Contact us at: sooddram@gmail.com

 

தற்போதைய நிலவரங்களின்படி … பிரபலமாவதற்கு (இந்தியாவில்) இரண்டே இரண்டு வழிகள் தான் அதிகமாகப் பின்பற்றப்படுகின்றன


1. புலியெதிர்ப்பு
2. சாதிய மறுப்பு
முதலாவது வகையை வைத்து பிரபலமாவது தான் தமிழகச்சூழலில் இலகுவாக நடந்தேறி விடுகிறது.. புலி ஆதரவு எல்லாரும் தானே செய்யினம்.. ஆரெண்டாலும் புதிசா அரசியலுக்குள்ளை வாறவை அல்லது பிரபலமாக நினைக்கிறவை… புலி ஆதரவு பற்றி கதைச்சா… அது வெறும் செய்தியாகி அடங்கிவிடும்.. ஆனா எதிர்த்தினமெண்டா…. சும்மா பத்தி எரியும்… அது தானே அவைக்கும் வேணும்…ஆனா கண்ட கண்ட நாய்களெல்லாம் ஈழத்தைப் பற்றி கதைக்கிறது தான் தாங்க முடியேல்லை….
ஆனா.. இதைத்தவிர நாங்கள் வேறு எதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தோமானால் நாம் தான் முட்டாள்கள். “அவர்கள்” அப்படித்தான்.. தமிழகத்திலை அரசியல் செய்யிறேக்கு.. புலி.. ஈழப்போர்… இசைப்பிரியா.. பாலகுமாரன்… அது ஒரு வகை.. இன்னொண்டு சிங்களவன்.. மீனவர்கள் கைது.

இசைப்பிரியா பற்றி கதைக்கும் மேதாவிகளுக்கு அமைதிப்படை என்ற பேரிலை எத்தினை இசைப்பிரியாக்களும் பாலகுமாரன்களும் சிதைக்கப்பட்டனர் என்ற விடயம் தெரியேல்லை… சரி அதை விடுங்கோ… நடந்து முடிஞ்ச கதை…. நடந்தது நடந்து போச்சு.. ஆனா… உங்கடை அகதி முகாம்களிலை இருக்கிற எங்கடை ஆக்கள் படுற பாடுகள்..?? அதைப்பற்றி பார்க்க “தமிழர்கள் நாங்கள்” எண்டு கூவிக் கூவி “ஈழத்தை” விற்கிற கூட்டத்தின்ரை கண்ணுக்கு உதெல்லாம் தெரியாது.. ஆனா ஈழத்தை மீட்டெடுக்கப் போராடுவினமாம்… போராட்டம் .. அதன் வலிகள்… வெறும் பேச்சுக்களில் மட்டுமே… உண்மையான உணர்விருப்பின் முதலில் இந்திய முகாம்களில் இருக்கும் ஈழத்து அகதிகளுக்கு விடுதலையைப் பெற்றுக்குடுங்கோ… உணர்வு இருக்கும்… முள்ளிவாய்க்கால் முற்றத்தில் புதைந்திருக்கும்

அண்மையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எண்மருள் ஐவர் இந்தியத் தமிழர்கள்… அவர்களின் விடுதலைக்காக அதுவும் ஒரு நாட்டின் இறையாண்மையை உடைத்து விடுதலை கோரிய போராட்டங்கள்… விடுதலையும் கிடைத்தது…. ஆனால்… மீதி மூவரும் என்ன ஆனார்கள் என்று தெரியுமா???? அதைப்பற்றி யாருக்கும் என்ன?? ஈழத்தமிழர்கள் தானே… கொத்துக்கொத்தாக அழிந்துபொனவர்களுள் இவர்களையும் அடக்கிக்கொள்ள வேண்டுமா???? (சம்மந்தப்பட்டவர்களுக்குச் சமர்ப்பணம்)
தமிழகம்…. பாண்டிச்சேரி…கார்த்திகை 27 இல் சிவப்பு மஞ்சள் கொடிகளும் தலைவரும் மாவீரரும் எங்கு திரும்பினாலும் காட்சி கொடுத்தனர்… அட.. முகநூலில் அதைத்தவிர வேறு பதிவுகளே இல்லை… (ஆனா.. பத்திரிகைகளில் மருந்துக்கு கூட செய்தி இல்லை)… நானும் நினைச்சன்… எங்கடை மாவீரர்களுக்கு இவ்வளவு மரியாதைகளா என்று…. தமிழகமே திரண்டது… செய்திகளால் நிறைந்தது இணையத்தளம்


ஆனா… ???????
ஒரு சிரேஷ்ட மாணவன் : என்னம்மா…. விளக்கெல்லாம் கொளுத்தப் போறீங்களா??
நான் : ஓம் அண்ணா… இண்டைக்கு மாவீரர் தினம்…
சீனியர் : மாவீரர் தினமெண்டா???
நான்….. ……
சீனியர் : ஓ… மாவீரன் எண்டு படம் ஒண்டு வந்துதே… நெப்போலியன் நடிச்சிருந்தானே…. ந்தக் கதையா???????
நெற்றிப்பொட்டில் அறை வாங்கிய அதிர்ச்சி எனக்கு… ஆனால்… அவர்களின் தவறு அல்ல… தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு தான்… ஆனாலும்… சந்திக்குச் சந்தி கொடி வைச்சு கொண்டாடியும் ஏன் என்று புரியாதது அவர்கள் தவறு அல்ல…. தவறு எங்கிருக்கிறது..???
அம்மா தாயே குசுப்பூ…. … இந்த மக்களிற்கு நீ அரசியல் செய்யிறேக்கு ஏற்றவள் தான்… கலக்கு மச்சி…. DNT WRYYY BE HAPPYYYY ) இண்டைக்கு உன்னை “தேவடியாள்” புலி பற்றி பேசாதே என்று பொங்குபவர்கள் எல்லாம் நாளைக்கே “தேவ .. அடியாள்.. சரணம்” எண்டு வருவாங்கள்…
என்ன ஆக்களடாப்பா… சா
( ஆத்மார்த்தமாக… எந்தவொரு அரசியல் சுயலாப நோக்கங்களின்றி…. எங்களுடன் பயணிக்கும் சில தமிழக உறவுகள் மன்னிக்கவும்… இது தங்களுக்கானதல்ல)
கடைசியா எங்கடை ஆக்களுக்கு ஒரு செய்தி….
எங்களின்ரை விடியல்…எங்கடை கைகளில் மாத்திரம் தான்…
அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்தி தான்….
“நீங்க வேறை நாடையா… நீங்க வேறை நாடு….” இது சிங்களவர்களுக்கு மட்டுமல்ல….....
(யாருக்கு?யாருக்கோ?? )
(நன்றி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com