Contact us at: sooddram@gmail.com

 

கிணற்றில் விழச்சொல்லும் TNA! தமிழர்கள் என்ன செம்மறியாடுகளா….??

நாடு முழுவதுமே எதிர்வரும் தை 8 ஆம் திகதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது ஆழும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் பிரச்சாரங்களை நீ முந்தி நான் முந்தி என்று போட்டிபோட்டு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்குமுன் தனது அதிகாரத்தின் கீழ் தன்னுடன் இருந்தவர்கள் பலர் தனக்கு எதிராக களமிறங்குவார்கள் என்பதை மகிந்தர் சிந்தித்துக்கூடப்பார்த்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆட்சியும் அதிகாரமும் தன்னிடத்தே உள்ளதால் எதையும் செய்துவிடலாம் என்றும் எப்போதுமே எல்லோரையும் ஏமாற்றலாம் என்று பகல்கனவு கண்டுகொண்டிருந்த மகிந்தர் அது பலிக்காது என்று இப்போதுதான் உணர்ந்துகொண்டுள்ளார்.

ஜனநாயம் என்ற பேரிலே ஒரு சர்வாதிகார குடும்ப ஆட்சி செய்துவந்த கூட்டம் இத்துடன் தங்களது ஆட்டம் அடங்கிவிடப்போகின்றதோ என்று பயப்படத்தொடங்கியுள்ளது. மகிந்த அரசை வீழ்த்தியே தீரவேண்டும் என்று சபதமெடுத்துக்களமிறங்கி உள்ளது ஒரு கூட்டம் தேர்தலுக்கான திகதி நெருங்க நெருங்க இவர் வெல்லுவாரோ அவர் வெல்லுவாரோ என்று வெற்றியாளரின் பக்கம் தாவிக்கொள்ளக்காத்திருக்கின்றது ஒரு கூட்டம், எங்கே யார் எதைக்கொடுப்பார்கள் அவர்கள் பக்கம் சாய்ந்து கொள்வோம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றது ஒருகூட்டம் ஆனால் தமிழர்களோ இந்த தேர்தலில் தாம் என்ன செய்வது வாக்களிக்கவேண்டுமா? அல்லதுபுறக்கணிக்கவேண்டுமா ? யாருக்கு வாக்களிக்கவேண்டும் யாரைப்புறக்கணிக்கவேண்டும் என்ற பல கேள்விகளுடன் தம்மால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் 30ஆம் திகதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரிப்பதாக திடீர் என்று அறிவித்திருக்கின்றது ஆலோசித்துக்கொண்டிருக்கின்றோம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டே சந்தர்ப்பத்தை தவறவிட்ட இவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளரான மைத்திரியை ஆதரிப்பதாக அறிக்கை விட்டார்கள் என்பது விளங்கவில்லை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்டபோதும் இன்னும் முடிவெடுக்கவில்லை ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் இன்று திடீரென்று மைத்திரிபக்கம் சாய்ந்து கொண்டதன் காரணம் என்ன ?இவர்களின் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததா? தமிழர்கள் சார்பாக இவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அப்படியானல் இவகள் எந்த கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்ற பல கேள்விகள் இங்கே எழுகின்றன. ஆனால் இவை எதற்குமே பதில் சொல்லாது வெறுமனே மைத்திரியை ஆதரிப்போம் என்று இவர்கள் கூறுவதை சரி என்று ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்மக்கள் என்ன செம்மறியாட்டுக்கூட்டமா?


வரப்போகும் தேர்தலிலே தமது நிலைப்பாடு என்ன என்பதை எதிர்பார்த்து மிக ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு தமது தலைவர்கள் மீது அவநம்பிக்கையும் தாம் தவறானவர்களைத்தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்றா ஆதாங்கமும்தான் இப்போது ஏற்படுகின்றது இதுவரைகாலமும் யாரை ஆதரிப்பது என்பதைப்பற்றி தமிழர்தரப்பு தீர்க்கமான முடிவினை எடுக்காத காரணத்தினால் தமிழ்மக்களுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் மிக நீண்ட இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள காத்திருந்த இனத்துரோகிகளும் ஒட்டுக்குழுக்களும் அப்பாவி ஏழை எழிய மக்களை விலைபேசிவிட்டனர்கூட்டமைப்பு சாமி படங்கள்மீது சத்தியம் வாங்கிவிட்டு பணத்தையும் கொடுக்கின்றனர் சத்தியத்துக்கு கட்டுப்பட்ட தமிழன் சத்தியத்தை அடைவுவைக்க சத்தியம் செய்கின்றான் சாமி மீது இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எமது தலவர்கள் மக்களுடன் கலந்தாலோசித்திருக்கவேண்டும். மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் மௌனிகளார்கள் அதைச்சாதகமாக்கிக்கொண்டனர் இனத்துரோகிகள் கூட்டமைப்பு உங்களுக்கு ஒன்றையும் பெற்றுத்தராது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டார்கள் என்றெல்லாம் அப்பாவிகளை மூளைச்சலவை செய்து தமது பக்கம் ஈர்த்துக்கொள்ளத்தொடங்கியுள்ளனர் நீங்க எங்கட பக்கம் வாங்கோ வேலைதாறம் வீடுதாறம் காசுதாறம் என்று பேசி வியாபார அரசியலுக்குள் அவர்களை மெதுவாக கூட்டிச்செல்கின்றனர்.


பஞ்சமும் பசியும் தலைதூக்கியுள்ள இந்த தேசத்தில் வேலைவாய்புகள் என்பது மிக மிக முக்கியமான ஒன்று ஆனால் அதையே ஒரு தூண்டிலாக பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களையும் யுவதிகளையும் அதிலே சிக்கவைத்துவிடுகின்றனர் இனத்துரோகிகள் எங்கே தமது வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இனப்படுகொலையாளிக்கு ஆதரவாக செயற்படத்தொடங்கியுள்ளது இன்றைய இளைய சமுதாயம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யோசிக்கின்றோம் ஆராய்கின்றோம் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தலைக்குமேல் வந்தபிறகு நாங்கள் மைத்திரியைத்தான் ஆதரிக்கின்றோம் என்று தேர்தலுக்கு சரியாக ஒருவாரம் இருக்கின்ற நிலையிலே 30 திகதி அறிக்கை விடுகின்றனர் இது சரியானதா? எந்த விதத்தில் இது நியாயம்? பொதுவேட்பாளரை தாம் ஆதரிப்பதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.(சிங்களப்பிரஜைகளையும் இவர்கள் தான் வழிநடத்த வேண்டுமா) மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும் ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:


1. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார். அத்தோடு தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.


2. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன. த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 18வது சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததையிட்டு பெருமைகொள்கின்றது. அன்று 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துத் தவறு செய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.


3. ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைபொம்மையாக மாறிக்கிடக்கின்றது.


4. அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையம், அரசசேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார். இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது சுதந்தர ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே த.தே.கூ. பின் துல்லியமான கருத்தாகும்.


மேற்குறிப்பிடப்பட்ட காரணங்கள் பிரச்சினைகள் யாவும் சிங்களமக்களுக்கும் உள்ளது இதற்க்காகவே தாம் மைத்திரியை ஆதரிப்போம் என்று கூறுவது சரியா? மைத்தியினால் நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக சம்மந்தன் கூறியுள்ளார் ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்பதை எதிர்காலம் மட்டுமே தீர்மானிக்கும்
கொலைகாரனை வீழ்த்த கொள்ளைக்காறனை ஆதரிப்பது முறையாகுமா?
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ்மொழியில்க்கூட வெளியிடாதாவர் இந்த மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் என்ற வார்த்தையினைக்கூட பிரயோகிக்கமுடியாத இவரை இந்த நாட்டின் தலைவாக தேர்ந்தெடுக்கும்படி கூட்டமைப்பு சொல்வது சிறுபிள்ளைத்தனமான விடயம் என்றுதான் கூறவேண்டும் மகிந்தவை தோற்கடித்தே தீரவேண்டும் என்று தெற்கில் பல சக்திகள் ஒன்றினைந்திருப்பற்க்காண காரணம் வேறு அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை வெறும் பழி உனர்வை மட்டுமே மக்களுக்கு காரணமாக காட்டி மைத்திரியை ஆதரிப்போம் என்பது ஏற்றுகொள்ளக்கூடியதா?


தெற்கின் பேரினவாத சக்திகள் எல்லாமே ஒன்று சேர்ந்து மைத்திரிபக்கம் நிற்கும்போது அவர் வெற்றிபொற்றால் தமிழர்களின் நிலைதான் என்ன?
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த உடனேயே ஆட்டம்போடும் பேரினவாதிகள் இந்த பிசாசுக்க்கூட்டமும் அருகில் இருந்தால் என்னவெல்லாம் செய்யும்அதை விட மிக மிக முக்கியமான விடயம் யாதிகஹெல உறுமயவுடன் மைத்திரிபால செய்துகொண்ட ஒப்பந்தமே தமிழர்களின் சுயாட்சி என்ற கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதானே! அப்படியாயின் மைத்திரியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரிப்பதும் சுயாட்சி என்ற கோரிக்கையினை கைவிடுவதும் ஒன்றுதானே அப்படியானால் கூட்டமைப்பு இதுவரைகாலமும் முன்வைத்த கோரிக்கைகளை குழிதோண்டிப்புதைத்து விட்டதா?
எதிர்வரும் தேர்தலிலே யாரை ஆதரிப்பது என்பது சம்மந்தமாக கூட்டமைப்பின் வடமாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களிடம் கேட்டபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது. வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் மேலும் .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.


மேலும் சில மாகாணசபை உறுப்பினர்களிடம் கேட்டபோது:
தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த தவறிவிட்டதால் இந்த தேர்தலை புறக்கணிப்பதுதான் சரி என்று நினைக்கின்றோம் ஆனால் என்ன செய்வது கட்சியின் தலமை எடுத்த முடிவை எங்களால் மாற்றமுடியவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொள்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள்.மேலும் ஒரு உறுப்பினர் கூறுகின்றார் தான் தமிழரசு கட்சியின் தலைவரிடம் எங்கள் தரப்பில் இருந்து யாரோனும் ஒருவரை பொதுவேட்ப்பாளராக நிறுத்தவேண்டும் என்று கூறியபோது அதற்கு அவர் இல்லை அதை தலமை முடிவெடுக்கும் அவசரப்படவேனம் அப்படி கதைக்க வேனாம்
என்று எனது வாயை அடைத்துவிட்டார் ஆனால் இவர்கள் ஆலோசனை செய்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வேட்ப்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது இப்போது தேர்தலைப்புறக்கணிப்பதை விட வேறு வழியில்லை இதற்க்காக மன்னிப்புக்கேட்கவேண்டியவர்கள் கூட்டமைபின் தலைவர்களே என்று.


நேற்றய தினம் யாழில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் தான் எந்த ஒரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை என்று மைத்திரிபால கூறியிருந்தார் அப்படியானால் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில்த்தான் அவருக்கு வாக்களியுங்கள் என்று கூட்டமைப்பு கேரிக்கை விடுக்கின்றதா? சிங்களத்தலைவர்களின் நம்பகத்தன்மையினை 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவரீதியாக அறிந்துகொண்டுள்ளோம் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்வது விளக்கைப்பிடித்துக்கொண்டு சென்று கிணற்றிலே விழுவதற்கு சமன், ஒருவேளை இவர்கள் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தால்க்கூட அதுவும் பலனற்ற ஒன்றுதான் என்பதை யாரும் சொல்லத்தேவையில்லை வரலாறு வலுவாகச்சொல்கின்றது சிங்களதேசத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் நீர்மேல் எழுதப்படுவதைப்போலத்தான் என்பதை இவர்கள் உணரவில்லையா ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது வெறும் பித்தலாட்டம் அதை தமிழர்கள் கேட்பது பிச்சை அல்ல அதை சிங்கள மக்கள் விரும்பினால் மட்ட்டுமே தரமுடியும் என்று நினைப்பதற்கு சிங்களவர்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன தமிழ்மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டே தீரவேண்டும் அது சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் சாத்தியமாகாது எனவே எவ்வாறு கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கின்றது
மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதையெல்லாம் பற்றி ஆராய்ந்து செயற்படவேண்டும் மக்களிடம் ஒவ்வெருவராக கேட்டுத்தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வெரு தொகுதியிலும் இருக்கின்ற உறுப்பினர்களினூடாக அதனைத் தெரிந்துகொள்ளமுடியும் ஒவ்வெரு தொகுதி உறுப்பினர்களும் இவ்வாறான முடிவுகள் எடுக்கும்போது அழைக்கப்படவேண்டும் அவர்கள் ஒவ்வெருவரும் அந்த அந்த தொகுதி மக்கள் என்பதுதான் உன்மை. ஆனால் எம்மவர்கள் எப்போதுமே தலைமைதான் முடிவே எடுக்கும் நாங்கள் பேசுவதை வெளியில் சொல்லக்கூடாது அது அரசியல் தந்துரோபாயம் என்று கூறுவதையே வழக்கமாகக்கொண்டுள்ளனர் இது யாரையும் விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல இதுதான் உன்மை இவர்கள் அடிக்கடி இரகசியப்போச்சு என்று மூடிய அறைகளுக்குள் மட்டும் செய்வதற்கு இது விபச்சாரம் இல்லை அரசியல்ப்போராட்டம் அதிலே அனைவரது பங்களிப்பும் இருக்கவேண்டும் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கப்படவேண்டும் இது கூட்டமைப்பிடம் இல்லாத காரணத்தினாலேயே இன்று பொதுவேட்ப்பாளர் ஒருவரை தமிழர்தரப்பிலிருந்து நிறுத்த முடியவில்லை


இந்த தேர்தலுக்கான தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்ற முடிவை எடுக்கத்தெரியாதவர்களா நீங்கள் என்று நேற்றய தினம் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவரிடம் ஆதங்கத்தோடு கேட்டபோது அவர் கூறினார் ( நாங்கள் என்ன செய்ய எங்கட பேச்சு அங்க எடுபடாது அது மாவை அய்யாவும் சம்மந்தன் அய்யாவும் சுமந்திரனும்தான் முடிவெடுப்பினம் நாங்களும் கட்சிக்குள்ள முரண்பட்டுக்கொண்டுதான் இருக்கிறம் ) இவ்வாறு வேதனையோடு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில் ( நான் தொடக்கட்தில மாவை அய்யாட்ட சொன்னனான் எங்கட தரப்பில ஒரு ஆளை பெதுவேட்பாளராக நிறுத்துவம் அப்புடி செய்தா தமிழ்மக்களிண்ட வாக்குகள் சிதறாமல் ஒண்டுசேரும் அதால பல சாதகமான விடயங்கள் எங்களுக்கு கிடைக்கும் எண்டு அதுக்கு அவர் அப்புடியெல்லாம் அவசரப்பட்டு கதைக்ககூடாது அது கட்சீன்ர தலைமை முடிவெடுக்கும் எண்றார் அதோட நான் ஒதுங்கிட்டன் என்று அவர் மிக மிக மன வேதனையுடன் கூறினார்.


உன்மையிலே முடிவெடுக்கும் தகுதியானது ஒவ்வெரு தொகுதி உறுப்பினர்களுக்கும் உண்டு தனது தொகுதி மக்களின் விருப்பம் என்னவோ அதனைத்தான் அந்த தொகுதி உறுப்பினகள் வெளிப்படுத்த முடியும் அதனை விடுத்து வெறும் தலைமைதான் முடிவெடுக்கும் என்றால் அது சர்வாதிகாரப்போக்கினை கொண்டதாக அமையும் தலைமை எடுக்கும் முடுவு சரியாகவும் நியாயமானதுமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஆனால் எப்போதுமே தலைமை எடுக்கும் முடிவுதான் சரியானது என்று நினைத்தால் அது மடமை. கடந்தகாலங்களை வைத்து ஆராயும்போது ஒரு தீர்க்கமான முடிவு எடுக்ககூடிய ஒரு தலைமை இப்போது நமக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படியான தலமை இருந்திருந்தால் இன்று தேர்தல் சம்மந்தமாக இன்று ஏற்பட்டுள்ள குழப்ப நிலை உருவாகியிருக்காது உன்மையினைக்கூறப்போனால் இன்று தடுமாறிக்கொண்டிருக்கும் தலமைகளினால் தடம்புரண்டு செல்லுமா தமிழ்த்தேசியம் என்ற பீதி தமிழர்களிடையே ஆரம்பிக்கத்தொடங்குகின்றது.


இன்றைய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தாம் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலே எந்தக்கருத்தை வேண்டுமானாலும் மக்களிடத்தே முன்வைக்கலாம் தாம் எதைச்செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனமானது. படைத்தவன் வந்து சொன்னால்க்கூட சில கோரிக்கைகளை மக்கள் கைவிடமாட்டார்கள் என்ப்தை இவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை .இலட்சியத்தில் இருந்து தான் விலகிவிட்டால் தனது பாதுகாவலனே தன்னை சுட்டுக்கொல்லலாம் என்று கூறிய ஒரு தலைவனால் வழிநடத்தப்பட்ட மக்கள் .வளர்க்கப்பட்ட சந்ததிகள் ஒருபோது சில கோரிக்கைகளை விட்டு விலகிச்செல்ல மாட்டார்கள் இதனை தமிழர்தரப்பு எப்போதுமே நினைவில் வைத்திருக்கவேண்டும். மறந்தால் அவர்கள் இருக்கும் அரசியல் நாற்காலிகளில் இருந்து தூக்கிவீசப்படுவார்கள்.


இந்த இடத்தில் கடந்த ஜானாதிபதி தேர்தலிலே கூட்டமைப்பு (பென்சேகா) கொன்றவனுக்கு ஆதரவு கொடுப்பதா ( மகிந்தா) கொல்லச்சொன்னவனுக்கு ஆதரவு கொடுப்பதாஎன்ற குழப்பத்தில் இறுதியில் களத்தில் பல்லாயிரம் மக்களைப்படுகொலை செய்த கொலைவெறி இராணுவத்தளபதியான பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்தனர் மகிந்தாவை பழிதீர்ப்பதாக கூறி பழி உணர்வை மட்டும் மையமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது. இதுதான் தலைவிதியா என்று அப்போது நொந்துகொள்ள முடிந்ததேயன்றி தமிழர்களால் வேறு ஏதும் செய்யமுடியவில்லை கொடியபோரில் இருந்து மீண்டு வந்திருதவர்களால் எதைப்பற்றியும் அப்போது சிந்திக்கமுடியவில்லை கூட்டமைப்பு சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திர்காக கண்ணைமூடிக்கொண்ண்டு தம் பிள்ளைகளைக்கொலை செய்த தம் மக்களைக்கொன்று புதைத்த அந்தக்கொடியவனுக்கு வாக்களித்தோம் அதைவிட மிக வேதனையான வெட்கப்படவேண்டிய ஒரு செயலை கூட்டமைப்பின் தலைவர் அப்போது செய்திருந்தார் அதாவது நடைபெற்ற பிரச்சாரத்தின்போது பொன்சேகாவுக்கு ஆதரவாக ரனிலுடன் கைசேர்த்து சிங்கக்கொடியைத் தூக்கி ஆட்டியபடி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கொக்கரித்தார் ஆனால் அதனை மக்கள் விரும்புவார்களா ஏற்றுக்கொள்வார்களா என்பதைப்பற்றியெல்லாம் அவர் சிந்திக்கவில்லை.ஒருவேளை ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதும் ஒற்றையாட்சிக்குள் வாழவேண்டும் என்பதும் அவரது தனிப்பட்ட விருப்பாக இருக்கலாம் ஆனால் அதனை சாதாரண ஒரு பொதுமகன் செய்திருந்தால் அது அவரது விருப்பமாக வெளியாரின் பார்வையில் பட்டிருக்கும் ஆனால் ஒரு மக்கள் சமூகத்தின் பிரதிநிதி அவ்வாறு செய்யும்போது அது அந்த ஒட்டுமொத்த மக்களின் விருப்பாகத்தான் பார்க்கப்படும்.


எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் ஆதரிக்கப்போவது யாரை மன்னிக்கமுடியாத பாவத்தையும் பழியையும் செய்த மகிந்தாவையா அல்லது ஆட்சிக்கு வருவதர்கு முன்னே தென்னிலங்கையின் பல தீவிரவாத சக்திகளுடன் கைசேர்த்து நிக்கு மைத்திரிபக்கமா அல்லது இருவரையும் நிராகரித்துவிட்டு தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்துவதா என்ற முடிவினை ஆரம்பத்தில் எடுத்திருக்க வேண்டும் ஆனால் எமது தலைமைகள் கலந்து ஆலோசிக்கின்றோம் பேச்சுவார்த்தை செய்துகொண்டிருக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால் அவகாசம் முடிந்து விட்டது. அதனால் இன்று தமிழர்தரப்பில் இருந்து பொதுவேட்ப்பாளரை நிறுத்துவதென்பது முடியாத காரியம் இந்த நிலையிலே இன்று இருப்பது இரண்டே வழி ஒன்று
தேர்தலை நிராகரிப்பது அல்லது யாரோனும் ஒருவரை ஆதரிப்பது ஆனால் யாரை ஆதரிப்பது அதனால் என்ன நன்மை தீமைகள் உண்டாகும் என்பதையெல்லாம் மக்களுக்குச்சொல்லவேண்டியவர்கள் நீண்டகால மௌனத்திற்கு பின்பு மைத்திரியை ஆதரிப்போம் என்று கூறினார்களே தவிர அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை தமிழர்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பதை தமிழர்களுக்கு தெளிவுபடுத்தவில்லை.
வெட்டியவன் வீட்டு வாசலில் நிற்கும் வாழையா தமிழினம்?


ஆனால் ஒரு வேடிக்கையான வேதனையான விடயம் தமது நாட்டின் மக்கள் படுகொலைசெய்யப்பட்டதற்க்கு காரணம் நாங்களே! என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையோடு சொல்லிக்கொள்கின்ற இரண்டுதரப்பினரும் உன்னை விட அதிகம் கொன்றவன் நான் என்று ஒருவரும் இல்லை இல்லை தமிழ தேசத்தை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தவன் நான் என்று மற்றயவனும் போட்டிபோட்டுக்கொள்கின்றனர் இதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். ஆனால் அதனை தமிழர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் போர் வெற்றியாளன் நானே என்று கூறுவதும் உங்கள் பிள்ளைகளை படுகொலை செய்தவன் நானே என்று கூறுவதும் தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் ஒன்றுதானே அப்படியாயின் எங்கள் சொந்தங்களைக்கொலைசெய்த இம் இனத்தை அழித்த இரட்டைக்கொளையாளிகளுமே எமக்கு வேண்டாதவர்களே ஆனால் எந்த அடிப்படையிலே கூட்டமைப்பு மைத்திரிக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுக்கின்றது தமிழர்களிடம்.


ஈவு இரக்கம் இன்றி இத்தனையாயிரம் மக்களையும் படுகொலைசெய்து பல்லாயிரம் கோடிபெறுமதியான சொத்துக்களைச்சூறையாடியும் கோவில் போல இருந்த எமது வீடுகளையும் அழித்தவர்கள் அதற்க்காக எந்த ஒரு சந்தர்ப்பத்தில்க்கூட மன்னிப்புக்கேட்டது கிடையாது. அதைவிட கூட்டமைப்பு ஆதரிப்போம் என்று கூறுகின்ற மைத்திரிபால தெற்கிலே தனது பிரச்சார மேடகைளில் ஆரம்பத்தில் போர்வெற்றியாளர்களுக்கும் போரிலே உயிர்த்தியாகம் செய்த படையினருக்கும் அஞ்சலி செலுத்தித்தானே ஆரம்பிக்கிறார்கள் ,இதையே ஒரிரு வசனத்தை மாற்றி போரிலே கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதாக யாழ் வந்த எதிரணியினர் கூறினால் இந்த நாடு இரண்டக பிரிந்துவிடுமா?? அல்லது இதுவரைகாலமும் போரால் ஏற்பட்ட இழப்புகளுக்கு வருத்தம்கூட தெரிவிக்கமுடியாத
இனவாதிகளை ஆட்சிபீடம் ஏற்ற கங்கணம் கட்டி நிற்பது முறையாகுமா?


எனவே இந்தத்தேர்தலைப்புறக்கனிப்போம் இது சிங்களதேசத்தின் தேர்தல் என்பதை தேர்தல் விஞ்ஞாபனமே சுட்டிக்காட்டுகின்றது எனவே ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? தமிழனுக்கு லாபம் ஏதும் இல்லை? ஒவ்வெருமுறையும் புதிதாக ஆட்சிபீடம் ஏறும் சிங்களப்பேரினவாதிகள் புதிதாக தமிழர்களுக்கு பல பிரச்சினைகளையும் இன்னல்களையும் மட்டும்தான் தருகின்றார்களே தவிர நன்மைகளை அல்ல.எனவே தேர்தலை அடியோடு புறக்கணிப்போம் நாங்கள் இந்த் தேசத்திலே வெறும் வாக்கு இயந்திரங்களாக இருக்க விரும்பவில்லை என்பதை சர்வதேசம் எங்கும் சொல்லுவோம் ஒவ்வெருமுறையும் வாக்களித்துவிட்டு தோற்றுப்போகும் நாங்கள் இம்முறை வாக்களிக்காமல் வெற்றிபெறும் வழிவகைகளைத்தேடுவோம் தன்மானத்தமிழினமே விழித்தெழு….


இன்று ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தினை இழந்துவிட்டு நிற்கின்றோம் இன்னொருமுறை இப்படியான தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது அதற்காக மக்கள் விழிப்படைய வேண்டும் இன்று தமிழர்தரப்பிலிருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தமுடியாமல் போனதற்கான முழுப்பெறுப்பும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக மனட்சாட்சி உள்ளவர்கள் மக்களிடம்
முடிந்தால் மன்னிப்பு கேட்கவேண்டும்
யாழிலிருந்து
-கதிரவன்-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com