Contact us at: sooddram@gmail.com

 

ரவூப் ஹகீம் இடம் இருப்பது

சாணக்கியமா? அல்லது சரணாகதியா?

இன்று தம்பி ரவூப் ஹகீம் அவர்களுடன் மு.கா பாராளுமன்ற , மாகாணசபை உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவர் " இந்தவெற்றி TNA யும் SLMC யும் கொண்டுவந்ததல்ல , இது சிங்கள பெரும்பான்மை வாக்காளர்களினால் விளைந்தது என்று சம்பிக்க ரணவக்க சொல்கிறார் , இதனை நீங்கள் கண்டிக்க வேண்டும் " என்றார் . அப்போது புன்முறுவலுடன் ஹகீம் இவ்வாறு சொன்னார் : "சம்பிக்க சொன்னதில் எந்தத் தவறுமே இல்லை .இந்த வெற்றிக்கு நாம் வெளிப்படையாக உரிமை கொண்டாடக் கூடாது .ஹெல உறுமயவின் பங்கு இவ் வெற்றியில் பாரிய செல்வாக்கு செலுத்தி உள்ளதை மறைக்க முடியாது , மகிந்த அரசின் ஊழல்கள் , அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மற்ற எவர் சொன்னாலும் சிங்கள மக்கள் கணக்கில் எடுத்திருக்க மாட்டார்கள் . அந்த மக்களுக்குள் செல்வாக்குள்ள அவர்களின் ஒரு முக்கிய அரசியல் கட்சியான ஹெல உறுமய அதனைச் சொன்னதனால் மட்டுமே உண்மையை உண்மை என்று விளங்கி மஹிந்தைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் போல 70% -80 % மைத்திரீக்கு வாக்களிக்காது விட்டாலும் , சிங்கள பெரும்பான்மை கொண்ட மஹிந்த வெற்றிபெற்ற தொகுதிகளில் மஹிந்தைக்கும் , மைத்திரீக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தின் இடைவெளியை ஐ தே கா , ஹெல உறுமய , ஜே வீ பீ போன்ற கட்சிகள் கணிசமான அளவு குறைத்திருக்காவிடின் வெற்றி கை மாறிப் போய் இருக்கும் ."
 

ஹகீம் இன்னுமொரு விடயத்தையும் இறுக்கமாக குறிப்பிட்டார். "ஒரு மோசமான இனவாதச் சூழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் . எரிகிற நெருப்பில் , எண்ணெய் வார்க்கிற வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து நம் வாய்களை கட்டி வைத்தாக வேண்டும். நம்மால் தான் "யுத்த வெற்றியின் முடிசூடா மன்னன்" மண் கவ்வினான் என்று பெரும்பான்மை இனத்தவர்க்கு நினைக்க இடங் கொடுப்பது நம்மீது அவர்களுக்கு வெறுப்பை வளர்த்து , பழிவாங்கும் உணர்வை அவர்களிடம் விதைத்துவிடும் .ஹெல உறுமய போன்றவர்களுடன் நாம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதுதான் இனவாதம் தலை தூக்காமல் தடுப்பதற்கான சரியான வழியாகும் , பாருங்கள் , நமது கரையோர மாவட்ட கோரிக்கையை மஹிந்தவின் அணியினர் இனவாதமாக்கி சிங்களவர்களின் வாக்குகளை சூறையாட எத்தனித்தபோது சம்பிகவும் , ரத்தன தேரருந்தான் அதனை சிங்கள மக்களுக்கு விளக்கி எமது கோரிக்கையை நியாயப் படுத்தினார்கள் .அந்தப் புரிந்துணர்வை மூலதனமாகக் கொண்டு நாம் கரையோர அரச அதிபரை பெற்றுக்கொள்ள முயலவேண்டுமே தவிர , மீண்டும் அவர்களை எதிரிகளின் பாசறைக்குள் தள்ளிவிடக் கூடாது."
 

மேலும் கூறுகையில், "எதிர் காலம் நாம் மிகவும் சாணக்கியமாக நடந்துகொண்டு புரிந்துணர்வை வலுப்படித்திக் கொள்ள வேண்டிய காலமாகும் .இந்த வெற்றியில் அளவுக்கு மிஞ்சிய உரிமை கொண்டாடுவதை தவிர்த்துக்கொண்டு அதற்க்காக நாம்
பொறுமையுடன் முன்னேரவேண்டுமே தவிர , சில்லறை விசயங்களுக்காக சிண்டு முடிந்து கொண்டு சண்டைக்கு போகக்கூடாது " என்றும் சொன்னார் .
ஆம்
இது
நாட்டின் வெற்றி ,
இது
நமது வெற்றி .
நாம் என்பது
நாம் தான் .
அது
சிங்கள , தமிழ்
முஸ்லிம் , பெர்கர் ,மலே .......
என்கிற இனங்களைக் கடந்தது.

இலங்கையன் என்கிற
இரத்தத்தில் இணைந்தது .
வாருங்கள் !
பாற்சோறு சமைத்து
பனம் பாணி ஊற்றி
பாயில் அமர்ந்து
சஹனில் சாப்பிடுவோம் !
நமோ நமோ தாயே
நம் ஸ்ரீ லங்கா

(Rauf Hazeer)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com