|
||||
|
தமிழ் அரசியற் தலைமை என்பது
என்ன?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
உண்மையான
உறுதியான
தமிழ்த் தலைமையா?
(லெனின் பெனடிக்ற்)
தமிழ்மக்களுக்கான அரசியற்
தலைமை என்று வந்தால்
கடந்த மூன்று தசாப்தங்களாகத்
தமிழர் விடுதலைக்
கூட்டணியினரும்,
இந்நாளில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும்
குறிப்பிட
வேண்டும்.
இதில் விஷேடமாகக்
கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்
கடந்த 30 ஆண்டுகளில்
வடகிழக்குப்
பிரதேசத்தில்
எவ்வித பொருளாதார
அபிவிருத்தியையும்
முன்னெடுக்காமல்
ஆளும் அரசுக்களைக்
குறைகூறி
மட்டுமே அரசியல் நடாத்தி தமிழ் மக்களின்
வாக்குகளை
அபகரித்துப்
பாராளுமன்ற
ஆசனங்களை
அலங்கரித்தவர்கள்
என்றபெருமை
இவர்களையே
சாரும். அதைவிடவும்
விஷேடமாக
எதையுமே இந்தக் கூட்டம் செய்யாது என்று சந்தேகமறத்
தெரிந்தும் இதே கூட்டத்தை
மீண்டும்
மீண்டும்
பலமுறை பாராளுமன்றப்
பிரதிநிதிகாளாகத்
தேர்ந்தெடுத்த
பெருமை வடகிழக்கு
மக்களையே
சாரும். அதுவே இலங்கைத்
தமிழ் மக்களின் இழந்த உரிமைகளை
வென்றெடுப்பதற்கான
தகுதியினதும்
தகுதியின்மையினதும்
உரைகல்லாகும்.
சமீபகாலமாக சிலபத்திரிகை
ஊடகவியலாளர்கள்
அல்லது வேறுவிதத்தில்
சொன்னால்
தமிழ் தேசியவாதிகள்
திடீரென ஒரு வேகத்தில்
இலங்கை அரசு, கூட்டமைப்புடனேயே
கதைக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின்
சார்பாக
பாராளுமன்றத்தில்
அதிக ஆசனங்களைப்
பெற்று தமிழ்மக்களைப்
பிரதிநிதித்துவபடுத்தபவர்கள்
இவர்கள் என்ற அடிப்படையில்
இவர்களுடன்
பேசவேண்டும் என்ற ஆணித்தரமான
வாதத்தை முன்வைத்து
பிரசாரத்தைத்
தொடங்கியுள்னர்.
ஆனால் இதே கூட்டமைப்பு
புலிகள் இருந்தகாலத்தில்
அரசியல் தீர்வு என்றால் அரசாங்கம்
புலிகளுடன்
மட்டும்தான்
பேசவேண்டும
என்றும் ஆயுதம் வைத்திருக்கும்
அவர்களோடு
பேசினால்
தான் அரசாங்கம்
ஏமாற்றாது
என்றும்
தங்களுடன்பேசினால்
ஏமாற்றிவிடும்
என்றும், நாங்கள் தமிழ்மக்களைப்
பாராளுமன்றத்தில்
பிiதிநிதித்துவப்
படுத்தும் பாராளுமன்றப்
பிரதிநிதிகள்
மட்டுமே என்று கூறி
புலிகளை ஏக அரசியல்
தலைமையாக
அடையாளம்
காட்டினர்.
அதாவது அரசியல்ரீதியாக
தமிழ்மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்தக் கூட்டமைப்பினர்
தாங்கள் தமிழ்மக்களின்
பிரதிநிதிகள்
அல்ல, ஆயுதம்தரித்த
புலிகளே தமிழ் மக்களின்
அரசியல் உரிமைபற்றி
கதைக்க உரிமையுள்ளவர்கள்
என்பதே இதன் சாராம்சம்.
இதை இந்தக்
கூட்டமைப்பினரே
எந்தவித ஊசலாட்மும்
இன்றி எண்ணற்றமுறை
தற்செயலாகக்கூட
நாப்பிறளாமல்
திருவாய்
மலர்ந்துள்ளனர்.
வேறுவிதமாகச்
சொல்வதென்றால்
தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும்
தீர்வு பற்றிக் கதைப்பதற்கு
தங்களுக்குத்
தகுதியில்லை
அல்லது அதிகாரம் இல்லை என்றுதானே
அர்த்தங்கொள்ளலாம்.
மிக வெளிப்படையாகச்
சொல்வதென்றால் புலிகளின் மிரட்டலுக்குப்
பயந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள தமிழ் கூட்டமைப்பு
என்று இந்நாளில்
கூறப்படும்
தமிழ்தலைமை
தங்களுக்குத்
தமிழ் மக்களால் வழங்கப்பட்ட
அரசியல் ஆணையை மற்றும்
உரிமையை உதாசீனம் செய்தார்கள்
என்பதே உண்மை. இப்படிப்பட்டவர்கள்தான் தமிழ்த்
தலைமையா?
அன்று புலிகள் மிரட்டியதால்
தங்களுக்குத்
தமிழ்மக்களால்
அளிக்கப்பட்ட
ஆணையை அவமதித்தவர்கள்
இன்று ஆளும் அரசாங்கம்
மிரட்டினால்
உயிருக்குப்
பயந்து அதே அரசியல்
ஆணையை உதாசீனம் செய்ய மாட்டார்கள்
என்பதற்கு
என்ன உத்தரவாதம்?
இது இப்படியிருக்க
இன்று இந்தத் தமிழ்மக்களின்
அரசியல் உரிமை மற்றும்
தீர்வு சம்பந்தமாக
அரசாங்கம்
பாராளுமன்ற
ஜனனாயக முறைமையின்
கீழ் பெரும்பான்மை
ஆசனங்களைப்
பெற்று தமிழ் மக்களைப்
பிரதிநிதித்துவப்
படுத்தும்
கூட்டமைப்புடன் பேசுவதே
ஜனநாயகம்
என்று உரிமைக் குரல் எழுப்பியுள்ள
பத்திரிக்கை
ஊடகவியலாளரைக்
கேட்கிறேன்
இதே காரணத்தை
புலிகள் இருந்த காலத்தில்
உரத்துச்
சொன்னதுண்டா?
அல்லது வாய்தடுமாறியாவது
சொன்னதுண்டா?
தமிழ் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளிடம்
மட்டுமே அரசியல் தீர்வு அரசியல் உரிமைபற்றிப்
பேசவேண்டும்.
ஆயுதம் தரித்த
புலிகளுடன்
அல்ல என்று
அடித்துச்
சொன்னதுண்டா?
திடீரென்று
இப்போதுமட்டுமென்ன
பாராளுமன்ற
ஜனநாயகப்
பாசம்
அல்லது கூட்டமைப்புக்குக்
கொடி பிடிப்பு. கூட்டடைப்புக்குக் கொடிபிடிப்பு
என்ற போர்வையில்
ஆளும் அரசுக்கு ஆராதனையோ?
எல்லாமே உலகமயமான
இந்நாளில்
இதன் பின்னணியில்
யார் இருக்கிறார்கள்.
யார் இதன்
சூத்திரதாரிகள்
என்பதும்
இதனால் யார் அரசியல்
ஆதாயம் அடைவார்கள்
என்பதும் யேசுகிறீஸ்துவுக்கே
வெளிச்சம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |