|
||||
|
கறைபடியாத புதிய
தலைமை!
வாத்தியார், என்ன களைச்சு
வேர்த்து
அதுவும் சைக்கிள் கட்டையில, என்ன அப்பிடி
கஷ்டமோ? இஞ்சை
பார்த்தா
வாகனத்தாலை
ஊர் நிறைஞ்சு
போய்க் கிடக்கு. குஞ்சு குருமன்
எல்லாம் 'லீசிங் லீசிங்' என்டு வாகனங்களை
வாங்கித்
தள்ளுதுகள்.
நீங்களும் ஒண்டை வாங்கிச் சோக்காய் ஓடாமல் இந்த வயதிலை
இப்பவும்.
தம்பர், பேய்க்கதை
கதையாதை. என்ரை
வயதுக்கு
இப்ப 'லீசிங்'
தருவினமே?
கட்ட முடிஞ்சாலும்
வயது தடை
எல்லே.
அதுசரி வாத்தியாரிட்டைக்
காசில்லையே?
அதை ஏன்
தம்பர் கேக்கிறை ஏதோ நன்னிப்
பொன்னித்தேடிய
தேட்டத்தை
வைப்பகத்திலை
தான் போட்டுத்
தேசியத்தைக்
காக்க வேணுமெண்டு
கொடுக்கிலை
பிடிச்சதாலை
உயிருக்குப்
பயந்து, எல்லாமே போட்டுது தம்பர். போதாததுக்கு மாத்தளனிலை
இருந்து முள்ளிவாய்க்கால்
வரை எல்லாமே
முடிஞ்சுது.
உலகத்திலை எங்கையும்
காணாத விலையல்லோ
பஷண்வித்தது
தெரியாதோ?
ஒரு பஷண் இரண்டாயிரம்
விக்க அரிசி நானூறுக்கு
மேலை போனா
எப்படித்
தம்பர் தேட்டம் மிஞ்சும்?
இப்பவும் என்ன தம்பர்? எங்களுக்குக் கிழடு தட்டிப் போச்சுது எண்டு ஒண்டும்
கிடைக்கிற
இல்லை. அரசாங்கம் அள்ளிக்
குடுத்தாலும்
வயசையும்
பென்ஷனையும்
சொல்லி வாசலுக்குக்
கூடப் போக விடுகினமில்லை.
அவங்களுக்குப் பிடிச்சா
இங்கையும்
விதிவிலக்கு
இருக்குத்தம்பர்.
இதை ஆருக்குச்
சொல்லி அழுறது?
வாத்தியார், அரசாங்கம்
மாறினாலும்
ஆக்கள் மாற இல்லைத்தானே? அண்டைக்குப் பெடியளோடை
நிண்டு தடிவிட்டவை
இண்டைக்கு
அரசாங்கத்தோடை
நிக்கினம்.
அப்பாவிகளின்ரை பெடி, பெட்டைகளைப்
பிடிச்சுக்
குடுத்து
இப்ப எங்கை
நிக்கினம்
பாத்தியளே?
நேர்மையாய், விசுவாசமாய்
நல்லதைச்
செய்ய மாறினா நல்லது தானே நடக்கும்?
ஆனா சிலபேர்
சனத்திலை
சவாரி விட நினைக்கினம்.
அதுசரி வாத்தியார்,
இப்ப எங்க
இருந்து வாறியள்?
நான் தம்பர் உந்த 'லைப்றரி'க்கு
ஒருக்காற்
போக வேணுமெண்டு
எண்ணி இண்டைக்குத்
தான் முடிஞ்சுது. நான் பொடியனாயிருக்கேக்கை
மார்க்சின்ரை
'மூலதனம்' வாசிச்சனான்.
இப்பவும் ஒருக்காய்ப்
படிப்பம்
எண்டு பார்த்தன்.
அதுல பொறுப்பாயிருக்கிற
பெட்டையும்
தெரிஞ்சபெட்டைதான்.
கேட்டுப் பாப்பம்
எண்டு தான் போனனான்.
புத்தகமுங்கிடக்குது, ஆனா நான் கேக்கயில்லை.
நடைமுறைக்கு முரணாக
நடக்கக் கூடாது தானே? ஆனால்
தம்பர் அந்த நூலகத்தைப்
பார்க்கப்
பெரிய வேதனையாய்க்
கிடக்கு.
கரைச்சிக் கிராமச்
சபையாக கிளிநொச்சி
இருந்த காலத்திலை
ஆனந்த சங்கரி தலைவரா வந்து முதல்
முதல் இந்த நூலகத்தைத்
திறந்து வைச்சார்.
ஒரு மார்க்சியவாதக்
கண்ணோட்டத்தில்
இந்தப் பகுதியிலை
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தார்.
விதைப்பும், வெட்டும்
என வாழ்ந்த
சனத்தைச்
சிந்திக்கத்
தூண்டிய அந்த மனிதனை
இண்டைக்கு
ஆரும் கதைக்கினமே?
அதோட முடிய இல்லை. இந்த நூலகத்தின்ரை
வளர்ச்சி
கிளிநொச்சி
முத்தவெளிக்கு
அருகிலை மிகவும் வடிவான, சீனக்கலை வடிவத்திலை
ஒரு கேட்போர்
கூடத்தையும்
நூலகத்தையும்
நிமிந்து
நிக்க வச்சார் குமாரசூரியர்.
அதன் அழகும்
பொலிவும்
நகருக்குப்
பெருமை தந்தது. அதோடை அந்த மனிதன் விடவில்லை.
கிளிநொச்சியின் சிறிலங்கா
சுதந்திரக்கட்சியின்
அமைப்பாளராய்
வந்து எத்தனை பெடி, பெட்டைகளை
வாழ வச்சார்.
என்ன வாத்தியார்
சொல்லுறியள்? அந்தக் கட்டிடத்தையும்
அந்த நிறைவான
சந்தையையும்
திறக்கக்
கூடாதெண்டல்லோ
கறுப்புக்
கொடி காட்டினவை.
தம்பர், உவையின்ரை
உப்புச் சப்பில்லாத
கதையை விடு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையே
துறக்க விட்டவையோ?
கிளிநொச்சிலை ஒரு வங்கி திறக்க
வர, கூழ்
முட்டை எறிஞ்சவை அல்லோ. இப்ப எத்தனை
பெடி, பெட்டைகள்
'யூனிவசிட்டி'
யாலை வெளிக்கிட்டு
இருக்கினம்?
தம்பர், எப்பவும்
முட்டையிலை
மயிர் பிடுங்கிறவைதான்
தமிழரின்ர
அரசியல் செய்யிறவை.
உவையள் ஈனவும்
விட மாட்டினம்
நக்கவும்
விடமாட்டினம்.
தம்பர் யாழ் மாவட்டத்தின்
இதயபூமிதான்
கிளிநொச்சி. கிளிநொச்சியின் வளர்ச்சியும்
வாழ்வும்
பொருளாதார
எழுச்சியும்
ஒருவகையில்
எல்லாத் தமிழர்களையும்
உயரச் செய்யும்.
எல்லாப் போராட்டங்களும்
கருக்கட்டுமிடமாகக்
கிளிநொச்சி
இருந்திருக்கிறது
ஏன்? நடந்து முடிந்த
அழிவு யுத்தத்தின்
தளமும் களமும் கிளிநொச்சிதான்.
அந்த அக்கினிப்
போரைச் சுமந்த இந்த மக்களைத்
தொடர்ந்தும்
பலியாக்காமல்
சிந்தித்துச்
செயற்பட வைக்க வேண்டிய
பொறுப்பும்
கடமையும்
அரசுக்கும்
இருக்கிறது.
அதனாற்தான் ஜனாதிபதியும்
தனது மகனின்
நேரடிக் கண்காணிப்பில்
இம்மாவட்டத்தை
வழிநடத்தத்
தூண்டியுள்ளார்.
இதை அவருக்குத்
தெளிவுபடுத்தி
நியாயப்படுத்த
வேண்டியது
இங்குள்ளவர்களின்
பொறுப்பாகும்.
உண்மையாகவும் நேர்மையாகவும்
தன்னலத்தை
விட்டு வழிகாட்ட வேண்டும்.
அதைச்செய்யத் தவறினால்
தர்மம் அழிக்கப்பட்டுவிடும்.
அதுமட்டுமில்லைத்
தம்பர், என்ரை ஆதங்கம்
இவன், தம்பி
நாமல் கிளிநொச்சியிலை
தமிழர்களின்
கட்டிடக்கலை
வடிவங்களைக்
காத்து ஒரு அழகான
நூலகத்தை
இந்த 'ஏ-9' பிரதான வீதியிலை கட்டி, என்றும்
தமிழ் மக்களின் உள்ளத்திலும்
எண்ணத்திலும்
நீங்காத ஒரு இடத்தைப்
பெற வேண்டும்.
கறைபடியாத இன்றைய
தலைமுறையின்
ஒரு புதிய
தலைவனாகத்
தன்னை வளர்த்து, ஆனந்தசங்கரி,
குமாரசூரியர்
போல் இம்மாவட்டத்தில்
அழியாப் புகழொடு நிலைக்க வேண்டும்.
(வன்னியன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |