|
||||
|
ஆண், பெண்
சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாடவிதானங்கள் அமைய வேண்டும் பால் நிலையும் கல்வியும் அண்மைக் கால கலைத்திட்டச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. பால் நிலையானது சமூகத்தால் கட்டமைக்கப்படுகின்ற ஒரு விடயமாகும். குடும்பம், பாடசாலை, சமூக மட்டத்தில் ஆண், பெண் வேறுபாடுகள் பால்நிலைகளில் உருவாகியுள்ளன. பால் எனப்படுவது ஆண், பெண்களுக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாட்டைக் குறிக்கும். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்கள், தாவரங்களுக்கும் பொதுவானதாகக் காணப்படுகிறது. ஆனால் பால் நிலை என்பது மனிதர்கள் மத்தியில் மட்டுமே காணப்படுகிறது. பால் நிலை என்பது ஆண், பெண்களுக்கிடையிலான சமூக கலாசார ரீதியான வேறுபாட்டைக் குறிக்கும். பால் நிலை என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குணவியல்புகளும் அது தொடர்பான பாத்திரங்களுமாகும். சமூக மயமாக்கலால் தற்போது நிலவும் பால்நிலைக் கோட்பாடானது ஆண்கள் வீரமுள்ளவர்கள். தைரியசாலிகள். அறிவுசாலிகள் என கருதுகிறது. இதன் அடிப்படையில் பெண்கள் மென்மையான சுபாவம் உடையவர்கள், அழகானவர்கள். அச்சம், நாணம் உடையவர்கள் எனவும் இக்கோட்பாடு கூறுகிறது. வீடுகளிலும் பாடசாலைகளிலும் ஆண்கள், பெண்களுக்குரிய வகிபங்குகள் பலபரிமாணங்களிலே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மொழிப் பிரயோகம். ஆடைகள், அணிகலன்கள். விளையாட்டுப் பொருட்கள் முதலிய பலபரிமாணங்களில் ஆண், பெண் வேறுபாடுகளும் வகிபங்குகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. கல்விக்கும் பால்நிலைக்கும் இடையில் தொடர்பு காணப்படுகிறது. கல்வியானது ஒரு மனிதனில் இளவயது முதல் செல்வாக்கு செலுத்துகிறது. ஒருவரின் சிந்தனைமுறை கண்ணோட்டம், விழுமியம். பழக்கவழக்கம் என்பவற்றை உருவாக்குகிறது. பால்நிலை உறவுகளை மாற்றுவதில் கல்வித் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகமயமாக்கலை ஏற்படுத்தி சுற்றுச் சூழலுக்கு அப்பாற்பட்ட புதிய சிந்தனை முறைகளை ஏற்படுத்தக் கூடிய கருவி கல்வி ஆகும். அதனைவிட கல்வியானது பால்நிலை உறவுகளை தக்கவைத்து பலப்படுத்தும் கருவியாக தொழிற்பட்டு வந்துள்ளது. கல்வியில் வரலாறு. சமயம் போன்ற பாடங்களை நோக்கினால் அவை ஆண்களை மையமாகக் கொண்டதாகக் காணப்படுகிறது. வரலாறு பாடத்தில் மன்னர்கள் கொண்ட ஆண் தலைமைத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மத போதனைகளில் ஆண்களே முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இலக்கியப் பாடங்களில் ஆண் பாத்திரங்கள் மட்டுமன்றி பெண் பாத்திரங்களின் சிறப்புக்களும் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக தற்போது பாடத் திட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள நளவெண்பா, மணிமேகலை போன்ற இலக்கியங்களைக் குறிப்பிடலாம். பாடசாலைகளில் பெருவாரியாக கலைத் திட்ட செயற்பாடுகள், இணைக் கலைத்திட்ட செயற்பாடுகள். மறைநிலைக் கலைத்திட்ட செயற்பாடுகள் என்பன கூடுதலாக ஆண்களை பிரதிநிதித்துவம் செய்வதாக உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களிலும். பாடப் புத்தகங்களிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அசமத்துமான பால்நிலை உறவுகள் காணப்படுமாயின் அவற்றை மாற்றுவது இந்நடவடிக்கையில் முக்கிய பங்குவகிக்கிறது. பாடங்களில் வருகின்ற கதைகளில் ஆண்களினதும். பெண்களினதும் பாத்திரங்கள் சமூகமாதிரியாக (ஷிtலீrலீo typலீனீ rolலீs) மட்டுமே காணப்படுகிறது. உதாரணமாக உலகப் பெரியார்களின் கதைகள் தனியே ஆண் பெரியார்களின் கதையாக இருக்கிறது. வரலாறுகள் ஆண்கள் கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்படுகிறது. சமூகவியல் பாடங்களில் பெண்களால் மேற்கொள்ளப்படும் வீட்டு வேலைகள் பெறுமதி வழங்கப்படாத சேவைகளாகவே கருதப்படுகின்றன. கல்வி வாயிலாக பெண்கள் ஈட்டும் தொழில்களை நோக்கினால் ஆண்களோடு ஒப்பிடும் பொழுது நிலைக்குத்து நிலையிலும், குறுக்கு நிலையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நிலைக்குத்து நிலையில் கூடிய சம்பளம் ஈட்டும் தொழில்களில் ஆண்களே கூடுதலாக இடம்பெற்றுள்ளனர். கிடை நிலையில் பார்க்கும் போது ஆசிரிய வாண்மை, தாதியர் தொழில் முதலியவற்றில் பெண்களின் எண்ணிக்கையே கூடுதலாகக் காணப்படுகிறது. அதிக பொறுமையுடனும். குறைந்த ஊதியத்துடனும் மேற்கொள்ளப்படும் பாலர் கல்வி ஆசிரியர் தொழில் இலங்கையில் முற்றுமுழுதாக பெண்களுக்குரியதாக ஒதுக்கப்பட்டு விட்டது. இது பாரம்பரியமான குடும்ப வகிபங்குடன் இணைந்து இருத்தல் குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலை முகாமைத்துவம் பாடசாலை முகாமைத்துவம், ஆளணி நிலையிலும். தொடர்பாடல் நிலையிலும் ஆண்களின் புலக் காட்சியே மேலோங்கியுள்ளது. இது ஆண் முகாமைத்துவ பண்பாடு என்று விபரிக்கப்படும். தீர்மானங்களை மேற்கொள்வதில் ஆண்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பெண்களின் அணுகுமுறைகள் பழைமையானவை, மரபு வழிப்பட்டவை என்றும் பெண்கள் புறந்தள்ளப்படுகின்றனர். புதிய சமத்துவமான சமூக விழுமியங்கள் மாணவர்களின் சிந்தனையில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கமைய ஆண், பெண் சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடிவிதானங்கள் இடம்பெற வேண்டும். ஸஹ்லா ஸஹீல், 2 ஆம் வருடம் கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |