|
||||
|
பின்னடைவை நோக்கிச் செல்கிறதா
இந்திய அணி?
இந்திய
கிரிக்கெட் அணியைப்
போன்றே அதன் ரசிகர்களும்,
விமர்சகர்களும்
விசித்திரமானவர்கள். தொடக்க
ஆட்டக்காரர்கள்
கடகடவென ஆட்டமிழந்து
சென்றால், ஒட்டுமொத்த
அணியுமே மிகக்
குறைந்த ஓட்டங்களுக்கு
சுருண்டு கொள்ளுமோ
அதைப் போலத்தான்
இந்திய ரசிகர்களும்,
விமர்சகர்களும்
இந்திய அணி வெற்றி
பெற்றால் தலையில்
தூக்கி வைத்துக்
கொண்டாடுவார்கள்.
அவர்கள் அடிக்கும்
ஒவ்வொரு அடியையும்
வர்ணிப்பார்கள்.
வீசும் ஒவ்வொரு
பந்தையும் பாராட்டுவார்கள்.
தோற்க ஆரம்பித்து
விட்டால் போதும்,
வீட்டை உடைப்பது,
கூழ்முட்டை எறிவது
பத்திரிகைகளில்
திட்டித் தீர்ப்பது
என்று, தமது கோபத்தைக்
காட்டுவார்கள்.
கபில்தேவ் இந்திய
அணியை வழிநடத்திய
காலத்தில் இருந்தே
இந்திய அணி, அந்நிய
மண்ணில் குறிப்பாக
ஆசிய கண்டத்துக்கப்பால்
வெற்றிபெறுவது
கடினம் என்று கிரிக்கெட்
விமர்சகர்களும்,
ரசிகர்களும் கூறிவந்தனர்.
ஆனால்,
அஸாருதீன், கங்குலி
போன்றோரின் தலைமைத்துவங்கள்
அந்த விமர்சனத்தை
ஓரளவுக்கேனும்
மாற்றின. அஸாருதீனின்
தலைமையில் வெளிநாட்டு
மண்ணில் 9 டெஸ்ட்
போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது.
கங்குலியின்
தலைமையிலும் அதேயளவான
டெஸ்ட் போட்டிகளில்
இந்திய அணி அந்நிய
மண்ணில் வென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது
இந்திய அணியின்
வெற்றித் தலைவர்
என்று வர்ணிக்கப்படும்
தோனியின் தலைமையில்
கடந்த ஒரு வருடத்திற்குள்
இந்திய அணி 8 போட்டிகளில்
தொடர்ச்சியாகத்
தோல்வியைச் சந்தித்ததைத்
தொடர்ந்து மீண்டும்
பல்வேறுபட்ட விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகின்றன.
ரசிகர்களும்
பழையபடி அணியைத்
தூற்ற ஆரம்பித்துவிட்டனர்.
பல விளையாட்டுச்
சஞ்சிகைகளும்,
நாளிதழ்களும்
இந்திய அணியையும்,
அந்த அணியில் விளையாடும்
மூத்த வீரர்களையும்
அதன் தலைப்புச்
செய்திகளிலேயே
விமர்சிக்கின்றன.
இந்திய
அணி டெஸ்ட் போட்டிகளில்
8 முறை ‘வயிட் வொஷ்’
தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 முறை
இங்கிலாந்துக்கு
எதிராகவும் 3 முறை
அவுஸ்திரேலியாவுக்கு
எதிராகவும் ஒருமுறை
மேற்கிந்தியத்
தீவுகளுக்கு எதிராகவுமே
‘வயிட் வொஷ்’ தோல்வியும்
கண்டுள்ளது.
மேலும்
இங்கிலாந்துக்கு
எதிராக 11 முறை இன்னிங்ஸ்
தோல்வியும், அவுஸ்திரேலியாவுக்கு
எதிராக 10 முறையும்,
மேற்கிந்தியத்
தீவுகளுக்கு எதிராக
9 தடவையும் இன்னிங்ஸ்
தோல்வி கண்டுள்ளது.
கடந்த
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா
போட்டித் தொடர்களில்
4 போட்டிகளில்
இன்னிங்ஸ் தோல்வியைத்
தழுவியது இந்திய
அணி.
கடைசியாக விளையாடிய
ஆஸி தொடரில் மெல்பேர்னில்
நடைபெற்ற முதல்
டெஸ்ட்டில் மட்டும்
கடும் போட்டிக்கு
மத்தியில் 22 ஓட்டங்களால்
தோல்வியடைந்தது.
ஆனால் மற்றைய போட்டிகள்
அனைத்திலும் சிட்னியில்
நடைபெற்ற இரண்டாவது
போட்டியில் ஒரு
இன்னிங்ஸ் மற்றும்
68 ஓட்டங்களாலும்,
பேர்த்தில் நடைபெற்ற
இரண்டாவது டெஸ்ட்
போட்டியில் இன்னிங்ஸ்
மற்றும் 181 ஓட்டங்களாலும்
அடிலேட் மைதானத்தில்
நடைபெற்ற கடைசிப்
போட்டியில் 288 ஓட்டங்ளிலும்
படுதோல்வியடைந்தது.
கடைசியாக தங்களது
சொந்த மண்ணில்
மேற்கிந்தியத்
தீவுகளுடன் இடம்பெற்ற
டெஸ்ட் தொடரில்
அவ்வணிக்கு எதிராக
இரட்டைச் சதங்களும்,
சதங்களும் விளாசிய
இந்திய வீரர்கள்
ஆஸியுடனான தொடரின்
போது வெற்றிபெற
முடியாமல் போனாலும்
எதிரணிக்கு சவால்
மிக்க ஒரு அணியாக
மிளிரக் கூட முடியாமல்,
ஒரு இரண்டாந்தர
அணியைப் போல் விளையாடியது
வியப்புக்குரியது.
அவுஸ்திரேலிய
அணியினர் மிக நீண்ட
இடைவெளிக்குப்
பிறகு மைக்கல்
கிளார்க் தலைமை
பொறுப்பை ஏற்ற
பின் ஒரு தொடரை
முழுமையாகப் பெற்றது
இதுவே முதல் முறையாகும்.
இந்திய
அணியின் தோல்விக்கு
பல விமர்சனங்கள்
எழுந்தாலும் முக்கியமான
காரணம் மற்றைய
அணிகளில் ஓரிரு
வீரர்களைத் தவிர
மற்றைய வீரர்கள்
எல்லோரும் புதிய
இளம் வீரர்கள். அவர்கள்
20- 30 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடியவர்கள்.
இந்திய அணியைப்
பொறுத்த வரையில்
அது நட்சத்திர
வீரர்கள் கூடுதலாக
உள்ள ஒரே அணி.
சச்சின் டெண்டுல்கர்,
ஷெவாக், காம்பீர்,
லக்ஷ்மன், தோனி
என மூத்த வீரர்கள்
கூடுதலாக உள்ளனர்.
இந்திய அணியின்
துடுப்பாட்ட வீரர்களிடம்
ஒரு விசேடம் என்னவென்றால்
ஒருவர் பிரகாசித்தால்
மொத்த அணியினரும்
சிறப்பாக விளையாடுவார்கள்.
ஒருவர் சொதப்பினால்
மற்றையவர்களும்
சொதப்புவார்கள்.
அவுஸ்திரேலிய
அணியில் ரிக்கி
பொண்டிங், மைக்
ஹஸி, மைக்கல் கிளார்க்
மூவருமே அனுபவ
வீரர்கள். இவ்வணியில்
மட்டுமல்ல தென்னாபிரிக்க
அணியை எடுத்துக்
கொண்டாலும் கிரஹம்
ஸ்மித், ஜெக் கலிஸ்,
டிவிலியர்ஸ் இங்கிலாந்து
அணியில் தலைவர்
ஸ்ட்ரொஸ், பீடர்சன்,
ஸ்வான் பாகிஸ்தான்
அணியில் மிஸ்பா
உல் ஹக், உமர் குல்,
இலங்கை அணியில்
டில்சான், குமார்
சங்கக்கார, மஹேல
ஜயவர்தன போன்ற
ஒரு சில வீரர்களே
கூடுதலான டெஸ்ட்
போட்டிகளில் விளையாடிய
அனுபவமுள்ள வீரர்களாக
உள்ளனர். மற்றையவர்கள்
அநேகமாகப் புதிய
இளம் வீரர்கள்.
அவர்களிடம்
சாதிக்க வேண்டும்
என்ற துடிப்பு
இருக்கும். இவர்களுடன்
ஓரிரு அனுபவ வீரர்களும்
சேர்ந்து கைகொடுத்து
உதவினால் இவ்விளம்
வீரர்களும் பிரகாசிப்பர்.
இளம் வீரர்கள்
அணியில் நிரந்தர
இடம்பெற வேண்டுமானால்
மூத்த வீரர்களுடன்
போட்டி போட்டு
திறமையை வெளிக்காட்ட
வேண்டும் என்ற
கட்டாயம் ஏற்படுகிறது.
எனவே அவர்கள்
சாதிக்கிறார்கள்
அதனால் அணி வெற்றிபெறுகிறது.
ஆனால் மூத்த
வீரர்களிடம் சாதிக்க
வேண்டும் என்ற
எண்ணம் குறைவாகத்தான்
இருக்கும். ஏனென்றால்
அவர்கள்தான் சாதித்துவிட்டார்களே!
கடந்த
காலங்களில் அவுஸ்திரேலிய
அணியில் இருந்து
திறமையான அனுபவ
வீரர்களான ஷேன்
வோர்ன், கிளென்
மெக்ராத், ஹேடன்,
ஜெஸ்டின் லெங்கர்,
அடம் கில்கிறிஸ்ட்
போன்ற வீரர்கள்
குறுகிய இடைவெளியில்
ஓய்வு பெற்றவுடன்
அவ்வணி திடீரென
பின்னடைவைச் சந்தித்தது.
சர்வதேச கிரிக்கெட்
கவுன்ஸிலின் தரப்படுத்தலில்
முதலிடத்திலிருந்த
அவ்வணி பின் தள்ளப்பட்டது.
இம்மூத்த வீரர்கள்
பொதுவாக ஒரேயடியாக
ஓய்வுபெற்றதால்தான்
அவ்வணிக்கு இந்நிலை
ஏற்பட்டது. ஆனால்
சுதாகரித்துக்
கொண்ட ஆஸி கிரிக்கெட்
நிர்வாகம் இப்போது
அவ்வீரர்களுக்கு
மாற்aடாக வோனர்,
மாஸ், பீடர் சிடில்,
ஆசின் ஹிபென் போன்ற
இளம் வீரர்களை
களமிறக்கியுள்ளது.
அவ்வணி மீண்டும்
முன்னைய நிலைக்குத்
திரும்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலைதான்
இந்திய அணிக்கும்
ஏற்படும் என விமர்சிக்கின்றனர். இதற்கு
இடமளிக்காமல்
இந்திய கிரிக்கெட்
சபையும், தேர்வாளர்களும்
ஓரிரு அனுபவ வீரர்களுடன்
இளம் வீரர்களைக்
களமிறக்க வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால்
இப்போது சந்தித்துள்ள
பின்னடைவை விட
பாரிய ஒரு பின்னடைவை
இந்திய அணி சந்திக்க
நேரிடும்.
முன்னாள்
இந்திய அணித் தலைவர்
கபில் தேவ் ஒரு
பத்திரிகைக்கு
அளித்திருந்த
பேட்டியில்,
“எந்த
ஒரு வீரரும் ஓய்வுபெற
விரும்பமாட்டார்கள். கிரிக்கெட்டை
முன்வைத்து தேர்வாளர்கள்
கடினமான முடிவுகள்
எடுப்பது அவசியமாகும்.
அதே போல் மூத்த
வீரர்களுக்கு
உரிய மரியாதையும்
அளிக்க வேண்டும்.
சச்சின், ட்ராவிட்,
லெட்சுமணன், ஷெவாக்,
காம்பீர் ஆகியோரை
ஒரே டெஸ்ட் போட்டியில்
விளையாட விடக்
கூடாது. யாராவது
ஓரிருவருக்கு
ஓய்வு அளித்துவிட்டு
பதிலீடாக ஓரிரு
இளம் வீரரைப் பயன்படுத்திப்
பார்க்க வேண்டும்.
இதன் மூலம்
இளம் வீரர்களை
உருவாக்கலாம்.
இம்மூத்த
வீரர்களுக்கு
மாற்றுவீரர்கள்
இல்லை என்பது அனைவரும்
அறிந்ததே. எனவே
இவ்வீரர்களுக்கு
மாற்றமான இளம்
வீரர்களைத் தெரிவு
செய்வது கடினமானதும்
கூட. இருப்பினும்
இதுவரை சந்தர்ப்பம்
கொடுக்கப்பட்ட
இளம் வீரர்கள்
தோல்வியடைந்தால்
அவர்களுக்கு மீண்டும்
மீண்டும் வாய்ப்பளிக்க
வேண்டும். அப்போதுதான்
இளம் வீரர்கள்
உருவாவார்கள்”
இவ்வாறு கபில்
தேவ் கூறியிருந்தார்.
கடந்த
அவுஸ்திரேலியத்
தொடரில் ஆஸி வீரர்கள்
முச்சதம் இரட்டைச்
சதம் என்று வெளுத்து
வாங்க, இந்திய
அணியினரால் ஒரே
ஒரு சதமே அடிக்கப்பட்டது. அடிலேட்
மைதானத்தில் நடைபெற்ற
கடைசிப் போட்டியில்
இளம் வீரர் விராத்
கோஹ்லி 112 ஓட்டங்கள்
பெற்றார். இவரே இப்போட்டித்
தொடரில் இந்திய
அணி சார்பாக கூடிய
ஓட்டம் பெற்றவராவார்.
8 இன்னிங்ஸ்களில்
விளையாடி 294 ஓட்டங்கள்
பெற்றார்.
அவுஸ்திரேலிய
அணித் தலைவர் ஒரு
முச்சதம், ஒரு
இரட்டைச் சதம்
அடங்கலாக 6 இன்னிங்ஸ்களில்
626 ஓட்டங்கள் பெற்றார். தொடர்ந்து
பின்னடைவிலிருந்த
ஆஸி அணியின் முன்னாள்
தலைவரான 38 வயது
ரிக்கி பொன்டிங்
ஒரு இரட்டைச்சதம்,
ஒரு சதம் அடங்கலாக
544 ஓட்டங்கள் பெற்றதன்
மூலம் ஆஸி. அணியிலிருந்து
கட்டாய ஓய்வில்
அனுப்பப்படுவார்
என்ற நிலையிலிருந்து
மீண்டுள்ளார்.
பந்துவீச்சில்
அவுஸ்திரேலிய
இளம் பந்துவீச்சாளர்களான
ஆசின் ஹிபென்
26 விக்கெட்டுகளையும்,
பீடர் சிடில்
22 விக்கெட்டுகளையும்
பெற்றனர். இந்தியப்
பந்து வீச்சாளர்கள்
எவரும் அவுஸ்திரேலிய
மைதானங்களில்
திறமையாகப் பந்துவீசவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
ராமச்சந்திர அஸ்வினும்
காகிதப் புலியானார்.
ஆனால் அனுபவ
துடுப்பாட்ட வீரர்களை
முந்திச் சென்று
2 அரைச்சதங்களுடன்
196 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
ஆனால் இந்தியத்
தேர்வாளர்கள்
இவரிடம் எதிர்பார்த்த
பந்து வீச்சுப்
பணியை இவரால் சரிவர
நிறைவேற்ற முடியவில்லை.
இத்
தொடரில் பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட
இந்திய பெருஞ்
சுவர் என வர்ணிக்கப்படும்
ராகுல் ட்ராவிட்
8 இன்னிங்ஸ்களில்
6 முறை கிZன் போல்ட்
ஆனார். மேலும்
களத்தடுப்பிலும்
இம்முறை சோபிக்க
முடியாது போனது.
இதுவரை டெஸ்ட்
போட்டிகளில்
210 பிடிகளை எடுத்துள்ள
அவர் இத் தொடரில்
6 பிடிகளைத் தவறவிட்டுள்ளார்.
அவரால் இத்
தொடர் முழுக்க
ஒரு பிடியைக் கூட
எடுக்க முடியாமல்
போனது.
சாதனை
வீரர் சச்சின்
டென்டுல்கருக்கு
இத் தொடர் ஏமாற்றமாகவே
அமைந்தது. கடந்த
மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுக்கு
எதிரான போட்டியில்
சதமடித்த பிறகு
அவர் ஒருநாள் போட்டியிலும்
சேர்த்து 26 இன்னிங்ஸில்
விளையாடியுள்ளார்.
ஆனால் இன்னும்
100 வது சத சாதனையை
ஏற்படுத்தவில்லை.
ஆனால் இவ் இன்னிங்ஸ்களில்
90 இலக்கத்துடன்
நான்கு முறை ஆட்டமிழந்துள்ளார்.
சச்சின் போன்ற
ஒரு திறமையான வீரருக்கு
சதம் அடிப்பது
என்பது ஒரு பொருட்டே
அல்ல. ஆனால் சச்சின்
இப்போது கோடிக்கணக்கான
ரசிகர்களின் எதிர்பார்ப்பினாலும்,
விமர்சகர்களின்
விமர்சனங்களினாலும்
மன அழுத்தங்களுக்கு
ஆளாகி பலவீனப்பட்டுப்
போயுள்ளார். அந்தப் பலவீனமே
சதத்தை எட்டத்
தடையாகவுள்ளது.
போதாக் குறைக்கு
அந்த மகத்தான வீரரின்
சாதனையையும், துடுப்பாட்டத்
திறமையையும் பல
பத்திரிகைகள்
விமர்சித்துள்ளன.
ஒரு
பத்திரிகைச் செய்தியில்
பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சாதனைக்காக
எவரும் விளையாடக்
கூடாது. சாதனை
என்பது அணியின்
வெற்றியின் ஒரு
பகுதியாக இருக்க
வேண்டும். 70- 80 காலப்
பகுதிகளில் விளையாடிய
மேற்கிந்தியத்தீவின்
ஒரு சிறந்த வீரர்
விவியன் ரிச்சர்ட்ஸ்.
அவரின் சாதனைகளைப்
பார்க்க வேண்டிய
அவசியமில்லை.
அவருக்கு சவால்களை
எதிர்கொள்ளப்
பிடிக்கும். அதனால்தான்
அவர் அசைக்க முடியாத
வீரராகத் திகழ்ந்தார்.
சில போட்டிகளில்
அவர் தனியாளாக
நின்று மேற்கிந்தியத்தீவுக்கு
வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
பின்னாளில்
அவருக்கு ‘சேர்’
என்ற சிறப்புப்
பட்டமும் கொடுத்து
கெளரவிக்கப்பட்டது.
இதே
போல் இங்கிலாந்து
பந்து விச்சாளர்
ஜிம் லேகர் டெஸ்ட்
போட்யொன்றில்
சிறந்த பந்து வீச்சுக்கான
(99 ஓட்டங்களுக்கு
19 விக்கெட்) சாதனை
படைத்தவர். இச்சாதனை
இன்னும் முறியடிக்கப்பட்டவில்லை.
ஆனால் விவியன்
ரிச்சட்ஸை பற்றிப்
பேசும் அளவுக்கு
ஜிம் லேகரைப் பற்றி
யாரும் பேசுவதில்லையே.
எனவே
சாதனை என்பது வெறும்
புள்ளிவிபரங்கள்தான். மகத்தான
வீரருக்கு புள்ளி
விபரங்கள் என்பது
ஒரு பொருட்டே அல்ல.
இது சச்சினுக்கும்
பொருந்தும். இவர் 99 சதங்கள்,
100 சதங்கள் அடித்தாலும்
அடிக்காவிட்டாலும்
பிற்காலத்தில்
சதங்கள் பற்றிக்
கதைக்கப் போவதில்லை.
ஆனால் சச்சின்
என்ற மகத்தான வீரரைப்
பற்றிக் கட்டாயமாகக்
கதைப்பார்கள்.
இப்போது டொனால்ட்
பிரெட்மென்னைக்
கதைப்பதைப் போல்.
ஆனால் டொனால்ட்
பிரெட்மென் செய்துள்ள
சாதனை நம்மில்
அநேகருக்குத்
தெரியாது. அரநாயக்க எம். எஸ். எம். ஹில்மி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |