Contact us at: sooddram@gmail.com

 

இறந்த பின்னரும் உயிர்வாழ்வது சாத்தியமா?

‘நாம் முப்பரிமாண உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் நவீன அறிவியல் முப்பரிமாணத்துக்கு அப்பால், நான்காவது , ஐந்தாவது என பதினொரு பரிமாணங்கள் இருப்பதாகச் சொல்கிறது. நாம் ஒரு பேரண்டத்தில் (யுனிவர்ஸ்) வாழ்வதாகக் கருதி வருகிறோம். ஆனால் மேலும் பல பேரண்டங்கள் அதாவது Multiverse இருப்பதாக ஒரு கோட்பாடு உள்ளது. நமது அண்டத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இதே மாதிரியான அண்டம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் கோட்பாடொன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஆச்சரியமாக இல்லை’ நமது பிரபஞ்சத்தை ஒத்ததாக ஒரு சமாந்தர பிரபஞ்சம் இருக்கலாம் என்ற கோட்பாடு உள்ளது.

20ம் நூற்றாண்டில் நம்பவே முடி யாத அறிவியல் விதிகளை வெளியிட்டு உலகையே நிமிர்ந்து உட்கார வைத்தர், ‘அல்பேர்ட் ஐன்ஸ்டைன்’ சாத்தியமேயில்லை என்று நினைக்கும் பல இயற்பியல், கணிதக் கோட்பாடுகளை அவர் வெளியிட்ட போது திகைத்துப் போனது உலகம்.

நேரம் ஒரு வெளியில் அதிவேகமாக இயங்கும் போது சுருங்கியுள்ளது என்றும், ஒளியானது ஈர்ப்பு விசை யினால் வளைகிறது என்றும் ஆச் சரியமான இயற்பியல் கோட்பாடு களை ஐன்ஸ்டைன் சொன்னார். அவற்றையெல்லாம் பரீட்சித்துப் பார்த்த போது, அவை உண்மைதான் என்று தெரிய வந்தது. இதனால் ஐன்ஸ்டைன் மீது அதீத நம்பிக்கையும் மரியாதையும் உலகெங்கும் உரு வாகியது.

அவர் சொன்னவை எவை யும் தப்பாக இருக்க முடியாது என்ற முடிவுக்குச் சக விஞ்ஞானிகள் வர ஆரம்பித்தனர். இந்தச் சூழ் நிலையில், ஐன்ஸ்டைன் வெளியிட்ட இன்னுமொரு கோட்பாடுதான், ‘தியரி ஒஃப் எவ்ரிதிங்’ (Theory of everything) என்பதாகும். அதாவது பெரிதாக விரிவடைந்திருக்கும் அண் டத்திற்கும் சிறிதாக இருக்கும் அணு வுக்கும் அடிபடையாக இருக்கும் விசைகள் அனைத்தும் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும் என்று அந்த விதி சொன்னது.

ஜன்ஸ்டைன் உயிருடன் இருக்கும் வரை அப்படியொரு சமன்பாட்டை அவரால் கண்டுபிடிக்கவே முடிய வில்லை. ஆனால் ஜன்ஸ்டைனில் இருக்கும் நம்பிக்கையினால், அந்தக் கணிதச் சமன்பாட்டைத் தேடிப் புற ப்பட்டனர் இளம் நவீன இயற் பியலாளர்கள்.

இறுதியாக அந்தச் சமன்பாட்டை நவீன இயற்பியலாளர்கள் கண்டு பிடித்ததாகவும் நம்பினர். ஆனால், ஒரு சமன்பாடு மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், ஐந்து சமன் பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கணிதச் சமன்பாடுகள் பெரும்பாலும் ஒரு மாறாத விதிக்கு உட்பட்டே அமை கின்றன. ஒரு விதிக்கு உட்பட்டு அமையும் கணிதச் சமன்பாடு, எந்தக் காலத்துக்கும் மாறாமல் உண்மையா னதாக இருக்கும். உண்மை எப்போதும் ஒன்று என்பதால் ஒரு விதிக்கு எப்போதும் ஒரு கணிதச் சமன்பாடே இருக்க முடியும்.ஆனால் இங்கு ஐந்து சமன்பாடுகள் கண்டுபிடிக்கப் பட்டதும் குழப்பமே அதிகரித்தது. காரணம் அந்த ஐந்து சமன்பாடுகளும் சரியானதாக இருந்தன.

கண்டுபிடிக்கவேமுடியாது என்று நம்பிய ‘தியரி ஒஃப் எவரிதிங்’ என் னும் கோட்பாட்டிற்கு முடிவு கிடை த்தாலும், அந்த முடிவில் ஒரு குழப் பம் இருந்தது. ஒரு சமன்பாட்டை த் தேடிப் போனபோது கிடைத்ததோ ஐந்து சமன்பாடுகள்.அந்தச் சமன் பாடுகளின் மூலம் அமையப் பெற்ற அடிப்படைக்கோட்பாட்டின் பெயர்தான் ‘ஸ்ட்ரிங் தியரி’ என்பதாகும்.

அதாவது அணுவுக்குள் இருக்கும் துகள்களைப் பிரித்துக் பார்த்தால், அங்கே இறுதி யாகக் காணப்படுவது அதிர்ந்து கொண்டிருக்கும் நுண்ணிய இழைகள் தான்’ என்கிறது ஸ்ட்ரிங் தியரி. அத்துடன் அணு முதல் அண்டம் வரை எங்கும் அதிரும் இழைகளே பரவியி ருக்கின்றன என்றும் சொல்கிறது ஸ்ட்ரிங் தியரி.

முப்பரிமாணத்துக்கு அப்பால் நான்கு, ஐந்து என
11 பரிமாணங்கள் இப்பிரபஞ்ச வெளியில் இருக்கலாம்.

அவிழ்க்கப்பட்ட§ பாது நமக்குக் கிடைத்த அனைத்துமே பிரமிப்பூட் டும் ஆச்சரியங்கள்தான். நம்பவே முடியாத கோட்பாடுகள் அவை. நமது அடிப்படை நம்பிக்கைகளைக் கூட அசைத்துப் பார்க்கும் முடிவுக ளாக அவை இருந்தன. ‘எம் தியரி’, பல் மரிமாணங்கள். மெம்பரான், பர லல் யூனிவேர்ஸ், மல்டி வேர்ஸ் எனப் புதிய பிரமிப்பூட்டும் ஆச்சரி யக் கோட்டைகளாக அவை இருந் தன. அவற்றையெல்லாம் ஒவ்வொன் றாக முடிந்த அளவுக்கு விளக்கமாக நாம் பார்க்கலாம்.

‘பிக் பாங்’ பெரு வெடிப்பினால் உருவான ‘யுனிவேர்ஸ்’ என்று அழை க்கப்படும் அண்டத்தில், பில்லியன் பில்லியன் கலக்ஸிகளும், நெபுலாக் கள் என்றழைக்கப்படும் தூசுப்படலங் களும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அண் டம் முழுவதும் பரவியிருக்கின்றன. “ஈர்ப்புவிசை” ஏற்படுவதே கிராவிட் டான் என்னும் அடிப்படைத் துகள் கள் மூலம்தான். அதனால் இந்தக் கிராவிட்டான்கள் அண்டவெளியெங் கும் பரவி, ஈர்ப்புவிசையாக மாறி யிருக்கின்றன.

அண்டத்தில் உள்ள அனைத்துச் சக்திகளும், துகள்களும் மட்டுமில்லாமல் கிராவிட்டான்களும் அதிர்விழைகளாகவே அதிர்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது. அதிர்விழைக் கோட்பாடு, நீங்கள் அடிக்கடி பார்க்கும் ‘இரப்பர் இழை’ எப்படியிருக்குமோ, அதே போல் மிகமிக நுண்ணிய வவத்தில் இந்த அதிர்விழைகள் காணப்படும். ஒரு இரப்பர் இழை வட்ட வடிவமாகவும் இருக்கும்.

அதே நேரத்தில் இடை யில் அறுத்துவிட்டால், இரண்டு நுனிகளையுடைய நேரான வடிவத் திலும் இருக்குமல்லவா? அதுபோல் இந்த அதிர்விழைகளும் ‘மூடிய இழை’, ‘திறந்த இழை என இரண்டு விதமான வடிவங்களில் காணப்படு கின்றன. கிராவிட்டான்கள் மூடிய வட்டவடிவமான அதிர்விழைகளாக வும், ஏனைய அனைத்தும் திறந்த அதிர்விழைகளாகவும் அண்டத்தில் காணப்படுகின்றன.

இந்த ஸ்ட்ரிங்குகளை (அதிர்விழை களை) மையமாகவைத்து உருவான துதான் ஸ்ட்ரிங் தியரியாகும்.ஆனால் உருவாகியதோ மொத்தமாக ஐந்து சமன்பாடுகளாகும். அந்த ஐந்து சமன்பாடுகளுமே உண்மை போல இருப்பவை. தப்பே இல்லாதவை. இங்குதான் குழப்பம் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஏதோ தவறு இருக் கின்றது.

என்பதை நவீன இயற்பிய லாளர்கள் நன்றாகப் புரிந்து கொண் டனர். இறுதியில் அந்தத் தவறும் என்னவென்று கண்டுபிடிக்கப்பட்டது. ‘எட்வார்ட் விட்டன்’ என்பவர் 1990 இல் இந்த ஐந்து சமன்பாடுகளையும் ஒன்று சேர்த்துப் புரட்சிகரமான கோட்பாடொன்றை வெளியிட்டார். அவர் கூறிய கோட்பாடு ‘எம். தியரி’என்ற பெயரையும் பெற்றுக் கொண்டது. ஐந்து ஸ்ட்ரிங் தியரிச் சமன்பாடுகளுக்கும் பொதுவாக ஒரே சமன்பாட்டுடன் அந்த எம் தியரி உருவாக்கப்பட்டது.

எட்பாட் விட்டன் வெளியிட்ட ‘எம் தியரி’ சொல்வது இதுதான். இதுவரை நாம் மூன்று பரிமாணங்கள் (ளிiசீலீnisons) உள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனுடன் ஐன்ஸ்டைன் கூறிய ஸ்பேஸ்டைம் (Supergravitation) என்பதை நான்காவது பரிமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அத்தோடு பரிமாணங்களின் எண்ணி க்கை நின்றுவிடவில்லை. இவை தவிர்த்து மேலும் ஆறு பரிமாணங்கள் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ட்ரிங் தியரியின் ஒவ்வொரு சமன்பாடும், ஒவ்வொரு பரிமாணத்துக்கு உரியவை. ஆறாவது பரிமாணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஸ்ட்ரிங் தியரி, ஐந்து சமன்பாடுகளாக இரு ப்பதற்கு இதுதான் காரணம் ஒன்றையொன்று பிரதிபலிக்கக்கூடிய ஐந்து விம்பங்கள் போன்றவைதான் இந்த ஐந்து பரிமாணங்களும்.

‘மனித வரலாற்றில் திரும்பத் திரும்ப ஆவி, பேய், தேவர்கள், கடவுளர்கள் மற்றும் அரக்கர்கள் போன்றோர் குறித்து சொல்லப்பட்டுள்ளன. இவர்கள் அரக்கர், கடவுளர்களாக இல்லாமல் ஏன் வெவ்வேறு பரிமாணங்களில் வாழும் வலிமை மிக்க உயிரினங்களாக இருக்கக் கூடாது? ‘

‘இங்கு கெட்டவராக வாழும் ஒருவர் சமாந்தர அண்டத்தில் (ஜிarallலீl univலீrsலீ) நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், இந்தக் கோட்பாட்டின் பிரகாரம், நீங்கள் கவலை கொள்ள வேண்டியிருக்காது. அவர் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கலாம்’

இதன்படி பார்க்கும் போது, மொத்த மாகப் பத்துப் பரிமாணங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

நாம் வாழும் பூமியிலும் அண்டத்தி லும் முன்பின், இடம் வலம், மேல் கீழ் என்ற மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன. என்பதை மட்டுமே நம் மால் கற்பனை செய்ய முடிகிறது. அதற்கு மேல் நான்காவதாக இன்னுமொரு பரிமாணம் உள்ளதென்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் மொத்தமாகப் பத்துப் பரிமாணங்கள் இருக்கின்றன என்று எம் தியரி சொல்கிறது.

அவற்றை எப்படி நம்மால் நினைத்துப் பார்க்க முடியும்? நவீன இயற்பியல் இந்த முடிவை ஏனோதா னோவென்று ஒரு கட்டுக்கதையாகச் சொல்லிவிடவில்லை. அனைத்தையும் கணித, இயற்பியல் சமன்பாடுகளுக்குள் உள்ளடக்கி, அறிவியல் ஆதாரச் சான்று களுடன் முழுமையான ஒரு கோட் பாடாகத்தான் சொல்கிறது.

இந்த முடிவை உலகில் உள்ள எந்த ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் மறுத்த தில்லை. அனைவரும் இதைச் சரி யென்றே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நவீன இயற்பியலின் இந்த ஆராய்ச் சிகளின் இறுதி முடிவாக ‘மிகையீர்ப்பு விசை’ (ஷிupலீrgravitation) என்பதும் ஒரு பரிமாணமாக ஏற்றுக் கொள் ளப்பட்டு மொத்தமாக 11 டயமென்சன்கள் (பரிமாணங்கள்) அண்டத்தில் உண்டு என்றள முடிவு தீர்மானமாக எடுக்கப் பட்டது.

பூமியில் வாழும் மனித இனத்தால் இடம் வலம் மேல் கீழ், முன்பின் என்ற மூன்று பரிமாணங்களூடாக மட்டுமே தற்சமயம் பிரயாணம் செய்ய முடியும். ஆனால் ஐன்ஸ்டை னின் சார்பு வேகக் கோட்பாட்டின்படி, நான்காவது பரிமாணமான நேரத்தி னூடாகவும் மனிதனால் பிரயாணம் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்சமயம் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்யும் சாத்தியம் இல்லாவிட்டாலும், அதற்கான சாத்தி யக்கூறுகளை இப்போதும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இது தாண்டி ஐந்திலிருந்து பதினோ ராவது பரிமாணங்களுக்குள் மனிதன் பிரயாணம் செய்ய முடியுமா? முடியாதா என்பது கேள்விக்குறியாகவே இருக் கின்றது. ஆனால் இன்னுமொன்றையும் சொல்கிறது இயற்பியல். அண்டத்தில் இருக்கும் அனைத்துப் பரிமாணங்களும் ஒரு நுண்ணிய தோல் போன்ற அமைப்பினால் பிரிக்கப்பட்டு ஒவ்வொன் றும் மிகமிக அருகில் காணப்படுகின்றன. இந்த மெல்லிய நுண்ணிய தோல் போன்ற அமைப்பைத்தான் ‘ப்ரான்’ (கிranலீ) அல்லது ‘மெம்ப்ரான்’ (ணிலீசீbranலீ) என்கிறார்கள். இந்த மெம்பிரான் என்பதிலிருந்துதான் எம் தியரி என்பதில் உள்ள எம் தோன்றிய தாகளம் சொல்வார்கள்.

பரிமாணங்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று மிக அருகிலேயே காணப்படு கின்றன என்பதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது.அதனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு புள்ளியை ஊடறுத்து முன்பின் னாகச் செல்லும் நேர்கோடு , ஒரு பரிமாணம் எனப்படுகிறது. அந்த நேர்கோட்டில் முன்பின்னாக மட்டும் ஒரு உயிரினம் இயங்கிக் கொண்டிருந் தால், அது ஒரு பரிமாணத்தில் இயங் குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த ஒரு பரிமாண நேர் கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் அளவிலாவது அந்த உயிரினம் நகர்ந்தால் அது இரண்டாம் பரிமாணம் என்றாகிவிடும்.

அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லி மீட்டருக்குக் குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல் இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லி மீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகி விடுகிறது.

இந்த மூன்று பரிமாணங் களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருக்கின்றன. இது உங்களுக்குப் புரிகின்றதா? அதாவது முதல் மூன்று பரிமாணங்களும் மிக மிக மெல்லிய கோடு ஒன்றினால்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே நான்காவது பரிமாணமும்,ஐந்தாவது பரிமாணமும் மெல்லிய அமைப்பினால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே பதினொரு பரிமாணங்களும் ஒன்றுக் கொன்று மிக அருகிலேயே காணப்படு கின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.

பரிமாணங்கள் பற்றி நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனாலும் இந்தக் பரிமாணங்கள் சம்பந்தமாக இனி நான் சொல்லப் போகும் தகவல்கள்தான் நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரியமானவை யாக இருக்கும். இந்தத் தகவல்களை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கூடப்போகலாம்.

மூன்று உயிரினங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒன்று முன் பின்னாக நகரும் ஒரு பரிமாணத்தில் மட்டும் வாழும் ஒரு உயிரினம். மற்றது, முன்பின், இடம் வலம் என்று தட்டையான இடத்தில் நகரக்கூடிய இரண்டு பரிமாணத்தில் வாழும் ஒரு எறும்பு, மூன்றாவது முன்பின், இடம்வலம், மேல் கீழ் என அனைத்திலும் நகரக் கூடிய முப்பரி மாணத்தில் வாழும் ஒரு மனிதன்.

ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால், இடம் வலமாக வாழ்ந்து கொண்டி ருக்கும் எறும்பைக் காணவே முடியாது. எறும்பு இடம் வலமாக நகரும் போது, முன் பின்னாக நகரும் கோட்டை எப்போது வெட்டுகிறதோ, அப்போது மட்டும் அந்த உயிரினத்தால் அந்த எறும்பைக் காண முடியும். ஆனால் இரண்டு பரிமாணத்தில் வாழும் எறும்பினால் அந்த ஒற்றைப் பரிமாணத்தில் வாழும் அந்த உயிரின த்தை எப்போதும் காண முடியும். இதுபோல மூன்று பரிமாணத்தில் நகரக்கூடிய மனிதனால், இரண்டு பரிமாணத்தில் நகரும் எறும்பையும், அந்த உயிரினத்தையும் எப்போதும் காண முடியும். ஆனால் அவற்றினால் மனித னைக் காணவே முடியாது.

மேலே நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இப்பொழுது நான் சொல்லப் போவதைச் சிந்தித்துப் பாருங்கள். பூமியிலோ, அண்டத்திலோ மொத்தமாக 11 பரிமாணங்கள் உள்ளன என்று அறிவியல் சொல்கிறது அல்லவா? அப்படிப் 11 பரிமாணங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஒவ்வொரு பரிமாணத் திலும் ஏன் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

இரு பரிமாணத்தில் இயங்கும் ஓர் எறும்புக்கு, முப்பரிமாணத்தில் இயங்கும் கழுகு என்றொரு பறவை இருக்கிறது என்று சொன்னால் அதனால் அதை நம்பவே முடியாது. காரணம், கழுகு மூன்றாவது பரிமாணத்திலேயே எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.

எப்போது அது இரையைத் தேடுகிறதோ, அப்போது அதுவாக இரண்டாம் பரிமாணத்தில் நுழைந்தால் மட்டுமே அப்படி ஒன்று உண்டு என்பதை எறும்பு நம்பும். அது போல, நாம் நான்காவது ஐந்தாவது, ஆறாவது என இப்படியே... பதினொராவது பரிமாணங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று சொல்லும் போது நம்ப மாட்டோம். அதிகம் ஏன்? அதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது.

ஆனால் கடந்து வந்த மனித வரலாற் றில், ஆவி போன்ற உருவங்களையும், ரெக்கர்கள் போன்ற உருவங்களையும், தேவர்கள் போன்ற உருவங்களையும் பேய்கள் போன்ற உருவங்களையும், கடவுள் போன்ற உருவங்களையும் மனிதன் கண்டிருக்கிறான் என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக் கின்றோம் அதை நம்பவும் விரும்புகி றோம்.

இவையெல்லாம் ஏன் கடவுளா கவும், பேய்களாகவும் அரக்கர்களாகவும் இல்லாமல் வெவ்வேறு டைமென்சன் களில் வாழும் உயிரினங்களாக இருக் கக் கூடாது? ஒவ்வொரு பரிமமாணமும் அதிகரிக்க அதில் வாழம் உயிரினத்தின் சக்தி அதிகமானதாக இருக்க வேண்டும். ஒரு பரிமாணத்தில் வாழும் உயிரினத் தைவிட, இரண்டு பரிமாணத்தில் வாழும் எறும்பு அதிக சக்தியுடையதா கவும் அதைவிட மூன்றாவது பரிமாணத்தில் வாழும் மினதன் அதிக சக்தியுடையவனாகவும், இப்படியே படிப்படியாக அதிகரித்து 11வது பரிமா ணத்தில் வாழ்வது, அதியுயர் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம் அல்லவா?

கொஞ்சம் அமைதியாக இதை யோசனை செய்து பாருங்கள். கடவுள் என்றோ, தேவர்கள் என்றோ, அரக்கர்கள் என்றோ, பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ நாம் நினைப்பவை எவையும் நம் கதைகளில் வருபவை போலல்லாமல் ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழும் உயிரினங்களாக அவை ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடாது?

இப்போது இதை நம் சமய இலக் கியங்கள் சொன்ன சில கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலுலகம், கீழுலகம் என ஈரேழு உலகங்கள் உண்டெனவும், ஒவ்வொரு உலகங்களி லும் ஒவ்வொருவர் வாழ்வதாகவும் அவற்றில் சொல்லியிருக்கிறதல்லவா? இந்த உலகங்கள் ஏன் ஒவ்வொரு டைமென்சனிலும் அமைந்தவையாக இருக்கக் கூடாது.

மேல் பரிமாணங்களில் வாழ்வோர்கள் அப்பப்போ நாம் வாழும் மூன்றாவது பரிமாணத்திற்குள் நுழையும் போது, அவர்களைச் சிலர் கண்டுகொள்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆதிகாலத்தில் மனிதனுடன் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி தொடர்பு களையும் வைத்திருக் கலாம் அல்லவா? இவையெல்லா வற்றுக்கும் சான்றாக பண்டைய சமய இலக்கியங்களில் பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

ஆதிகால மனிதனால் செய்திருக்கவே முடியாத சாத்தியமில்லாத பல விசயங்கள் நடைபெற்றிருப்பதற்கு நிறையச் சான்றுகள் இன்றும் நம் கண் முன்னே உள்ளன. அந்த ஆதி மனிதனுக்கு ஏதோ ஒரு மேல் பரிமாணத்தில் வாழும் ஒரு இனம் உதவியிருக்கலாம் அல்லவா? இப்படி நான் சொல்லும் போது நீங்கள் முழுமையான ஆன் மீகவாதியாக இருந்தால் கோபப்படவே செய்வீர்கள்.ஆனால் இந்தச் சாத்தி யங்களை கோபம் என்ற உணர்வில் லாமல் அறிவியலாகச் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு முன்னால் இருக்கும் சகல ‘வெட்டுத் துண்டுகளும்’ முறையாக அதனதன் இடத்தில் தானாகப் பொருந்துவதைக் காண்பீர்கள்.

இத்துடன் இது முடித்துவிடவில்லை. நவீன இயற்பியலில் பல் பரிமாணங்கள் உள்ளன என்று சொல்வது போல பல அண்டங்களும் உள்ளன என்று நம்பு கிறது. அதாவது இதுவரை ஒரே அண்டம் இருக்கிறது என்றுதான் நம்பியிருந்தோம். அதனாலதான் அண்டத்திற்கு Uni’vers என்று பெயரிட்டிருந்தோம். ஆனால் இருப்பது யூனிவேர்ஸ் அல்ல ‘மல்டிவேர்ஸ்’ என் கிறது நவீன இயற்பியல் மல்டிவேர்ஸ் என்று சொல்லும் போது பத்து அண்டங்கள் நூறு அண்டங்கள் அல்லது ஆயிரம் அண்டங்கள் இருக்கின்றன. என்று நவீன இயற்பியல் சொல்ல வில்லை. ஒரு சமுத்திரத்தில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கலாமோ, அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்கிறது. இதையெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் நாம் பைத்தியமாகிப் போகும் நிலைதான் உருவாகும்.

நவீன இயற்பியலால் குறிப்பாகச் சொல்லப்பட்ட இன்னுமொரு விசயமும் உண்டு. அதுதான் பாரலல் யூனிவேர்ஸ் என்பது பூமியில் உள்ள அனைத்துத் துகள்களுக்கும் சமனானதும், நேரெதிரா னதுமான வேறு துகள் இருந்தே தீரும் என்கிறது அறிவியல். அதுவே பூமி சமநிலையில் இருப்பதற்குக் காரணமுமாகிறது. இந்த சமர்ச்சீர்த்தன்மை மிகவும் அவசியமானது. மனிதனை எடுத்துக் கொண்டால், வலது இடது என இரண்டு சம பகுதிகளாகவும் நேரெதிராகவும், சமச்சீராகப் பிரிக்கப்பட்டு இருப்பான்.

வலது கைக்கு இடது கையும், வலது காதுக்கு இடது காது மென ஒவ்வொன்றும் சமச்சீராக அடுக்கப் பட்டது. போல மனிதன் காணப்படு வான் நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். இரவு/ பகல், ஆண்/பெண், கடவுள்/ சாத்தான், நீர்/ நெருப்பு, கிறிஸ்து/ என்டி கிறிஸ்து, சொர்க்கம்/ நரகம், குளிர்/ வெப்பம் என்று எல்லாமே இரட்டை யாகத்தான் இருக்கும்.

இருக்க வேண்டும். இது போல அண்டத்தில், துகள் நிறைந் திருக்க,அதற்கு எதிரான எதிர்த்துகள் களும் நிறைந்திருக்கின்றன என்கிறது அறிவியல். அணுக்களானா லென்ன, அண்டமானாலென்ன அனைத்துமே சமச்சீராகத்தான் இருக்கின்றன. இதனால்தான் விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உப அணுத்துகள்களுக்கும் (Subatomic Particle) சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு உப அணுத் துகள்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுபோல நமது அண்டத்துக்குச் சமச்சீராகவும், எதிரானதுமான ஒரு அண்டம் நமது அண்டத்துக்குச் சமாந்தர மாகவே இருக்கிறது என்று நவீன இயற்பியல் வல்லுனர்கள் அடுத்துச் சொல்கிறார்கள். அதைத்தான் ‘சமாந்தர அண்டம்’ என்று பெயரிட்டும் அழைக் கிறார்கள்.

இந்தச் சமாந்தர அண்டம் நமது அண் டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே நகலெடுத்தது போல இருக்கும் என்கிறார்கள். நான், நீங்கள், அமெரிக்க ஜனாதிபதி யென எல்லாரும், இங்கிருப்பது போல் அங்குமிருப்போம்.

ஆனால் எல்லாமே எதிரெதிராக இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங் கள் அங்கு நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அதனால் உங்கள் நெருங்கிய உறவினர்கள் யாராவது இறந்திருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அவர்கள் உங்க ளுக்கு மிக அருகிலேயே சமாந்தரமாக உள்ள அண்டத்தில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

எனன இது அறிவியல் இப்படி யெல்லாம் மூடத்தனமாகப் பேசுகிறதே என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். இதில் சொல்லப்பட்ட எதையும் அறிவியல் தகுந்த காரணம் இல்லாமல் சொல்லிவிடவில்லை.

இதில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கோட்பாடாக நிறுவியுள்ளனர். பல விசயங்களை முடிவான முடிவாக அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்கு நமது விஞ்ஞானக் கருவிகள் இன்னும் வளரவில்லை. எப்போது அந்த வளர்ச் சிகள் ஏற்படுமோ அப்போது இவை எல்லாம் நம் கண் முன்னே உண்மை யென்று நிரூபணமாகலாம். அதுவரை இவை அறிவியல் கோட்பாடுகளாக நம்மிடையே இருந்து கொண்டே இருக்கும்.

நன்றி: இறந்த பின்னும் இருக்கி றோமா? (நூல்)

ராஜ்சிவா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com