|
||||
|
தேவலோகம்
வந்தும் எங்களுக்கும்
நாடு கடந்த
தேவலோகம்
தா என்டு
கேட்டாலும் கேப்பாங்கள்… யாழ்ப்பாணத்தில் இப்ப பாருங்கோ முந்தி ஒருபோதும் இல்லாத அளவுக்கு விபத்துகள் பெருக்கிப் போச்சு.. இதுக்கு என்ன காரணம் என்டு வயதான அப்பு ஒருவரிட்ட கேட்டன். அந்தாள் அழுதழு சொன்ன விசயங்கள் இவைதான்:
முந்திப்
பாருங்கோ
எமன் எருமை
மாட்டில வாறாதா எல்லாரும்
சொல்லுவாங்கள்….
இப்ப சண்டை
ஓய்ஞ்சு போச்சு…. இப்பிடியே
இவங்களை விட்டால் கன அலங்கோலம்
செய்வாங்கள்…
பிறகு தேவலோகம்
வந்தும் எங்களுக்கும்
நாடு கடந்த
தேவலோகம்
தா என்டு
கேட்டாலும்
கேப்பாங்கள்…
அதால அவங்களை
நிம்மதியா
இருக்க விட்டியோ
உனக்குத்தான்
கஸ்டம் என்டு எமனுக்கு
யாரோ அண்டி விட்டதால
வந்த வினை.. என்டு நான் நினைக்கிறன்.
யாழ்ப்பாணத் தமிழன் இப்ப எத்தனையோ
பிரச்சனைகுள்ள
அம்பிட்டு
ஆப்பிழுத்த
குரங்கு போல இருக்கிறான். அதுல
முக்கியமான
பிரச்சனை
இந்த றோட்டு
வழிய நடக்கிற
அட்சிடன்ட்
பின்னால உறுமிக்
கொண்டு வாற மோட்டுச்
சயிக்கிள் ??? சத்தம் கேட்க வயித்தைக்
கலக்குது
பாருங்கோ…
எங்க என்ர
காலுக்கு
கொண்டு வந்து ஓட்டிப்
போடுவான்
என்ட பயத்தில
தான்
யாழ்ப்பாணத்தில இப்ப
மோட்டுச்சயிக்கிள்
ஓடுற சில
பரதேசிப்
பயலுகளைப்
பார்க்க உண்மையா எமன் போலத்தான்
கிடக்குது
பாருங்கோ….
ஒற்றக் காதுல
தோடு..
கறுப்பு ரீசேட்டு, கறுப்பு லோங்சு…லோங்ச இறுக்கி கட்டுற அந்த கயித்தில
ஒரு கான்
போனு…கறுப்பு கண்ணாடி…
அட நல்ல
மழை பெய்யவும்
ஒரு பொடிப்பிள்ளை
கூலிங்கிளாஸ்
போட்டுக்
கொண்டு ஓடுறான் என்டா
பாருங்கோவன்
மோட்டுச் சயிக்கிளை
மாத்திரம்
ஒவ்வொரு
நாளும் நல்லா குளிப்பாட்டி
வடிவா வெச்சிருப்பாங்கள்…
ஆனால் தாங்கள்
குளிக்கமாட்டாங்கள்..
என்ன செய்யிறது.. எங்கட
யாழப்பாணத்தில
இப்ப புழு
நெளிஞ்ச போல மோட்டச்சயிக்கிளுகள்
நெளியுது
இந்த நுளம்பு
மோட்டுச்சயிக்கிள்
என்டு ஒன்டு வந்து
எல்லாரையும்
படாத பாடு
படுத்துது
பாருங்கோ…
என்ர வயசு கிழவி
ஒன்டும் அந்த மோட்டுச்சயி்கில்
எடுத்திட்டாள்
என்டா நம்புவிங்களோ.
பொலிஸ்காரனுக்கு நல்ல
உழைப்பு இவங்கட மோட்டுச்சயிக்கிளால
ஒருத்தரிட்டையும் லைசன்ஸ்
இல்லை… பொலிசிட்ட
அம்பிட்டால்
3 கிற்காட்
வாங்கிக் குடுத்து
சமாளிக்கலாம்
என்டு எங்கட பொடியல்
சொல்லுறாங்கள்
அதை விட
யாழப்பாணத்து
வீதிகளும்
ரொம்ப மோசமாப் போச்சுதுங்கோ…….
எங்கட கலாச்சாரம்
போல குண்டும்
குழியுமா
கிடக்குது
நான் நினைக்கிறன்
வீதியை இப்படி சீரழிய விடுறது சிங்கள
அரசின்ட திட்டமிட்ட
வேலையாய்
இருக்கும்
என்டு
ஏனென்டா தமிழரை சனத்தொகையில்
பெருகாது
தடுப்பதற்கு
இப்படி வீதியை சீரழிய விட்டிருக்கிறாங்களோ? என்ட
கோணத்தில
ஆராய வேண்டி
இருக்குதுங்கோ
இப்படியான வீதியால எந்த வாகனத்தில
வாற கர்ப்பிணிப்
பெண்ணிட கர்ப்பமும்
கலைஞ்சு போயிடு்ம்
என்டு யோசிச்சு
தான் இப்படி
விட்டாங்களோ???
இதைப் பற்றி
ஒருத்தருக்கும்
பறைஞ்சு போடாதையுங்கோ…
பிறகு ஆராவது யாழப்பாண தமிழ் அரசியல்வாதி
இதையே வைச்சு ஒரு வருசத்துக்கு
கத்திக் கொண்டு இருப்பான்
இன்னுமொரு காரணம்
கண்டறியாத
கான்போன்
வந்து செய்யிற பிரச்சனைதான்
ஆரும் ஒரு
மிஸ் கோல்
குடுத்தா
சரி…. தம்பி
அலேட் ஆகி ஓட்டிக்
கொண்டிருக்கிற
வாகனத்தையும்
பாக்காமல்
போய்க் கொண்டிருக்கிற
வாகனத்தையும்
பாக்காமல்
பொக்கற்றுக்க
கைய வைச்சு
பாத்துப்
போட்டுத்தான்
அடுத்த வேலை செய்வான்…
இப்ப ஒரு
ஸ்ரைல் வந்திருக்கு
பாருங்கோ….
கெல்மட்டுக்குள்ள
சொரிகிக்
கொண்டு கான் போன்
கதைக்கிறது
… இப்படிச்
செய்யிறவங்களைப்
பிடிச்சு
காதுக்குள்ள
தார் ஊத்தவேணும்
அப்பத்தான்
என்ர மனம்
சாந்தியடையும்
பெரிய வாகனங்கள்
ஓடிக் கொண்டு வாறவங்கள்
தங்கட மனசுக்குள்ள
பெரியாக்கள்
என்ட நினைப்பில
வாறது மற்ற
பிரச்சனை
றோட்டால வாற
எல்லாரையும்
நாய், பேய்
என்டு நினைத்துக்
கொண்டு மற்றவைக்கு
வழி விடாது
தான் நினைத்தால்
மாத்திரம்
சயிற் விட்டு ஓடுற பரதேசி
றைவர்களை
எனக்கு முன்னால கொண்டு வந்து நிப்பாட்டினால்
என்ர பொல்லால
அடிப்பன்
அவங்களுக்கு
அடுத்த பிரச்சனை
இந்த மினிவஸ்
ஓடுறவங்களிட
தொல்லை
கெட்ட தறுதலை பிடிச்ச நாய்கள் இந்த மினிவஸ்
ஓடுறவங்கள். றோட்டால
ஆமை வந்தது
மாதிரி வருவாங்கள்….
என்னடா இவ்வளவு சிலோவா ஓடுறாங்கள்
என்டு பாத்தா பிறகு பின்னாலை
ஏதாலும் பஸ் அல்லது
வேற மினிவான்
வந்தா யம்போ ஜெட் போல
பறப்பாங்கள்…
உள்ளுக்கு
நிக்கற எல்லாரும்
உசிரைக் கையில பிடிச்சு
வைச்சிருக்க
வேணும்… ஒருக்கா நான் ஒரு
மினிவஸ்ல
ஏறி எனக்கு
பயத்தில 1க்கு
போட்டுது
பாருங்கோ….
இவ்வாறு கவலைப்
பட்ட அப்புவின்
குமுறல் போல் எத்தனையோ
குடாநாட்டு மக்களின் மனங்களில்
இந்த போக்குவரத்துப்
பிரச்சனை
பற்றி கவலை இருக்கின்றது……
அவர்களின்
செய்திகளுடன்
இன்னொருநாள்
உங்களை சந்திக்கின்றேன்…
நாரதர்
நன்றி: புதிய
யாழ்ப்பாணம்
December
11, 2010 by T.V. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |