|
||||
|
வாக்குறுதிகளும் ஆணைகளும் மக்களிடையே இருந்து பொது நிர்வாகங்களிற்கு மக்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்கின்ற முறைமை 17ம் நூற்றாண்டிலிருந்து நடைமுறையிலிருந்து வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு திறம்பட சேவையாற்றுவதாக கூறுவதை நம்பியே, மக்கள் பிhதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். ஆனால் அவ்வாறு சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கத் தவறினால் மக்களால் எதுவும் செய்ய முடியாது. அதாவது அடுத்த தேர்தலொன்று வரும்வரை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, அதே மக்களால் வாபஸ் பெறமுடியாது. ஆனால் அடுத்த தேர்தலில் மீண்டுமொருமுறை வேறு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். அதனை மக்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொறுத்தே மக்கள் அரசியல் ரீதியாக ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பது பற்றி கருத்துக் கூறமுடியும். இலங்கையைப் போன்றே உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியிலமர்வதை மையமாக வைத்தே தமது செயற்திட்டங்களை வகுக்கின்றன. இந்த கட்சிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் உயிர்பெற்று மக்கள் முன்னே வந்து வாக்கு கேட்பார்கள். பின்னர் தேர்தலில் வென்றவர்களும் தோற்றவர்களும், அடுத்த தேர்தல் வரும்வரை முடிந்தவரையில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டே இருப்பார்கள். ஆனால் தாராளமாக மாற்றுக் கட்சிக்காரர்களுடனும் தமக்குள்ளும் முட்டிமோதி, ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி, ஏராளமான உட்பூசல்களுடன், பின்னர் அடுத்து வரும் தேர்தல் வேட்பாளர் நியமனத்திலும் இழுபறிகள் நிகழ்த்தி, அடுத்த தேர்தலில் வாக்குவேட்டைக்கு மக்கள் முன்னே மீண்டும் தோன்றுவார்கள். ஒரு கட்சியின் இருப்பு என்பதே தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே தங்கியிருக்கின்றது என்று கூறுமளவிற்கு தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு தேர்தலும் முன்னைய தேர்தலைவிட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மாதிரியான கற்பிதங்களை உருவாக்கி, வாக்குறுதிகளை வாரி வழங்கி, தேர்தலில் தத்தமது கட்சிகள் வெற்றிபெற அனைத்து வகையான பிரயத்தனங்களையும் கட்சியினர் எடுப்பார்கள். இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வழமை போலவே தமிழ் பேசும் மக்களை அறுதிப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில் தமிழ் தேசியக் (அரசு - சிங்கள எதிர்ப்புக்) கோசங்களை முன்னிறுத்தியும், மூவின மக்கள் (தமிழர், முஸ்லீமகள், சிங்களவர்) வாழும் கிழக்கில் தத்தமினத்து வேட்பாளர்களை ஆதரிப்பதே ஒரேயொரு தேர்வாகவும், சிங்கள மொழி பேசும் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கில் இருபெரும் கட்சிகளுக்கு இடையேயான பலப்பரீட்சையாகவும், தேர்தல் களை கட்டியுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது வடக்கு, கிழக்கு பகுதித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மாத்திரமே உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு. இதில் தற்போது நாலு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இதில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்புகளும் முன்னர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவை. தமிழரசுக்கட்சிக்கு தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளிவீசி, ஆணைகள் கேட்பதில் 66 வருடகால அனுபவம் உள்ளது. இதனால் தமிழரசுக்கட்சியின் சாயம் பூசினால்தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நியதி தோன்றியுள்ளது. இதனை மனதில் கொண்டே, இந்த முன்னாள் ஆயுதக்குழுக்கள் த.தே.கூவில் தமிழரசுக்கட்சியின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்களோ என்னவோ என்பதை சரியாக கணிக்க முடியாவிடினும், இதுவரைக்கும் தப்பாது மக்கள் ஆணைகளை வழங்கியுள்ளார்கள். 'தேர்தலில் வெற்றி பெற்றால் இனப்பிரச்சனைக்கு (தமிழ் மக்களின் பிரச்சனைக்கு) தீர்வு காணுவோம் எமக்கு ஆணை தாருங்கள்" என இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் சொல்லி வந்ததையே இப்போதும் கூறியிருக்கிறார்கள். இவர்களுக்கு மக்களின் ஏனைய அத்தியாவசிய தேவைகள், பற்றாக்குறைகள் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. வேலைவாய்ப்பு எதுவுமற்ற தமிழ் இளைஞர்களில் ஏறத்தாள 90 வீதமானோர், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவில் இருப்பது இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக தெரிவதேயில்லை. புலிகளின் பலம் வெறும் ஆயுதங்களால் மாத்திரமே கட்டியமைக்கப்பட்டிருந்தது. இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்காகவே ஆயுதங்களை தூக்கினோமென புலிகள் கூறிக்கொண்டாலும், புலிகளின் அரசியலை நிராகரிப்பவர்களை நிர்மூலமாக்குவதற்கும், புலிகளுக்கு ஆயுதங்கள் அத்தியாவசியமாக இருந்தன. இதனால் அரசுக்கு மாத்திரமன்றி, இலங்கையில் ஜனநாயகத்தை நேசித்த சகல இனத்தவர்களுக்கும் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்பதே தவிர்க்க முடியாத தேர்வாக இருந்தது. புலிகள் எப்படி முள்ளிவாய்க்காலில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டார்களோ அது போலவே, தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அரசியல் ரீதியாக (தேர்தலில்) தோற்கடிக்கப்பட வேண்டும். இது நடக்காத வரை தமிழர் வாழ்வில் முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. (வானவில்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |