|
||||
|
காதலர்தினம் மாசி 14ஐ காதலர்தினம் என்று கண்டவர் நிண்டவர்கள் எல்லோரும் கொண்டாட விளைகிறார்கள். காதலை முழுமையாக அனுமதிக்காத சமூகங்களிலும் காதலர்தினம் கொண்டாடப்படுகிறது. காதல் என்றால் என்ன என்பதை பலவாறு வரையறுக்கும் சமூ கங்கள் அண்மைக்காலங்களின் ஐரோப்பாவின் காலணித்துவம்போல் காதலர்தினமும் கீழத்தேயநாடுகளுக்குப் படையெடுத்துவந்து வெற்றியும் கண்டுள்ளது. இந்தவெற்றியின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள் என்ன என்பதைத் தேடமுயல்கிறது பார்வை யின் பக்கங்கள் பார்வையின் பக்கங்கள் காதல் காதல் என்பது பருவகாலங்களில், ஜவ்வனப்பருவத்தில் சுரப்புக்களால், இரசாயணப் பதார்த்தங்களால் உடலில், உணர்வில், மூளையில் தூண்டப்படும் கிளர்ச்சியே காதல் என்கிறது விஞ்ஞானம். காதல் புனிதம், தெய்வீகம் என்பது எல்லாம் அதை சுதந்திரமாக நடமாடவிடுவதற்கு கற்பனையாளர்கள் கட்டி விட்ட சேலை ஆகும். இந்துமதமானது காதலையும் காமத்தையும் புனிதமாக்கி அதற்கு மன்மதன் இரதி என்று தெய்வங்களையும் சிருஸ்;டித்தது. இக்கடவுள்களை எம்முடலில் உள்ள சுரப்பிகளாகக் கொள்ளலாமா? தமிழில் அன்புக்கு பலவகைப்பட்டு இருந்தாலும் அந்த அன்பு யாருடன் கொண்டாப்படுகிறது என்பதைப் பொறுத்தே மாறுபடுகிறது, தூய்மை யடைகிறது, தெய்வீகமாகிறது. தாய் தந்தையில் கொள்வது தூய்மையான அன்பாக வும், சகோதரங்கள் பிள்ளையில் உறவுகளில் கொள்வது பாசமாகவும், நட்பில் கொள்வது நேசமாகவும், கடவுளில் கொள்ளும் அன்பைப் பக்தியாகவும் கண்ட தமிழ்ச்சமூகம் காதலைக் காமத்துடனே கண்டது. பல ஐரோப்பியமொழிகளில் காதல் (டுழஎந) என்ற ஒருசொல் அனைத்தையும் உள்ள டக்கியுள்ளது. நான் என்கணவனைக் காதலிக்கிறேன் என்று கூறுபவர். நான் இறைச்சி யைக் காதலிக்கிறேன் என்பார் (ஐ டழஎந அநயவஇ துநப நடளநச மதழநவ). அதையே உண்ண விரும்புகிறேன் என்பார். அன்பு, பாசம், நேசம், பரிவு, பக்தி, கருணை, காருண்ணம், விருப்பு என்பன வற்றுக்குரிய பாகுபாட்டை பிரித்துவறிவது கடினமானது. காதல் காமம் காதலர்தினத்தில் கொண்டாடப்படும் காதலானது காமத்தை மையமாகக் கொண்டது. காதல், காமம் என்ற அச்சுக்களில் இருந்தே இயற்கை தன்னைப் புதுப்பித்து புத்துயிர்ப்புக் கொள்கிறது. இப்புத்துயிர்ப்பு இல்லாவிடில் அகிலம் அழிந்துவிடும். ஆக இவ்வுலகின் இயக்கத்துக்கு அச்சாணியாக அமைந்தது காதல், காமம் இரண்டுமே. இதில் ஏற்படும் பிரச்சனைகளால் குடும்பப்பிளவுகள், உறவுப்பிரிவுகள் ஏற்படுவதுடன் இனப்பெருக்கமும் தடைப்பட்டுவிடும். ஆதலால் இதற்காக மனிதன் கடவுள்களை சிருஸ்டித்தான், வணங்கினான், கொண்டாடினான். உதாரணம் இந்துக்கள், மாயாவணக்கங்கள், கிரேக்கர்கள். மன்மதனை காமன் என்றே அழைப்பர். இவர் கடவுள் ஆனாலும் வணக்கத்துக்குரியவர் அல்லர். காமம் யோசிக்கப்பட்டது, பூசிக்கப் படவில்லை. கீழத்தேயபண்டைய சமூகங்களில் காமம் என்பது பேசாப்பொருளா கவே இருந்து வந்திருக்கிறது. இதனால் இதுபற்றிய அறிவும், ஆய்வும் வெளிப் படையாக இருக்கவில்லை. ஆனால் இந்துமதத்தில் இது திறந்தே இருந்தது கோவில், கோபுரங்களில், தேர்களில், காமசூத்திரம் தந்திரா எனப்படும் காம அறிவியல் நூல்களில் இலக்கியங்களில் வெளிப்படையாக இருந்தாலும் சமூகத்தின் பார்வை யில் இது போசாப்பொருள் ஆக்கப்பட்டது. இத்தலைப்புக்கள் பேசாப்பொருளாக இருந்தாலும் அதன் இயக்கம் மிக மிக வேகமாகவே இருந்து வந்திருக்கிறது. முத்தி, பேறு என்ற இறைவனடி சேர்தலைப் பேரின்பம் என்று கொண்டவர்கள். காமத்தைச் சிற்றின் பம் என்றனர். சிற்றின்பத்தை அடையாதவன், அனுபவிக்காதவன் எப்படிப் பேரின்பத்தை அனுபவிப்பான் என்பதற்காகவே தானம், தர்மம் கோவிலில் கொடியேற்றும் தகுதி கிரகச்சரியனுக்கே (இல்லுறவாழ்வுடையவனுக்கே) உண்டு என்று வகுத்தார்கள். இருப்பினும் சன்னியாசமே முதன்மைப்படுத்தப்பட்டு சிற்றின்பம் சிறிதாக்கப் பட்டது. காதலும் காமமும் கடவுளை எட்டியது மனிதனை எட்டமறந்தது. காதலர்தினம் இன்று ஐரோப்பா எங்கும் கொண்டாடப்படும் காதலர்தினம் எப்படி உருவானது. எதற்கா கக் கொண்டாடப்படுகிறது என்பதன் தேடலே இந்தக்கட்டுரையாகிறது. மனிதன் உலகில் தானே உயர்ந்தவன், காதல் தன்வசப்பட்டது என்று இறுமாப்பில் வாழ்கிறான். இவனை விட பறவைகள், மிருகங்கள் பன்மடங்கு மனிதனை விடச்சிறந்தவை என்பதை நிரூபித்துள்ளன. மாசி மாதங்களில் பறவைகள் தம்மினப்பெருக்கத்துக்காக தயார்படுத்தலைச் செய்வதை உணர்ந்து மனிதன் அதைக் காதல் என்று கருதி காதல் தினம் மாசி 14 என அறிவித்ததாக ஒரு ஐதீகக் கதை கூறுகிறது. ஆக ஐரோப்பியபறவைகள் மாசி 14ல் பூக்களே இல்லாத வின்ரர் நாளில் பூக்குடுத்து காதலர் தினத்தைக் கொண்டாடும் என்று கருதாலாமா? 17ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் பறவைகள் மூலம் காதலர்களைச் சேர்த்துவைத்த பழமைவாதிகள் மாசி 14 ஐ காதலர்தினமாகப் பிரகடனப்படுத்தியதாக ஒரு கதையும் உண்டு. இருப்பினும் இந்தக்காதலர் தினத்தை வலன்ரைன் டேய் அதாவது வலன்ரீன்நாள் என அழைக்கப்படுவதற்குக் காரணம் என்ன? பின்புலம் என்ன? என்பதை அறிவதன் மூலமா கவே இந்நாளின் உட்பொருளையும் தன்மையையும் அறியமுடியும். யார் இந்த வலன்ரைன்? இவனுக்கும் காதலுக்கும் என்ன தொடர்பு? இவனுக்கு மட்டும்தான் காதல் வருமா? இவன்காதல் மட்டும்தான் கொண்டாடப்படவேண்டியதா? கேள்விகள் தொடர்ந்து கொண்டே போகலாம். கிளாடிஸ் என்ற அரசன் ரோமாபுரியை ஆட்சிசெய்தகாலத்தில் சுமார் 270 ஆவது வருடம் ஆண்கள் படைக்குத் தேவைப்பட்டார்கள். திருமணம், காதல், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவர்களைப்பிரிந்து யாரும் படைகளில் சேரமாட்டார்கள் என்பதால் அரசன் இனி யாரும் ரோமாபுரியில் திருமணம் செய்யப்கூடாது என்று.ஒரு உத்தரவைப்பிறப்பித்தான்.அன்று கிறிஸ்தவமதமமானது அரச மதமாக்கப்படாத காலம். உத்தரவை மீறியோர் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் தண்டனைக்கு உள்ளாவார் கள் இறுதியில் கற்களால் அடித்தும் பின்னர் சிரச்சேதமும் செய்யப்படுவார்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதையும் மீறி வலன்டைன் எனும் கிறிஸ்தவப்பாதிரியார் திருமணங்களை இரகசியமாக நடத்திவைத்தார். பாதிரியார் திருமண முதல்வாழ்த்தை அறிந்து அரசன் பாதிரியாரைப் பிடித்து சிறையில் இட்டான். கத்தோலிக்கத்தில் பாதிரியார் அதாவது போதகர் காதல், திருமணம் கொள்ளக்கூடாது என்பது இன்று வரையுள்ள நியதி என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறையில் வலன்டைன் பாதிரியார் இருந்த காலத்தில்; சிறையதிகாரிகளின் தனைவனின் பார்வையற்ற மகள் அஸ்டோறியஸ் மீது காதல் ஏற்பட்டது. அவள் பாதிரியாரை விடுவிக்கமுயன்றபோது வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டாள். இதையறிந்த பாதிரியார் வலன்டைன் அவளுக்கு ஒரு துண்டில் காதல் கடிதம் ஒன்றை அனுப்பினார். இவ்வுலக வரலாறு உண்மையாக இருந்தால் இதுவே முதல்காதலர் வாழ்த்து என்று கருதப்பட்டது. அவரின் காதல்கடிதத்தைப் படிக்கும் வேளை பாதிரியார் வலன்டைன் கற்களால் அடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்நாள் 270 மாசி 14 ஆகும். இதுவே காதலர்தினத்தின் உண்மை வரலாறு. சரியான காதலர் தினமா? ஒரு கிறிஸ்தவப்பாதிரியார் காதலித்தார் அவர்காதல் தடுக்கப்பட்டு தண்டனைக் குற்படுத்தப்பட்டு, அவர் சிரச்சேதம் செய்யப்பட்டதால் அவர் காதல் புனிதமாகிவிடுமா? அதற்கு முன் யாருமே காதலிக்கவில்லையா? காதல் பலிகள் எங்குதான் நடைபெற வில்லை. காதலிக்கவில்லை என்றால் இயற்கை புதுப்பித்தலை எப்படி மேற்கொண்டது. பாதிரியாருக்கு வந்தால் தான் அது காதலா? மற்றைய இன, மதங்களில் காதலே உருவாக வில்லையா? முக்கியமாக தமிழ்சமூகத்தில் காதலைச் சுட்டிக்காட்டு ஒரு சம்பவம் கூட இல்லையா? காதல் இன்றி கற்பழித்தா அதாவது வன்புனர்வால்தான் தமிழினத்தில் பிள்ளைகள் உருவானார்கள்? காதலர்தினமா? காதலர்திவசமா? காதல்கொலையின் ஆண்டுத்திவசம் ஒருபாதிரியாரை காதலுக்காகக் கொன்ற, இரத்தக்கறை படிந்த தினம் தான் இந்த காதலர் தினம். இது ஒருவகையில் காதலர்தினம் என்பதை விட காதலுக்காக உயிர்விட்டு ஒருபாதிரியாரின் திவசம் என்பதே பொருத்தமானது. காதல்கொலையின் ஆண்டுத்திவசம் என்பதே சரியாகப் பொருந்தும். இப்பாதிரியாருக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக்காதலர்தினத்தின் காலணித்துவம் எமதுநாடுகளில் ஏன் முன்னு ரிமைப் படுத்தப்படுகிறது. வெள்ளையர்கள், ஐரோப்பிய, அமெரிக்கர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை 500 வருடங்களுக்கு மேற்பட்ட வெள்ளையர்களில் காலணித்துவம் எம்மில் ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவை, நன்னம்பிக்கை (கேப்டவுண்) முனையை, அமெரிக்காவை ஐரோப்பியர்கள் கண்டுபிடித்தார்களாம். இவர்கள் கண்டுபிடித்தவேளை அங்கே மனிதர்கள் வாழ்ந்தார் கள், குடியேறியும் இருந்தார்கள். அவர்கள் கண்டுபிடிக்காமலா குடியேறி இருப்பார்கள். ஐரோப்பிய வெள்ளையர்கள் கண்டால் அது கண்டுபிடிப்பு. அங்கு வாழ்ந்தவர்கள் மிருகங்கள், குரங்குகள் வெள்ளையர்கள் கட்டுபிடித்தார்கள் என்றே அர்த்தப்படுகிறது எம்மிடம் களவாடப்பட்டவை ஆங்கிலமொழியில் திரும்பி எமக்கே வரும்போது அது புதியகண்டு பிடிப்பு ஆவது எப்படி? கட்டுமரத்தத்துவம் கட்டுமாரான் என்று பெயர் மாற்றப்பட்டு பல ஆயிரம் வருடங்களின் பின் எம்மிடம் வரும்போது கட்டுமரம் தெரியாமல்போய் கட்டுமரான் என்பதை அதியமாகப்பார்க்கப்பட்டது. பூமி உருண்டை எனச் சொன்ன விஞ்ஞானியை கொலைசெய்வதற்கு முன்னரே கோள்கள் பற்றி அறிவும், கோள் என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்தது. கோள் என்பது உருண்டையானது என்பதையும் எமது முன்னோர் அறிந்திருந்தார்கள். இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம். இனியாவது அடிமைப்புத்தியில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் வேர்களைத் தேடுங்கள். விழுதுகள் உரம்சேர்க்கலாம் ஆனால் வேராக முடியாது. இனியாவது வெள்ளைக்காரன் புத்தியில் சிந்திப்பதைத் தவிர்த்து உங்கள் சுயபுத்தி யில் சிந்திக்கப்பழகுங்கள். வெள்ளைக்கானுக்குப் பிறந்தவர்கள் போல் ஆங்கிலத்தின் உள்ளே தமிழைப் புகுத்தி உங்கள் தாயை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள். இப்படிப் பாதிரியாருக்கு வந்தால் அது காதல் எமது முன்னோருக்கு காதலே வரவில்லை என்றால் எப்படி? சரி இராமாயணம் மித்தாக இருக்கலாம் பொய்யாகவும்; இருக்கலாம்.அதை தமிழில் எழுதியதால் கம்பராமாயாணமும் பொய்யாகலாம். ஆனால் கம்பர் பொய்யாக முடியாது. கம்பனின் மகன் அம்பிகாபதி பொய்யாக முடியாது. அம்பிகாபதி காதலுக்காக இலக்கியபடைப்புடன் சிரச்சேதம் செய்யப்பட்டானே. இவனது காதல் காதல் இல்லையா? இது காதல் வாடலா? முதலில் வெள்ளையர் களை நிமிர்ந்து பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் சமூகத்தை எப்படி வளமாகக் கட்டியெழுப்புவது என்று சிந்தியுங்கள். அன்றிலிருந்து இன்றுவரை எமது வளங்கள் சூறையாடப்பட்டு பெயர்மாற்றப்பட்டு எமக்கே பன்மடங்காக விற்கப்பட்டுள்ளன. ஐரோப்பா மூலவளநாடுகளாக இருந்தது கிடையாது. மாக்கோபோலோ ஏற்கனவே உள்ள எதைக்கண்டு பிடித்தான் என்பதை விட உங்களது மூதாதையர் எதை கண்டு பிடித்து இயற்கையுடன் வாழந்தார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள். காதல்வியாபாரம் தாயை, தாயுள் உயிர்த்து, உறங்கிய கருவறையை கருணை இல்லங்களில் யாரோ முன்பின்தெரியாதவர் கைகளில் கொடுத்துவிட்டு பணத்துக்காக அலையும் பரதேசிகளாக தாயர்தினம் கொண்டாடுகிறீர்கள். இப்பணத்தை பிடிப்பதற்காக தான் உருகி உழைத்து உருக்குலைந்த அப்பனை முதியோரில்லத்தில் போட்டுவிட்டு நினைத்துக் கொள்கிறோம் என்ற கண்துடைப்புக்காக தந்தையர்தினம் கொண்டாடுகிறீர் கள். பெண்களை நவீன அடிமைகளாக, காமச்சின்னங்களாக, கட்டில்பிணங்களாக ஆக்கியபின் பெண்கள்தினம் கொண்டாடப்படுகிறது. எதை எதை நீங்கள் அழித்தீர் களே அதை நினைவில் வைத்துக் கொள்ளவதற்காகவா தினம் தினம் தினங்கள் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறன? இது முழுமையான கடைந்தெடுக்கப்பட்ட வெறும் வியாபாரமே. காதலர்தினத்தன்று பூக்கடைகள், பரிசுப்பொருட்கள் வாங்கும் கடைகளில் நடக்கும் வியாபாரம் எத்தனையோ மடங்கு என்பதை நிகழ்தகவு கூறும். நிகழ்தகவு என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. இதை ஸ்ரட்சிஸ்ரிக் என்றால் பலருக்குத் தெரியும். இப்படி மூளைகளை வெள்ளையர்களுக்கு அடைவுவைத்து அடிமையாக்கி விட்டு வெள்ளைக்காரர்களின் வியாபாரப்பண்டமாக வெறும் பிண்டமாக வாழவிரும்பாதீர்கள். காதல் உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே உருவானது. இது பாதிரியாருக்கு வந்தால்தான் புனிதமானது என்பதல்ல. பாதிரியாகுக்கும் காதல் வரலாம் என்பதை அவர்சார் மதம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். உங்கள் முன்னோர் காதலுக்கும் ஏன் காமத்துக்குமே புனிதத்துவம் கொடுத்தவர்கள். இன்றைய காதலர்தினமானது மொத்தமாக முழு வியாபார நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. மனிதர்களின் உணர்வுகள் மூலதனமாக்கப்பட்டு பெருவியாபாரம் நடக்கிறது. என்மக்களின் மேலுள்ள காதலுடன் (நோர்வே நக்கீரா) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |