|
||||
|
உங்களின்
தகவல் தொடர்பு சரியான அலைவரிசையில்
செல்கிறதா?
(ருக்மணி பன்னீர்செல்வம்)
இயற்கையின் படைப்பில்
மற்ற உயிரினங்களி
லிருந்து
மனித இனம்
இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி
பெற்றிருப்பதற்கு
அடிப்படையாய்
அமைந்தது
தகவல் பரிமாற்றம்
தான். மனிதனால் முதன்முதலில்
பயன்படுத்தப்பட்ட
தகவல் பரிமாற்ற வழிமுறையானது
இன்றைக்கு
பெரிதாகப்
பேசப்படும்
ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்
எனும் உடலசைவுதான்.
மனித வாழ்க்கையில்
பேச்சுக்கலை
வளர்ந்த பிறகுதான்
மிகப்பெரிய
மாற்றங்கள்
ஏற்பட்டன.
நாம் வெளிப்படுத்தும்
கருத்துக்கள்
தகவல் பரிமாற்றம்
வழி எந்த
அளவில் மிகச் செம்மையாய்
செய்யப்படுகிறதோ,
அதைப் பொறுத்துத்தான்
நம் எதிர்பார்ப்புகள்
நிறைவேறும்.
எந்தவொரு துறையிலும்
மிகச்சிறப்பாகச்
செயல்படுவதற்கு
பல அடிப்படைத்
தேவைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாய்
இருப்பது
தகவல் பரிமாற்றமும்,
தொடர்புத்
திறன்களும்தான்.
நாமே பணிகளை
மேற்கொள்வதென்
றாலும், மற்றவர் களிடம் பணிகளை ஒப்படைத்து
வேலை வாங்குவதென்
றாலும் தேவையானதை
வகைப்படுத்தி
தெளிவாகச்
சொல்வதும்,
கேட்டுக்கொள்வதும்
இன்றியமையாததாகும்.
இதில் நேரம், காலம்,
அளவுகள், செலவுகள் இவற்றில் மிகக் கவனமாக
தகவல் பரிமாற்றம்
நடைபெறுதல்
வேண்டும். தகவல்
பரிமாற்ற
இடைவெளி ஏற்படுத்தும்
சிக்கல்கள்
‘நெருக்கமானவர்’,
‘வேண்டி யவர்’ என்கிற
சலுகைகளைக்கூட
பறித்துவிடும்.
எனவே சிறிய வேலையாய் இருந்தாலும்,
யாரிடம் சொல்லப்படுவதாய்,
கேட்டுக்கொள்வதாய்
இருந்தாலும்
தொடர்புத்திறன்களை
சரியாகப்
பயன்ப டுத்துதல்
முக்கியம்.
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட
பணி தொடர்பாகவோ,
அல்லது நாம் ஒப்படைக்கும்
பணி தொடர்பாகவோ
சில நேரங்களில்
சின்னச் சின்ன விடயங்கள்
நமக்குத்
தெரியாமல்,
அல்லது பிறருக்குத்
தெரிவிக்கப்படாமல்
போகும்போது
அவற்றை உரியவரிடம்
தயாங்காமல்
கேட்டுத்
தெரிந்துகொள்வது
நல்லது.
இது பெரிய பெரிய
பிரச்சினைகள்
எழாமல் தடுப்பதற்கான
செயலாகும். ‘இந்தச்
சின்ன விடயம் கூடவா தெரியாது’
என்று கேட்டுவிடுவார்களோ
என்று அச்சப்பட்டே
ஏதாவதொன்றை
செய்து, அதற்காக மாட்டிக்கொண்டு
விழிப்பதைவிட
முதலிலேயே
எல்லாவற்றையும்
தெளிவுபடுத்திக்
கொள்ளலாம்.
ஏதாவது ஒரு வேலை சரியாகச்
செய்யப்படவில்லை
என்றாலோ, தோல்வியுறுகிறது
என்றாலோ அதற்கு பெரும் காரணமாயிருப்பது
தொடர்புத்திறன்கள்
சரியாக செயல்படுத்தப்படவில்லை
என்பதுதான்.
சண்டைகள், மன
வருத்தங்கள்,
கருத்து வேறுபாடுகள்,
பிரிவுகள்
இவையெல்லாம்
தோன்றுவதற்கும்
வேர்க்காரணங்க
ளாயிருப்பது
எதிர்பார்த்ததை
நிறைவேற்றவில்லை
என்பது ஒரு புறமும்,
அதற்கு சொல்லப்பட்டது.
சரியாகச் சொல்லப்படவில்லை
என்பது மறுபுறமும்
ஆகும். இந்த உணர்வுகளோடு
பேசும்போது
அது வேண்டாத
விளைவுகளைத்
தோற்றுவித்து
விடுகிறது.
ஆனால் அதற்குள் மீண்டும் பழைய நிலைக்கு
திரும்பமுடியாதபடி
சூழல்கள்
அமைந்து போயிருக்கும்.
இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும்,
எந்த இடத்திலும்
நம்மீது பிறர் குற்றம்
குறை காணாதபடியும்,
பிறர்மீது
நாம் குற்றம்
காணாதபடியும்
பணிகளை முடிப்பதற்கும்
நாம் தொடர்புத்
திறன்களை
மிகச்சரியாக
கையாளத் தெரிந்துகொள்வது,
எப்போதுமே
அதில் விழிப்புணர்வுடன்
இருப்பது
மிகமிக அவசியமாகும்.
தொடர்புத் திறன்களை முழுவதும்
அறிந்து கொள்ளுதல்
என்பது ஒரேநாளில்
நிகழ்ந்துவிடாது.
நம்முடைய ஆளுமையில்
முற்றிலுமாக
திடீர் மாற்றங்கள்
ஏற்படுவதை
யாருமே ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். நம்மாலும் அவற்றை
முழுமையாக
கடைப்பிடிக்க
முடியாமல்
போகக் கூடும். அதுமட்டுமன்றி அவை கடும் விமர்சனங்களையும்
உருவாக்கிவிடும்.
தகவல் தொடர்புத்
திறன்களை
அறிந்து கொள்ளுதலிலும்
சூழல்களைப்
புரிந்துகொள்ளுதலும்
யாருடன் உரையாடுகிறோமோ
அவர்களைப்
பற்றி ஓரளவேனும்
அறிந்துகொள்ளுதலும்
முதல்படியாகும்.
நாம் வெளிப்படுத்தும்
சொற்கள் மற்றவர்களிடம்
எந்தவிதமான
அசைவுகளை
ஏற்படுத்துகிறது
என்பதை பேசிக் கொண்டிருக்கும்
போதே அறிகின்ற
ஆற்றலை வளர்த்துக்
கொள்ளவேண்டும்.
அவ்வாறு அறிகின்றபோதுதான்
அதற்கேற்றாற்போல்
நம்முடைய
நிலையை மாற்றிக்கொள்ளுதலோ
அல்லது உறுதிப் படுத்துதலோ
செய்ய முடியும்.
தொடர்புத் திறன்களில்
அடுத்தநிலை
நடந்துவிட்ட
தவறுகள் நம்முடையதாயி
ருப்பின்
தயங்காமல்
மேலதிகாரிகள்
எனும்போது
மன்னிப்பு
கேட்பதும்,
நம்மிடம்
பணிபுரிவோர்
எனும்போது
உணர்ந்து
வருத்தத்தை
வெளிப்படுத்துதலும்
அடுத்த முறை இருசாராரிடமும்
அத்தவறுகள்
நிகழ்வதை
தடுத்து நிறுத்தும்.
தெளிவாகக் கேட்டுக்கொள்ளுதல்,
தெளிவாகச்
சொல்லுதல்
எந்த அளவிற்கும்
முக்கியமோ,
அதைப்போன்றே
முக்கியமானது
ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்
எனப்படும்
உடலசைவுகளை
வெளிப்படுத்துதலும்,
புரிந்துகொள்ளுதலும்
ஆகும்.
கண், கைகள், தலை
அசைவுகள்
பல நேரங்களில்
தவறாய்ப்
புரிந்துகொள்ளப்
படுவதுண்டு. அவ்வாறு குறிப்பிடும்போது
யாரிடம் வெளிப்படுத்துகிறோம்
என்பதையும்
கவனத்தில்
கொள்ள வேண்டும்.
வட்டார வழக்கில்
பேசுவதாயிருந்தாலும்,
பேசுவோர்
நடுவில் இருப்பதாய்
இருந்தாலும்
புரியாத சொற்களை மீண்டும் ஒரு முறை
புரியும்
வண்ணம் கேட்டுக்கொள்வதும்,
சொல்வதும்
நல்லது.
இதற்கு நகைச்சுவை
யாய் ஓர்
உதாரணம் உண்டு. பேருந்தில் நடத்துனர்
சீட்டைக்
கொடுத்துவிட்டு
சில்லறை இல்லை என்றபோது
ஒருவர் ‘பையக் கொடுங்கள்’
என்றார்.
பைய என்றால் மெதுவாய் என்பது பொருள். ஆனால்
அதுதெரியாத
நடத்துனர்
சில்லறைக்கு
ஏன் பணப்பையைக்
கேட்கிறார்
என்று கோபப்பட்டு
சண் டையிட
ஆரம்பித்துவிட்டார்.
தகவல் பரிமாற்றத்தில்
மற்றவர்களிடம்
நம் வார்த்தைகளை
பதிவு செய்தல் என்பது நம் எண்ணங்களைப்
பதிவு செய்தல் நிகழ வேண்டும்.
தகவல் பரிமாற்றம்
சரியாக நிகழாததால்
மிகப்பெரும்
அழிவுகளை
ஏற்படுத்திய
வரலாற்றுப்
பிழைகள் நிறைய இருக்கின்
றன.
இலக்கியத்தில் எடுத்துக்கொண்டால்
கூட சிலப்பதிகார
கோவலன் கொலை செய்யப்பட்டதற்கு
பாண்டிய மன்னனின் கவனச் சிதறல்
காரணமாய்
சரியாக உச்சரிக்கப்படாத
வார்த்தைகள்தான்
என்ப தையும்
நாம் நினைத்துப்
பார்த்தல்
நல்லது.
எப்படிப்பட்ட சொற்களை நாம் தேர்ந்தெடுத்துப்
பேசவேண்டும்
என்பதற்கு
திருவள்ளுவர்
சொல்லும்
உதாரணம். ஒரு சொல்லைச் சொல்லும்போது
அதனை வெல்லக்கூடிய
மற்றொரு சொல் இல்லை
என்பதையறிந்து
தேர்ந்தெடுத்துச்
சொல்ல வேண்டும் என்கிறார்.
தேர்ந்தெடுத்து தெளிவாகப்
பேசுவோரும்
தகவல் தொடர் பினை
சரியான அலைவரிசையில்
செலுத்துவோரும்
வெற்றிபெறுவோர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |