|
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு
விளாசித்தள்ளிய சசி தரூர்
உரை
எல்லோரையும்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம்
மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால்
காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப்
பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு
சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்
தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த
நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார். இணையத்தில்
லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின்
உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்
களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப்
பாராட்டினார்.
உலகின்
10-ல் 9 பங்கு நிலப்பரப்பை ஆக்ரமித்திருந்த மேற்கத்திய காலனியாதிக்க
அராஜகங்களை இன்று நினைவுகூர்வது வெறும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டி
பார்க்கும் நிகழ்வு மட்டும் அல்ல. ஒருவகையில், காலனியாதிக்கம் மீதம்
விட்டுச்சென்றுள்ள ஆதிக்க மனோபாவங்கள், அரசியல் திட்டங்கள், கோட்பாடுகள்
ஆகியவற்றை ஆய்வுக்குள்ளாக்குவதோடு தொடர்புடையது.
சசி தரூர்
உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பகுதிகள் இவை:
* "எனக்கு 8 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 பேச்சாளர்களில் நான்
7-வதாக உரையாற்ற வந்துள்ளேன். ஏற்கெனவே மிக நீண்ட மாலைப்பொழுதாக உங்களுக்கு
அமைந்துள்ள நிலையில், நான் 8-ம் ஹென்றியின் கடைசி மனைவியாக என்னை உணர்கிறேன்.
எதிர்த் தரப்பினர் காலனியாதிக்கத்தினால் நாடுகளின் பொருளாதாரம்
சிறப்படைந்தது என்று முன்வைத்த கருத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்.
* காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச்
சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள்
இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு
23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில்
இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா?
* பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை
முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும்
தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.
* இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன்
பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து
பிரிட்டன் கொண்டுசென்று உற்பத்திசெய்து, ஆடைகளாக அவற்றை மீண்டும்
இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்றது பிரிட்டன். இதன் மூலம் இந்தியாவைத் தன்
சந்தையாக்கியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம்
வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளராகக் கோலோச்சிய இந்தியா, இறக்குமதி
நாடானது. உலக பருத்தி ஏற்றுமதியில் 27% பங்களிப்பு செய்த இந்தியாவின்
ஏற்றுமதி 2% ஆகக் குறைந்தது.
* ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள 'லூட்' (கொள்ளை) எனும் சொல்லை ஆங்கில
அகராதிக்கு அளித்தார். கூடவே கொள்ளையிடும் பழக்கத்தையும் பிரிட்டனுக்கு
அளித்தார். அவரை 'கிளைவ் ஆஃப் இந்தியா' என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால்,
நாடே கிளைவின் கொடூர வலைப் பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது.
* 19-ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை
மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.
* பிரிட்டிஷ் அரசு ஊழியர்களுக்கு நாம் பெரிய அளவில் சம்பளம் கொடுத்தோம்,
எங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாங்களே கொடுத்துக்கொண்ட சம்பளம் அது.
* இந்த விவாத அரங்கில், ஏற்கெனவே குறிப்பிடப் பட்டதுபோல, செல்வ வளம்
கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின்
மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில்
ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.
* 1833-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது இழப்பீடாக 20 மில்லியன் பவுண்டுகள்
தொகை அளிக்கப்பட்டது. யாருக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு தெரியுமா இது?
அடிமைச் சுரண்டல்களால் உயிரிழந்தவர்களுக்கோ, அடக்குமுறை துன்பம்
அனுபவித்தவர்களுக்கோ அல்ல; அடிமை முறை ஒழிப்பினால் சொத்துகளை
இழந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு இது.
* இந்த யூனியனின் வைஃபை கடவுச்சொல் கிளாட்ஸ்டோன் என்ற 'லிபரல் ஹீரோ'வாகக்
கருதப்பட்டவரின் நினைவைக் கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டதாக அறிந்ததைக் கண்டு
திகைத்தேன். காரணம் மேற்கூறிய 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டுத்
தொகையால் பலன் அடைந்த குடும்பங்களில் அவருடையதும் ஒன்று.
* பிரிட்டிஷ் ஆட்சிக் காலப் பெரும் பஞ்சத்துக்கு 1.5 கோடி முதல் 2.9 கோடி
மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர். காரணம்,
வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள். இரண்டாம் உலகப் போரின்போது
அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காகப் பதுக்கப்பட்டன.
இதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். மக்கள் இந்தியாவில்
உணவின்றிச் செத்து மடிகின்றனர் என்று ஓரளவு ஈரமுள்ள பிரிட்டன் அதிகாரிகள்
சர்ச்சிலுக்கு எழுதினார்கள். அந்தக் கோப்பின் விளிம்பில் சர்ச்சில்
எழுதினார்: "ஏன் காந்தி இன்னும் சாகவில்லை?"
* காலனியாதிக்க அனுபவம் மூலம் பெறப்பட்டதெல்லாம் வன்முறையும் நிறவெறியும்
மட்டுமே. இதுதான் காலனியாதிக்க இயந்திரத்தின் நடைமுறை. பிரிட்டன் பேரரசில்
சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று கூறப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, காரணம்,
கடவுள்கூட ஆங்கிலேயர்களை இருட்டில் நம்பத் தயாராக இல்லை.
* இங்கு எனக்கு முன்னால் பேசிய எதிர்த் தரப்பாளர் அடக்குமுறையையும்,
இழப்பையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாது என்றார். பல உதாரணங்களில்
ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன்
படையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 இந்தியர்கள் போரில்
பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று
தெரியவில்லை; இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.
* இரண்டாம் உலகப் போருக்காக இந்திய வரிசெலுத்துவோர் அன்றைய மதிப்பின்படி
100 மில்லியன் பவுண்டுகளை இழந்தனர். இந்தியா 70 மில்லியன் ஆயுதங்களை
வழங்கியது. 600,000 துப்பாக்கிகள், மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் 42
மில்லியன் ஆடைகள் இந்தியாவிலிருந்து சென்றன. 13 லட்சம் இந்தியர்கள் இந்தப்
போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இதோடு 173,000 விலங்குகள், 370 மில்லியன் டன்கள்
பொருட்கள் அனுப்பப்பட்டன.
* இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போர்
காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு
இன்றைய மதிப்பின்படி 8 பில்லியன் பவுண்டுகள்.
* ஸ்காட்லாந்தை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவில் செய்த சுரண்டல்களே உதவின.
* காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை
அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத்
தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே
தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை
உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே
போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது.
* இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது,
இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற
ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள்
நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத்
தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத்
துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம்
மூலம் கொழுத்து வளர்ந்தன.
* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றிப்
பேசப்படுகிறது. சித்ரவதைகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறைகள்…
இப்படி 200 ஆண்டு காலம் ஓட்டிவிட்டு எல்லாம் முடிந்ததும் 'ஜனநாயகம்' பற்றி
எப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஜனநாயகம்
மறுக்கப்பட்டது. அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக
இருந்தது.
* இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று
பேசப்படுகிறது. ஆம் உதவி அளிக்கப்பட்டது. எவ்வளவு அளிக்கப்பட்டது? அந்த
உதவியை எங்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால், வெறும் 0.4%.
நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் மட்டும் இதைவிடப் பல மடங்கு
அதிகமானது.
* இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்றும் அதற்கான நிதி இழப்பீடு
எவ்வளவு என்றெல்லாம் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. ஆனால், காலனியாதிக்க
காலத்தில் எம் மக்கள் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்தத் தொகை ஈடாகும்?
வீட்டுக்குள் நுழையும் கொள்ளைக்காரர் வீட்டைச் சூறையாடிவிட்டுச் செல்லும்
போது சூறையாடிவிட்டுச் செல்லும் போது அவர் காலில் காயம் பட்டு விட்டது
என்றால், இருதரப்பிலும் 'தியாகங்கள்' இருக்கின்றன என்ற வாதம் அறரீதியாக
சரியானதாக இருக்க முடியுமா?
* பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்பதைக் கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ள ஒரு
'மன்னிப்பு' போதும். அதை விடுத்து நிதியுதவி, இழப்பீடு என்ற வாதங்களை ஏற்க
முடியாது. ஆனால் 'நாம் கடன்பட்டிருக்கிறோம்' என்ற குற்ற உணர்வு வேண்டும்!"
- தொகுப்பும் மொழியாக்கமும்: ஆர்.முத்துக்குமார் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம
MBBS(Srilanka)
Phd(Liverpool,
UK)
'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........'
(முறிந்த
பனை நூலில் இருந்து)
(இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்)
Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call.
From: Broken Palmyra
வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம்
(சாகரன்)
புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம்
பிரபாகரனுடன்
இறுதி வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத்தில்
தப்பியவரின் வாக்குமூலம்
தமிழகத்
தேர்தல் 2011
திமுக,
அதிமுக, தமிழக
மக்கள் இவர்களில்
வெல்லப் போவது
யார்?
(சாகரன்)
என் இனிய
தாய் நிலமே!
தங்கி
நிற்க தனி மரம்
தேவை! தோப்பு அல்ல!!
(சாகரன்)
இலங்கையின்
7 வது பாராளுமன்றத்
தேர்தல்! நடக்கும்
என்றார் நடந்து
விட்டது! நடக்காது
என்றார் இனி நடந்துவிடுமா?
(சாகரன்)
வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010
(சாகரன்)
பாராளுமன்றத்
தேர்தல் 2010
தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி
1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்......
நடந்த
வன்கொடுமைகள்!
(fpNwrpad;> ehthe;Jiw)
சமரனின்
ஒரு கைதியின் வரலாறு
'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்...
மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும்
(சாகரன்)
இலங்கையில்
'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம்
(சாகரன்)
ஜனாதிபதி
தேர்தல்
எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்?
பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்
ஜனாதிபதித்
தேர்தல்
ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்)
சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள்
(சேகர்)
அனைத்து
இலங்கைத் தமிழர்களும்
ஒற்றுமையான இலங்கை
தமது தாயகம் என
மனப்பூர்வமாக
உரிமையோடு உணரும்
நிலை ஏற்பட வேண்டும்.
(m. tujuh[g;ngUkhs;)
தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா?
(சாகரன்)
ஜனவரி இருபத்தாறு!
விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....?
(மோகன்)
2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!!
'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்'
(சாகரன்)
சபாஷ் சரியான
போட்டி.
மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா.
(யஹியா
வாஸித்)
கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்!
(சதா. ஜீ.)
தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை
மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா?
(சாகரன்)
கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும்
(சாகரன்)
சூரிச்
மகாநாடு
(பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி
(சாகரன்)
பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!!
(மோகன்)
தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு
பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல்
(சாகரன்)
இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம்
(சாகரன்)
ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும்
(சாகரன்)
அடுத்த
கட்டமான அதிகாரப்பகிர்வு
முன்னேற்றமானது
13வது திருத்தத்திலிருந்து
முன்னோக்கி உந்திப்
பாயும் ஒரு விடயமே
(அ.வரதராஜப்பெருமாள்)
மலையகம்
தந்த பாடம்
வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.!
(அ.வரதராஜப்பெருமாள்)
|