|
||||
|
பிழையாக வழிநடக்கும்
பவுத்த வெறியர்கள்
(இமாட் மஜீத்)
2009
ஆம் ஆண்டு
முடிவுற்ற
போரின் பின்னர் ஒரு புதிய
வியப்பு நிலைமை தோன்றியுள்ளது. அது யாழ்ப்பாணத்துக்குச்
செல்லும்
ஏ9 நெடுஞ்சாலையில்
நிறுவப்பட்டுள்ள
பவுத்த உருவச்சிலைகள்.
போர் முடிந்த
பின்னர் 28 க்கும் அதிகமான புத்தர் சிலைகள் இந்தப் பாதையில் காணப்படுகின்றன.
இந்தப் பம்மாத்துப்
பற்றிய நகைச்சுவை
(வேறு எப்படி
இதனை அழைப்பது?)
என்னவென்றால்
இந்தச் சிலைகள் பவுத்தர்கள்
சிறிதளவு
அல்லது முற்றாக இல்லாத இடங்களில்
நிறுவப்பட்டுள்ளது
ஆகும். இது உள்ளுர் தமிழ் சமூகங்களுக்கு இடையே முணுமுணுப்பை (ஆம் அவர்களால் முணு முணுக்க அல்லது காதோடு காது மெல்லிய குரலில் பேசத்தான் முடியும். அவர்களால் பகிரங்கமாக எதிர்க்க முடியாது) ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்தச் சிலை நிறுவுதல் சிங்கள இனவாதம் தமிழ்மக்களின் பண்பாடு மற்றும் சமயம் தொடர்பான உணர்வுகளை கொச்சைப்படுத்தும் முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என நினைக்கிறார்கள். சிங்கள பவுத்த தேசியவாதிகள் நாடெங்கும் நட்டு வைத்திருக்கும் பவுத்த சிலைகளைப் போல வடக்கிலும் பவுத்த பண்பாட்டைக் பாதுகாக்க எடுக்கும் ஒரு நாட்டின் பொருத்தமான நடவடிக்கை என வாதிடுகிறார்கள். ஆனால் இது பவுத்தத்தை பாதுகாக்கும் செயல் அல்ல, ஒரு சமூகத்தின் பண்பாட்டை எளிதில் புண்படுத்தக் கூடிய நடவடிக்கை ஆகும். பவுத்த சிலையோடு மாங்குளத்தில் ஒரு பவுத்த தூபி கட்டப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னெவென்றால் பெரும்பான்மை பவுத்த சிலைகள் வவுனியாவுக்கு அப்பால் வடக்கே செல்லும் சாலையில் - முற்றிலும் தமிழ்ப் பகுதியில் - நிறுவப்பட்டுள்ளன என்பதாகும். இந்தப் பகுதி சிங்கள தரப்போடு (அதாவது சிங்களப் படையோடு) போரிட்ட 30 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதாகும். ஒரு புத்தர் சிலை கனகராயன் குளத்து அருகே நிறுவப் பட்டுள்ளது. இது தமிழ் சமூகத்திடையே கோபத்தைக் கிளறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் கூற்றுப்படி இப்படி தமிழ்ப் பகுதிகளில் பவுத்த சிலைகளை நிறுவுவது " இந்தப் பகுதியின் தன்மையை மாற்றிவிட்டோம் என்ற செய்தியாகும். இது ஒரு பண்பாட்டுத் தலையீடாகும்." மேலும் அவர் குறிப்பிடுகையில் "திருகோணமலையில் உள்ள கன்னியா என்ற இடத்தில் உள்ள ஒரு இந்து ஆலயம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பவுத்த விகாரை நிறுவப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அந்தக் கோயிலின் அத்திவாரத்தில் பவுத்த கொடி பறக்க விடப்பட்டுள்ளது!" மேலும் கூறுகையில் "சிக்கல் என்னவென்றால் இது இரண்டு இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை பற்றிய கேள்வியாகும். இப்படியான நடத்தைப் பிறழ்வு சிங்கள - தமிழ் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவுமா?" இப்படித் தமிழர்களது பண்பாட்டை அவமதிக்கும் முனைப்பான செயலுக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது? ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சுற்றுச் சூழல் அமைச்சரான சம்பிகா இரணவக்க தமிழ் முஸ்லிம் பகுதிகளில் பவுத்த கோயில்கள் கட்டும் முயற்சிக்குத் தலைமை தாங்குகிறார். சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற பதவியைப் பயன்படுத்தி இந்தச் சிலைகளை நிறுவுவதற்கு வேண்டிய காணிகளை கையகப்படுத்துகிறார். அவரது நடவடிக்கைகள் அரசாங்க அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை முறைதவறிப் பயன்படுத்துவதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். இப்படிப் பவுத்த சிலைகள் நிறுவுவதை நியாயப்படுத்த "சிறிலங்காவில் இன - சமய கட்டுப்பாடுகள் இல்லை" என்கிறார் ஜாதிக்க ஹெல உறுமய கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில (கம்மன்பிள்ளை?) இவர் "நாங்கள் தீவின் எந்தப் பகுதியிலும் இந்துக் கோயில்கள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பின் ஏன் பவுத்த சிலைகள் நிறுவப்படுவது வேறுவிதமாகப் பார்க்கப்படுகிறது?" எனக் கேட்கிறார். கம்மன்பிலவின் வாதப்படி இப்படிப் பவுத்த சிலைகள் நிறுவுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. "முதல் காரணம் இந்த இடங்களில் பல ஆயிரம் பவுத்த இராணுவத்தினர் நிலை கொண்ணுடுள்ளார்கள். இவர்களுக்கு இந்தச் சிலைகள் வழிபாட்டுத் தலங்களாகும். மேலும் போர்க்காலத்தில் பல தொல்லியல் பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன. வடக்குக்கு யாத்திரை போகும் பல பவுத்த சிங்களவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போகிற வழியில் இந்த பவுத்த சிலைகள் இருக்கும் இடங்களில் தங்கிப் போகலாம். இவைதான் இந்த இடங்களில் பவுத்த தூபிகளும் சிலைகளும் நிறுவுவதற்கான காரணங்களாகும். எனவே இந்தச் சிலைகள் நிறுவுவதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. அது ஒரு சிக்கலாக மாறக்கூடாது" என்கிறார் கம்மன்பில. தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பவுத்த விவகாரங்களுக்கான திணைக்களத்தில் பணி செய்யும் ஒரு அதிகாரி இப்படிக் கூறுகிறார்: "பவுத்த நினைவாலயங்கள் கட்டுவது பற்றிக் குறிப்பிட்ட எந்தவொரு சட்ட வரைமுறையும் கிடையாது. ஆனால் ஒரு நடைமுறை இருக்கிறது. ஒருவர் ஒரு நினைவாலயத்தைக் கட்ட நினைத்தால் மற்றவர்களது சமய நம்பிக்கைக்கு அது ஊறு செய்யாத வகையில் செய்யலாம். அப்படிச் செய்யும் போது அவர்கள் பவுத்தத்துக்கு அல்லது வேறு சமயத்துக்கு அவமதிப்பு செய்யக் கூடாது. இதுவொரு கருதொருமைப்பாடு. வீதிகள் அமைக்கும் போது அந்தந்த உள்ளாட்சி அவையிடம் இருந்து அனுமதி பெறுவது அவசியமாகும்." (சண்டே லீடர் - 05-02-2012)
-தமிழாக்கம்
நக்கீரன்- |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |