Contact us at: sooddram@gmail.com

 

தோனிக்கு ஒரு சராசரி ரசிகனின் கடிதம்

(ஸ்ரீனிவாச ராமானுஜம் )

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனிக்கு ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் கடிதம்.
அன்புள்ள தோனி,
நான் விளையாட்டைப் பற்றி அலசும் பத்திரிகையாளன் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் விளையாட்டை அவ்வளவாக பார்த்தவன் அல்ல. கங்குலி, அசாருதீன் ஆகியோருடன் உங்களை ஒப்பிட்டுப் பேசவும் எனக்குத் தெரியாது.


ஆனால், உங்களைப் பற்றி எழுத இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் தலைமையேற்ற இந்திய அணி அயல் நாட்டில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பார்க்க அதிகாலை எழுந்து டிவி முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் ஆட்டத்தை முடிக்கும் விதத்தைப் பார்ப்பதற்காகவே நிறைய செலவழித்து, பலரிடம் டிக்கெட்டுகளுக்காக கெஞ்சியுள்ளேன். உங்களது இரண்டாவது வீடான சென்னையில், பறக்கும் ரயிலில் தொங்கிக் கொண்டு, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களின் கர்ஜனையை கேட்க விரைந்துள்ளேன்.


இந்த அனுபவங்களால் தான், நீங்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது என்ற உங்கள் முடிவு துணிவானது எனச் சொல்ல விரும்புகிறேன். கடந்த காலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் இருந்துள்ளார்கள். நான் தனியொருவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. ஆனால் பலர் தங்கள் இருப்பை நீட்டித்து காலம் கடந்து அணியில் இருந்துள்ளனர். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. போதுமான காலம் இருந்து, செய்ய முடிந்தவற்றை செய்தாகிவிட்டது என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. அதான் நீங்கள் விலகிவிட்டீர்கள். இந்த ஓய்வு அறிவிப்பு உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும். என்னைப் போன்ற ரசிகர்கள் அந்த முடிவில் தலையிடவிடாமல் செய்தது கடுமையாக இருந்திருக்கும்.


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த ஃபார்மை விராட் கோலி திரும்பப் பெற்று தயாராகி வரும் வேளையில், கிரிக்கெட்டின் முக்கிய வடிவமான டெஸ்ட் போட்டியிலிருந்து நீங்கள் ஓய்வினை அறிவித்திருப்பது புத்திசாலித்தனமானதாகத் தெரிகிறது. கண்டிப்பாக தொடரின் நடுவில் நீங்கள் ஓய்வு அறிவித்ததால், விமர்சகர்கள் உங்களை தாக்கக் கூடும். ஆனால் கோலி தயாராக இருப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று உங்கள் ரசிகர்களான எங்களுக்கு தெரியும், இதுதான் உங்கள் சிறப்பு, கேப்டன். எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். 2007-ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கடைசி ஓவரை வீச ஜோகிந்தர் சர்மாதான் சரியான ஆள் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. யாரும் மறக்க முடியாத, தரம்ஷாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் இர்ஃபான் பதானின் ஓவரில் அடித்து வெற்றி பெற முடியும் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது, இலங்கைக்கு எதிரான கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீங்கள் வழக்கமாக ஆடும் நிலைக்கு மாறாக, முன்னரே வந்து ஆடினால் வெற்றி பெறலாம் என உங்களுக்குத் தெரிந்துள்ளது.

மைதானத்தில் ரசிகர்க் கூட்டத்தின் நடுவிலிருந்து உங்களைப் பார்க்கும் போது, சில சமயம் உங்கள் செயல்கள் எங்களுக்குப் புரிகிறது. நடப்பதை யூகிக்கும் வகையில் உங்களுக்கு ஏதோ ஒரு முன்னுணர்வு இருப்பது போலத் தெரிகிறது. உங்கள் ஃபீல்டிங் மாற்றங்கள் அப்படித்தான் தெரிகின்றன. ஒரு ஐபிஎல் போட்டியில் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. பந்துவீச்சாளருக்கு அருகில் சென்று, ஏதோ பேசிவிட்டு, ஒரு வீரரை இடம் மாற்றி நிற்க வைத்தீர்கள். அந்த காலத்து ஆட்கள் அதைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே விக்கெட் விழுந்தது.
ஒரு பத்திரிகையாள ரசிகனாக உங்களிடம் சில வார்த்தைகள் பேசச் சொல்லி அணுகியபோது, "மன்னிக்கவும் நண்பா. நீங்கள் அணியின் மேனஜரிடம் தான் பேச வேண்டும்" என்றீர்கள். எவரும் அணுகலாம் என்ற நிலையில் நீங்கள் இருப்பது வெகுவாக ஈர்த்தது. நாம் நம் நண்பர்களிடம் விளையாடுவதைப் போல, நீங்கள் அஸ்வினுக்குப் பின்னால் சென்று மெதுவாக அவரை பயமுறுத்திய விதத்தில் உங்கள் எளிமை பிரமிக்க வைத்தது.

ஒரு வேளை சிறு நகரத்திலிருந்து வந்ததால் உங்களிடம் இந்த குணங்கள் இருக்கின்றன என நினைக்கிறேன். சர்வதேச அளவில் புகழ், பணம், மரியாதை வந்தும் அந்த குணங்களை நீங்கள் இழக்கவில்லை. இல்லையென்றால் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு தொடரின் நடுவில், வாகன நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் நீங்கள் ஏன் பைக் ஓட்ட விரும்ப வேண்டும்? இல்லையென்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் பைக்கில் நகரத்தைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டு, சக்கரம் பழுதானதால் ஒரு நெடுஞ்சாலையில் காத்திருக்க வேண்டும்?
உங்களிடம் இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் ரசிகர்களாகிய எங்களுக்குப் பிடித்தது. அவை தான் தோனி என்ற மனிதனை, தோனி என்ற கிரிக்கெட் வீரனை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறது.
அன்புடன்

ஒரு ரசிகன்
பி.கு - வருடம் முடிய சில நாட்கள் மட்டுமே இருந்த போது, நீங்கள் முடிவெடுத்த தருணமும், அது எதிர்பாராத வகையில் எங்களை வந்து சேர்ந்த விதமும். எங்களுக்குப் பிடித்துள்ளது. வெள்ளை உடையை விடுத்து வண்ண உடையை அணியுங்கள் தோனி. உங்களுக்காக விசில் அடிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com