Contact us at: sooddram@gmail.com

 

வந்தேறு குடிகள்……….?

அடிப்படையில் பார்த்தால் எல்லாருமே வந்தேறிகள்தான். பூமியின் குறிப்பிட்ட பகுதியில்தான் மனித இனம் பரிணமித்தது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மற்ற பகுதிகளுக்கு நம் ஆதி தாத்திகளும் தாத்தன்களும் புலம் பெயர்ந்து குடியேறினார்கள் என்பதே மானிடவியல் வரலாறு. இதில் முதலில் இங்கே வந்து சேர்ந்தவர்கள் பூர்வகுடிகள், பழங்குடிகள், ஆதிவாசிகள். அவர்களுக்குப் பின்னால் வந்து சேர்ந்தவர்கள் தங்களிடம் இருந்தஅன்றைய நவீன தொழில்நுட்ப அறிவோடும் அரசியல் உத்திகளோடும் இந்தப் பூர்வகுடிகளை விரட்டினார்கள், விரட்டுவதற்காக ஒடுக்கினார்கள். பின்னால் வந்தவர்களால் மிக மிகப் பின்னால் தள்ளப்பட்டவர்கள்தான் பழங்குடி மக்கள்.

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடம்- இயற்கையாய் அமைந்த காடு சார்ந்த “பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஒரு பகுதி” என்று பழங்குடி மக்களைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் அ. பகத்சிங். அந்த மரம், இந்த மரம், அந்தச் செடி, இந்தச் செடி, அந்த விலங்கு, இந்தவிலங்கு, அந்தப் பறவை, இந்தப் பறவை என்றெல்லாம் இருப்பது போல் இவர்களும் இருந்தால்தான் அது காடு.

தலைமுறை தலைமுறையாகக் காட்டின் அங்கமாகவே வளர்ந்து வாழ்ந்திருந்தவர்களை, பின்னால் வந்தவர்கள் நிலத்தை வளைக்க முயன்றபோது தாக்கினார்கள். காட்டையும் காட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடிய பூர்வகுடி மக்களையும அழிததார்கள். தங்களுடைய அரசியல் ஆளுமைக்கான அந்த ஒடுக்குமுறைகளையும் அழிவு வேலைகளையும் நியாயப்படுத்தி, புனித முலாம் பூசுகிற கதைகளைக் கட்டமைத்தார்கள். வனத்திற்காகவும் அதில் வாழ்ந்த மக்களுக்காகவும் போராடிய வீர நரன்களைக் கொடியவர்களாக சித்தரித்து நரகாசுரர்கள் என்று பெயரிட்டார்கள். வஞ்சகத்தால் கொல்லப்பட்டவர்கள், தாங்களே விரும்பி தங்களது மரணத்தை மக்கள் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாகப் புராணங்கள் புனையப்பட்டன.

இப்படி துரத்தித் துரத்தி விரட்டப்பட்டதால்தான் சுருங்கிப்போனது பழங்குடியினர் மக்கள்தொகை. சோளகர் மக்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 3,853 பேர், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி சுமார் 5,965 பேர் என்று புத்தகம் தெரிவிக்கிறது. பத்தாண்டுகளில் 2,112 பேர் அதிகரித்துவிட்டார்கள், இவர்களின் வாழ்க்கை செழித்துவிட்டது என்று அர்த்தமல்ல. முந்தைய கணக்கெடுப்பில் இவர்களில் பலரை அரசு எந்திரம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்றே பொருள்.
பிற்காலத்தில் இவர்களை மதமாற்றம் செய்வது என்பதும் நடந்தது. அதாவது, தங்களது எளிய நடைமுறைகளோடு இயற்கையை வணங்கி, தங்களுக்கு வழிகாட்டிய தலைவர்களைப் போற்றிக்கொண்டிருந்த பூர்வகுடி மக்கள், (பிற்காலத்தில் இந்து மதம் என்று பெயர் சூட்டப்பட்ட) பெரும் சடங்குமுறை சார்ந்த மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். அதன் பிறகு, ஒரு பகுதியினர் அந்த மதத்திலிருந்து வேறு மதங்களுக்கும் மாற்றப்பட்டார்கள். எந்த மத அடையாளமுமின்றி ஒரு குழந்தை குழந்தையாகவே பிறக்கிறது, அதனை ஆசிர்வதிப்பதாக அதன் நெற்றியில் விபூதி அல்லது நாமத்தை, பிறைக்குறியை, சிலுவைக்குறியை இடுகிறபோதே மதத்திற்கு மாற்றப்படுவது தொடங்குகிறது. அப்புறம் ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவதும் நடக்கிறது. மதமாற்றம் பற்றி கூச்சலிடுவோர், இந்த மக்கள் மதத்திலிருந்து வெளியேற்றப்படுவதாகத்தான் ஆத்திரம் வளர்க்கிறார்களேயன்றி, நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை.

ஆதியில், அடுத்து வந்தவர்களால் தொடங்கப்பட்ட அந்த நில ஆக்கிரமிப்பு இன்று மேம்பாட்டின் பெயரால், வனப் பாதுகாப்பின் பெயரால், தொழில் வளர்ச்சியின் பெயரால் தொடர்கிறது. நரன்களை அழிக்கிற நவீன அவதாரங்களாக அம்பானிகளும் அதானிகளும் டாட்டாக்களும் பிர்லாக்களும் இன்னபிற உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் பகவான்களும் திருவிளையாடல்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வசதியாக புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறது அரசு.

இது ஒரு குறுகிய எண்ணிக்கை கொண்டவர்களின் சிறிய பிரச்சனை அல்ல. நாட்டின் இதர குடிமக்கள் மீதும் நாளை இந்த பகவான்கள் பாய்வார்கள். அதைத் தடுக்க மற்ற பகுதி மக்களின் கவனத்தை ஈரப்பதும், இவர்களது போராட்டத்திற்கு அவர்களது ஆதரவைத் திரட்டுவதும் முக்கியம். அதற்கொரு சிறிய பங்களிப்பாகவே வந்திருக்கிறது இந்தப் புத்தகம்.
-அ. பகத்சிங் எழுதி, எதிர் வெளியீடாக வந்துள்ள ‘சோளகர் வாழ்வும் பண்பாடும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வடசென்னை மாவட்டக்குழுவின் அலுவல ஊழியர் கிளை சார்பில் நவம்பர் 28 அன்று நடைபெற்றது. அதில் எனது வாழ்த்துரையின் சாரம் இது. நூலை வெளியிட்டு உரையாற்றியவர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பெ. சண்முகம். நூல் குறித்துப் பேசியவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் முனைவர் ஆ. செல்லப்பெருமாள், பத்திரிகையாளர் கௌதம் சித்தார்த்தன், ‘மார்க்சிஸ்ட்’ இதழ் முன்னாள் ஆசிரியர் வே. மீனாட்சிசுந்தரம், சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் இரா.தெ. முத்து. தலைமை: மாவட்டச் செயலாளர் நாடகக் கலைஞர் ஜே. ஜேசுதாஸ். வரவேற்பு: சிறுகதை எழுத்தாளர் மணிநாத். (தொகுப்பு: கவிஞர் நா.வே. அருள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com