|
||||
|
தீபிகாவின் கதை அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்... (Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi) ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந்த இரு வேறு அம்சங்களை எப்படி ஒன்றிணைத்து வெற்றி கண்டார் என்பதை பற்றி பேசுகிறார்... “2014ன் ஆரம்ப நாட்களில், எல்லோரும் என்னை என் வெற்றிக்காக பாராட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் வித்தியாசமான உணர்வுடன் கண் விழித்தேன். அதற்கு முன்தினம் சோர்வினால் மயக்கம் போட்டிருந்தேன். அதிலிருந்து எல்லாமே தலைகீழாக ஆரம்பித்து விட்டது. ஒரு வினோதமான வெற்றிடம் வயிற்றில் உண்டானது போன்ற உணர்வு. முதலில் நான் அதை ஸ்ட்ரெஸ் என்றுதான் நினைத்தேன். அதனால் என் கவனத்தை திசை திருப்ப வேலையில் கவனம் செலுத்தினேன். மற்றவர்கள் சுற்றி இருக்கும் மாதிரி பார்த்துக்கொண்டேன். கொஞ்ச காலம் உதவியது. ஆனால் அந்த முள் போன்ற உணர்ச்சி போகவேயில்லை. மூச்சு வாங்க ஆரம்பித்தது, கவனம் செலுத்த முடியவில்லை, அடிக்கடி அழ ஆரம்பித்தேன். நாளாக நாளாக மிகவும் மோசமடைய தொடங்கியது. என் பெற்றோர் என்னை பார்க்க வரும் போது, அவர்கள் முன் தைரியமாக காட்டிக்கொண்டேன். ஏனென்றால் நான் தனியே வாழ்கிறேன், நீண்ட நேரம் உழைக்கிறேன் என்பதால் என்னைப்பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்வார்கள். அதன் பின், ஒரு நாள், என் அம்மா உஜ்ஜாலா படுகோனேவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த அவர்கள், பிரச்சினையின் ஆணிவேரை கண்டுப்பிடிக்க, அவர்களின் தோழி அன்னா சண்டி (Anna Chandy), என்ற மனோதத்துவ நிபுணரை தொடர்புக்கொண்டார்கள். ஒவ்வொரு காலையும் கண் விழிப்பதும், ஹாப்பி நியூ இயர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு படம் பிடிப்பதும், மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. இறுதியில், ஒரு நாள் நான் அன்னா ஆண்ட்டியை தொடர்புக்கொண்டேன். அவர்கள் மும்பையில் இருந்து பெங்களுரு வந்தார்கள். நான் அவர்களிடம் மனம் விட்டு பேசினேன். எனக்கு மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். என்னை மாத்திரை எடுக்க சொன்னபோது முதலில் நான் ஒத்துக்கொள்ளவில்லை. பேசினால் போதும் என்று நினைத்தேன். அதன் பின், ஷ்யாம் பாட்(Shyam Bhatt) என்ற மற்றுமொரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று பார்த்தேன். சில நாட்களில் எல்லாம் சரியாக இருப்பது போல தோன்றும். ஆனால் சில நாட்களில் உணர்வுகள் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இறுதியில் என் நிலையை உணர்ந்தேன். கவுன்சலிங் உதவியது – ஆனால் ஓரளவுக்குத்தான். அதன் பின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்பொழுது நன்றாகயிருக்கிறேன். ஹாப்பி நியூ இயர் படத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த காலக்கட்டத்தில்தான் நடைப்பெற்றன. ஆனால் என் அடுத்த படமான ஷூஜீத் சிர்கார்(Shoojit Sircar) நடிக்கும் முன், நான் மனதளவிலும் உடலளவிலும் நன்றாக இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டேன்.என் குடும்பத்துடன் நேரம் செலவிட்டப்பின் நன்றாக உணர்ந்தேன். ஆனால் நான் மும்பை திரும்பிய உடன் என் தோழி மன அழுத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்டதை அறிந்தேன். அது எனக்கு பேரிடியாகயிருந்தது. என் தனிப்பட்ட அனுபவம் மற்றும் என் தோழியின் இழப்பு என்னை அதிகம் பேசப்படாத இந்த பிரச்சினையைப் பற்றி பேச தூண்டியது. மன அழுத்தத்தை பற்றி பேசுவது ஒரு அவமானமாக, ஒதுக்கி தள்ளப்பட வேண்டிய விஷயமாக இங்கே கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் நான்கில் ஒருவருக்கு மன அழுத்தம், மனப்பதட்டம் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் மனஅழுத்தம்அடுத்த சில வருடங்களில் மிகப்பெரிய நோயாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. நாம் அனைத்து வகையான உபாதைகளை பற்றி பேசுகிறோம் ஆனால் இது ஒரு மிக மோசமான உயிர்கொல்லி நோய் என்பதை மறக்கிறோம். வாழ்க்கை உட்பட எதுவும் அர்த்தமாவதில்லை இந்த நோய் வந்தப்பின். இதை கடந்து வந்தது என்னை வலிமையானவளாக மாற்றியிருக்கிறது. எனக்கு என் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர வைத்திருக்கிறது. இந்த வியாதியை ஒப்புக்கொண்டு, அதை பற்றி பேசுவது எனக்கு ஒரு விடுதலை அளிக்கின்றது. இன்று நான் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய உதாரணம், மற்றவர்களுக்கும் இது போன்ற உதவியை அணுக உதவும் என்று நம்புகிறேன். சில சமயங்களில், எனக்கு இந்த வியாதி வந்தவர்கள் சற்றே தங்களின் பிரச்சினையை பற்றி பேச விரும்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் அறிவுரைகளை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் நலம் விரும்பிகள் சொல்லும்,” கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும்!” என்பது போன்ற அறிவுரைகள் உதவுவதில்லை. கவலைப்படுவதென்பது வேறு, மன அழுத்தத்தில் இருப்பதென்பது வேறு. பல சமயங்களில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அப்படி தெரிவதில்லை. ஆனால் கவலையில் இருப்பவர்களை பார்த்தாலே தெரிந்து விடும். நான் இதை சொன்னவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி, “ உனக்கு எப்படி மன அழுத்தம் வரும்? உனக்கு எல்லாம் உள்ளது. நீ நம்பர் ஒன் நடிகை, பெரிய வீடு, கார், படங்கள்... இதற்குமேல் என்ன வேண்டும்?”... இது உங்களிடம் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை பற்றிய விஷயமில்லை. உடலின் ஆரோக்கியத்தை போல மனதின் ஆரோக்கியமும் சம அளவில் முக்கியம். நான் மக்கள் கஷ்டப்படுவதை பார்கிறேன், அவர்களின் குடும்பத்தினர் அதைப் பற்றிய ஒரு அவமான உணர்ச்சி கொள்கின்றனர், ஆனால் அது உதவப்போவதில்லை. அவர்களுக்கு புரிதலும் ஆறுதலும் வேண்டும். நான் இப்பொழுது மன அழுத்தம் மற்றும் மனப்பதட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களுக்கு உதவவும் முயற்சித்து வருகிறேன். இதற்கான ஒரு திட்டத்தை என் டீம் உருவாக்கி வருகின்றது, அது விரைவில் வெளியிடப்படும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |