Contact us at: sooddram@gmail.com

 

பாசிசம்

பாசிசம்....பாசிசம் என அரசியல் பேசும் அனைவரும் இச்சொற்பத்தைப் பாவிக்கிறார்கள். இதைத் தெரிந்துதான் பாவிக்கிறார்களா? அல்லது மொழி அழகுக்காகப் பாவிக்கிறார்களா என்பது கேள்வியாகவே உள்ளது. இது உண்மையில் ஒரு அரசியல் சொற்பதமே
 இது 1919ல் இருந்து முசோலி எனும் இத்தாலிய சர்வாதிகாரிகாலத்தில் இருந்தே பாவிக்கப்பட்டு வருகிறது. இச்சொல்லானது இத்தாலியமொழி வழி வந்ததே. இதை 1922-43வரை உருவாக்கி பயன்படுத்தி வந்தார் முசோலினி. இந்த இத்தாலியச் சொல்லானது பாசியோவில் இருந்து பாசிஸ்மோவாகி பின் முசோலினியால் பாசிசம் ஆனது.

இந்தப்பாசிசத்தை முதலாளித்துவம், சோசலிசம், கமினிசியம், மாக்சியம், இடதுசாரித்துவம் என்ற எந்த வரையறைக்குள்ளும் அடக்க முடியாதது. ஒருபார்வைக்கு நடைமுறையில் சிறிது கமினிஸ்ட் போல் தோற்றம் கொண்டாலும் இது முழுமையான முதலாளித்துவ அணுகுமுறைக் கொண்டது. இங்கே தனிமனிதனும் அவன் குழுவும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது வெறும் அரசுசார்ந்த கட்டமைப்பா? அரசுக்கு மட்டும் பாவிப்பாதா? நாடு மட்டும் சார்ந்ததா? என்ற கேள்விகள் எழலாம். ஆம் இது நாடும் மக்களும் சார்ந்ததே. அதற்காக அரசு மட்டம் சார்ந்தது என்று கூறவது தவறாகும்.

சரி பாசிசம் என்றால் என்ன? இது ஒரு அரசியல் சித்தார்ந்த அரச சமூகக்கட்டமைப்பு எனலாம். இங்கே அரசு சர்வாதிகாரிபோல் தொழிற்படும். தனிமனித, அமைப்புகள் சார்ந்த எந்த கருத்துக்களும் கேட்கப்படமாட்டாது. விடுதலை அமைப்புகளும் இப்படியான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது ஒரு விடுதலை அமைப்பு, போராளிகள் கூட்டம், குழுக்கள் என்பனவற்றிலும் இந்த பாசிசமுறை பாவிக்கப்படலாம். விடுதலைப்போராட்டத்தில் மக்களின் கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது அனைத்தும் போராட்டக் குழுவின நலன் கருதி இருக்குமாயின் அது பாசிஸ்சம் எனப்படும். அரசிலோ குழுவிலே விடுதலை அமைப்பிலோ சர்வ அதிகாரமும் கொண்டு தலைமைத்துவம் இருக்கும். உதாரணமாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்பது வெறும் மட்டமான கேவலங்கெட்ட முழுப்பொய்யான சொற்பதமே. ஒரு ஜனாதிபதியானவர் சர்வாதிகாரம் கொண்டவராக தான் நினைத்ததை ஒரிரவில் செய்து முடிக்கும் அதிகாரத்தை வைத்திருப்பவராக உள்ளார். இது எப்படி ஜனநாயக சோசலித்தினுள் அடங்கும். இந்த ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுகிறார் என்பதற்காக இது ஜனநாயகம் என்று கருதவே முடியாது. ஒரு ஜனாதிபதி பாசிட்டாகவே உருவாக்கப்படுகிறார்.

ஒருநாட்டையோ போராட்டக்குழுவையோ எடுத்துக் கொண்டால் அக்குழு சர்வ அதிகாரங்கள் கொண்டதாகவும் தலைமை மட்டுமே தீர்மானிக்கும் சக்தியாகவும் எதிர் கருத்துக்களை அனுமதிக்காததாகவும் நாட்டின் தலைமையின் நலன் மட்டுமே கருத்துடையதாகவும் இருக்கும். நாட்டில் அங்கம் வகிக்கும் மக்களோ குழுவின் அங்கத்தவர்களே பேச்சுரிமை கருத்துரிமை அற்றவார்களாக இருப்பர்.

முசோலியின் புரட்சிக்காலத்தில் இதை நாசனல் சோசலிசம் (தேசியசோசலிசம்) என்று கூற முயற்சித்தனர். பாசிசம் என்றுமே சோசலிசத்தை நெருங்க இயலாது. சோசலிசத்தில் மக்களின் கருத்துக்கள் ஏற்புடையது. அரசு> தலைமை என்பன மக்களின் கருத்தை நடைமுறைப் படுத்தும் கருவிகளாகவே இருக்கும். உண்மையின் ஜனநாயக முறையும் அதுவே. அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் கருத்துக்களை நடைமுறைப் படுத்தும் ஊழியர்களே. அதாவது உயர் அதிகாரம் கொண்டவர்கள் மக்களே. இவர்கள் மக்களின் ஊழியர்கள். இதை எத்தனை அரசியல்வாதி உணர்ந்திருக்கிறான்.

பாசிசம் என்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரம் கொண்ட மக்களினதோ அங்கத்தினரது கருத்துக்களையோ செவிமடுக்க மறுக்கும் ஒருகட்டமைப்பு. இது தலைமையினது நாட்டினதும் நலனின் மட்டும் கருத்துடையது.

பாசிச எதிரி
நோர்வே நக்கீரா 26.06.2015

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com