Contact us at: sooddram@gmail.com

 

பாகிஸ்தான் தலிபானின் கொடூரமான தாக்குதலில் யுத்த களமான பாடசாலை

கடந்த செவ்வாய்க்கிழமை காலை பெஷாவர் இராணுவ பொதுப் பாடசாலைக்குள் முதல் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டபோது எவரும் கணக்கில் எடுக்கவில்லை.அந்த துப்பாக்கிச் சத்தங்கள் அசாதாரணமாக இருந்தது. ஆனால் இராணுவம் பயிற்சியில் ஈடுபடுவதாக இருக்கலாம் யாரும் பயப்பட வேண்டாம் என்று ஆசிரியை எமக்கு சொன்னார் என்று பாகிஸ்தான் தலிபானின் கொடூரமான தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மாணவன் ஒருவன் குறிப்பிடுகிறான். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் ஓடிவந்து அந்த இரு துப்பாக்கிச் சூடுகள் மூலம் பாடசாலை கேட்போர் கூடத்திற்கு மேலால் இருந்த பாதுகாவலர் தாக்கப்பட்டதாக கூறும் வரை நிலைமையின் தீவிரத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் அதற்குள் பாடசாலை கேட்போர் கூடத்தில் படுகொலைகள் அரங்கேறி இருந்தன.

அந்த இடைப்பட்ட தருணத்திற்குள் மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. நாம் தாக்குதலுக்கு முகம்கொடுத்திருக்கிறோம் என்று அப்போது தான் புரிந்துகொண்டோம் என்று 12 ஆம் தர மாணவனான 17 வயது சித்வாத் ஜப்ரி குறிப்பிட்டார். பாடசாலையின் இரண்டாம் மாடியில் இருக்கும் மண்டபத்தில் சித்வான் மேலும் 45 மாணவர்களுடன் சேர்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்தான். இந்த மண்டபத்தின் ஜன்னல் ஊடாக பார்த்தால் பாடசாலையின் வடமேற்கு மதில் சுவர் தெரியும். இந்த மதில் சுவர் பாடசாலையையும் விவசாய நிலத்தையும் பிரிக்கிறது. மதில் சுவரின் மேலால் முட்கம்பி பொருத்தப்பட்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஏழு ஆயுததாரிகள் பாடசாலை மதில் சுவருக்கு அருகில் தடு மாறுவதை பலரும் அவதானித்திருக்கிறார்கள். அனைத்து ஆயுத தாரிகளும் குண்டு பொருத்திய அங்கியை அணிந்திருந்தார்கள். அதற்கு மேலால் துணைப் படையினரின் சீருடையை அணிந்திருந்தனர். இவர்கள் முட்கம்பியை வெட்டி பாடசாலைக்குள் ஏணி வைத்து இறங்கி யிருக்கின்றனர்.

பாடசாலையின் கேட்போர் கூடம் இருக்கும் பிரதான மண்டபத்திலேயே முதலாவது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அப்போது பாடசாலை கேட்போர் கூடத்தில் இராணுவத் தினர் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் 14 முதல் 16 வயதுடையவர்கள். ஆனால் இந்த பாடசாலை தாக்குதலுக்கு உள்ளாகும் என்ற பயம் மாணவர்கள், ஆசி ரியர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னரே தொற்றியிருந்தது. பாடசாலை புல்வெளியில் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் குண்டொன்றை கட்டெடுத்ததாக சித்வான் குறிப்பிடுகிறார். அப்போது மாணவர்கள் அனைவரும் பின்புற வாயிலால் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் பாட சாலைக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. பாடசாலையின் வடக்கு மற்றும் மேற்கு மதில்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆசிரியர்கள் கோரியிருக் கிறார்கள். பாடசாலையின் மேற்கு மற்றும் வட மேற்கு மதில் சுவரின் கொல்லைப்புறம் வட மேற்கு பாகிஸ்தான் நகரான பெஷாவரின் ஆபத்தான இடங்களாகும். அதாவது மதில் சுவரை எட் டிப் பார்த்தால் தஹ்கால் கிராமம் தென்படும். இந்த கிராமத்தில் ஆப்கான் அகதி முகாம் இருக்கிறது. அதற்கு குண்தாய் என்று பெயர்.

ஆனால் கடந்த ஒருசில மாதங்களாக நிலவிய இந்த அச்சுறுத்தல் சூழல் பற்றி பாடசாலையை நடத்தும் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. கடை சியில் இந்த அச்சுறுத்தலான மதில் சுவர் ஊடாகத்தான் ஆயுததாரிகள் பாடசாலைக்குள் நுழைந்தார்கள். சித்வான் மற்றும் ஏனைய மாணவர்களும் பரீட்சை மண்டபத்தில் இருந்து பார்த்ததும் இந்த மதில் சுவர் இருக்கும் திசையைத்தான். ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருந்த எனது நண்பன் ஒருவன் ஒருசில ஆட்கள் மதில் சுவர் பக்கத்தில் இருந்து பல திசைகளில் பிரிந்து ஓடியதை பார்த்ததாக குறிப்பிட்டான் என்று சித்வான் விபரிக்கிறார்.

பரீட்சை மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடி யையும் ஒருசில துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. மண்டபத்தை விட்டு உடனடியாக வெளியேறி மத்தியில் இருக்கும் மண்டபத்திற்கு செல்லும்படி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டார்கள். இந்த மத்திய மண்டபம் எந்த பக்கமும் தென்படாது பாதுகாப்பான இடமாக இருந்தது. ஆனால் சித்வாத் ஜப்ரியின் இளைய சகோதரரான 15 வயது பாக்கிர் ஜப்ரி அவ்வளவு அதிர்ஷ்டசாலியல்ல. பாக்கிரின் தலையில் துப்பாக்கி தாக்கியது. ஆனால் துப்பாக்கி குண்டு அவனது தோலை உரசியடி சென்றதே ஒழிய எலும்பை துளைக்கவில்லை.

துப்பாக்கி குண்டு பாயும் போது பாக்கிர் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இருந்தான்.கேட்போர் கூடத்தில் இராணுவத்தின் மருத் துவக் குழு மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. முதல் இரு துப்பாக்கி சூடுகளும் கேட்டபோது மாணவர்கள் பயிற்சியில்தான் இருந்திருக்கிறார்கள். அப்போது நாம் மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்டோம். முன் வரிசையில் அமர்ந் திருந்த எமது அதிபர் தாஹிரா காசி, பின்பக்கமாக திரும்பி பின்புறமாகவிருக்கும் கதவை மூடும்படி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். நான் பின் பக்கமாக திரும்பிப் பார்த்த போது கதவை மூடச் சென்ற ஆசிரியர் ஜாவிட் மீது கண்ணாடி ஊடாக வந்த இரு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அங்கேயே விழுந்தார் என்று பாக்கீர் விபரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரு ஆயுததாரிகள் பின்புறக் கதவை திறந்துகொண்டு வந்து சரமாரியாக சுடுவதை பாக்கீர் பார்த்திருக்கிறான். அவன் உடனடியாக தனது ஆசனத்திற்கு கீழ் மறைந்துகொண்டான். பின்புறமாக நடந்துகொண்டே முன்னால் வந்த இரு ஆயுததாரிகளும் கண்டமேனிக்கு மாணவர் களை சுட்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஓர் ஆயுததாரி பாக்கிர் ஒளிந்து கொண்டிருந்த ஆசனம் வரை வந்திருக்கிறான். ஆனால் பாக்கிர் கண்ணுக்கு தெரியவில்லை. பாக்கிரை கடந்து சென்றவன் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது பாக்கிரின் தலையை கண்டிருக்கிறான்.

அவன் என்னை சுட்டபோது நான் எனது தலையை சற்று நகர்த்தினேன் துப்பாக்கி குண்டு எனது நெற்றியில் உராய்ந்துகொண்டு சென்றது. அப்போது சற்று எரிச்சல் உணர்வு ஏற்பட்டது. பெரிதாக வலிக்கவில்லை. பின்னர் எனது தலையை பிடித்து பார்த்தபோது இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. எனது ஆசிரியை ஹப்ஸாவை தலைக்கு பின்புறமாக மூன்று முறை சுடுவதை நான் பார்த்தேன் என்று விபரிக்கிறார் பாக்கிர்.

மண்டபம் எங்கும் புகைமூட்டமாக இருந்த தாகவும் ஆயுததாரிகள் முன் வாயிலால் வெளி யேறியதாகவும் பாக்கிர் குறிப்பிட்டார். ஆயுத தாரிகள் வெளியேறிய உடன் மண்டபத்தில் தொடர்ந்து உயிரோடு இருந்தவர்கள் இரு முனைகளிலும் இருக்கும் வெளியேறும் வாயிலை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். பாக்கிர் கேட்போர் கூடத்தின் மேடைப்பக்கம் ஓடி அங்கிருந்து வலதுபுறமாக இருக்கும் வெளியேறும் வாயிலூடாக நிர்வாகப் பிரிவு பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது பாடசாலையின் கல்லூரிக் கிளை மற்றும் நிர்வாகக் கிளைகளில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்பதை பாக்கிர் உணர்ந்திருக்கிறார்.

அந்த பகுதியிலும் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு முகம்கொடுத்திருக்கிறார். தப்பியோடும் சிறுவனை துரத்த வந்த ஆயுததாரி சுட்ட துப்பாக்கி குண்டு பாக்கிரை கடந்து மற்றொரு சிறுவனை தாக்கியிருக்கிறது. உடனடியாக கீழே படுத்துக் கொண்டிருக்கும் பாக்கிர் இறந்தது போல் பாசாங்கு செய்துள்ளார். தொடர்ந்து துப்பாக்கிச் சத்தங்களும் மத்தியில் ஓரிரு மணி நேரங்கள் படுத்திருந்த பாக்கிருக்கு, யாராவது இருக்கிaர்களா? என்ற குரல் கேட்டிருக்கிறது. தலையை தூக்கி பார்த்தபோது இராணுவ வீரர் ஒருவரை பார்த்திருக்கிறார். கையை உயர்த்தியவாறு வரும்படி இராணுவம் கேட்டதற்கு இணங்க பாக்கிரும் அவ்வாறே கொல்லப்பட்ட மாணவர்களை கடந்து அந்த இராணுவ வீரரை நோக்கி சென்றிருக்கிறார்.

பெஷாவர் பாடசாலையில் நடந்த மனிதாபிமானமற்ற அந்த தாக்குதலில் கேட்போர் கூடத்தில் இருந்த சுமார் 100 பேர் கொல் லப்பட்டனர். கேட்போர் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுததாரிகள் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். ஒரு வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு முன் ஆசிரியரை தன்னைத்தானே தீமூட்ட வைத்திருப்பதாக இராணுவ தரப்பொன்று என். பி. சி. தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருக்கிறது.

ஒருவர் கூச்சல்போட்டுக் கொண்டு எம்மிடம் வந்து மேஜைக்கு கீழ் ஒளிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டார் என்று விபரிக்கும் 16 வயது ஷாருக் கான் என்ற மாணவன், ஆயுததாரிகள் அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்று கத்திக்கொண்டு சுட ஆரம்பித்தனர்” என்கிறார். ஆயுததாரிகளில் ஒருவர்: “அங்கு பல சிறுவர்களும் மேசைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கிறார்கள், போய் அவர்களை பிடியுங்கள் என்று கத்தினார் என கான் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய கறுப்பு பூட்ஸ்களை அணிந்த இருவர் என்னை நோக்கி வருவதை நான் பார்த்தேன். அந்த இருவரும் மேஜைகளுக் கடியில் ஒளிந்திருக்கும் மாணவர்களை பிடிக்க வந்தவர்களாக இருப்பார்கள்” என்றார். தனது முழங்கால்களுக்கு சற்று கீழால் இரு கால்களிலும் துப்பாக்கிக் காயம் பட்டதால் கடும் வலியை உணர்ந்ததாக கான் குறிப்பிடுகிறார். அந்த சூழலில் இறந்தவர் போல் நடிக்க அவர் தீர்மானிக்கிறார். எனது கழுத்து டையை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். சத்தம் போடாமல் இருக்கவே நான் அப்படிச் செய்தேன் என்று மருத்துவமனை கட்டிலில் இருந்த கான் விபரிக்கிறார்.

தாக்குதல் ஆரம்பமாகி சில நிமிடங்களில் இராணுவ அதிரடிப் படையினர் பாடசாலைக்கு விரைந்தனர். இராணுவத்தினர் ஆயுததாரிகளை வேட்டையாட ஆரம்பித்த போது துப்பாக்கி சூடு களுடன் குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டதாக அருகில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். இதன்போது இராணுவத்தினர் பாடசாலை எங்கும் கட்டம் கட்டமாக சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். எட்டு மணிநேர முற்றுகைக்கு பின் இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அனைத்து ஆயுததாரிகளும் கொல்லப்பட்டு விட்டதாகவும் இராணுவம் அறிவித்தது.

ஆயுததாரிகள் ஆயுதம் மற்றும் உணவுகளை குவித்து வைத்திருந்ததாகவும் அவர்கள் ஒரு சில நாட்களுக்கு இந்த முற்றுகையை தொடர திட்டமிட்டிருந்ததையே இது காட்டுவதாகவும் மேஜர் ஜெனரல் அசிம் பஜ்வா சந்தேகிக்கிறார். இதில் ஆயுததாரிகளை இராணுவம் தான் கொன்றார்களா அல்லது அவர்கள் தம்மை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண் டார்களா என்பது இராணுவத்தால் தெளிவு படுத்தப்படவில்லை. தாக்குதல் முடிவுக்கு வரும் போது பாடசாலை அதிபர் உட்பட 145 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். இதிலே 132 பேர் மாணவர்கள் அதாவது சிறுவர்கள், 10 பேர் பாடசாலை ஊழி யர்கள், மூன்று இராணுவ வீரர்கள், மேலும் 130 பேர் காயமடைந்தார்கள்.

பெஷாவர் இராணுவ பொதுப் பாடசாலையில் ஆண்கள், பெண்கள் என்று ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இதில் இராணுவத்தினரின் குழந்தைகள்தான் அதிகம். 25 வீதத்தினர் பொதுமக்களின் குழந்தைகள். பாகிஸ்தான் இராணுவம் நாடெங்கும் இவ்வாறான 146 பொதுப் பாட சாலையை நடத்துகிறது.

பாடசாலை ஒன்று தாக்குதலுக்கு இலக்கா வதற்கு முதல் காரணம் அது இராணுவத்தால் நடத்தப்படுவதும் இராணுவத்தினரின் குழந்தை கள் படிப்பதும் என்பதுதான். ஒரு குருட்டுத்தன மான போராட்ட வீரர்களுக்கு அட இதுவும் கூட இராணுவ இலக்குத்தான் என்று காட்டு மிராண்டித்தனமாக நியாயம் சொல்ல முடியும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் பாகிஸ்தான் தலிபான்களும் வெட்கமில்லாமல் இந்த காரணத்தைத்தான் சொன்னது.

இராணுவத்தினரின் வயது வந்த புதல்வர்கள் மற்றும் இராணுவத்தினரே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தலிபான் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டி ருந்தது. இந்த அறிவிப்பில் தலிபான்கள். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படம் ஒன்ற¨யும் இணைத்திருந்தனர். இந்த குழந்தை கள் இராணுவ தாக்குதல்களில் கொல்லப்பட் டவர்கள் என்று தலிபான்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள். தலிபான்கள் மீது பாகிஸ்தான் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கை யில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட் டுள்ளனர். இதன்போது இராணுவம் தமது குழந்தைகள் மற்றும் குடும் பத்தினரை கொல்வதாகவும் தமது வீடு களை தீக்கிரையாக்குவதாகவும் தலிபான்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவ்வாறான ஒரு தாக்குதலை ஆப்கான் தலிபான்களாலேயே பொறுபேற்க முடியவில்லை. இந்த தாக்குதலுக்கு கவலை தெரிவித்த அயல் நாட்டு தலிபான்கள், இது இஸ்லாத்துக்கு முரணானது என்று விளக்கம் சொல்லி இருந்தது. அப்பாவி மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானதாகும். இந்த அடிப்படை அனைத்து இஸ்லாமிய தரப்புக்கள் மற்றும் அரசுகளுக்கும் பொருந்தும் என்று ஆப்கான் தலிபான் பேச்சாளர் சபியுல்லாஹ் முஜாஹித் குறிப்பிடுகிறார்.

வடக்கு வசிரிஸ்தான் பழங்குடி பிராந்தியம் என்பது ஆயுததாரிகளின் அரணாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் இராணுவம் அங்கு தரைவழி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆயுததாரிகளுக்கு அந்த அரண் பறிபோனதை அடுத்து அவர்களின் பெரும்பாலானவர்கள் கைபர் பிராந்தியத்திற்கு நகர்ந்தார்கள். இது தாக்குதல் இடம்பெற்ற பெஷாவர் நகரின் கொல்லைப்புறமாக இருக்கிறது என்று சரளமாக சொல்லலாம். ஆனால் இராணுவத்தினர் அதனையும் விட்டுவிடவில்லை.

தலிபான் களையும் அதனுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஆயுததாரிகளையும் தேடி கைபர் பிராந்தியத் திலும் கடந்த மாதம் தாக்குதல்களை ஆரம் பித்தது. பல மாதங்களாக நீடிக்கும் இந்த இராணுவ நடவடிக்கை வெளிப்படையான தல்ல. நூறு ஆயுததாரிகள் கொல்லப்பட் டார்கள், இரு நூறு ஆயுததாரிகள் கொல் லப்பட்டார்கள் என்று இராணுவத்திடம் இருந்து அடிக்கடி அறிக்கைகள் என்றால் பஞ்சமின்றி வரும். எனவே இந்த நாய், பூனை கொல்லப்பட்டது போல் வரும் செய்திக்கு மறுபக்கம் ஒன்றும் இருப்பதை மறுத்துவிட முடியாது.

அடிப்படையில் தலிபான் மற்றும் பாகிஸ் தானில் இருக்கும் ஏகப்பட்ட ஆயுதக் குழுக்கள் பற்றி அந்த நாட்டு அரசு, இராணுவம் மற் றும் உளவுப் பிரிவு இரட்டை நிலைப்பாட் டையே கொண்டிருக்கிறது. 1990களில் ஆப்கானில் தலிபான்கள் உருவாவதற்கு பாக். உளவுப் பிரிவின் பங்களிப்பு உலகம் அறிந்தது. பின்னர் 2000 இன் ஆரம்பத்தில் ஆப்கான் மீதான அமெரிக்க படையெடுப்பினால் தலிபான்களும். அல்கொய்தாக்களும் பாகிஸ்தானுக்கு படையெடுக்க ஆரம்பித்தன. இதன் விளைவாகவே பாகிஸ்தான் தலிபான்கள் என்று செல்லமாக அழைக்கும் தஹ்ரிக் , தலிபான் அமைப்பு 2002 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. ஆனால் பாக். தலிபான்கள் மற்றும் ஆப்கான் தலிபான்களுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

தலிபான்கள் விடயத்தில் பாகிஸ்தான் இரு நிலைப்பாட்டை கையாண்டிருப்பதே அது இப்போது முகங்கொடுக்கும் எல்லாப் பிரச் சினைக்கும் காரணமாகும். அதாவது ஆப்கான் அரசுக்கு சவால் விடுக்கும் தலிபான்களின் தலையை தடவும் பாகிஸ்தான் தமக்கு எதிரான தலிபான்களுக்கு தலையில் குட்டு விடுகிறது.

இந்தநிலையில்தான் நவாஸ் ஷரீப் கடந்த 2013 ஜூனில் மீண்டும் பிரதமராக பொறுப் பேற்றார். இந்த ஆயுதக் குழுக்களை ஒழிப்பதே தனது முதல் வேலை என்றே அவர் பதவி நாட்காலியில் அமர்ந்தார். இங்கு நல்ல தலிபானும் இல்லை கெட்ட தலிபானும் இல்லை என்று கூறி பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டை தகர்த்தெறிந்த நவாஸ் ஷரீப் தலிபான்களுக்கு எதிரான தீவிர தாக்குதல்களை ஆரம்பித்தார்.

மறுபக்கத்தில் பார்த்தால் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கை பாகிஸ்தான் தலிபான் களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அந்த இருப்புக் கொள்ளாத நிலையில்தான் அந்த அமைப்பு இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. கடந்த காலங்களிலும் பாகிஸ்தானில் மூன்று இலக்க உயிர்ப்பலிகள் இடம்பெற்ற தாக்குதல்களை பல முறை நிகழ்த்தியிருக்கின்றன. ஆனால் பெஷாவர் பாடசாலை தாக்குதல் முழுக்க முழுக்க சிறுவர் களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கிறது. இப்போதாவது பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

எஸ். பிர்தௌஸ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com