Contact us at: sooddram@gmail.com

 

யாருடனும் பேசமுடியாதவர்கள்!

ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி, அதன்படி புதிய அரசாங்கத்தையும் தாங்களே கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொண்டுவந்த அரசாங்கத்துடன் தீர்வுப் பேச்சிற்கான முயற்சிகளைச் செய்வதாக ஏதும் செய்திகளைக் காணோம். இந்த அரசும் சரிவராது, அகிம்சைப் போராட்டம் இந்த அரசுக்கெதிராகவும் வெடிக்கும் என்று ஒற்றைவிரலை உயர்த்தி முழங்கிய மாவையாரின் பிரகடனம்தான் வந்திருக்கிறது. இந்தமுறை காலக்கெடு எதையும் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாமல் போராட்டத் திகதியை திறந்தபடி விட்டிருக்கிறார்.

அதுதவிர, புதிய அரசிடம் த.தே.கூட்டமைப்பு வைத்த இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவி வழங்கக் கூடாது மற்றையது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பிற்கே தரவேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி யாருக்கு என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பது ஜனாதிபதிக்கு தர்மசங்கடமானது. அவரிடம் போய் பதவிக்கு கெஞ்சும் அளவிற்கு முஸ்லிம்களுடனான உறவில் விரிசலை வளர்த்து வைத்திருக்கிறார்கள் இந்தத் தமிழரசுத் தலைவர்கள்.

70களுக்கு முன்பெல்லாம் தமிழர்களுக்கும் தங்களுக்கும் ஒரே தலைமைதான் என்று தேர்தல்களில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து வந்தவர்கள்தான் முஸ்லிம்கள். முஸ்லிம் காங்கிரசைத் தொடங்கிய தலைவர் அஷ்ரப் உட்பட பல முஸ்லிம் தலைவர்களும் தமிழரசுக் கட்சியிலேயே இருந்தவர்கள். தமிழ்த் தலைமை நடந்துகொண்ட விதம்தான் முஸலிம்களைத் தனிவழி பார்க்க வைத்தது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றத்திற்குக் காரணமானது.

உண்மையில் சிங்கள அடக்குமுறையை எதிர்த்து உருவானதல்ல முஸ்லிம் காங்கிரஸ்.
தமிழ்த் தலைமை தங்களை ஏமாற்றுவதாகவே அவர்கள் தனிக்கட்சி தொடங்கினார்கள். இப்போதும் முஸ்லிம்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும், தமிழர்களைத்தான் அவர்களால் பிரதானமாக நம்பமுடியாது என்று கருதுகிறார்கள். தமிழர்களின் தலைமையாக சொல்லிக்கொண்டவர்கள், இனவாதத்தின் மூலம் தமிழர்களை ஒன்றுதிரட்டுவதற்காக முஸ்லிம் எதிர்ப்பையும் தூண்டி வளர்த்தார்கள் என்பதே உண்மை. தங்களது தேர்தல் லாபத்திற்காக வளர்த்த தமிழ் இனவாதத்தின் விளைவுதான் இது.

அதன்பிறகு அவர்களது தேர்தல் லாபத்திற்காக முஸ்லிம்களும் இனவாதத்தைப் பேசினார்கள். சிறுபான்மையினருக்கான அரசியலுரிமைகளைப் பெறுவதற்கு முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற தேவையை விளங்கிக் கொள்ளாத தமிழ்த் தலைவர்கள், தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதம் பேசிப் பேசி பிளவை மேலும் அகலப்படுத்தினார்கள். இப்போதும் முஸ்லிம்களையும் அவர்களது அபிலாசைகளையும் அலட்சியப் படுத்தியபடியே தான், தமிழர்களோடு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் முதலமைச்சர் பதவி விட்டுத் தருகின்றோம். கூட்டாட்சிக்கு வாருங்கள் என்று அழைத்தோம். அப்போது அதனை நிராகரித்துவிட்டு மஹிந்தவோடு இணைந்து ஆட்சியை அமைத்தார்கள். இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுத்தர வேண்டும் என்று கோருவது என்ன வகையிலான நியாயம்?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்புக் கட்டுரையாளர் எழுதுகிறார்.

இப்போதும், அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்று கவனிக்க இவர்கள் தயாரில்லை. இவர்களுக்குப் பதவியை விட்டுத் தராவிட்டால் சிங்களத் தலைவரிடம் முறையிடுவோம் என்கிற வகையில் செயற்பட்டு, சக சிறுபான்மைச் சமூகத்தை வெல்ல முடியுமா? இன்னுமின்னும் சமூக விலகலைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com