|
||||
|
இயக்குனர் ஷங்கரின்
"ஐ" யும் திருநங்கைகளும் ஐ திரைப்படம் வெளியாகி என்னுடைய சக திருநங்கை சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் போராடியும் வருவதை கண்டு அந்த திரைபடத்தில் அப்படி என்ன திருநங்கைகளுக்கு அவமானம் தேடி தரும் அல்லது மனம் புண்படும் விடையம் என்ன உள்ளது என்பதை கண்டறிய திரைப்படம் காண சென்றேன். இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னணி இயக்குனர் என்கிற அடையாளத்தோடு சமூக அக்கறை மிக்க கருத்தாக்கங்களை திரையில் வெளிபடுத்தியவர் என்கிற நினைப்பு என் மனதில் உள்ளது. அவருடைய இந்தியன், அந்நியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் என்னை இன்றளவும் கவர்ந்த படங்கள். திருநங்கைகளை காலம் காலாமாய் திரைப்படங்களில் அவமானதுக்கூரிய பொருளாக சித்தரித்து பல படங்கள் வந்தாலும் ஒரு சில சொற்ப படங்கள் மட்டுமே கண்ணியாமாக வெளிக்காட்டியுள்ளது. ஷங்கரின் ஐ படம் வெளிபடுத்திய பல விஷயங்கள் என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாகியது. 1. ஐ திரைபடத்தில் திருநங்கையை அறிமுகப்படுத்திய முதல் காட்சியே கிண்டலுடன் ஆரம்பித்தது. "ஊரோரம் புளியமரம்" என்ற பாடலுடன் கதாநாயகனும் அவன் நண்பனும் சேர்ந்து கிண்டல் செய்வார்கள். இதில் வரும் திருநங்கை பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்டாக காண்பித்தாலும் ஏன் இந்த கிண்டல் காட்சி பதிய வேண்டும். ஆக சமுதாயத்தில் எத்தகைய உயர் நிலையில் திருநங்கை இருந்தாலும் கேலி கிண்டலுக்கு உகுந்தவர்கள் தான் என்பதை மெய்பிப்பது போல இந்த காட்சி உணர்த்துகிறது. 2. திருநங்கை கதாபாத்திரம் ஏதோ உடல் பசிக்கு மிகவும் அலைவது போலவும் விரசமாக பெண்களே முகம் சுளிக்கும் வகையில் காட்சிகள் அமைத்தது வேதனையானது. உடல் பசி அனைவருக்கும் இயற்கையாக உள்ள தேவை. ஏதோ எங்களுக்கு மட்டும் தான் அதிகபடியான தேவையாக சித்தரிப்பது தேவையற்ற விஷயம். 3. திருநங்கையின் காதலை வெளிப்படுத்தி அதை மிகவும் அருவருக்க விஷயம் போல கதாநாயகன் வெளிபடுத்துவதும் " என்ன எழவுடா, என்ன கருமாந்திரம்.. ஏன் எச்சை பண்ற" (பொம்பளைங்க கொடுத்தா முத்தம், நாங்க கொடுத்த அது எட்சையா) இது போன்ற வசனங்களுடன் அடுத்தடுத்து காட்சி அமைத்து எங்களின் காதல் உணர்வை காயபடுத்தியது மிகவும் வேதனையான விஷயம். இது போன்ற காட்சிகளை காணும் இளைஞர்கள் மற்றும் எங்களின் ஆண் நண்பர்கள் எங்களின் காதல் உணர்வை எவ்வாறு மதிப்பீடு செய்வார்கள் என்பதை உங்களின் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன். 4. திருநங்கை அட்மிட் ஆன வார்டு எண் ஏன் 9 ஆக காண்பிக்க வேண்டும்...? ஷங்கருக்கு வேற எண் தெரியாதா ? சரி இது வெறும் திரை கதாபாத்திரம் தானே, ஏன் இதற்கு இத்தனை ஆர்பாட்டம்.. படம் என்பது பொழுதுபோக்கு தானே.. இதை ஏன் சீரியஸ் ஆக எடுக்க வேண்டும் என்று நண்பர்கள் நினைப்பது தெரிகிறது. திரையில் உள்ளதை பார்த்து தான் திருநங்கைகளை பற்றி எந்த புரிதல் இல்லாத ஆசாமிகள் ஓ இவங்க இப்படி தான் போல என்று நினைப்புக்கு வருவது எளிதான ஒன்று. இந்த நினைப்பு எங்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்தி எங்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கும். உடனே ட்ரைன்ல பிச்சை எடுப்பது, கடையில் காசு கேட்பது, பாலியல் தொழில் என்று திருநங்கைகளை ஒப்பிட்டு குறைகூறி சமாளிக்க பார்க்கும் நபர்களே ஒரு நிமிடம் சமூகத்தில் நிலவும் சரிவர வாழ்வு நிலை வாய்ப்பு கிடைக்காத திருநங்கைகள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை சமூக அக்கறையுடன் உணருங்கள். ஷங்கர் கனமான திருநங்கை கதாபாத்திரம் அமைத்து கடைசியில் படம் பார்க்க வரும் எங்களை வேதனைக்கு ஆளாக்கிவிட்டார் என்பதே உண்மை. அன்று பொழுதோட கோழி என்று கூவியவர்கள் இன்று ஊரோரம் புளியமரம் பாடிய மாற்றத்தை தவிர இவர்களின் திரை அறிவு வளர்ச்சி கேவலமாக தான் போய்கொண்டு இருக்கிறது. (ஆயிஷாபாரூக்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |