Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின்

உள் முரண்பாடுகளும் அதற்கான காரணங்களும்

(இரா. துரைரட்ணம )

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் இணைந்த கூட்டுக் கட்சியாக பதிவு செய்யப்படாமை உள்ளக முரண்பாட்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயம் பெற்று இன்று 12 வருடங்கள் கடந்து விட்டன. அதன் ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் இயங்கலாம் என சிலரும், இல்லை இல்லை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என சிலரும் அடம்பிடித்து நின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிதான் தமிழ் கட்சிகளில் மூத்த கட்சி, எனவே அக்கட்சியின் சின்னத்தையே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அந்நேரத்தில் வாதிட்டதையும் நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும் என 2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்றுக் கொண்டனர். அக்காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த செல்வம் அடைக்கலநாதன், ஜோசப் பரராசசிங்கம் ஆகிய தலைவர்கள் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணங்கியிருந்தனர். இன்றைக்கு இந்த இணக்கம் ஏற்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன. கட்சியை பதிவு செய்வதில் இழுபறிக்கான காரணம் என்ன?

கடந்த வருடத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசாவை நான் சந்தித்த போது இந்த இழுபறி பற்றி கேட்ட போது அவர் சில விளக்கங்களை சொன்னார்.

மாவை சேனாதிராசா சொன்ன விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனி ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாது. பல கட்சிகள் இணைந்த கூட்டு கட்சியாகவே பதிவு செய்ய வேண்டும். தனிக்கட்சியாக பதிவு செய்தால் ஆனந்தசங்கரி ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை கொண்டு போனது போல தனிநபர் ஒருவரின் ஆதிக்கத்திற்குள் வந்து விடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக பதிவு செய்ய வேண்டும். அதற்காக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மகாநாடுகளை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அத்தீர்மானங்களை சமர்ப்பித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்கு வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் சமபலம் இருக்கும் வகையிலேயே கட்சி பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காகவே தமிழரசுக் கட்சி மாவட்ட கூட்டங்களையும் தேசிய மகாநாட்டையும் நடத்த தீர்மானித்துள்ளோம். எமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்வதில் எந்த கருத்து முரண்பாடும் கிடையாது என மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு கட்சியும் மகாநாட்டை நடத்துவதோ அல்லது கட்சி கிளைகளை அமைப்பதோ தவறில்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அந்த ஜனநாயக உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை பலவீனப்படுத்துவதற்கோ, அல்லது கட்சியை பதிவு செய்து சட்ட அங்கீகாரம் பெறுவதற்கு முட்டுக்கட்டையாகவோ இருக்க அனுமதிக்க முடியாது.

தமிழரசுக் கட்சியில் இருக்கும் சிலரின் அண்மைக்கால நடவடிக்கைகளும், பேச்சும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் எனப் பிரிந்து நிற்க விரும்பவில்லை என்பதை கடந்த கால வரலாறுகள் எமக்கு தெளிவாக புலப்படுத்துகின்றன. தமிழரசுக் கட்சி மாநாட்டை நடத்துவதோ அல்லது அதற்கு அப்பால் சென்று அங்கத்தவர்களை சேர்ப்பதோ தவறில்லை. ஆனால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமைக்கு சட்ட அங்கீகாரத்தை பெறுவதில் இரண்டு மடங்கு வேகத்தை காட்ட வேண்டும். சட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பெறும் விடயத்தில் தோற்றுப்போய் விடக் கூடிய அபாயம் காணப்படுகிறது. உள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு ஒருபோதும் வெளியகத்தில் எமது தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு நிற்க முடியாது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான சட்ட அங்கீகாரம் பெறும் விடயத்தில் தலைவர் சம்பந்தனும், செயலாளர் மாவை சேனாதிராசாவும் பொறுப்புணர்வோடு செயற்பட்டு ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

தாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்ற உணர்வு எந்த வகையிலும் ஏனைய தலைவர்களுக்கு வராத வகையில் செயற்பட வேண்டியது அனுபவம் வாய்ந்த சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் உள்ள பொறுப்பாகும்.

தீர்மானம் எடுக்கும் சக்திகளாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே இருக்கின்றனர் என்ற மன ஆதங்கம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்லது ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு இருப்பதை மறைப்பதற்கில்லை. இந்த நிலைகள் மாற்றப்பட்டு பன்முக ஜனநாயக சூழல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது போல ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், இந்த விடயத்தை வெளியில் இருந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதாலோ சம்பந்தனையும், மாவை சேனாதிராசாவையும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விடுத்து நேரடியாக அவர்களுடன் பேசி உள்ளக பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும். உள்ளக பிரச்சினையையும் முரண்பாடுகளையும் பலவீனங்களையும் களைய முடியாத உங்களால் எப்படி தேசியப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரப் போகிaர்கள் என மக்கள் உங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்காது. உள்ளக பிரச்சினையை தீர்த்தால் மட்டுமே நீங்கள் பலமான அரசியல் தலைமை என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படும்.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com