Contact us at: sooddram@gmail.com

 

உளவாளிகள் பரிமாற்றம்

(வாகுலன்)

வியன்னா விமான நிலையத்தில் இம்மாதம் 8ந் திகதி உளவாளிகள் பரிமாற்றமொன்று நடந்தது. முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு எண்ணிக்கையில் கூடுதலான உளவாளிகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் பரிமாறிக்கொண்டன. வியன்னா விமான நிலையத்தை வந்தடைந்த உளவாளிகள் பக்கம் பக்கமாக நின்ற இரண்டு விமானங்களிலும் ஏறி ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார்கள்.

நான்கு உளவாளிகளை ரஷ்யா அமெரிக்காவுக்குக் கையளித்தது. பத்து உளவாளிகளை அமெரிக்கா ரஷ்யாவுக்குக் கையளித்தது. இந்தப் பத்துப் பேரில் எட்டுப் பேர் கணவனும் மனைவியும். இவர்கள் அமெரிக்காவிலுள்ள தங்கள் வீடுகளையும் வங்கிக் கணக்குகளையும் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பத்துப் பேரும் 8ந் திகதி நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அன்றைய தினமே வியன்னா விமான நிலையத்தில் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது எப்படிச் சாத்தியமாகியது?

பத்து ரஷ்ய உளவாளிகளையும் பற்றிய விபரங்களை அறிந்த அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக அவர்களைக் கைது செய்யவில்லை. ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு உளவாளிகளுடன் இவர்ளைப் பரிமாற்றம் செய்வது பற்றிய பேச்சுவார்த்தையை மிக இரகசியமான முறையில் நடத்தி உடன்பாடு கண்ட பின்னரே அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் உடனடியாக வியன்னா விமான நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

அதே நேரம் ரஷ்யா தனது சிறையில் இருந்த நான்கு உளவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி வியன்னா விமான நிலையத்துக்கு அனுப்பியது. இந்த நால்வரில் மூவர் இரட்டை உளவாளிகள் ரஷ்ய உளவு சேவையில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்காக உளவு பார்த்தவர்கள். ஒரு நாட்டின் உளவு சேவையில் இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்காக உளவு பார்ப்பவர்களுக்கு அந்த நாடு மதிப்பும் கெளரவமும் அளிப்பது வழக்கம். ஒரு நாட்டின் உளவு சேவையில் இருப்பவர்கள் அந்த நாட்டின் முக்கிய இரகசியங்களைச் சுலபமாக அறிய முடியும்.

முக்கிய தகவல்களை அறிவது மாத்திரமன்றி அந்த நாட்டு உளவாளிகள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் தகவல்களை முடக்க அல்லது திரிபுபடுத்தவும் இவர்களால் முடியும். எனவேதான் இரண்டாவது நாடு இரட்டை உளவாளிகளுக்குக் கூடுதலான கெளரவம் அளிக்கின்றது. நான்கு உளவாளிகளுக்காகப் பத்துப் பேரைக் கையளிக்க அமெரிக்கா முன்வந்ததற்கு அதுதான் காரணம்.

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற இரட்டை உளவாளி கிம் பில்பி இவர் பிரித்தானிய உளவு சேவையில் சிரேஷ்ட அதிகாரியாக இருந்து கொண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்த்தவர். கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான பில்பி நீண்டகாலம் ரஷ்யாவுக்கான இரட்டை உளவாளியாகச் செயற்பட்டார். தன்னைப் பற்றிய இரகசியம் அதிகாரிகளுக்குத் தெரிய வந்ததை அறிந்ததும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்று இறுதிக் காலம் வரை அங்கேயே வாழ்ந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com