|
||||
|
|
ஆரம்பமாகின்றது
உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை 11வது உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்போட்டித் தொடரை 23 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. இத்தொடரில் 14 நாடுகள் பங்குபற்றுகின்றன. இதில் விசேட அம்சம் என்னவெனில் 14 நகரங்களில் 14 மைதானங்களில் இப் போட்டித் தொடர் 44 நாட்கள் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரில் இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய நகரில் மெல்பேர்ன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இப் போட்டியுடன் மொத்தமாக 49 போட்டிகளைக் கொண்ட இத் தொடரில் 196 வீரர்கள் பங்கு பற்றுகிறார்கள். 14 அணிகளை மொத்தமாகக் கொண்ட இத் தொடர் ஏ. பி. என இரு குழுக்களாகப் பிரித்து முதல் சுற்றில் ஏ. குழுவில் உள்ள அணிகளும், பி குழுவிலுள்ள அணிகளும் ஒன்றையொன்று மோதுகின்றன. அவற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுத்திப் போட்டிக்குத் தெரிவாகின்றது. காலிறுதியில் குழு ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணியுடன் பி பிரிவில் 4ஆம் இடம் பெறும் அணி (ஏ1-பி4) முதல் காலிறியுதியிலும் முறையே ஏ2-பி3, ஏ3 -பி2, ஏ4-பி1 ஆகிய அணிகள் காலியுறுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும். அரையிறுதி ஆட்டங்களைப் பொறுத்தமட்டில் முதல் கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி நான்காம் கால் இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் முதல் அரை இறுதியில் மோதும். இரண்டாம் மூன்றாம் கால் இறுதியில் வெற்றிபெறும் அணி இரண்டாம் அரை இறுதிக்குத் தெரிவாகும். இவ்விரு அரையிறுதியில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மார்ச் 29 இல் அவுஸ்திரேலிய மெல்பேர்ன் நகரில் மோதிக் கொள்ளும். இம்முறை சம்பியன் கிண்ணத்தை வெற்றிபெறும் அணிக்கு 39 இலட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 17 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் பரிசுத் தொகையாக கிடைக்கவுள்ளன. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்ளும் அணிகளைப் பொறுத்தவரையில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலிய அணியே கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய முதலாவது அணியாகத் திகழ்கின்றது, ஏற்கனவே 1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறை கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலிய அணி இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடியளவு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. இவ்வணி அண்மையில் இடம்பெற்ற இந்தியத் தொடர், இங்கிலாந்து, இந்தியாவுடனான முக்கோணத் தொடர் ஆகியவற்றிலும் திறமையாக விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கிண்ணத்தையும் கைப்பற்றியது. அவ்வணியின் நிரந்தரத் தலைவர் மைக்கல் கிளார்க் காயம் காரணமாக அண்மைக்காலமாக களமிறங்காமல் இருந்தாலும் புதிய தலைவர் ஸ்டிவ் ஸ்மித் மிகவும் திறமையாக அவ்வணியை வழிநடத்துவதுடன் துடுப்பாட்டத்திலும் திறமைகாட்டி வருகின்றார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனர், ஆரோன் பின்ஞ், மத்திய வரிசையில் வரும் ஷேன் வொட்சன், சோன் மார்ஷ், கிலென் மெக்ஷ¤வல் போன்றோர் துடுப்பாட்டத்திலும், மிக்சல் ஜோன்சன், பிசேல் ஸ்ட்ராக் போன்ற திறமையான வேகப் பந்து வீச்சாளர்களும் இருப்பதால் இம்முறையும் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணியாக திகழும் என அநேக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கடுத்தபடியாக தென்னாபிரிக்க அணியைக் குறிப்பிட முடியும். அண்மையில் அவ்வணி காட்டிவரும் திறமைகளைப் பார்க்கும் போது இம்முறை உலகக் கிண்ண ஆட்டங்கள் களைகட்டப் போவது திண்ணமே. அவ்வணியின் அதிரடி வீரர் ஏ.பி.டி. விலியர்ஸ் அண்மையில் அசுர வேக ஆட்டத்தின் மூலம் மற்றைய அணிப் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தி வருகிறார். ஹசிம் அம்லா, டேவிட் மிலர், டுமினி துடுப்பாட்டத்திலும் டேல் ஸ்ட்ரைன், பானல், தாஹிர் போன்றவர்கள் பந்து வீச்சிலும் திறமைகாட்டி வரும் நிலையில் அவ் அணிக்கு அதிர்ஷ்டமும் கைகூடினால் முதல் முறையாக கிண்ணத்தை சுவீகரிக்க வாய்ப்பைப் பெறும். இதுவரை கிண்ணத்தைக் கைப்பற்றாத நியூசிலாந்து அணியும் இம்முறை ஏனைய அணிகளுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வணி அண்மைய காலத்தில் அதுவும் சென்ற வருடம் முதல் பிரெண்டன் மெக்கலம் தலைவர் பொறுப்பை ஏற்றதன் பின் பிரகாசித்து வருகின்றது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான், இலங்கைத் தொடர்களிலும் திறமையாக விளையாடி வெற்றிகளைக் குவித்துள்ளது. சென்ற முறை சம்பியனான இந்திய அணியும் இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடி வருகின்றது. ஆனால் அவ்வணி அண்மையில் இடம் பெற்ற டெஸ்ட் தொடரிலும் சரி. ஒரு நாள் தொடரிலும் சரி படுதோல்வியடைந்தது. வீட்டில் புலி வெளியில் எலி என்ற பழைய பல்லவியோடு இம்முறையும் அவ்வணியினர் உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் களமிறங்குகிறது. பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியின் ஓரளவுக்காவது விராட் கோஹ்லி, அஜின்கா ரஹானேயைத் தவிர அவுஸ்திரேலிய வேகமான மைதானங்களில் துடுப்பெடுத்தாட முடியாமல் தடுமாறி வருகின்றனர். மேலும் அவ்வணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்குமார் போன்றவர்கள் காயமடைந்துள்ளதால் அவர்களின் பங்களிப்பும் அவ்வணிக்குக் கிடைப்பது சந்தேகமே. இவ்வுலகக் கிண்ணப் போட்டியில் மற்றைய வீரர்களின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு எந்தளவு கைகொடுக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சென்ற முறை உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியும் சுமார் இரண்டு மாத காலமாக நியூசிலாந்து மண்ணில் விளையாடிய போதும் அவ்வணி வீரர்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லையென்றே கூற முடியும். துடுப்பாட்டத்தில் வழமைபோல் குமார் சங்கக்கார, திலகரத்ன டில்ஷானைத் தவிர மற்றைய எவரும் சோபிக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட தலைவர் அன்ஜலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, சந்திமால் இத்தொடர்களில் சொதப்பியிருந்தனர். மேலும் பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க சுமார் ஆறு மாதகாலமாக காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளமையும் இலங்கையணியின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். உலகக் கிண்ணக் கோப்பைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அவர் இன்னும் பூரண குணமடையாமை இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சுப் பலம் குறைய காரணமாக அமையலாம். இன்னும் ஒரு முறைகூட உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படும் இங்கிலாந்து அணியும் பல குத்து வெட்டுகளுக்கு மத்தியில் இப்போட்டித் தொடரில் பங்குபற்றுகிறது. அண்மைய தோல்விகளின் பின் தலைவர் எலஸ்டயர் குக்கை நீக்கிவிட்டு மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் இயன் மோகனின் தலைமையில் களமிறங்குகிறது. அவ்வணியில் துடுப்பாட்டத்தில் இயன் பெல். டேலர், வோர்கஸ் போன்றவர்களும், பந்துவீச்சில் அன்டர்சன், போல்ட் சகலதுறை வீரர் மொயின் அலி போன்றவர்கள் இப்போட்டித் தொடரில் பிரகாசித்தால் கிண்ணம் வெல்லலாம். மேலும் அண்மையில் காயம் காரணமாக ஒதுங்கியிருந்த சகல துறை வீரர் ஸ்ட்டுவர்ட் போர்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் அவ்வணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம். 11வது உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாமல் கலந்து கொள்கின்றது. அவ்வணியில் முக்கிய வீரர்களின் போட்டித் தடை மற்றும் காயம் காரணமாக வீரர்கள் விலகல் என பல சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த 30ம் திகதி நியூசிலாந்துக்குச் சென்று அங்கு நியூசிலாந்துக்கு எதிரான நடைபெற்ற இரு ஒருநாள் போட்டியிலும் படுதோல்வியடைந்துள்ளது. இத்தோல்வி மனப்பான்மையுடள் அவ்வணி எவ்வாறு எழுச்சி பெறும் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரையில் எந்த முன் எதிர்வுகூறல்களையும் சொல்ல முடியாது. இன்று படுதோல்வியடைந்தால் அவ்வணியினர் நாளை வெற்றியின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். அவர்கள் 1992ம் ஆண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியதும் கூட இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான். அப்போட்டித் தொடரில் இங்கிலாந்துடன் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியடைந்தது. ஆனால் நூலிழையில் இறுதியாட்டத்துக்குத் தெரிவாகி இங்கிலாந்து அணியையே வெற்றிகொண்டு கிண்ணத்தைச் சுவீகரித்தது. ஆரம்ப இரு உலகக் கிண்ணங்களையும் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை பல சிக்கல்களுக்கு மத்தியில் பங்குபற்றுகின்றது. அவ்வணியில் முக்கிய சுழல் பந்துவீச்சாளரான சுனில் நரேன் போட்டித் தடை காரணமாக விலகியுள்ளார். மேலும் அவ்வணியின் அதிரடி வீரர்களான கிரான் போலார்ட், டெரன் பிராவோ ஆகியோரையும் அணியிலிருந்து விலக்கியுள்ளதால் பலவீனமாகவே அவ்வணியுள்ளது. புதிய தலைவர் கிளேஸி ஹோல்டரின் தலைமையில் களமிறங்கும் அவ்வணி கிறிஸ் கேயில், மார்வன் சாமுவேல், டரன் சமி ஆகியோரின் திறமையை நம்பியே களமிறங்கவுள்ளது. மேலும் இவ்வுலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கும் மற்றைய அணிகளான பங்களாதேஷ், சிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐ. அ இராச்சியம் உட்பட இம்முறை முதன்முறையாக களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இப்போட்டித் தொடரில் திறமை காட்டும் என எதிர்பார்க்கலாம். 2007 ஆம் ஆண்டு போட்டித் தொடருக்கு கத்துக்குட்டியாக களமிறங்கிய அயர்லாந்து அணி பலமிக்க பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டு “சுப்பர் 8” சுற்றுக்குத் தகுதி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அச்சமயம் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் மாரடைப்பால் இறந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வு கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம். எது எப்படியோ 11வது உலகக் கிண்ணப் போட்டி அதிரடிக்கும் ஆராவாரத்துக்கும் பஞ்சமிருக்காது என நம்பலாம். குழு ஏ : - அவுஸ்திரேலியா. நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து. பங்களாதேஷ். ஸ்கொட்லாந்து, ஆப்காணிஸ்தான் குழு பி : - தென்னாபிரிக்கா, இந்தியா, மே.இ. தீவுகள், பாகிஸ்தான். சிம்பாப்வே, அயர்லாந்து, ஐ.அ.இராச்சியம். அரநாயக்க எம். எஸ். எம். ஹில்மி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||