Contact us at: sooddram@gmail.com

 

நாபா நினைவு மீட்ச்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..1

(ராம்)

நாபா எனக்கு ஒரு வினோதம் என்றால் வடக்கு கிழக்கு மாகாணசபை எனக்கோர் மனத்தாக்கம். இன்று தம் அரசியல் லாபங்களுக்கா பலரும் பலவிதமாக விமர்சிப்பது போல, இந்தியாவால் தங்க தாம்பாளத்தில் வைத்து ஈ பி ஆர் எல் எப் வசம் அது தரப்படவில்லை.
பல முன்னணி தோழர்களை பலிகொடுத்து எத்தனையோ பழிகளை சுமந்து அமைதிப்படை முகாம்களில் முடங்கி எம் மக்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை நனவாக்க அந்த சபையின் உருவாக்கத்திற்கு ஈ பி ஆர் எல் எப் முகம்கொடுத்த துன்பங்களை பலர் அறியமாட்டார்கள். அதனால் வடக்கு கிழக்கு மாகாண சபையின் உருவாக்கம் அதற்கு ஏற்பட்ட இடையூறு என்பன பற்றி பதிவு செய்கிறேன். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பொது வாழ்க்கைக்கு திரும்ப விரும்பியவர்களை புலிகள் விடவில்லை. தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறானவர்கள் என சந்தேகித்து மீண்டும் தாக்குதலை தொடுத்தனர். வேறு வழி இன்றித்தான் இந்திய அமைதிப்படையிடம் பாதுகாப்பு தேடவேண்டிய நிலை ஈ பி ஆர் எல் எப் தோழர்களுக்கு ஏற்பட்டது.

அவ்வாறு அமைதிப்படை முகாம்களில் இருந்தவர்களை புலிகள் யார் பொது மக்கள் யார் என அடையாளம் காட்ட உதவும்படி அமைதிப்படை அதிகாரிகள் கேட்க பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் தான் ரட்ணம் முதல் முதலாக துறைநீலாவணை முகாமில் அமைதிப்படை சீருடை அணிந்து செயல்பட வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.
இந்தியாவால் தமக்கு வழங்கப்பட்ட எல்லா சந்தர்பங்களையும் தவற விட்டது மட்டுமல்ல ஒப்பந்தத்தின் பின் உறவுகளுடன் மீண்டும் இணைந்து வாழ நினைத்த தோழர்களையும் தேடியழிக்கும் செயலையும் புலிகள் தொடர்ந்தனர்.

இடைக்கால நிர்வாகத்தில் மட்டுமல்ல இந்த மண்ணிலும் மற்ற இயக்கங்கள் இருக்க கூடாது என்ற புலிகளின் முடிவு மற்றவர்களையும் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தூண்டியது. முதலில் புலிகளின் ஊடுருவலை தடுக்கவே தோழர்கள் அமைதிப்படைக்கு உதவினர்.
இந்த நேரத்தில் தான் நாபா திருமலை சீனன்குடா முகாமில் வைத்து வரதனை கொழும்பு அனுப்பி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் எமக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் பற்றிய தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து முன்னெடுக்க முடிவெடுத்தார். அந்தப்பணியை வரதன் திறம்பட செய்தார்.

ஆரம்பத்தில் அபு யூசுப் ஏற்பாடு செய்த பத்தரமுல்லை வீட்டில் தங்கிய வரதன், அரச இலிகிதர் சேவை சங்கத்தின் தலைவர் குணசேன மகாநாமவை சந்ததித்த வேளை கொழும்பு வந்து செல்லும் போக்குவரத்து சிரமத்தை தெரிவித்தார். மகாநாம எந்தவித தயக்கமும் இன்றி அந்த கட்டிடத்தின் மாடியில் தங்கலாம் என கூறினார்.  ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தது போல முதலில் வரதன் மட்டும் தங்கிய அந்த மாடி முளுவதும் தோழர்களால் நிறைந்தது. ஈபி ஆர் எல் எப் மீளுருவாக்கம் பெற உதவிய குணசேன மகாநாம இன்று உயிருடன் இல்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்ற இடதுசாரி கட்சிகளுடன் வரதன் கலந்துரையாடல் மேற்கொண்டார். கம்யூனிஸ் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சமசமாஜ கட்சி தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா , தத்துவாசிரியர் ஹெக்டர் அபேவார்த்தன, நவ சமாஜ கட்சி தலைவர் வாசுதேவ நாணயகார, விக்ரமபாகு கருணாரத்ன, சிறிலங்கா மக்கள் கட்சி தலைவர் விஜயகுமார ரணதுங்க உட்பட எச் என் பெர்னாண்டோ போன்ற பல தொழிற்சங்க வாதிகளுடனான சந்திப்புகளை அவர் மேற்கொண்டார்.

ஆரம்பத்தில் வரதனை ஆயுதபோராட்ட இயக்க உறுப்பினராகவே பார்த்த அவர்கள் கலந்துரையாடல் முடிவில் அவரின் அரசியல் அறிவு கண்டு தம் பார்வையை மாற்றிக்கொண்டனர். அதன் விளைவு தான் ஐக்கிய சோசலிச கூட்டில் (U S A) எஸ் எல் எம் பி (S L M P), சி பி (C P), எல் எஸ் எஸ் பி (L S S P) யுடன் முதலில் ஈ பி (E P R L F) யும் இணைக்கப்பட்டது. பின்புதான் எஸ் ஆர் என அழைக்கப்பட்ட சிவராமின் (பின்னாளில் தராகி ) முன்னெடுப்பில் புளட் (P L O T E) இணைந்தது.

ஈழப்போராட்டத்தின் இடையில் ஏற்பட்ட பேரிளப்பான இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை போலவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்று நடைமுறைப்படுத்த நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்த மனிதநேயன் விஜயகுமார ரணதுங்கவும் படுகொலை செய்யப்பட்டார்.

(தொடரும் ........)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com