Contact us at: sooddram@gmail.com

 

வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்!

’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’

சொல்லி அடித்துவிட்டார் டெல்லி கெஜ்ரிவால். திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமாக ஆகிவிட்டது தலைநகரில்!
'தேக்கோ தேக்கோ
ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ...
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்)
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’

- விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப்  பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில் பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும் மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் திடீரென தோன்றும் டீ சர்ட், ஜீன்ஸ், ட்ரவுசர் என ஹை லுக் இளைஞர்களும் பல பாடல்களை பாடியபடியே டான்ஸ் ஆடுவார்கள். கூட்டம் கூடியதும், தலையில் காந்தி குல்லாவை வைத்துக்கொண்டு 'பாஞ்ச் சால் கெஜ்ரிவால்’ பாடலைத் தொடங்குவார்கள். அதன் விளைவுதான் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. ஒருபக்கம் பி.ஜே.பி மண்ணைக்கவ்வ... இன்னொரு பக்கம் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை. இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் கெஜ்ரிவால் பற்றித்தான் பேச்சு.

மோடி எதிர்பார்க்காத ரிசல்ட்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சோனியாவுக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. போட்டியே பி.ஜே.பிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைத்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் மீண்டும் முதல்வர் ஆகலாம் என்றும் கணக்குப் போட்டது. ஆனால், பி.ஜே.பியோ நிச்சயம் தங்களது ஆட்சிதான் என்று நம்பியது. அதனால்தான் காங்கிரஸைவிட கெஜ்ரிவாலை கடுமையாக பி.ஜே.பி விமர்சித்தது. இப்படியொரு தேர்தல் முடிவை மோடி எதிர்பார்க்க வில்லை. கெஜ்ரிவாலை 'அராஜகவாதி’ என்றார் மோடி. அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் நண்பர் கிரண் பேடியை அழைத்து வந்து, முதல்வர் வேட்பாளராக மாற்றினார்கள். 100க்கும் மேற்பட்ட பி.ஜே.பி எம்.பிக்கள் டெல்லியில் வலம் வந்தார்கள். 20 மத்திய  அமைச்சர்கள் பிரசாரத்தில் குதித்தனர். இதுதவிர ஸ்டார் பேச்சாளர்கள் 40 பேர். பி.ஜே.பிக்காக இவ்வளவு பேர் இருந்தும் ஏனோ வாக்காளர்கள் மனதை மாற்ற முடியவில்லை.

அப்படியே உல்டா ஆனது!

டெல்லியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வாங்கிய வாக்குகளைக் கணக்கிட்டால் அந்தக் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளில்தான் முன்னணியில் இருந்தது. இதில் பி.ஜே.பி 60 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸுக்கு ஓர் இடமும் இல்லை. இந்தமுறை அப்படியே உல்டா ஆகிவிட்டது. சீட்டுகள் மாறினாலும் பி.ஜே.பியின் ஓட்டு வங்கி அவ்வளவாக அடி வாங்கவில்லை. 2008 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பிக்கு 36.3 சதவிகிதம்,  2013 தேர்தலில் 33.1 சதவிகிதம். இப்போது 32.2 சதவிகிதம். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு சதவிகித வாக்குகள் சரிந்துள்ளன.  புதிய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. இது மட்டுமல்ல. டெல்லி தேர்தலின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானிலிருந்து வந்த பஞ்சாபி அகதிகளும் வியாபாரிகளும்​தான் ஜனசங்கத்திலும் பின்னர் பி.ஜே.பியிலும் வெறியோடு இருந்தனர். அவர்களது வாக்குகளை அந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. டெல்லியில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது 1993-ல் மட்டும்தான். அந்த ஐந்து வருடத்திலும் மூன்று பேர்கள் முதலமைச்சர் ஆனார்கள். வெவ்வேறு மத இன வட்டார மக்களைக்கொண்ட டெல்லி மாநகரில் பி.ஜே.பிக்கு இடமில்லாமல்தான் இருந்தது. இப்போதும் அந்த கோஷ்டிப்பூசல் அதிகமாகத்தான் இருக்கிறது. இதில் கிரண் பேடியை வேட்பாளராக அறிவித்ததே அந்தக் கட்சிக்கு நெகடிவ் ஆகிவிட்டது.

கரைந்தது காங்கிரஸ்!

அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். 1977, 1993 ஆகிய இரண்டு தேர்தலில் மட்டும்தான் அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. காங்கிரஸுக்கு 52 சதவிகிதம் முதல் 40 சதவிகித வாக்குகள் எப்போதும் இருக்கும். சராசரியாக 40 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும். ஆம் ஆத்மி கட்சி இல்லாத 2008 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 40.3 சதவிகிதம். ஆனால் 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்தது 24.55 சதவிகித வாக்குகள்தான். வெற்றிபெற்றது எட்டு தொகுதிகள் மட்டும்தான். இங்குதான் காங்கிரஸ் கட்சியின் சரிவு ஆரம்பமானது. காங்கிரஸ் வாக்குகள் கைமாறிய இடம் ஆம் ஆத்மி.

இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 29.49 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இப்போது காங்கிரஸ் மேலும் அடிவாங்கி வெறும் 9.7 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. கிட்டதட்ட 30  சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் படிப்படியாக தாரை வார்த்துள்ளது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 54.3 சதவிகிதம். காங்கிரஸ் வாக்குகள் மட்டுமல்ல, மாயாவதியின் பி.எஸ்.பி 2008-ல் பெற்ற 14.5 சதவிகித வாக்குகளும் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியுள்ளன.

அரவிந்தின் அமைதி ஊர்வலம்!

தமிழகம் மாதிரிதான் டெல்லி. பல்வேறு தரபட்ட  மத, சாதி மக்களைக் கொண்டது. இங்குள்ள தலித் வாக்குகளும் சிறுபான்மை இன வாக்குகளும் யாருக்குப் போகிறதோ அந்தக் கட்சிகளால் அந்தந்த தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் பெற்றுவந்த வாக்குகள் மட்டுமின்றி, மாயாவதியின் வாக்கு வங்கியும் ஆம் ஆத்மி கட்சிக்கு  உறுதியாகவும் முற்றிலும் திரும்பிவிட்டது. தமிழகத்தில் ஆழமாக இருந்த காங்கிரஸ் நிலைமையை திராவிடக் கட்சிகள் மாற்றியதுபோல, டெல்லி காங்கிரஸ் இடத்தில் ஆம் ஆத்மி கட்சி நிரப்பியது. டெல்லி திருலோக் புரியில் இனக்கலவரம் நடந்தது. இங்கு ஆம் ஆத்மி கட்சி நுழைந்து அமைதி ஊர்வலத்தை நடத்தியது. ஆனால், இங்கு மறைமுகமாக இருந்த அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை டெல்லிக்கு பொருந்தவில்லை.  

வெற்றிக்குப் பின்னால்?

ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கமிட்டியின் தலைவராக இருப்பவர் ஆசிஸ் தல்வார். இவர்தான் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசார மேடையை உருவாக்கி ஊர்வலங்களுக்கும் ஏற்பாடு செய்தவர். 3,500 பேர்களைக் கொண்ட பூத்தொண்டர் படையும் இவரது ஏற்பாடுதான். இந்த டீம்தான் வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. சமூக வலைதளங்களில் கெஜ்ரிவால் பற்றியும், ஆம் ஆத்மி கட்சி பற்றியுமான வீடியோக்கள் குவிந்துள்ளன. சமூக வலை​தளங்கள் வழியாக ஆம் ஆத்மியை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் அன்கிட் லாலின் பங்கு மிக முக்கியமானது.

அடுத்து ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை.

அடிமட்டத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவர்களிடமே கேட்டு வாங்கியவர் ஆசிஸ் கேத்தான். வந்து குவிந்த மக்கள் கருத்துகளில் இருந்து  'டெல்லி டயலாக்’ என்ற பெயரில் 70 அம்சத் திட்டங்களை தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்தவர் இவர். இந்த மூவர் டீமும் மக்களிடம் கேட்டதும், சொன்னதும் இதுதான்... ''மோடி எட்டு மாதத்தில் உங்களுக்கு என்ன செய்தார். உங்களுக்கு மோடியால் நல்ல நாள் வரப்போவதில்லை. அதேபோல் உங்கள் வாக்குகள் காங்கிரஸுக்கு போடுவது வீண். அந்தக் கட்சி தோல்விதான் அடையப்போகிறது. அவர்களால் எந்த நல்லதும் நடக்காது!'' அவர்கள் கேட்ட கேள்விக்கு பலன் கிடைத்துவிட்டது.

இந்த வெற்றியை எப்படி பயன்படுத்திக்​கொள்ளப் போகிறார், எப்படி தக்கவைக்கப் போகிறார் என்பதைப் பொருத்தே அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது!
(சரோஜ் கண்பத்)


67-ல் 7 பத்திரிகையாளர்கள்!
ஆம் ஆத்மி கட்சியில் வெற்றி பெற்ற 67 எம்.எல்.ஏகளில்  7 பேர் பத்திரிகையாளர்கள்.  சீக்கியர்கள் விவகாரத்துக்கு ப.சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய தைனிக் ஜாக்ரன் பத்திரிகையாளர் ஜர்னெல் சிங்கும் இதில் ஒருவர். இவர் டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com