|
||||
|
ஆம் ஆத்மி boys,
come on.... டில்லி மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி யின் மகத்தான வெற்றி குறித்து ஆனந்தவிகடன் குழுமம் சார்பாக என்னிடம் கருத்துக் கேட்ட போது நான் சொன்னது இது. இன்றைய ஆ.வி இதழில் இந்தக் கருத்து வெளி வந்துள்ளதாக அறிகிறேன்.. "கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி மாநிலத்தில் மூன்று தேர்தல்கள் நடந்துள்ளன. மூன்றிலும் வாக்காளர்கள் மூன்று விதமாக வாக்களித்துள்ளனர். சென்ற ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அவர்கள் தீர்ப்பு அமைந்தது. ஆத் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பெறவில்லை. ஆட்சி அமைக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தபோதும் அதை அவர்கள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. ஆளுகை குறித்த அவர்களின் தவறான புரிதல்கள் பொது மைதானங்களில் மக்களிடம் மனு கோருவது என்பது போன்ற கோமாளித் தனங்களில் முடிந்தது. லோக் ஆயுதா அமைப்பதில் கூட்டணிக் கட்சிக் கட்சி ஒத்துழைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்கள் தங்களின் ஆட்சியைத் தாங்களே கவிழ்த்துக் கொண்டதை மக்கள் ரசிக்கவில்லை. 1950களில் 'இந்துச் சட்டத்தை' நிறைவேற்ற கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் ஒரு அரசியல் சட்ட நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நேரு அதை அபோது திரும்பப் பெற்றுக் கொண்டு, பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றினார். இது போல ஒரு அரசியல் தந்திர அணுகல்முறையை மேற்கொள்ள இயலாத இவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறியடிக்கப்பட்டனர். இதன் பலனை பா.ஜ.க அறுவடை செய்து கொண்டது. தற்போது நடைபெற்றுள்ள மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் நிராகரித்துள்ளனர். பா.ஜ.கவின் கடந்த 10 மாத கால ஆளுகையின் மீதான தீர்ப்பாகவே நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒபாமா வருகையின்போது மோடி அரங்கேற்றிய கோமாளித்தனங்கள், டெல்லி கிறிஸ்தவ ஆலயங்களின் மீதான தாக்குதல்களில் சட்ட ஒழுங்கைக் கையில் வைத்துள்ள மோடி அரசு காட்டிய திமிர்த்தனம், கோட்சேயைக் கொண்டாடுவது மற்றும் 'கர்வாபசி'க் கலாட்டாக்கள், திட்டக் கமிஷன் முதலான ஜனநாயக நிறுவனங்களின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை மக்கள் ஏற்கவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிறுவிவிட்டன. இதை ஏதோ மாநிலத்
தேர்தல் முடிவுகள்தான், இதை மத்திய அரசின் மீதான தீர்ப்பாகப் பார்க்கத்
தேவையில்லை எனக் கருத முடியாது. ஏனெனில் டெல்லி மக்கள் தலை நகரத்தில்
வாழ்பவர்கள். சட்ட ஒழுங்கு நிறைவேற்றம் முதலானவற்றில் மத்திய அரசின் நேரடிக்
கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.தவிரவும் மோடியே களத்தில் இறங்கிப் படு
தீவிரமாகப் பிரச்சாரம் செய்தும் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்த மட்டில் அது லஞ்சம், ஊழல் ஒழிப்பு, நல் ஆளுகை என்பதைத் தாண்டி இந்தியாவின் பன்முகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்கள் இல்லாத ஒரு கட்சி அது. சாதிப்பிரச்சினை, மத வெறி அரசியல், அயலுறவு, அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளில் அதன் அணுகல்முறை ஆகியவை குறித்த அவர்களுக்குக் கருத்துக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. முற்போக்கு, பிற்போக்கு என்பதற்கெல்லாம் இது காலமில்லை என்கிறார் அந்தக் கட்சியின் 'ஐடியலாக்' யோகேந்திர யாதவ். எல்லோராலும் கண்டிக்கப்படும் ஹரியானாவின் சாதிப் பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் உளறிக் கொட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டதும், ஆம் ஆத்மியின் அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுக்கறுப்பினப் பெண்கள் குறித்து அவதூறாகப் ப் பேசியதோடு அவர்களிடம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது என்பதெல்லாமும், அந்த நபரைக் கடைசிவரை கட்சித் தலைமை காப்பாற்ற முனைந்ததும் அவர்களின் மத்தியதர வர்க்க மனநிலையையும், அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையுமே காட்டின. சாதி, மதம்,
அயலுறவு, அணுக் கொள்கை, தொழிலாளர் கொள்கை, தாராளமயக் கொள்கை முதலானவற்றில்
ஆம் ஆத்மி தன் நிலைபாடுகளை விளக்காதவரை அதை நாம் சந்தேகக் கண்களுடனேயே அணுக
வேண்டியுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |