட்டிருக்கிறது.
சங்கத்தின்
இந்த அவமதிப்பு
நடவடிக்கைக்கு
அப்பாற்பட்ட விடயமாக
மகிந்த ராஜபக்ஸாவின்
கருத்து தெரிவிக்கும்
சுதந்திரமும்
மறுக்கப் பட்டுள்ளது.
ஒக்ஸ்போட் சங்க
அமைப்பினால் ஜனாதிபதியின்
பேச்சுரிமை மறுக்கப்பட்ட
கசப்பான கேலிக்கூத்தானது
முன்னாள் பிரித்தானியப்
பிரதமர் ஹரோல்ட்
மாக்மிலன் அவர்களால்
விளக்கப்பட்ட”மேற்குலகில்
பேச்சு சுதந்திரத்துக்கான
கடைசிப் பாதுகாப்புக்
கோட்டை” என்கிற
பதத்தை நினைவு
படுத்துகிறது.
அறிக்கை
இந்த மன்னிப்பு
அறிக்கைக்கு வழிவகுத்தது
எது?
அந்தச் சம்பவம்
தொடர்பாக ஒக்ஸ்போட்
சங்க அமைப்பின்
ஊடக அதிகாரி அலஸ்டெயர்
வோக்கரினால் ஒரு
விளக்க அறிக்கை
வெளியிடப்பட்டது.
“இந்த வருட ஆரம்பத்தில்
ஒக்ஸ்போட் சங்கம்
ஸ்ரீலங்காவின்
தற்போதைய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸ
அவர்களை எங்கள்
சங்க அங்கத்தவர்கள்
முன் உரையாற்ற
அவருக்கு வசதியான
ஒரு தினத்தில்
வருகை தருமாறு
அழைப்பு விடுத்திருந்தோம்.
உலகின் சகல பாகங்களிலிருந்தும்
பரந்த அளவில் பிரசித்தி
வாய்ந்த அரசியல்வாதிகளையும்,
அரச தலைவர்களையும்
அழைப்பதை இச் சங்கம்
ஒரு கொள்கையாகக்
கொண்டுள்ளது, அந்தக்
கொள்கையின் சூழமைவுக்கு
இசைவாகவே திரு.ராஜபக்ஸ
அவர்களுக்கும்
அழைப்பு வழங்கப்
பட்டது.
திரு.ராஜபக்ஸ அவர்களால்
அழைப்பு ஏற்கப்பட்டதிலிருந்து,
சங்கம் தேம்ஸ்
வலி காவல்
அதிகாரிகளுடனும்
லண்டனில் உள்ள
ஸ்ரீலங்கா உயர்
ஸ்தானிகராலயத்துடனும்
ஜனாதிபதியின்
வருகையை ஒட்டிய
பாதுகாப்பு ஏற்பாடுகளைப்
பற்றி விரிவான
ஆலோசனையை நடத்தியிருந்தது.
திரு.ராஜபக்ஸவின்
வருகையைச் சுற்றியுள்ள
பாதுகாப்பு அக்கறைகளைப்பற்றி
வெகு சமீபத்திலேயே
காவல்துறையினரால்
எங்கள் கவனத்துக்கு
கொண்டு வரப்பட்டது,
எந்தப் பேச்சுவார்த்தையும்
இனிப் பயன்தராது
எனச் சங்கம் வருத்தத்துடன்
அறிய நேர்ந்ததினால்
அவரது சொற்பொழிவை
இரத்துச் செய்ய
நேர்ந்தது.”
“இந்த முடிவு
வெகு சாதாரணமாக
எடுக்கப் பட்டதல்ல.
இதை இரத்துச் செய்ய
நேர்ந்ததையிட்டு
சங்கம் ஆழ்ந்த
வருத்தம் அடைகிறது.
சங்கம் பிரபலமான
பேச்சாளர்களை
வரவழைத்து பேச்சுரிமைக்
கோட்பாடுகளை உயர்த்திக்
காட்டுவதில் நீண்டகால
பாரம்பரியத்தைக்
கொண்டுள்ளது.
எப்படியாயினும்
எதிர்பார்க்கப்படும்
உயர் அளவிலான எதிர்ப்புப்
போராட்டங்கள்
காரணமாக சொற்பொழிவு
நியாயமாகவும்
பாதுகாப்பாகவும்
திட்டமிட்டபடி
முன் செல்லும்
என எங்களால் உணர
முடியாதுள்ளது.”
“பேச்சாளர்களைப்
பொறுத்த மட்டில்
இச் சங்கம் நடுநிலையான
அரசியல் நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது, இந்த
தீர்மானமானது
திரு.ராஜபக்ஸ அவர்களின்
அரசியல் நிலையினையோ
அவரது நிர்வாகக்
கொள்கைகளையோ அல்லது
அவரது அரசிற்கு
எதிராகக் கூறப்படும்
குற்றங்களுடனோ
எந்தவித தொடர்பையும்
கொண்டிருக்கவில்லை.”
“கடந்த ஐந்து வருடங்களாக
ஸ்ரீலங்காவின்
ஜனாதிபதியாகக்
கடமையாற்றிய திரு.ராஜபக்ஸ
தனது உரையில் அந்தப்
பிராந்திய அரசியல்
நிலவரங்கள் குறித்து
தனித்தன்மையான
உள்நடத்தைகளை
வழங்குவார் என
சங்கம் எதிர்பார்த்திருந்தது.
இந்த எதிர்பாராத
இரத்துச் செய்கைக்காக
சங்கம் அதன் அங்கத்தினரிடம்
மன்னிப்பு கோர
விரும்புகிறது.”
டிசம்பர் 2ந் திகதி
நிச்சயிக்கப்
பட்டிருந்த நிகழ்வானது
ஆரம்பத்தில் நவம்பர்
8ந் திகதி நடத்துவதற்குத்
தீர்மானிக்கப்
பட்டிருந்தது,
ஜனாதிபதி அவர்கள்
கேட்டுக் கொண்டதற்கு
இணங்க அது பின்போடப்
பட்டது. நவம்பர்
மாதமானது திரும்பவும்
ஜனாதிபதியாகப்
பதவிப் பிரமாணம்
செய்வது முதல்
புதிய அமைச்சரவை
நியமனம், வரவு
செலவு திட்டத்தைச்
சமர்ப்பித்தல்,
மற்றும் வருகை
தரும் உயர் பதவியாளர்களான
பாகிஸ்தான் ஜனாதிபதி
ஆசிப் சர்தாரி
மற்றும் இந்திய
அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா
போன்றவர்களைச்
சந்தித்தல் போன்ற
மிகவும் இறுக்கமான
நிகழ்ச்சி நிரல்களைக்
கொண்டு ஜனாதிபதி
ராஜபக்ஸாவுக்கு
அதிக பதற்றம் உள்ள
மாதமாகவிருந்தது.
ஒத்திவைப்பு
ஜனாதிபதி
ராஜபக்ஸ மிகவும்
மும்முரமான நிகழ்ச்சி
நிரல்களின் பின்னணி
காரணமாக டிசம்பர்
மாதத்துக்குத்
தள்ளி வைக்கும்படி
கோரியிருந்தார். எப்படியோ
இது ஸ்ரீலங்கா
அரசத் தலைவர் தான்
யுத்தக் குற்றவாளியாகக்
கைது செய்யப் படலாம்
என்கிற அச்சம்
காரணமாக பிரித்தானியாவுக்கு
விஜயம் மேற்கொள்ளத்
தயங்குகிறார்;
என்கிற ஊகத்தின்
காரணமான ஒரு சர்ச்சையைக்
கிளறி விட்டது.
ஊடகங்களின் பகுதிகளில்
பலவகையான கதைகள்,
ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளுக்கும்
தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும்
மே 2009ல் நடந்த இறுதிக்கட்டப்
போரின்போது ஸ்ரீலங்கா
ஆயுதப் படைகள்
இழைத்த போர்க்
குற்றங்களுக்கான
சர்வதேச நீதி விசாரணைக்
கொள்கைகளின் படி
ஸ்ரீலங்கா ஜனாதிபதியைத்
தண்டிக்க வேண்டுமென்ற
கோரிக்கைகள் ஊக்கத்துடன்
முன்னேறுவதாக
பரவியிருந்தன.
ஊடகங்கள் போர்க்
குற்றவாளியாக
கைது செய்யப் படலாம்
என்கிற அச்சம்
காரணமாக ராஜபக்ஸா
பிரித்தானியாவுக்கு
வருவதிலிருந்து
எப்படிப் பின்வாங்கினார் எனப் பலகதைகளையும்
எழுதின.
பிரித்தானியாவுக்கு
நவம்பர் மாதத்தில்
திட்டமிட்டபடி
அவர் பிரித்தானியா
வந்திருந்தால்
முன்னாள் சரவாதிகாரியான
சிலி அதிபர் ஜெனரல்
அகஸ்டோ பினோச்செட்டுக்கு
நேர்ந்த கதியினை
இவரும் அனுபவித்திருக்கக்கூடும்
என்றும் சொல்லப்
பட்டது.
இது ஸ்ரீலங்காவிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொழும்பு ஊடகங்களிலும்
ஜனாதிபதிக்கு
எதிரான சர்வதேச
நீதி விசாரணைக்
கொள்கைகள் மேற்கொள்ளக்கூடிய
சாத்தியங்களுக்கு
ஆதரவானதும் எதிரானதுமான
கருத்துக்கள்
வெளிவந்தன. இது
ஸ்ரீலங்காவின்
சில மட்டங்களில்
ஜனாதிபதி இந்த
கட்டத்தில் பிரித்தானியாவுக்கு
விஜயம் செய்து
கைது செய்யப்படும்
அபாயத்தை எதிர்
கொள்ள வேண்டியதில்லை
என்கிற உணர்வு
மேலோங்கத் தொடங்கியிருந்தது.
ராஜபக்ஸ தனது
லண்டன் விஜயத்தை
தள்ளி வைப்பதன்
மூலம் கால அவகாசம்
பெற விரும்புகிறார்
என்று ஊடகங்களின்
சில பிரிவுகள்
ஊகம் தெரிவித்திருந்தன.
அதில் சொல்லப்
பட்டிருந்தது,
பெறப்படும் கால
அவகாசத்தைப பயன்படுத்தி;
பிரித்தானிய அரசிடமிருந்து
வழக்குத் தொடர்வதற்கு
எதிரான சட்ட விலக்களிப்பைப்
பெற்று பலமான உத்தரவாதத்தை
அடைய முயற்சிக்கிறார்.
அப்படியான
உத்தரவாதம் வழங்கப்
பட்டால் அவர் டிசம்பர்
மாதம் அங்கு செல்வார்.
அல்லாவிடில் அவர்
ஸ்ரீலங்காவிலேயே
இருப்பார்..
சவால்
ஜனாதிபதி
பிரித்தானியாவில்
கைது செய்யப்படக்
கூடும் என்கிற
அச்சுறுத்தல்களுக்கு
பயந்து குகைக்குள்
ஒளிந்து கொள்வார்
என அபிப்ராயப்
பட்டவர்கள் மெதமுல்லவில்
இருந்து வந்த மகிந்த
யார் என்பதை சரியாக
விளங்கிக் கொள்ளவில்லை.
ஜனாதிபதி அநேகமாக
சவால்களுக்கு
பதிலடி கொடுக்க
விரும்பும் ஒரு
மனிதர்.அவர் நிச்சயமாக
கைது செய்யப்படும்
சாத்தியங்களுக்கு
அஞ்சி பிரிட்டனிலிருந்து
விலகியிருக்கப்
போவதில்லை. அவரது அரசியல்
மற்றும் தனிப்பட்ட
துணிவுகளைக் குறித்து
விளக்கிக் கூறவேண்டிய
அவசியத்துக்கு
அப்பாற் பட்டதாக
அங்கு போவதற்கு
இன்னுமொரு காரணமும்
உள்ளது. அது
ஒக்ஸ்போட்டிலிருந்து
கிடைத்த அழைப்பு.
அதை நிராகரிக்க
ஜனாதிபதி விரும்பவில்லை.
2008ம் ஆண்டு ஒக்ஸ்போட்
சங்கத்தில் அவர்
ஏற்கனவே உரையாற்றியிருக்கிறார்.
இப்போது திரும்பவும்
பேசுவதற்கு அழைக்கப்
பட்டுள்ள நிலையி;ல் புலம்பெயர்
தமிழர்களுக்கிடையில்
உள்ள தமிழீழ விடுதலைப்
புலிகள் சார்பானவர்களின்
கூத்தாடித்தனத்துக்காக
அதைத் தவறவிடும்
மனநிலையில் அவர்
இல்லை.
ஒக்ஸ்போட் சங்க
அமைப்பிலிருந்து
சொற்பொழிவாற்ற
ஒரு அழைப்பு! பொதுவாக ஒக்ஸ்போட்
சங்கம் தரும் அழைப்பு
அதியுயர் கௌரவமிக்கதான
மதிப்பாகக் கருதப்
படுகிறது. ஒக்ஸ்போட்
சங்க அமைப்பானது
அங்கீகரிக்கப்
பட்ட ஒக்ஸ்போட்
பல்கலைக்கழக மாணவர்
பிரதிநிதிகளைக்
கொண்ட ஒக்ஸ்போட்
பல்கலைக்கழக மாணவர்
சங்கத்திலிருந்து
(ழுருளுரு)
வித்தியாசமானது.
இந்த ஒக்ஸ்போட்
சங்க மாணவர் சங்கம்
சுமார் 20,000 அங்கத்தினர்களைக்
கொண்டது.
மறுபக்கத்தில்
ஒக்ஸ்போட் சங்க
அமைப்பானது ஒன்றிணைக்கப்படாத
ஒரு கழகம். அது பல்கலைக்கழகத்தின்
தற்போதைய மற்றும்
பழைய மாணவர்களைக்
கொண்டுள்ளது.
ஒக்ஸ்போட்
சங்கமானது பெரிய
அளவிலான ஒக்ஸ்போட்
மாணவர்களைக் கொண்டிருப்பதுடன்
பிரசங்கத் திறமைக்கும்
விவாதத் திறமைக்கும்
புகழ் பெற்றது.
இது 1823 ல் ஆரம்பிக்கப்
பட்ட பிரித்தானியாவின்
இரண்டாவது பழமையான
சங்கம். (கேம்பிரிட்ஜ்
தான் மிகவும் பழமையானது.)
ஒக்ஸ்போட்
சங்கத்தின் தெரிவு
செய்யப்பட்ட தலைவராவது
ஒக்ஸ்போட் இணைப்பு
வட்டாரங்களில்
சிறந்த ஒரு இலட்சியத்
தகுதியாகக் கருதப்பட்டது.
சுவராஸ்யமாக
ஸ்ரீலங்கா கடந்த
காலங்களில் மூன்று
ஆண்களும் ஒரு பெண்ணுமாக
நான்கு தலைவர்களைக்
கொண்டிருந்தது.
தலைவர்கள்
முதன்முதலில்
1958ல் ஸ்ரீலங்காவிலிருந்து
தெரிவானவர் றோயல்
கல்லூரி பழைய மாணவரான
லலித் அத்துலத்
முதலி. அவரைத்
தொடர்ந்து 1959ல்
தெரிவானவர் கிருத்துவக்
கல்லூரி பழைய மாணவரான
லக்ஸ்மன் கதிர்காமர்.
1983ல் பழைய தோமியனான
ஹிலாலி நூர்டீன்
தலைவராகத் தெரிவு
செய்யப் பட்டார்.
மூன்று வருடங்களின்
பின்னர் 1986ல் முதல்
ஸ்ரீலங்காப் பெண்மணியான கொழும்பு
மெதடிஸ்ட் கல்லூரியைச்
சேர்ந்த பழைய மாணவியான
ஜெயசுந்தரி வில்சன்
தெரிவு செய்யப்
பட்டார்.
நான்கு ஒக்ஸ்போட்
சங்கத்தின் தெரிவு
செய்யப்பட்ட தலைவர்களில்
ஒரு சிங்களவர்
இரண்டு தமிழர்கள்
ஒரு முஸ்லிம் என
இனரீதியாகவும்
மதங்களின் படி,
ஒரு பௌத்தர்.
இரண்டு கிறீஸ்தவர்கள்,
ஒரு இஸ்லாமியர்
ஆவர். ஸ்ரீலங்காவுக்கும்
ஒக்ஸ்போட் சங்கத்துக்கும்
சம்பந்தப்பட்ட
ஒரு வருத்தத்துக்குரிய
சம்பவம் 1959 ல் நடைபெற்றது.
அப்போதைய இலங்கையின்
பிரதமராக இருந்த
எஸ்.டபிள்யு.ஆர்.டீ
பண்டாரநாயக்கா
1959 செப்டம்பரில்
சொற்பொழிவாற்ற
வரும்படி ஒக்ஸ்போட்
சங்கததால் அழைக்கப்
பட்டிருந்தார்.
கொழும்பிலிருந்து
செல்வதற்கு இரண்டு
நாட்கள் முன்பு
பண்டாரநாயக்கா
புத்த பிக்குவான
தலதுவே சோமராம
தேரோ என்பவரால்
சுடப்பட்டு ஒரு
நாளின் பின் மரணமடைந்தார்.
லக்ஸ்மன் கதிர்காமர்,
எஸ்.டபிள்யு.ஆர்.டீக்கு
வேண்டி உரையாற்ற
வேண்டியதாயிற்று.
கௌரவம் பெற்ற
அநேக பிரமுகர்கள்
கடந்த காலங்களில்
ஒக்ஸ்போட் சங்கத்தில்
உரையாற்றியுள்ளார்கள்.
அத்தகைய ஒரு
அழைப்பு மதிப்பு
மிக்கதாகக் கருதப்படுகிறது.
அங்கு உரையாற்றியவர்களுள்
சிலர்: அல்பட்
அயன்ஸ்டீன், வின்ஸ்ரன்
சேர்ச்சில், தலாய்லாமா,
அன்னை தெரேசா,
ரிச்சட் நிக்ஸன்,ஜ்pம்மி காட்டர்,
றொனால்ட் ரீகன்.
றொபேட் கென்னடி,
ஹென்றி கீசிங்கர்,
ஜோன் மக்கெயின்,
டேவிட்லாங், பர்வேஷ்
முசாரப் ஸ்ரீபன்
ஹவாக்கிங், ரிச்சட்
டோக்கின், செரிக்
பூத், மற்றும்
ஜெரி அடம்;ஸ்.
இந்தக்
கட்டத்தில் ஜனாதிபதி
ராஜபக்ஸ பிரித்தானியா
செல்வது இயற்கையே. ஒரு
காரியத்தை புலம்
பெயர்ந்தவர்களுக்கும்,
தனது சொந்த நாட்டிற்கும்
தலைக்கு மேல் சர்வதேச
நீதி விசாரணை எனும்
கூர்வாள் தொங்கிக்
பொண்டிருக்கும்
போதும் பிரித்தானியாவுக்குச்
சென்று நிரூபிக்க
வேண்டியிருந்தது.
இரண்டாவதாக
ஆரவாரத்தோடு மதிப்பு
மிக்க சொற்பொழிவை
கௌரவம் பெற்ற ஒக்ஸ்போட்
சங்கத்தில் நிகழ்த்த
வேண்டுமென்பது.
விரிவான
பிரச்சாரம்
நவம்பர்
29ந்திகதி ஜனாதிபதி
ராஜபக்ஸ பிரித்தானியாவுக்குச்
செல்லவிருப்பதும்
ஒக்ஸ்போட் சங்கத்தில்
டிசம்பர் 2ந் திகதி
சொற்பொழிவை நிகழ்த்த
இருப்பதும் தெரிய
வந்ததும், வெளிநாட்டு
தமிழீழ விடுதலைப்
புலிகள் வட்டாரத்தை
திடுக்கிட வைத்தது.
அவர்கள் சாதாரணமாக
தங்கள் சொந்த பிரச்சாரங்களில்
நம்பிக்கை வைத்து
மகிந்த நிரந்தரமாகவே
பயந்து ஒதுங்கி
விடுவார் என நம்பியிருந்தார்கள்.
புலம் பெயர்ந்தவர்களினிடையே
உள்ள புலிகள் சார்பான
சக்திகளின் மற்றொரு
பண்பு அவர்;களின் தகுதியானது
வெப்பத்தை உருவாக்க
வேண்டிய இடத்தில்
வெறும் வெளிச்சத்தை
மட்டும் காட்டுவது
மட்டுமே. இந்தப்
பந்திகளில் அவர்களை
வெறும் வாய்ச்சொல்
வீரர்கள் எனப்
பலமுறை விமர்சிக்கப்
பட்டிருக்கிறது.
அவர்களை
ஆங்கிலத்தில்
நேட்டோ (Nato) அங்கத்தவர்கள்
என வர்ணிக்கப்
பட்டுள்ளது. அதாவது
செயலில் அல்ல பேச்சில்
மட்டுமே எனப் பொருள்படும்( No action Talk Only) கருத்தில்.
ஆர்வமிகுதியால்
பரபரப்பை ஏற்படுத்தும்
சர்வதேச நீதி விசாரணைக்
கொள்கைகளை எழுப்பி
ராஜபக்ஸவை கைது
செய்யும் விடயம்கூட
வெறும் பிதற்றல்
மட்டுமே. அதற்கான
செயற்பாடுகள்
திட்மிடப்படுவதாகவோ
அல்லது நிரல் படுத்தப்
பட்டிருப்பதாகவோ
அபரிமிதமான செய்திகளை
வெளியிட்டுள்ள
போதிலும் மிக அற்ப
அளவிலேயே உறுதியான
செயற்பாடுகள்
மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
பொது அறிவின் கட்டளைப்படி
இம்மாதிரியான
செயற்பாடுகள்
மிகவும் இரகசியமான
முறையிலேயே செயற்படுத்தப்
படவேண்டும் ஆனால்
இங்கோ அளவுக்கதிகமான
பேச்சு மட்டுமே
செயற்பாடுகள்
மிகவும் குறைவு.
இந்த விடயத்தைப்
பொறுத்த மட்டில்
வெறும் வாயு மட்டுமே
திண்மப்பொருளாக
எதுவுமில்லை.
இப்படித்தான்
மகிந்த லண்டன்
வரப்போகிறார்
என்கிற செய்தி
வெளியானதும் புலிகளின்
ஆதரவுப் பகுதியினர்
ஆச்சரியத்தில்
உறைந்து போனதும்.
ஒரு தமிழ் பகுதியினர்
தெரிவித்த செய்திகளின்படி
அவருக்கு எதிரான
நீதிமுறை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவதற்குரிய
எந்த ஆரம்ப நடவடிக்கையும்
இதுவரை சுத்தமாக
மேற்கொள்ளப் படவில்லை.
இதைத்தவிர
இந்த விஜயமானது
புலம் பெயர் புலிகளுக்கு
ஒரு நேரடிச் சவாலாகவுமிருந்தது.
மேலும் ஒக்ஸ்போட்டில்
நிச்சயிக்கப்
பட்ட சொற்பொழிவு
தீப்பற்ற வைக்கும்
பகிரங்க அவமானமாகவும்
இருந்தது. இம்மாதிரியான
ஒரு சூழ்நிலையில்
புலம் பெயர் சமூகத்தில்
விசேடமாக பிரித்தானியாவில்
உள்ள தமிழீழ விடுதலைப்
புலிகள் மற்றும்
புலிகளுக்குச்
சார்பான அமைப்புகளும்
தங்களுக்குள்
ஒன்றுகூடி செயலில்
இறங்கினார்கள்.
ஜனாதிபதிக்கு
எதிரான சட்ட நடவடிக்கைகளை
கட்டமைத்து ஆரம்பிக்க
தெளிவாக மிகவும்
தாமதமாகி விட்டது
ஆனாலும் எப்போதும்
திரளான எதிர்ப்பு
மற்றும் மக்களின்
மன எழுச்சியினைத்
தூண்டும் பிரசாரங்களை
மேற்கொள்ளும்
தெரிவு இருக்கவே
இருக்கிறது.
ஹீத்துரோ
ஒக்ஸ்போட்டில்
ஜனாதிபதிக்கு
என்ன இருப்பு சேர்த்து
வைக்கப்பட்டுள்ளது
என்பதனைக் காண்பிக்கும்
ஒரு கண்ணோட்டமாக
ஜனாதிபதி தனியான
விமானத்தில் லண்டன்
வந்து இறங்கியதும்
காட்சிகள் அமைந்திருந்தன.
சுமார் 300 – 350 தமிழ்
செயற்பாட்டாளர்கள்
கைகளில் சுலோக
அட்டைகளை ஏந்தியவாறு
அவரது வருகைக்கு
எதிராக கோஷமிட்டபடி
ஹீத்துரோ விமானநிலையத்தை
சூழ்ந்திருந்தார்கள்.
லண்டனில் நிலவும்
மோசமான காலநிலையில்
நூற்றுக் கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
விமானநிலையத்தில்
கூடியது உண்மையில்
குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். அநேகர் சுலோக
அட்டைகள் மற்றும்
புலிகளின் முத்திரைச்
சின்னமான உறுமும்
புலியின் உருவம்
தாங்கிய கொடிகளை
ஏந்தியவாறு காணப்
பட்டனர். புலிகளுக்குச்
சார்பான அமைப்புகள்
தெரிவித்தது இது
தமிழீழத் தேசியக்கொடியே
தவிர தமிழீழ விடுதலைப்
புலிகளின் கொடி
அல்ல என்று.
உண்மையில்
இது யாரையும் ஏமாற்றுவதற்கல்ல
இது தொடர்பான சரித்திரத்தை
அறிந்திருக்காத
இளைய தலைமுறைத்
தமிழர்களை ஏமாற்றவே.
ஜனாதிபதி சத்தமான
ஆர்ப்பாட்டங்களைத்
தவிர்க்கும் முறையில்
அதி விசேட முக்கிய
நபர்களுக்கு உரிய விசேட உள்நுழைவு
மற்றும் வெளியேறும்
பகுதியூடாக நொடிப்
பொழுதில் வெளியேறி
விட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள்
அமரிக்க ஓவியரான
“அன்ட்ரு வார்ஹோலா”
வின் 15 நிமிட புகழ்பெற்ற
போராட்டம் போல
நடத்திவிட்டு
மிகப் பரவலான ஊடக
விளம்பரத்தைப்
பெற்றுக் கொண்டார்கள்.
பிரித்தானிய தமிழ்
அரசியல் செயற்பாட்டாளர்கள்
தொடர்ந்து ஒக்ஸ்போட்
சங்கம் ஜனாதிபதி
ராஜபக்ஸவுக்கு
ஒக்ஸ்போட்டில்
உரையாற்ற வழங்கிய
அழைப்புக்கு எதிரான
பரவலான எதிர்ப்பு
பிரசாரத்தை மேற்கொள்ள
ஆரம்பித்தனர்.
பிரச்சாரத்
திட்டங்கள்
மேற்கத்தைய
நாடுகளைச் சேர்ந்த
பல தமிழ் அமைப்புகள்
நிரல் படுத்தப்
பட்டிருந்த சொற்பொழிவுக்கு
எதிராக தீவிரமான
பிரசாரத் திட்டங்களில்
ஈடுபட்டிருந்தன. உலகம் முழவதிலிருந்தும்
பிரித்தானிய அரசாங்கத்துக்கு
பொதுவான மேன்முறையீடுகளும்
குறிப்பாக ஒக்ஸ்போட்
சங்கத்துக்கும்
மேற்கொள்ளப் பட்டன.
ஏராளமான கடிதங்களும்,
விண்ணப்பங்களும்,
மின்னஞ்சல்களும்,
தொலை நகல்களும்
அனுப்பப்பட்டன.
மற்றும் ஒக்ஸ்போட்
அலுவலகத்துக்கும்,அதிகாரிகளுக்கும்
தொலைபேசி அழைப்புகள்
மேற் கொள்ளப் பட்டன.
ஜனாதிபதி ராஜபக்ஸ
உரை நிகழ்த்தவிருந்த
டிசம்பர் 2ந் திகதி
பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்
ஒக்ஸ்போட் முன்றலில்
நிகழ்த்துவதற்கும்
திட்டமிடப்பட்டது.
ஆயிரக் கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஒக்ஸ்போட்டை முற்றுகையிட்டு
முழுநாளும் எதிர்ப்பு
பிரச்சார நடவடிக்கைகள்
மேற்கொள்ள திட்டம்
தீட்டப்பட்டது.
ஒக்ஸ்போட்
சுவர்களில் மகிந்தவுக்கு
எதிரான சுவரொட்டிகளைப்
பதிப்பதற்கான
முயற்சிகளும்
நடைமுறைப் படுத்தப்பட
இருந்தன. தமிழ்
பொதுமக்களின்
கொலைகளைக் கண்டித்து
துண்டுப் பிரசுரங்களும்
வெளியிடப்பட இருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஜனாதிபதி உரை நிகழ்த்த
நிச்சயிக்கப்
பட்டிருந்த இடத்துக்கு
செல்லும் வழிகளை
எல்லாம் தடைசெய்வதற்கும்
திட்டம் போட்டிருந்தார்கள்.
பிரித்தானியாவின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும்
ஆர்ப்பாட்டக்காரர்களை
ஒக்ஸ்போட்டுக்கு
வரவழைப்பதற்காக
விசேட பேரூந்துகள்
ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்ட
எதிர்ப்பின் முக்கியபங்காக
பல சிங்கள செயற்பாட்டாளர்களும்
முன்னாள் இராணுவத்
தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு
இழைக்கப்பட்ட
அநீதியான நடவடிக்கைகளுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும்
முகமாக இதில் கலந்து
கொள்ள ஏற்பாடாகியிருந்தது
என்று அறியக் கூடியதாகவிருந்தது.
அத்தோடு தமிழர்
அல்லாத சில மனித
உரிமை அமைப்புக்களும்,
மற்றும் செயற்பாட்டாளர்களும்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொள்ளத்
திட்டமிட்டிருந்தனர்.
அப்படியான
ஒரு அமைப்பு மே
2009ல் பட்டினிப்
போராட்டம் நடத்திய
ரிம் மாட்டினால்
வழிநடத்தப் படும்
“அக்ட் நௌ” அமைப்பாகும்.
எதிர்ப்புப்
பிரச்சாரத்திட்டம்
குளொபல் தமிழ்
அமைப்பின் ஒரு
அங்கமான பிரித்தானிய
தமிழர் பேரவையினால்
திட்டமிடப்பட்டு
ஒருங்கிணைக்கப்
பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப்
புலிகளின் உலகளாவிய
இளையோர் அமைப்பான
“தமிழ் இளையோர்
அமைப்பு அதற்குத்
தேவையான ஆட்களை
வழங்கியிருந்தது.
அதைத் தவிர நூற்றுக்
கணக்கான செயற்பாட்டாளர்கள்
ஐரோப்பாவின் பிரதான
நிலப் பகுதியிலிருந்து
ஆங்கிலக் கால்வாயைக்
கடந்து வந்து ஒக்ஸ்போட்டில்
நடக்கும் ஆர்ப்பாட்டங்களில்
கலந்து கொள்ளவும்
திட்டமிட்டிருந்தனர்.
உருமாற்றம்
பிரித்தானிய
தொலைக்காட்சியான
சனல் - 4 சிறைப்
பிடிக்கப் பட்டவர்களை
இராணுவத்தினர்
கொடூரமாகக் கொலை
செய்யும் இரத்தத்தை
உறையவைக்கும்
நிகழ்ச்சிகளின்
மிகுதிக் காட்சிகளையும்
ஒளிபரப்பியதுடன்
அரசியல் சூழ்நிலையில்
ஒரு உணர்ச்சிகரமான
உருமாற்றம் உருவானது.
மற்றொரு வீடியோபகுதி
பயங்கரமாக ஒரு
நிர்வாணப் பெண்ணின்
உருவத்தைக் காட்டுவது பரவலாக இணையங்களில்
வெளிவந்தது. அந்தப் பெண்
வன்னியில் தமிழீழ
விடுதலைப் புலிகளினால்
நடத்தப்பட்ட தொலைக்காட்சியில்
அறிவிப்பாளராக
கடமையாற்றிய இசைப்பிரியா
எனக் கூறப்பட்டது.
அரசாங்கம்
முன்பு அவர் யுத்தத்தில்
கொல்லப் பட்டதாக
அறிவித்திருந்தது.
கோரமாகக் கொல்லப்
படும் மற்றொருவர்
தமிழீழ விடுதலைப்
புலிகளின் சிரேட்ட
தளபதிகளில் ஒருவரான
கேணல் ரமேஸ் எனக்
கூறப்பட்டது.
அதே நேரம் கேணல்
ரமேஸ் யுத்தத்தில்
கொல்லப் பட்டதாக
அரசாங்கம் அறிவித்திருந்தது.
தமிழ் பகுதியினர்
கேணல் ரமேஸ் ஆயதப்
படையினரிடம் சரணடைந்ததாக
குற்றம் சாட்டினார்கள்.
இணையத் தளத்தில்
காட்டப்பட்ட ஒரு
வீடியோவில் ரமேஸ்
சீருடையுடன் சிங்கள
சிறைப்பிடிப்பாளர்களிடம்
மன்றாடுவது காண்பிக்கப்
பட்டது.
இந்த தொலைக்காட்சிப்
படங்கள் கிளப்பிய
சர்ச்சையான சுற்றாடல்களும்
குறிப்பிட்ட குற்றச்
சாட்டுகளும் சூழலுக்கு
மின்சாரம் பாய்ச்சியதுடன்
தமிழ் வட்டத்தில்
ஒக்ஸ்பேட்டில்
நிகழ்த்தவிருந்த
ராஜபக்ஸவின் பேச்சினை
பற்றிய தணியாச்
சினத்துக்கு எண்ணை
ஊற்றி பெருப்பித்தது.
அதன் விளைவாக
ஆயிரக் கணக்கான
தமிழர்கள் குறிப்பிட்ட
தினத்தில் ஒக்ஸ்போட்டை
முற்றுகையிட்டு
பலமான ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவார்கள்
எனத் தோன்றியது.
ஒக்ஸ்போட்
யுத்தக்குற்றங்கள்
சம்பந்தமாக ஸ்ரீலங்கா
அரசுக்கு எதிராக
தொலைக்காட்சியும்
பத்திரிகைகளும்
ஏற்படுத்திய பிரச்சாரங்களின்
தாக்கம் ஒக்ஸ்போட்டிலும்
எதிரொலித்தது.
இப்போது நடைபெறப்போகும்
நிகழ்ச்சியைப்
பற்றிய அதீத ஆர்வம்
ஒக்ஸ்போட் வட்டாரங்களிலும்
உண்டானது.
மாணவர்களிடத்தும்
இரண்டு வகையான
எண்ணங்கள் உருவாகியிருந்தது.
ஒரு பகுதியினர்
ஸ்ரீலங்கா ஜனாதிபதி
சங்கத்தில் உரையாற்றும்
எண்ணத்துக்கு
பூரண எதிர்ப்பை
வெளியிட்டதுடன்
இப்பகுதியினர்
ராஜபக்ஸ போர்க்குற்றங்களுக்கான
குற்றவாளி என ஏற்றுக்கொண்டு
சங்கத்தில் உரையாற்றும்
சந்தர்ப்பம் வழங்கக்
கூடாது என்ற முடிவிலிருந்தனர்.
அவர்களும்
சங்கம் பேச்சு
வார்த்தையை தொடர்ந்து
முன்னெடுத்தால்
தாங்களும் ராஜபக்ஸவுக்கெதிரான
திரளான ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபடப்போவதாக
சுட்டிக் காட்டினர்.
மறுபகுதியினர்
ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு
பேசும் உரிமையை
வழங்கவேண்டும்
என்ற நிலையிலிருந்தனர்.
இவர்கள் பின்பற்ற
நினைத்தது, அவர்
சங்கத்தில் பேசவேண்டும்
அதன் பிறகு அவர்மீது
விரோதமான கேள்விக்
குண்டுகளை வீசவேண்டும்
என்கிற திட்டததுடன்
இருந்தார்கள்.
அவர்கள் திட்டமிட்டது
குறிப்பாக பல்கலைக்கழக
மாணவர்களினது
அடக்குமுறை பற்றி
அவரை நுண்ணாய்வு
செய்து உள்ளக பட்டதாரிகளின்
ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்காகும்.
எனவே அங்கு
ஜனாதிபதியின்
உரைக்கு எதிரான
குறிப்பிடத்தக்க
எதிர்ப்பு ஒக்ஸ்போட்டின
சுற்றடைப்புக்குள்ளேயே
இருப்பதைக் காணக்கூடியதாக
இருந்தது. தமிழ்
எதிர்ப்பாளர்களின்
செயற்பாடுகள்
ஊடகங்களின் முக்கிய
பாகத்தை ஆக்கிரமித்துக்
கொண்டிருந்த போது
ஜனாதிபதி ராஜபக்ஸ
சம்பந்தமாக அதற்கு
ஒப்பானதோர் அமைதியான
உருமாற்றம் ஒக்ஸ்போட்
கல்விச் சூழ்நிலையிலும்
நிகழ்ந்து கொண்டிருந்தது.
நிலமை விரோதமான
நிலைக்கு மாறிக்
கொண்டிருந்தது.
இந்த விரோத சூழ்நிலை
விரிவடைந்து போய்க்கொண்டிருக்கையில்
பிரித்தானியாவின்
சட்டம் ஒழுங்குக்கு
உத்தரவாதமுடைய
அதிகாரிகள் சொற்பொழிவிற்கான
முக்கிய பாதுகாப்பு
பற்றிய கவலைகளில்
மூழ்கியிருந்தனர்.
கூர்ந்து ஆராயப்பட்ட
ஒரு நகர்வு குறிப்பிட்ட
ஒரு பிரதேசத்தை
பாதுகாப்பு படைகளின்
தடுப்பு வேலியிடுவதும்
சில குறிக்கப்பட்ட
வீதிகளில் போக்கு
வரத்தை தடைசெய்வது
பற்றியும். ஆனால்
இது காவல்துறையின்
உயர் மட்ட அதிகாரிகளால்
வரவேற்கப்படவில்லை,
ஒக்ஸ்போட்டின்
சிறப்புமிக்க
வரலாற்றில் பேச்சு
சுதந்திரம் மட்டுப்
படுத்தப்பட்டதான
குற்றச்சாட்டுகள்
எழுவதை அவர்கள்
விரும்பவில்லை.
விளைவுகள்
கடந்த
கால அனுபவங்களைப்
பொறுத்த மட்டில்
சில கசப்பான நினைவுகள்
மீதமிருக்கின்றன. 2009ல்
யுத்தம் தொடர்ச்சியாக
நடைபெற்றுக் கொண்டிருந்தபோது
அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து தமிழ்
இளைஞர்களினால்
குழப்பம் ஏற்படுத்தும்
செயல்கள் தொடர்ந்து
மேற்கொள்ளப் பட்டபோது
பிரித்தானிய பொலிசாரால்
கடுமையான எதிர்
நடவடிக்கைகள்
எடுக்கப் பட்டிருந்தன.
போர்க் குற்றச்
செயல்கள் தொடர்பாக
ஊடகங்களின் விளம்பரப்
படுத்தலினால்
தமிழ் வட்டாரங்களில்
மிகவும் உணர்ச்சிக்
கொந்தளிப்பான
மனநிலை நிலவுவதால்
ஆர்ப்பாட்டங்களைக்
கட்டுப் படுத்தவோ
அல்லது தடைசெய்ய
நடவடிக்கைகள்
எடுக்கப்படுமானால்
அது வன்முறையுடன்
கூடிய பின்விளைவுகளை
ஏற்படுத்தலாம்
என்கிற அச்சமும்
ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதி ராஜபக்ஸவை
அவரது சொந்தப்
பாதுகாப்பைக்
கருத்தில் கொண்டு
மேற்கொண்டு முன்னேறாமல்
தவிர்க்கும்படி
கேட்டுக் கொள்ளும்
இன்னொரு நகர்வும்
கவனத்தில் கொள்ளப்
பட்டது.அவதான அணுகுமுறைகளைக்
கையாளும் படி அவருக்கு
அறிவுரைகள் வழங்கப்
பட்டன. ஆனால்
ஜனாதிபதி ராஜபக்ஸவைப்
பொறுத்த மட்டில்
அது ஒரு அரசியல்
சார்ந்த கௌரவப்
பிரச்சனை.அவரால்
கீழே இறங்கி வர
முடியாது. அன்றியும் மெதமுலான
மகிந்த என்கிற
விருட்சத்தை அபாய
அச்சுறுத்தலை
காரணம் காட்டி
அடக்கிப் பணிய
வைப்பது நடக்காத
காரியம்.
எனவே ஜனாதிபதி
ராஜபக்ஸ உறுதியாகவே
இருந்தார். ஒரு
ஸ்ரீலங்கா அதிகாரியின்
கூற்றுப்படி “ஏகப்பட்ட
எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும் தனது
பேச்சைத் தொடரும்
தீர்மானத்தையிட்டு
அவர்கள் அவரைப்பற்றி
மிகவும் உயர்ந்த
அபிப்ராயம் கொண்டிருந்தார்கள்.”
விரோதமான கேள்விகளை
எதிர்கொள்ளவும்
தனது கருத்துக்களை
முன்வைக்கவும்
அவர் தயாராக இருந்தார்.எந்தக்
கட்டத்திலும்
இந்த விடயத்தில்
மனதைத் தளர்த்திக்கொள்ள
ஜனாதிபதி தயாராக
இல்லை.சில ஸ்ரீலங்கா
அதிகாரிகள் பிரித்தானிய
அதிகாரிகளுடன்
தொடர்பு கொண்டு
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு
தடை விதிக்கும்படி
வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால்
இந்த வேண்டுகோள்
நிராகரிக்கப்
பட்டது, ஏனெனில்
ஒரு ஜனநாயக நாட்டில்
கருத்துச் சுதந்திரத்தை
மறுப்பது சாத்தியப்
படாது என்பதனால்.
ஆவியாகும்
நிலை
இந்த மாதிரியான
ஒரு நிலையில் சட்டத்தை
உத்தரவாதப்படுத்தும்
முகவர்களுக்கு
இருக்கும் மற்றொரு
தெரிவு, ஒக்ஸ்போட்
சங்க அமைப்பின்
மீது அழுத்தத்தை
பிரயோகித்தல்
ஆகும். சங்க
அலுவலக உடமையாளர்கள்
இந்த ஆவியாகத்
தயாராக இருக்கும்
நிலமை பற்றி விரிவாக
ஆராய்ந்தார்கள்.
இந்தச் சொற்பொழிவை
மேற்கொண்டு தொடர
எடுக்கப்படும்
முயற்சிகள் தீவிரமான
வன்முறைகளை உருவாக்கக்கூடும்
அப்படி ஏதாவது
ஏற்படும் பட்சத்தில்
சங்கமே அதற்கு
பொறுப்பு என அவர்களுக்கு
அறிவுறுத்தல்
வழங்கப் பட்டது.
காவல்துறை புலனாய்வு
அறிக்கைகளின்படி
தேம்ஸ் வலி காவல்துறையினர்
ஒக்ஸ்போட் சங்க
அலுவலக உடமையாளர்களிடம்
பிரமாண்டமான எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம்
ஒக்ஸ்போட் மையப்
பகுதியில் நடத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது,
ஐயாயிரத்துக்கும்
பத்தாயிரத்துக்கும்
இடைப்பட்ட மக்கள்
பங்கேற்பார்கள்,
திட்டமிட்படி
அது நடந்தால் அதுதான்
சமீப காலத்தைய
மிகப் பெரிய தனி
ஒரு ஆர்ப்பாட்டமாக இருக்கும்,
அத்தோடு பல்கலைக்
கழக நகரமும் செயலிழந்து
போகும் என எச்சரித்தனர்.
காவல்துறை மேலும்
அறிவுறுத்தியது
என்னவெனில், ஆர்ப்பாட்டம்
வன்முறைகளுக்குத்
திரும்பலாம் என்றும்
அதனால் ஒக்ஸ்போட்டுக்கும்
அதன் குடியிருப்பாளர்களுக்கும்
ஆபத்து நேரிடலாம்
என்பதாகும்.
பிரித்தானிய
தமிழ் ஆதரவாளர்கள்
தங்களுக்கு எதிராக
தீவிரமான பிரச்சாரத்தை
மேற்கொண்டிருப்பதை
ஒக்ஸ்போட் சங்க
அலுவலக உடமையாளர்கள்
மேற்கொண்டு அறிய
நேர்ந்தது. ஆட்சிமுறைமைக்கு
பொறுப்பான நிலையியற்
குழு நேரடியாகக்
கூடியது. மோசமான
யுத்தக் குற்றவாளியின்
உரையை இரத்துச்
செய்யும்படி உணர்ச்சி
பூர்வமான வேண்டுகொள்கள்
விடப்பட்டன. ஒக்ஸ்போட்டில்
பயிலும் தமிழரல்லாத
அநேக மாணவர்களும்
பேச்சை நிராகரிக்கும்
படி நிலையிற் குழவினருக்கு
அழுத்தம் கொடுத்தனர்.
மிகப் பெரிய பகுதியான
மாணவ சமூகம் ராஜபக்ஸவின்
சொற்பொழிவை சங்கத்த்pல்
நடத்துவதற்;குத் தடைவிதிக்கும்படி
வேண்டினர். சங்கமோ வழிதெரியாத
சிற்றூரில் மாடடிக்
கொண்டதைப் போன்ற
இரண்டும் கெட்டான்
நிலையிலிருந்தது.
அநேக உட்சங்க பேச்சுவார்த்தைகள்
மற்றும் ஒழுக்க
அடிப்படைகளைக்
கண்டறிந்த பின்
முற்றுகைக்குட்பட்டிருந்த
ஒக்ஸ்போட் சங்க
அலுவலக உடமையாளர்கள்
சொற்பொழிவை இரத்துச்
செய்வதற்குத்
தீர்மானித்து
வெடிக்கக் கூடிய
தன்மையிலிருந்த
நிலமையை தவிர்த்தார்கள்
.இம்மாதிரியான
பிரச்சனைகளைச்
சங்கம் தேர்தல்
மூலம் தெரிவு செய்யப்
பட்ட ஒரு நிலையியற்
குழவின் ஆட்சியினால்
மேற்கொள்கிறது.
இரத்துச்
செய்தல்
ஒக்ஸ்போட்
சங்க அமைப்பு தன்னிச்சையாக
ஜனாதிபதி ராஜபக்ஸவின்
உரையை அவரைக் கலந்தாலோசிக்காமல்
இரத்துச் செய்யும்
வழக்கத்துக்கு
மாறான ஒரு அடியை
முன்னெடுத்தார்கள். அம்முடிவு அவருக்கு
முறைப்படி டிசம்பர்
1ந்திகதி அறிவிக்கப்
பட்டது. அது ஜனாதிபதிக்கு
எதிர்பாராத ஒரு
அடி,” மேற்குலகின்
சுதந்திரப் பேச்சுரிமையின்
கடைசிக் கோட்டை”
அவருக்கு அந்த
உரிமையை தன்னிச்சையாக
திடீரென மறுக்கப்
படும் என அவர்
எதிர்பார்த்திருக்கவில்லை.
எப்படியாயினும்
அவ்வாறு சில சந்தர்ப்பங்களில்
ஒக்ஸ்போட் சங்கத்தில்
சுதந்திரமான பேச்சுரிமை
மறுக்கப்பட்டுள்ளது.
1998ல் பிரித்தானியாவின்
உல்ட்ரா – றைற்
அமைப்பின் தலைவர்
ஜோன் ரின்டால்
ஒரு விவாதத்துக்காக
அழைக்கப் பட்டிருந்தார்.
அதற்கு மாணவர்
கூட்டத்தின் ஒருபிரிவினரால்
கூச்சல் குழப்பமிட்டு
எதிர்ப்பு தெரிவிக்கப்
பட்டது. இந்த
எதிர்ப்பும் பொலிசாரின்
அறிவுறுத்தலும்
சேர்ந்ததின் விளைவாக
விவாதம் இரத்துச்
செய்யப் பட்டது.
சர்ச்சைக்குரிய
வரலாற்றாசிரியரும்
யூத அழிவுகளை மறுதலிப்பவருமான
டேவிட் இர்விங்
2000ல் தணிக்கைகள்
பற்றிய ஒரு விவாதத்தில்
பேசுவதற்காக அழைக்கப்
பட்டிருந்தார்.
இதற்கு எதிராக
இடதுசாரிகள், பாசிச
எதிர்ப்பாளர்கள்,
மற்றும் யூத சமூகத்தினர்
ஆகியோர் ஒன்றிணைந்து
இதற்கு எதிராக
பிரசார நடவடிக்கைகளை
மேற்கொண்டார்கள்.
அது ஒக்ஸ்போட்
பல்கலைக்கழக மாணவர்
சங்கத்தின் தெரிவு
செய்யப் பட்ட அங்கத்தவர்களால்
வழிநடத்தப் பட்டது.
அந்த விவாதம் இறுதியாக
இரத்தாக்கப் பட்டது
ஆனால் இர்விங்
2007ல் நடந்த இன்னொரு
விவாதத்தின்போது
தனது பேச்சை நிகழ்த்தினார்
பிரபலமான “இயுத்தனேசியா”
என்றழைக்கப்படும்
சுகமான மரணத்தை
ப்பறிப் பிரச்சாரம்
செய்து வரும் கலாநிதி
பிலிப் நிற்;சிக்
“உதவி செய்யும்
தற்கொலைகள்” எனும்
தலைப்பிலான விவாதம்
ஒன்றுக்கு அழைக்கப்
பட்டிருந்தார்.
கலாநிதி பிலிப்
நிற்ச்சிக் அந்த
அழைப்பை ஏற்றுக்
கொண்ட பின்னர்,
ஒரு இரண்டாவது
மடல் முதல் அழைப்பை
பின்வாங்கிக்
கொள்வதாக அறிவித்து
தபால் மூலம் அனுப்பப்
பட்டது. கலாநிதி
பிலிப் நிற்;சிக்கை ஏற்றுக்கொள்ளாத
ஒரு குழுவினரின்
கடுமையான வற்புறுத்தலின்
பேரிலேயே சங்கம்
அந்த அழைப்பை பின்வலித்துக்
கொண்டதாகத் தெரிகிறது.
கலாநிதி.; நிற்;சிக் அதை ஒரு
மாபெரும் தணிக்கை
என வர்ணித்ததோடு
அதற்கு எதிராக
ஒரு வேடிக்கையான
உரைப் போராட்டத்திலும்
இறங்கினார்.
நவம்பர் 2007ல் ஒக்ஸ்போட்
சங்கம் வரலாற்றாசிரியரும்
யூத அழிவுகளை மறுதலிப்பவருமான
டேவிட் இர்விங்கையும்
பிரித்தானியாவின்
தேசியவாதக் கட்சியின்
தலைவர் நிக் கிரிபினையும்
சங்கப் பேரவையில்
சுதந்திரமான பேச்சுக்கு
அழைத்திருந்தது.
இதற்கு ஒக்ஸ்போட்
பல்கலைக்கழக மாணவர்
சங்கத்திலிருந்து
கடும் எதிர்ப்பு
உருவாகியது. திரளான உட்கார்ந்து
மறியல் செய்யும்
போராட்டம் ஏற்பாடாகியதுடன்
பங்குபற்றுபவர்கள்
பேரவையினுள் செல்லாதபடி
தடுக்கப் பட்டார்கள்.
அங்கு ஒரு ரௌடித்தனமான
செயற்பாடு பரவியிருந்தது.
இறுதியாக இரண்டு
சிறிய விவாதங்கள்
இரண்டு வௌ;வேறு
அறைகளில் நடத்தப்
பட்டதுடன் இர்விங்கும்
கிரிபினும் தனித்தனியாக
உரையாற்றினார்கள்.
இதிலிருந்து தெரியவருவது
சுதந்திரமாகக்
கருத்து தெரிவிக்கும்
உரிமை “கடைசிக்
கோட்டையான மேற்குலகின்
சுதந்திரப் பேச்சுரிமை
சிலருக்கு மறுக்கப்பட்ட
சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
உண்மையில் இதில்
துயரமானது ஒக்ஸ்போட்
சங்கம் மிரட்டலுக்கும்
வன்முறையின் சாத்தியதைக்கு
அஞ்சித் தன்னிச்சையாக
ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு
வழங்கிய அழைப்பை
இரத்து செய்ததுதான்.
ஏமாற்றம்
இந்த ஏமாற்றத்துக்கு
மத்தியிலும் ஜனாதிபதி
சாதாரணமாகவே இருந்தார். ஜனாதிபதியின்
செயலாளர் லலித்
வீரதுங்கவிடம்
குறிப்பிட்ட சில
வரிகளைக் கொண்ட
ஒரு அறிக்கையை
தயாரிக்கும்படி
அறிவுறுத்தினார்.
அறிக்கை
பின்வருமாறு :
பாதுகாப்புக்
காரணங்களுக்காக
ஸ்ரீலங்காவின்
மேன்மை தங்கிய
ஜனாதிபதி ராஜபக்ஸ
அவர்கள் சுதந்திரமான
பேச்சின் தாய்
வீடான ஒக்ஸ்போட்
சங்கத்தில் நிகழ்த்தவிருந்த
சொற்பொழிவு இரத்துச்
செய்யப் பட்டுள்ளது.
இது குறிப்பாக
தமிழீழ விடுதலைப்
புலிகளின் சார்புள்ள
செயற்பாட்டாளர்கள்
பிரயோகித்த அழுத்தத்தின்
விளைவாக ஒக்ஸ்போட்
சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட
தன்னிச்யையான
முடிவாகும். ஜனாதிபதி
கூறியிருப்பது ”இது இரத்துச்
செய்யப்பட்டதையிட்டு
நான் மிகவும் வருத்தம்
அடைகிறேன். ஆனால் நான் ஐக்கிய
ராச்சியத்திலும்
ஏனைய இடங்களிலும்
ஸ்ரீலங்காவை பற்றிய
எனது பார்வைகளை
வெளிப்படுத்துவதற்கு
ஏற்ற வேறு நிகழ்விடங்களை
நிச்சயம் தேடிக்
கொள்வேன். எனது நாட்டின்
மக்கள் ஸ்ரீலங்காவிலோ
அல்லது வெளிநாட்டிலோ
எங்கு வாழ்ந்தாலும்
எல்லா மக்களையும்
ஒன்றிணைக்கும்
முயற்சியில் நான்
தொடர்ந்தும் ஈடுபடுவேன்.
ஐக்கியமுள்ள
ஒரு நாடாக எங்களுக்கு
சிறந்த ஒரு எதிர்காலமிருக்கிறது.
நாம் எங்களுக்குள்
பிரிவினையை ஆட்சி
செய்ய அனுமதித்தால்
.நாங்கள் எங்கள்
உண்மையான திறமைகளை
உணரமுடியாமற்
போய்விடும். நாங்கள் முப்பது
வருட பிரிவினைகளையும்
மோதல்களையும்
அனுபவித்து விட்டோம்.
இப்போத நாங்கள்
நல்லிணக்கத்தையும்
சமாதானத்தையும்
எல்லா ஸ்ரீலங்கா
வாசிகளுக்கும்
வேண்டி பாதுகாக்க
வேண்டும்.”
புலம்பெயர்
பகுதிகளிலுள்ள
தமிழீழ விடுதலைப்
புலிகளின் மூலகங்கள்
இந்த இரத்துச்
செய்யப்பட்ட நிகழ்வினால்
மிகவம் மகிழ்ச்சியடைந்திருந்தார்கள். ஈழம்
தரங்களில் அளவற்ற சந்தோஷம்
காணப்பட்டது. திட்டமிடப்பட்ட
ஒக்ஸ்போட் எதிர்ப்பு
இப்போது தேவையற்றதாகி
விட்டதால் எனவே
புலி ஆதரவாளர்கள்
பாதையை மாற்ற முடிவெடுத்தார்கள்.
ஒக்ஸ்போட்
சங்க தீர்மானமானது
அவர்களுக்கு தமிழ்
செயற்பாட்டாளர்களுக்கு
உறுதியையும் தைரியத்தையும்
அளித்திருந்தது.
பார்க் வீதியில்
ஜனாதிபதி தங்கியிருக்கும்
டோர்ச்செஸ்டர்
ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக
ஒரு ஆர்ப்பாட்டம்
மேடையேற்றப் பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மோசமான காலநிலையை
தைரியமாக எதிர்கொண்டு
சுலோக அட்டைகளை
விசிறிக் கொண்டு
சுலோகங்களை உரக்க
கத்திக் கொண்டிருந்தார்கள்.
இதே நேரம் ஏராளமான
தொலைNபுசி அழைப்புகள்
யுத்தக் குற்றவாளி
ராஜபக்ஸவுடன்
பேசவேண்டும் எனக்கேட்டு
டோர்ச்செஸ்டர்
ஹோட்டலுக்கு வந்து
குவியத் தொடங்கின.
மேலும் பல அனாமதேய
அழைப்புகள் ஹோட்டல்
யுத்தக் குற்றவாளிகளின்
பாதுகாப்பு சுவர்க்கமாக
இருக்கக் கூடாது
என எச்சரித்து
வரத் தொடங்கின.
இன்னொரு
ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி
ராஜபக்ஸவை கௌரவிக்கும்
வகையில் ஒரு உத்தியோக
பூர்வ வரவேற்பு
நடக்கப் போகிறது
எனக் கேள்வியுற்று
லண்டன் ஸ்ரீலங்கா
உயர் ஸ்தானிகராலய
கட்டடத்துக்கு
வெளியே ஆரம்பிக்கப்
பட்டது. பெரும்பாலும்
அழைக்கப் பட்ட
அநேக விருந்தினர்கள்
சிங்களவர்களும்
அள்ளித் தெளித்தாற்
போல் ஒன்றிரண்டு
தமிழ் மற்றும்
முஸ்லிம்களும்
அங்கு கூடியிருந்தார்கள.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
உயர் ஸ்தானிகராலயத்தைச்
சுற்றி வளைத்துக்
கொண்டார்கள்.
காவல் துறையினர்
தலையிட்டு விருந்தினர்களுக்கு
பாதுகாப்பான வழியை
ஏற்படு செய்ய வேண்டியதாகி
விட்டது.
ஒரு ஸ்ரீலங்கா
அதிகாரியின் கூற்றுப்படி
ஆர்ப்பாட்டம்
நிகழும் போது ஜனாதிபதி
அமைதியாகவும்
எல்லாவற்றையும்
அவதானிப்பவராகவும்
காணப்பட்டார்.
அவர் எந்தவித
வெறுப்பையோ அல்லது
கடும் விரோதத்தையோ
வெளிக்காட்டவில்லை.
அவர் தன்னுடைய
திட்டங்களை தேசிய
நல்லிணக்கத்தையும்
இன ஒற்றுமையையும்
அரசியல் மறுசீரமைப்பின்
மூலமான சில வழிகளால்
கொண்டு வரவிருப்பதாக
விருந்தினர்களுக்குத்
தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வாகனம் கடுமையான
பாதுகாப்புக்கு
மத்தியில் வெளியேறிய
போது ஆர்ப்பாட்டக்காரர்கள்
தமது எதிர்ப்பை
உரக்கக் கூவி வெடித்துக்
கக்கினார்கள்.
சில பனி உருண்டைகள்
அதன்மீது வீசப்பட்டன.
நிறுத்தப்
பட்ட ஒக்ஸ்போட்
பிரசங்கத்தினால்
ஏற்பட்ட ஏமாற்றத்தை
தவிர ஜனாதிபதியின்
மற்ற விடயங்கள்
வெற்றி பெற்றதாகவே
நிருபிக்கப் பட்டுள்ளன.
ராஜபக்ஸ பாதுகாப்பு
செயலர் லியாம்
பொக்ஸ_டனான ஒரு
தனிப்பட்ட சந்திப்பின்போது
ஸ்ரீலங்காவின்
நீண்டகால நண்பருடன்
தனது மனதிலிலுள்ள
அதிகாரப் பகிர்வு
யோசனைகளைப் பற்றித்
தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும்
சில பிரித்தானிய
பாராளுமன்ற அங்கத்தவர்களையும்
கொமன்வெல்த் செயலாளா
நாயகத்தையும்
சந்தித்தார்.
இதற்கிடையில்
தமிழ் ஊடகங்களில்
ஜனாதிபதியின்
பாதுகாப்பு பிரிவின்
தலைவராக அவருடன்
லண்டன் சென்றிருந்த
மேஜர் ஜெனரல் சாகி
கலகேக்கு எதிராக
சட்ட நடவனக்கைகள்
ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக
கதைகள் கட்டவிழ்த்து
விடப்பட்டன.
கலகே போரின்
கடைசிக் கட்டத்தில்
59வது படைப் பிரிவின்
உதவித் தளபதியாகப்
பணியாற்றியதாகச்
சொல்லப் படுகிறது.
ஜனாதிபதிக்கு
உறுதியான சட்ட
விலக்கு அளிக்கப்பட்டாலும்
பிரித்தானிய தமிழ்
பேரவை ஒரு பிரித்தானிய
நீதிமன்றில் கலகேக்கு
எதிரான போர்க்
குற்றச் சாட்டுகளில்
அவருக்கு எதிரான
நடவடிக்கைகளை
மேற்கொள்ள முயன்று
வருவதாகச் சொல்லப்
பட்டது.
புலிகள் மற்றும்
புலிகள் சார்பாளர்களின்
நடவடிக்கைகள்
என்னவாயிருந்தாலும்,
ஜனாதிபதி ராஜபக்ஸாவின்
உரை தன்னிச்சையாக
இரத்துச் செய்யப்
பட்டதன் பின் விளைவுகளின்போது
ஒரு அரச தலைவருக்குரிய
தன்மையுடனும்
விவேகத்துடனும்
உயரங்களை எட்டிப்
பிடித்த வித்தில்
பாராட்டுக்குரியவரே.
ஒரு சிறிய மனிதர்
அந்தச் சந்தர்ப்பத்தில் கசப்பான கார
உணர்வுகளை வெடித்துக்
கொட்டியிருப்பார்;,
ஆனால் ஜனாதிபதி
அழுத்தங்களின்போதும்
வசீகரத் தன்மையோடிருந்து
தனது சிறப்புக்கு
உரியவராகிறார்.
அவரது உடனடி
அறிக்கை ஆச்சரியப்
படத்தக்க விதத்தில்
பெருந்தன்மையுடனும்
உயர்வாகக் குறிப்பிடத்
தக்கதுமாகும்.
இந்த தன்னிச்சையான
இரத்துச் செய்கை
ஜனாதிபதிக்கு
அரசியல் சங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது
என்பதில் சந்தேகமில்லை.
இதில் சந்தேகப்
படுவதற்கான ஒரு
காரணம் பிரித்தானிய
இடை வழிகளிலுள்ள
சில மூலகங்களின்
அதிகார சக்தி சிலவேளை
புலம்பெயர் தமிழர்களின்
எதிர்ப்பினைப்
ஒரு தண்டனையளிக்கும்
ஆயுதமாகப் பயன்படுத்தி
தங்களது சொந்தக்
காரணங்களுக்காக
ஜனாதிபதியை திட்டமிட்டு
மட்டம் தட்டியிருக்கலாம்
என்பதுதான்.
புலம் பெயர்
புலிகள் மற்றும்
புலிகள் சார்பாளர்களின்
இந்த பொறுப்பற்ற
நடவடிக்கைகளால்
ஆத்திரமூட்டப்
பட்டுள்ளது என்பதை
மறுப்பதற்கில்லை.
ஸ்ரீலங்காவில்
வாழும் ஏராளமான
தமிழர்கள் அழிந்துபோன
தங்கள் வாழ்க்கையை
புனரமைத்து சாதாரண
வாழ்வுக்குத்
திரும்ப பாடுபடுகிறார்கள்.
இந்த புலம்பெயர்
ஆட்ட பாட்டக் காரர்களால்
எந்த வழியிலும்
அவர்களுக்கு உதவியில்லை.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கையில் புலிக்கொடியினை
ஏந்திக் கொண்டு
ராஜபக்ஸவுக்கும்
இராணுவத்துக்கும்
எதிரான போர்க்
குற்றங்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து
ஆர்ப்பாட்டம்
செய்வதைக் காணும்
போது உண்மையில்
வருத்தமாக இருக்கிறது.
கடைசிக் கட்டப்
போரின்போது தமிழ்
குடிமக்களுக்கு
எதிராக புலிகள்
புரிந்த மானிடத்துக்கு
எதிரான குற்றங்கள்
கோரமானவை. தமிழ்
மக்களுக்கு எதிராக
பயங்கரமானதும்
அநீதியானதுமான
பல குற்றங்களைப்
புரிந்து விட்டு
தங்களை மனித உரிமைக்
காவலர்களாகக்
உருவகப் படுத்திக்கொண்டு
புலி மூலகங்கள்
நீதி கோருவது ஒரு
கபட நாடகமே.
எதிரியின்
வீழ்ச்சியில்
வெற்றிக் களிப்பு
புலம்
பெயர் தமிழ் ஊடகங்கள்
ஜனாதிபதி ராஜபக்ஸவின்
ஒக்ஸ்போட் பேச்சு
இரத்துச் செய்யப்
பட்டதை கிடைத்த
பெருவெற்றியாகப்
பெருமைப் படுத்தின.
இந்த வெற்றிக்
களிப்பு ஸ்ரீலங்காவிலுள்ள
சிங்கள கடும்போக்காளர்களிடம்
அதன் கருத்தினைப்
பிரதிபலித்தது.
விமல் வீரவன்ஸ
தனது பழைய உத்திகளின்படி
பிரித்தானிய உயர்
ஸ்தானிகரலாயத்தின்
முன்பாக ஆர்ப்பாட்டங்களை
நடத்தினார். அநீதியான ஒரு
தாக்குதலும் குற்றச்சாட்டும்
ஐ.தே.க.பாராளுமன்ற
உறுப்பினர் ஜயலத்
ஜயவர்தனா மீது
தினேஷ் குணவர்தனவால்
ஆரம்பித்து வைக்கப்
பட்டது. கடுமையான
மனப்பாங்கும்
கைகலப்பும் எதிர்கால
நலன்களுக்கு ஏற்ற
சகுனமல்ல.
தமிழ்
புலம் பெயாந்தவர்கள்
புலிகள் சார்பானவர்களோ
இல்லையோ அவர்களுக்கு வன்முறையற்ற
எதிர்ப்பையோ அல்லது
மாறுபட்ட கருத்தை
தெரிவிப்பதற்கு
ஜனநாயக உரிமை உள்ளது.
ஆனால் பல கோடி
பெறுமதியான கேள்விகளை
புலம் பெயர் புலிகள்
மற்றும் புலிகள்
சார் மூலகங்கள்
முன் வைக்கிறேன்
- அதாவது ஜனாதிபதியின்
ஒக்ஸ்போட் பேச்சு
இரத்துச் செய்யப்பட்டதால்
ஸ்ரீலங்காவில்
இன்னலுறும் தமிழர்கள்
ஏதாவது பயனடைந்தார்களா?
பின்விளைவுகளால்
எந்தவித பயனுமற்ற
இதை நீங்கள் எதற்காக
பெரிய வெற்றியாகக்
கொண்டாடுகிறீர்கள்?
இந்த நேரத்தில்
தேசிய நல்லிணக்கத்துக்கும்
இன ஒற்றுமைக்கும்
இது அவசியப் படுமா?
இதை நாங்கள் ஞாபகத்தில்
கொள்ள வேண்டும்:
மகிந்த ராஜபக்ஸ
ஸ்ரீலங்காவின்
தெரிவு செய்யப்
பட்ட ஜனாதிபதி.
அவருக்கு எந்த
அவமதிப்பு நிகழ்ந்தாலும்
அது ஸ்ரீலங்கா
மக்களுக்கு அவர்கள்
சிங்களவரோ, தமிழரோ,
முஸ்லிமோ அல்லது
பறங்கியரோ யாராக
இருந்தாலும் ஏற்பட்ட
அவமானம் இப்படியான
ஒரு நேரத்தில்
மக்கள் இயற்கையாகவே
ஜனாதிபதியைச்
சுற்றிக் கூடுவார்கள்.
இது தெளிவானது,
ஜனாதிபதி டிசம்பர்
3ந்திகதி வெள்ளியன்று
கட்டுநாயக்கா
விமானத் தளத்தை
அடைந்த போது அரசாங்க
அரசியல்வாதிகளால்
வழி நடத்தப்பட்ட
பெருந்திரளான
மக்கள் அவரை வரவேற்கக்
கூடியிருந்தார்கள்.
பௌத்த, இந்து,
இஸ்லாமிய, கிறீஸ்தவ
மதகுருமார் அவரை
ஆசீர்வதிக்க அங்கே
வந்திருந்தார்கள்.
ஜனாதிபதி களைப்படைந்தவராகக்
காணப்பட்ட போதிலும்,
ஒக்ஸ்போட் சங்கத்தினரின்
திடீர் மாற்றத்தால்
உண்டான வருத்தம்
காரணமாக மனமுடைந்தவராய்
காணப் படவில்லை.
இந்தக் கட்டத்தில்
இந்தப் பத்தி திரும்பவும்
ஜனாதிபதி ராஜபக்ஸ
அவர்களை அரச தலைவருக்குரிய
தகுதியுடன் அறிக்கை
விட்டதற்காக அவரைப்
புகழ்ந்துரைக்கிறது.
இந்தப் பத்தி அவருக்கு
ஏற்பட்ட ஏமாற்றத்தையும்
வலியினையும் மிக அருகிலிருந்தும்;
இன்னும் அதிக தூரத்திலிருந்தும்
விளங்கிக் கொள்கிறது.
இந்த சம்பவத்தை
ஒரு ஊசி குத்தலைப்போல
கருதி விலக்கிவிட்டு,
ஸ்ரீலங்காவின்
எல்லாப் பிள்ளைகளும்
சம உரிமைகளையும்,சமாதானத்தையும்,
மற்றும் பொருளாதார
சுபீட்சங்களையும்
அடைந்து மகிழும்
தேசத்தை கட்டியெழுப்பும்
பணிகளில் ஈடுபடுமாறு
இந்தப் பத்தி ஜனாதிபதி
அவர்களைக் கேட்டுக்
கொள்கிறது,
தமிழில். எஸ்.குமார்
(பிரதி பெற்ற இணையம்: தேனி)