|
||||
|
பேரினவாதத்தின்
விஸ்வரூபம் : முஸ்லிம்களே
இலக்கு! இலங்கை
ஒரு ஜனநாயக சோஷலிசக்
குடியரசு அதாவது
நாட்டில் வாழும்
சகல இனங்களையும்
பாதுகாக்கும்
பொறுப்புள்ள ஒரு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசு அமையப்பெற்றிருக்கும்
நாடு. இந்த
நாட்டிற்கு அரசியல்
யாப்பு இருக்கிறது
அந்த யாப்பின்
பிரகாரம் நாட்டு
மக்கள் ஆளப்பட
வேண்டிய விதமும்
அவர்கள் உரிமைகள்
பாதுகாக்கப்பட
வேண்டிய விதமும்
கூட மிகத் தெளிவாக
இருக்கிறது. ஆனால்,
சட்டங்கள் பொன்னால்
எழுதப்பட்டிருந்தால்
கூட தலைமை நீதியரசரையே
நினைத்த மட்டில்
தூக்கி வீசும்
ஒரு நாட்டில் நீதியிருக்கப்
போவதில்லை, துரதிஷ்டவசமாக
நீதியில்லாத நாட்டில்
நீதியமைச்சராக,
இந்த இக்கட்டான
காலகட்டத்தில்
ஒரு முஸ்லிமே இருக்கிறார். பேரினவாதம் பேரினவாதம்
என்பது இந்த நாட்டில்
புதிய விடயமே அல்ல,
ஆண்டான்டு காலமாக
அது இருந்தே வந்திருக்கிறது. பிரித்தானியர்கள்
தாம் சுதந்திரம்
என்ற ஒரு பொருளை
வழங்கிச் சென்ற
அத்தனை நாட்டிலும்
அந்நாட்டு மக்கள்
அதற்காகக் கொடுக்கும்
விலை தான் பிரிவினை.
அதை லாவன்யமாக
விதைத்து விட்டு
வேடிக்கை பார்ப்பதில்
அரை நூற்றாண்டுக்கு
முன்னரே திட்டமிடத்
தெரிந்த வெள்ளைக்காரர்கள்
கெட்டிக்காரர்களே. இலங்கை
பெளத்த மதத்தைப்
பிரதானமாகக் கொண்ட
நாடு என்பதுதான்
கடந்த 2500 வருடங்களின்
வரலாறு என்பதால்
பெளத்தர்கள் தவிர்ந்த
அனைவரும் சிறுபாண்மையினர்
எனும் வட்டத்திற்குள்
வருகிறார்கள்,
இதில் முஸ்லிம்கள்
(சோனகர்கள்) , தமிழர்கள்
உட்பட அனைத்து
சிறிய இனங்களும்
அடங்கிக்கொள்ளும்.
ஆனாலும் அவர்கள்
இந்நாட்டில் அடிமைகள்
இல்லை என்பதற்கிணங்க
இலங்கை அரசியல்
யாப்பில் சட்டங்கள்
வகுக்கப்பட்டிருக்கிறது.
அவற்றை நன்றாகத்
தெரிந்த சட்ட வல்லுனர்கள்
முஸ்லிம் தமிழ்
இனங்களில் பரவலாகவே
இருக்கிறார்கள். மக்கள்
உரிமை இச்சட்டங்களின்
அடிப்படையில்
இலங்கையின் ஏனைய
மக்களின் உரிமைகள்
குறித்த பிரதான
சரத்து இவ்வாறு
கூறுகிறது
: The
Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly
it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana,
while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e). இதனடிப்படையில்,
பெளத்த மதம் பிரதான
மதமாகப் பாதுகாக்கப்படும்
அதேவேளை ஏனைய அனைத்து
மதங்களுக்கும்
அவற்றிற்கான உரிமைகள்
10ம் 14ம் சரத்துக்களின்
அடிப்படையில்
பாதுகாக்கப்பட
வேண்டும் என்பதாகும். பத்தாவது
சரத்து இவ்வாறு
கூறுகிறது
: Every
person is entitled to freedom of thought, conscience and religion, including
the freedom to have or to adopt a religion or belief of his choice. அதாவது
ஒவ்வொரு மனிதருக்கும்
அவரது சிந்தனைச்
சுதந்திரம், சமய
சுதந்திரம் மற்றும்
தான் விரும்பும்
மார்க்கத்தை (சமயத்தை)
தெரிவு செய்யும்
பின்பற்றும் சுதந்திரம்
வழங்கப்பட வேண்டும்
என்பதாகும். அடுத்து
பதின் நான்காவது
சரத்து நாட்டின்
பிரஜைகளின் பேச்சு,
ஒன்று கூடல் மற்றும்
அமைப்பு ரீதியான
சுதந்திரத்தைப்
பாதுகாக்கக் கோருவதோடு
ஒவ்வொரு பிரஜைக்கும்,
சரத்து 1ன் பிரிவு
e ன் பிரகாரம் தான்
விரும்பும் சமயத்தைப்
பின்பற்றுவதோடு,
அதற்கான கூட்டமைப்பிலோ,
தனியாகவோ, வெளிப்படையாகவோ , தனிமையாகவோ
அதற்கான வழிபாடுகளில்
ஈடுபடல், பின்பற்றல்,
மற்றும் கற்பித்தலில்
கூட சுதந்திரமாக
ஈடுபட இலங்கை அரசியல்
சாசனம் அனுமதிக்க
வேண்டும். அதன்
விபரத்தினை கீழ்
காணலாம். Freedom
of Speech, assembly, association, movement, etc., 14.
(1) Every citizen is entitled to - (a)
the freedom of speech and expression including
publication; (b)
the freedom of peaceful assembly; (c)
the freedom of association; (d)
the freedom to form and join a trade union; (e)
the freedom, either by himself or in association with
others, and either in public or in private, to manifest his religion or belief
in worship, observance, practice or teaching; (f)
the freedom by himself or in association with others
to enjoy and promote his own culture and to use his own language; (g)
the freedom to engage by himself or in association
with others in any lawful occupation, profession, trade, business or
enterprise; (h)
the freedom of movement and of choosing his residence
within Sri Lanka; and (i)
the freedom to return to Sri Lanka. நம்புவதற்குக்
கொஞ்சம் கடினமாகத்தான்
இருக்கும், ஆனாலும்
நம்பித்தான் ஆக
வேண்டும் ஏனெனில்
இதுதான் இலங்கையில்
அரசியல் ஏற்பாடு. தற்போதைய
நாட்டின் நிலை
பற்றி நன்கு அவதானிப்பவர்கள்
இரண்டு வகையான
முடிவுக்குள்
வருவார்கள். 1.
இலங்கையில் ஒரு
வகை சர்வாதிகாரம்
தலையெடுத்து விட்டது 2.
பேரினவாதம் விஸ்வரூபம்
எடுத்து வருகிறது இந்தப்
பேரினவாதத்தை
வளர்ப்பவர்கள்
யார்? எனும்
கேள்விக்கு என்னமோ
பதில் சொல்லக்
கஷ்டப்படுவது
போல் நடித்துத்தான்
ஆக வேண்டும் எனும்
பயங்கரமான சூழ்நிலை
நாட்டில் இருப்பதால்
பல பேருக்கு அதை
வெளியில் பேசவே
பயமாக இருக்கிறது. ஆனால்
பொது பல சேனா எனும்
நவீன அமைப்பு பேசுகிறது,
பேசுவது மாத்திரமல்ல
இலங்கை
அரசை, பாதுகாப்புச்
செயலாளரை மற்றும்
அனைவரையும் எச்சரிக்கை
செய்கிறது, பயமுறுத்துகிறது,
இலங்கை தேசத்தின்
நவீன காவலர்களாக
விஸ்வரூபம் எடுத்து
வருகிறது. துரதிஷ்டம்
இவர்கள் பேச்சுக்கள்
எதுவும் உலகுக்கே
கேட்டாலும் நாட்டில்
அவரையறியாமல்
அணுவும் அசையாது
எனும் நிலையிருக்க
ஜனாதிபதிக்கோ
அவரது குடும்பத்துக்கோ
கேட்பதாயில்லை,
அதை அருகில் சென்று
எடுத்துரைக்கும்
தைரியமும் யாரிடமும்
இல்லை, பேசினால்
என்ன நடக்கும்
என்பதை திரும்பத்
திரும்ப அவர்கள்
நிரூபிப்பதால்
இனி அதை நினைத்துப்
பார்க்கவும் யாரும்
இல்லை. அவரைப்
பலப்படுத்துவதாகக்
கூறி ஏற்கனவே எதிர்க்கட்சியை
பலவீனப்படுத்தி
விட்டதால் எதிர்க்கட்சிக்கு
முதுகெலும்பும்
இல்லை, பேசும்
திறனும் இல்லையென்றாகிவிட்டது. எனவே, இனி ஆண்டவனாப்
பார்த்து எதையாவது
இறக்கினால் தான்
உண்டு என்று கெளரவமாக
இலங்கைப் பிரஜைகள்
தம் வாழ்க்கையைப்
பயந்து பயந்து
வாழ ஆரம்பித்தாகிவிட்டது. இலங்கையும்
ஐக்கிய நாடுகள்
சபை வலியுறுத்தும்
மனித உரிமைகள்
சாசனங்களை ஏற்றுக்கொண்ட
ஒரு நாடு எனும்
அடிப்படையில் , 1946 ம் ஆண்டு
ஐக்கிய நாடுகள்
சபை முதன்மை அமர்வின்
போது ஏற்றுக்கொள்ளப்பட்ட
56 (1) பிரிவு வலியுறுத்தும்
: Freedom
of information as a fundamental human right and
as the touchstone of all the freedoms to which the United Nations is
consecrated நாட்டின்
பிரஜைகளது தகவல்
அறியும் உரிமையையும்
ஏற்றுக்கொள்கிறது. அதே
போன்று சர்வதேச
சிவில் அரசியல்
உரிமைகள் ஏற்பாடு
மற்றும் சர்வதேச
மனித உரிமைகள்
பிரகடனம் 19ம் சரத்தின்
அடிப்படையில்
தகவல்களைத் தேட
மற்றும் பெற்றுக்கொள்ளவும்
ஒவ்வொரு தனி மனிதருக்கும்
பேச்சு மற்றும்
வெளிப்படுத்தல்
சுதந்திரத்தின்
அடிப்படையில்
உரிமையுண்டு. Article
19 of the International Covenant of Civil and Political Rights, as well as
Article 19 of the Universal Declaration of Human Rights recognize the right
to seek, impart and receive information as a part of the fundamental right to
freedom of speech and expression. எனவே,
பொதுபல சேனா ஒரு
இயக்கமாக அல்ல,
அதன் ஒரு தனி உறுப்பினர்
தான் விரும்பும்
தகவலைப் பெற்றுக்கொள்ள
விரும்பினால்
கூடக் கேட்கலாம்,
எனவே இதில் முஸ்லிம்கள்
அலட்டிக்கொள்ளத்
தேவையில்லை, காரணம்
அவர்களுக்கும்
உரிமையுண்டு. பலாத்காரம் ஆனாலும்
அந்தத் தகவலினைப்
பலாத்காரத்தைப்
பிரயோகித்தோ காலக்கெடு
விதித்தோ ஒரு சமூகத்தை
நிர்ப்பந்தப்படுத்தியோ
பெற்றுக் கொள்ளும்
உரிமை பொது பல
சேனாவுக்கும்
இல்லை ஹெல உறுமயவுக்கும்
இல்லை. இருந்தாலும்
இங்கே முஸ்லிம்கள்
அலட்டிக்கொள்ளத்
தேவையில்லை ஏனெனில்
பொதுபல சேனா தனது
நேற்றைய ஊடகவியலாளர்
மாநாட்டில் முஸ்லிம்
பள்ளிவாசல்கள்
தொடர்பான அனைத்து
விபரங்களையும்
அடுத்துவரும்
7 நாட்களுக்குள்
கலாசார அமைச்சின்
செயலாளர், பாதுகாப்பு
அமைச்சு மற்றும்
புலனாய்வுத்துறை
ஆகியன தமக்கு வழங்க
வேண்டும், தவறும்
பட்சத்தில் தமது அமைப்பு
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
தொடர்பில் தீர்க்கமான
முடிவொன்றினை
எடுக்கவேண்டி
ஏற்படுமென அவர்களைத்தான்
எச்சரித்திருக்கிறது. ஆயினும்
அவசரத்தில் சில
ஊடகங்கள் யாருக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டது
என்பதைத் தெளிவாக்காத
காரணத்தினால்
ஊகத்தின் பலன்
இது முஸ்லிம் சமூகத்துக்கு
எதிராக விடுக்கப்பட்ட
எச்சரிக்கையாகவே
மாறிப்போகிறது. அந்த
உரிமை அவர்களுக்கு
இல்லை என்பது ஒரு
புறம் இருக்க,
அதை அவர்கள் செய்ய
மாட்டார்கள் என்பதற்கு
எந்தவித உத்தரவாதமும்
இல்லையென்பதே
ஒவ்வொரு முஸ்லிமின்
இன்றைய பயமாக இருக்கிறது. நியாயமான
பயம் தான், ஏனெனில்
மக்களுக்கு உத்தரவாதம்
வழங்க வே்ண்டிய
ஜனாதிபதியும்
ஒரு புறத்தில்
நாடு அனைவருக்கும்
உரியது என்று முழங்கி
விட்டு மறுபுறத்தில்
பெளத்த காணிகளை
பெளத்தர் அல்லாதோர்
அனுபவிக்கிறார்கள்
என்று வேறு சொல்கிறார்.
யாரைத்தான்
நம்புவது? எனும்
மிகச் சாதாரண அடிப்படையில்
ஆம்! பொது பல
சேனாவின் விஸ்வரூபத்தின்
அடுத்த பாகங்களை
எதிர்பார்க்கலாம்.
புத்தியிருந்தால்
நாம் தயாராகலாம் ! தயாராவது
என்பது போர் தொடுக்கவல்ல,
கத்தியைத் தீட்டவல்ல,
புத்தியைத் தீட்ட.
அதற்காகக் கூட்டம்
கூட்டி மண்டையை
உடைத்துக்கொள்ளவும்
கூட அவசியம் இல்லை,
யாரையெல்லாம்
பாராளுமன்றத்துக்கு
வாக்களித்து அனுப்பினீர்களோ,
யாரையெல்லாம்
நகர சபைக்கு, மாகாண
சபைக்கு அனுப்பினீர்களோ
அவர்களுக்கு அழுத்தங்களைக்
கொடுங்கள். என்னதான்
தகவல் அறியும்
உரிமை பேணப்பட
வேண்டும் என்று
இலங்கை யாப்பில்
இல்லாத சட்டம்
ஏற்றுக்கொள்ளப்பட்டு
நடைமுறையில் இருந்தாலும்,
அதிகாரத்தில்
இருப்பவர்களின்
நலன்களைப் பேணுவதற்கும்
இரகசியங்கள் காப்பதற்கும்
என்றே வடிவமைக்கப்பட்ட
சில விஷேட சட்ட
திட்டங்கள் உண்டு. இலங்கை
நிறுவனக் கோட்பாடுகள் XLV
II சில அதிகாரங்களை
அமைச்சுக்களுக்கும்
அதன் நிர்வாகத்
தலைமைக்கும் வழங்குகிறது. A
Secretary to a Ministry or Head of department may exercise discretion with
respect to the release to the public of information that
may be of interest and value to the public. அதாவது
ஒரு அமைச்சின்
செயலாளரோ அல்லது
நிர்வாகத் தலைமையோ
நாட்டின் மக்களின்
தேவை (மற்றும்
பாதுகாப்பு உட்பட்ட
இதர சூழ்நிலை)
களைக் கருத்திற்கொண்டு
தகவல்களை வழங்காது
தவிர்க்க முடியும்
என்பதாகும். ஒரு
அரசைப் பயமுறுத்தி,
இன்னொரு சமூகத்தை
அச்சுறுத்தும்
நோக்கில் (மாத்திரம்)
செயற்படும் பொது
பல சேனாவுக்கும்
இது பொருந்தும்
என்பதால் அவர்களை
முறியடிக்க அரசிடமே
சட்டங்கள் இருக்கின்றன. No
information even when confined to statements of facts should be given where its
publication may embarrass the Government as a whole or any Government
Department or officer. In cases of doubt, the Minister concerned should be
consulted. (Paragraph
6 : 1 : 3) எனவே
இவையனைத்தும்
மீறப்பட்டு முஸ்லிம்
மக்களின் இயல்பு
வாழ்க்கை அச்சுறுத்தப்படும்
போது அது நிச்சயமாக
அரச ஆசீர்வாதத்திலேயே
நடைபெறுகிறது
என்பதை ஐ.நா வரை
சென்றாலும் நிரூபிக்கக்கூடிய
அத்தனை வசதிகளும்
முஸ்லிம் சமூகத்துக்கு
உண்டு. தமிழ்
சமூகம் நசுக்கப்பட்ட
போது அவர்களுக்கு
என்று ஒருங்கிணைக்கப்பட்ட
தலைமை இருக்கவில்லை
என்பது காலம் நமக்கு
ஊட்டிய பாடமாகும். ஏனெனில்,
பிரபாகரனைப் பொறுத்தவரை
அவரொருவரே தலைவராக
இருக்க வேண்டும்
என்பதால் அனைவரையும்
கொன்று தீர்த்து
விட்டார் அதானால்
அவர் ஒருவரே தலைவராக
வலுக்கட்டாயமாக
நின்று கொண்டார்.
இறுதியில்
அவரும் சென்ற பின்னர்
தற்போது மீண்டும்
வழி நடத்தவோ நம்பவோ
ஆளில்லாமல் இன்னும்தான்
தமிழ் சமூகம் தடுமாறிக்கொண்டு
இருக்கிறது. முஸ்லிம்
சமூகத்தின் பிரச்சினை
என்னவென்றால்
தலைவர்கள் கூடிவிட்டார்கள்,
அந்தத் தலைவர்கள்
அனைவரும் நான்
முந்தி நீ முந்தியென்று
ராஜபக்சவுக்கு
வால் பிடிப்பதில்
காட்டும் மும்முரத்தைத்
தம் சமூகத்தின்
ஆதங்கத்தைத் தெளிவாக்குவதற்கு
காட்டும் நிலையில்
இல்லை, நீதியமைச்சரே
நாட்டில் நீதியிருக்கிறதா
என்று கேட்கும்
போது இதை விட என்ன
வேண்டும் என்று
ஆகி விட்டதல்லவா? சுனாமி
வந்தபோது தமிழ்-முஸ்லிம்
என்று பார்க்காது
தென்னிலங்கையிலிருந்தும்
படையெடுத்துச்சென்று
முஸ்லிம்கள் மக்களுக்கு
உதவி செய்தார்கள்
அது தான் எம் சமூகத்தின்
மனிதாபிமானம்.
அதேவேளை புலியை
அழிக்கிறோம் பேர்வழி
என்று மக்களை மந்தைகள்
போன்று அழித்தபோது
நம் மக்கள் வாய்
மூடியிருந்தார்கள்,
ஒரு வகையில் புலி
போனால் தான் நாடு
முன்னேறும் எனும்
மிகச் சாதாரண எண்ணம்
புலியை எதிர்த்த
தமிழர்களிடமும்
இருந்ததால் அதுவும்
கடந்த கால வரலாறாகிவிட்டது. ஆனால்
அதற்கும் மேலாக
ஒரு படி சென்ற
எம் ஆலிம்கள்
அதுதான் சரியெனக்
கொடி பிடித்த போதும்
நம் சமூகம் பார்த்துக்கொண்டிருந்ததை
மனிதநேயத்தையும்,
மற்றவர்களுக்கு
உதவி செய்வதையும்,
அண்டை வீட்டான்
பசித்திருக்க
நீ உண்ணாதே எனும்
நல்வழி காட்டித்தந்த
மார்க்கத்தையும்
எமக்கருளிய ஆண்டவனுக்கே
பொறுக்க முடியவில்லை
என்றால் எம் சமூகம்
மீதும் அவன் கோபமும்
சாபமும் வந்து
விழுவது தடுக்க
முடியாததொன்றாகிவிடுமே?
(யா அல்லாஹ் எம்
சமூகத்தை அப்படித்
தண்டித்து விடாதே ! ) என்றுமே
நம் சமூகத்துக்கொரு
பிரச்சினையென்றால்
தமிழ் சமூகம் ஓடி
வரப்போவதில்லையென்றே
வைத்துக்கொண்டாலும்
கூட நியாயமும்
தர்மமும் எங்களுக்கொரு
கணக்கும் அவர்களுக்கொரு
கணக்கும் என்பது
மனிதன் போடும்
கணக்குத்தானே
தவிர இறைவன் பார்வையில்
அவ்வாறு இருக்கப்
போவதில்லை. நாளையொரு
நாள் பேரினவாதம்
இந்நாட்டில் தலையெடுக்கும்
என்பது யாரும்
நினைத்துப் பார்க்காத
விடயம். 1983 கலவரம்
போன்று பேரினவாதக்
கொடூர முகத்தை
இலங்கை உலகுக்கு
மீண்டும் காட்டும்
என்பது எவருமே
கனவிலும் காணாத
ஒன்று, ஆனால் அந்தப்
பயத்தையும் அழுத்தத்தையும்
உருவாக்காமல்,
கையாளாமல் நீண்ட
காலத்திற்கு ராஜபக்ச
குடும்ப ஆட்சி
நிலவ முடியாது. சர்வதேசப்
பிரச்சனையாகும்
போது, கேந்திர
முக்கியத்துவம்
வாய்ந்த இலங்கையை
அமெரிக்காவின்
பயமுறுத்தலிலிருந்தும்
காப்பாற்ற சீனா
இருக்கிறது, திரைமறைவில்
ரஷ்யா இருக்கிறது,
போட்டி போட்டு
உதவிக்கரம் நீட்ட
இந்தியா இருக்கிறது,
ஆனால் இலங்கை முஸ்லிம்கள்
அடி வாங்கி அலறினாலும்
பாகிஸ்தான் கூட
வராது எனும் உண்மையை
முதலில் நாங்கள்
புரிந்து கொள்ள
வேண்டும். தமிழனுக்குத்
தமிழன் எனும் ரீதியிலாவது
தமிழ்நாடு கொந்தளித்து
வரும் என்று எதிர்பார்த்து
ஏமாந்த அப்பாவித்
தமிழ் மக்கள் இன்னும்
முகாம்களில் வாடுகிறார்கள்,
அவர்கள் படும்
துன்பங்களை 25 வருடங்களாக
புலிகளால் வடக்கிலிருந்து
விரட்டப்பட்ட
முஸ்லிம்களும்
அனுபவித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவையெல்லாம்
எம் கண் முன்னால்
நடக்கும் அநியாயங்கள்,
படிப்பினைகள். நாட்டில்
ஏதாவது நடந்தால்
அரசியல் வாதிகள்
ஒதுங்கிய பின்னர்
முஸ்லிம் கவுன்சிலும்
உலமா சபையும் ஆவணங்களைத்
தூக்கிக் கொண்டு
அரச குடும்பத்திற்கு
ஓடுகிறார்கள்,
அவர்களைப் பார்த்து
இளைய சமுதாயம்
ஜெனீவா போனதற்கு
சன்மானமா என்று
சமூக வலைத்தளங்களில்
கேள்வி கேட்கிறார்கள்,
துரதிஷ்டம் அந்தக்
கேள்விகள் இவர்கள்
காதுகளைப் போய்
சேர்வதுமில்லை. கூட்டிக்கழித்துப்
பார்த்தால் இவர்கள்
யாரையும் நம்பியும்
பிரயோசனமில்லை,
நம்புவதற்கு வேறு
யாரும் இல்லவும்
இல்லை. அப்படியானால்
தீர்மானங்களை
எடுக்கும் இறுதி
மனிதன் நீங்களாகத்தான்
இருக்கப்போகிறீர்கள்,
மக்களாகச் சிந்தித்துச்
செயற்படும் காலம்
இது, மாற்றுக்
கருத்தாளர்கள்
இருக்கிறார்கள்,
மாற்றுச் சிந்தனையாளர்கள்
இருக்கிறார்கள்,
ஒற்றுமையான நாட்டையும்,
சமாதானத்தையும்
விரும்பும் பெளத்தர்கள்
இருக்கிறார்கள்,
பெளத்த துறவிகளும்
கூட இருக்கிறார்கள்
ஆனால் இவர்களை
அணுகி ஒன்று திரட்டி,
திரண்டு உரிமைக்காகப்
போராடும் எண்ணம்
இன்னும் நம்மவர்க்கு
வரவில்லை, வருமா
என்பதும் தெரியவில்லை. ஆனாலும்,
பேரினவாதம் விஸ்வரூபம்
எடுத்து விட்டது,
இனியும் அவதானம்
தவறினால் விளைவுகள்
பாரதூரமாகவே இருக்கும்! -
மானா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |