Contact us at: sooddram@gmail.com

 

செய்தியும் சிந்தனையும் (7)

(அபிமன்யு)

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதாகவும், இந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து பொது மக்கள், பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களை இந்த மாத இறுதிக்குள் கூட்டமைப்பினரிடம் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகத்தில் 04 ஜூன் 2014 இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சிந்தனை

ஐயய்யோ! இந்தத் தமிழர்களின் மத்தியில் என்னதான் நடக்கிறது?. யாராவது சொல்லுங்களேன்!!.

கடந்த மாதம், இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கே வரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா தெரிவுத்துள்ளமை குறித்து அக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோது, “அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள்  நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம்” என இரா சம்பந்தன் ‘காட்டமாகத்’ தெரிவித்தார் என்ற செய்தி வந்தது.

“உரிய பதிலடியாக” குறிப்பாக என்ன “நடத்தை” கூட்டணித் தலைவர் இரா, சம்பந்தன் எடுக்கப்போகிறார் என ஆவலுடன் விசாரிக்க முற்பட்டபோது, அவர் இந்தியாவில் வசிக்கும் தன் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த “நடத்தையை”த்தான் “உரிய பதிலடி” என்று அவர் எண்ணிச் சொல்லியிருப்பாரோ என ஐயம் கொண்டபோது, இப்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன்: “நாங்கள் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்திற்குச் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து பொது மக்கள், பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களை என்ன?” என்று தெரிவிக்கும்படியும், அதுவும் “இந்த மாத இறுதிக்குள்”  சமர்ப்பிக்குமாறும் கேட்கிறார்! தயவுசெய்து எல்லோரும் கவனத்தில் கொள்ளுங்கள்: இந்த மாதம் முடிய இன்னமும் மூன்று வாரங்களே இருக்கின்றன!.

 

அன்பார்ந்த, அறிவுவாய்ந்த தமிழ்மக்களே! மாண்புமிக்க சுரேஸ் பிரேமச்சந்திரன் கடையை விரித்து விட்டார். உங்கள் திட்டங்களை உடனே போடுங்கள்!. இந்தச் சந்தர்ப்பம், ‘போனால் வராது பொழுது பட்டால் கிடையாது’!!.

என்றாலும், தவிர்க்க முடியாமல் சில சந்தேகங்கள்:

அப்படியானால், மாண்புமிக்க சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்,

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, ஏறத்தாழ 25 வருடங்களாக, தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஓடோடி வலம் வருகிறார்?

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகராகவும், அதன் ஊடகப் பேச்சாளாராகவும் செயற்படுகிறார்?

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, புலிகள் காலத்திலும், புலிகளின் பின்னரான காலத்திலும், தமிழர்களின் பிரதிநிதியாகச் கொழும்புப் பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கிறார்?

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, வெளிநாடுகள் பலவற்றுக்கு பலதடைவைகள் திக்விஜயங்கள் செய்து, வெளிநாட்டு அரசியல் அதிகாரிகள் புலம்பெயர்நத தமிழர்கள், மற்றும் தமிழ் அமைப்புகளுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டிருப்பதாக இத்தனை வருடங்களாக அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருக்கிறார்?

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, ரி.என்ஏ.யினர் வடமாகாணசபைத் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் “தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமைய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது” என்று எழுதியிருந்தனர்? –அந்தப் பிரமாண்ட ஆணைதான் என்ன? அந்த ஆணை என்னவையிற்று?.

  • ஒருவேளை அநத ஆணையே என்ன என்று தெரியாமல்தானா அந்த “அரசியல் ஆணைக்கு அமைய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற்படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது” என அந்த்த் தேரதல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்?

  • தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ‘உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள்’ என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாமலா, சமீபத்தில் நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தல்களில்கூட, தமிழர்கள் தம் அரசியல் உரிமைகளைப் பெற, அவர்களது இன்னல்களைத் தீர்க்க வாக்குகளை வாரி வழங்குங்கள் என்று கோரினர்?

  • உங்களுக்கென்று ஒரு தீர்வுத்திட்டம் இல்லாமலேயா, நீங்கள் கேட்பவையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுக்கமாட்டாது என்று பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபெறும் அழைப்பை நிராகரிக்கிறீர்கள்?–இல்லாததை எப்படிக் கொடுக்கமுடியும்?

  • பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றும்படி மகிநத ராஜபக்சாவின் அழைப்பதன் நோக்கம், காலத்தை வீணாக இழுத்தடிப்பதோடு, இப்பொழுது அவருக்கு இருக்கும் சர்வதேச அழுத்தங்களை மழுங்கடிக்கும் நோக்கமே என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், தென்னாபிரிக்க அரசின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்கள் மட்டும் ஏன் அந்த நோக்கத்தைக் கொண்டதாக இருக்கக்கூடாது?.

ஒருவேளை கொழும்பில் பேச்சுவார்த்தை என்றால் எப்போதும் பார்க்கிற கொழும்புதானே, தென்னாபிரிக்காவில் பேச்சு வார்த்தைகள் என்றால் நல்ல விமானப் பயணமாகவும், அந்த நாட்டுக்குச் சுற்றுலா சென்றதாகவும் இருக்கும் என்றால் அதை நேர்மையாகத் தமிழ்மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே!.

ஒருவேளை ரி.என்.ஏ.யினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலர் பல்வேறுவிதமாகவும் ஒன்றுக்கொன்று முரணாகவும், தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதான கட்சிக்கு வேண்டிய ஒழுங்கு முறைமைகளையெல்லாம் மீறிப் பேசியும் அறிக்கைகள் விடுத்தும்  வருவதனால், தன் பங்குக்கு தானும் ஏதாவது “கெட்டித்தனமாகச்” சொல்லவேண்டுமென்று எண்ணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்மக்களை முட்டாள்களாக்கும் பணியைத் தொடர்ந்தும் தீவிரமாகச் செய்ய முடிவுகட்டிவிட்டாரோ?

யாருடையோ அறிவு நிச்சயம் கேள்விக்குறிக்கு உள்ளாகிறது!—அது சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிவா? அல்லது அவரையும், அவரைப் போன்றவர்களையும் நம்பி,  தப்பாது தொடர்ந்தும் கேள்விகளின்றித் தேர்ந்தெடுக்கும் தமிழ் மக்களின் அறிவா?

இப்பொழுதுதான் “எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட – தமிழ்மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கூடிய – தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து முன்வைக்க நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றால், இதுவரை உங்களிடம் அப்படி ஒன்றும் இல்லாமலா இருந்தீர்கள்?. இதுவரை நீங்கள் சமர்ப்பித்ததாகக் கூறி வந்த தீர்வுத்திட்டம் மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கவில்லையா?–அப்படி மக்கள் கருத்தைப் பிரதிபலிக்காத தீர்வுத் திட்டத்தைதானா இதுவரை தூக்கித் திரிந்தீர்கள்?.

“கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன” என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். –அந்தத் தீர்வுத்திட்டந்தான் என்ன?, யார் யார் என்ன விமர்சனம் வைத்தார்கள்?, அவற்றிற்கும் மக்கள் தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த ஆணைக்கும் என்ன வேறுபாடுகள்?

இப்பொழுது மட்டும் –அதுவும் முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், ‘தனித் தமிழ் ஈழந்தான் தான் மாற்றில்லை’ என்று ஒரு சாராரும், ‘‘Federalism , Confederation’ என்று இன்னொரு சாராரும், ‘ஆரம்ப கட்டமாக 13வது திருத்ததை அடிப்படையாக வைத்து இந்தியாவின் அனுசரணையுடன் அரசியல் உரிமைகளைப் பெறுங்கள்’ என்று வேறொரு சாராரும், ‘இல்லை 13வது திருத்தம் உதவாது’ என மற்றொரு சாராரும், ‘புலிகளை முறியடித்த இந்த மகிந்த ராஜபக்சாவையும் இதர இராணுவ அதிகாரிகளையும் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்துவதே முக்கியம்’ என்று ஒரு சாராரும், ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்லி வருகிறார்கள். போதாததிற்கு ரி.என்.ஏ.யினரும், தலைமைத்துவம் தாங்கி மக்களை வழிநடாத்தாமல் தாங்களும் ஏதாவது ஒரு கோஷ்டயிலோ அல்லது வசதியாக எல்லாக் கோஷ்டிகளுடனுமோ சேர்ந்து கூடிப் பிதற்றுகிறார்கள். இன்றைய நிலைமையில் அனைத்துத்தரப்ப்பினரும் இணக்கப்பாடான ஒருமித்த தீர்வுத் திட்டத்தை எதிர்பார்ப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மூளைக்கு அப்பட்டமான முட்டாள்தனமாகத் தெரியவில்லையா?

“பொதுமக்கள், பொது அமைப்புக்கள் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் தமது கருத்துக்களை இந்த மாத இறுதிக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அச்சுவேலிக்கிளையிலும், மார்ட்டின் வீதியிலுள்ள தலைமையகத்திலும் அபிப்பிராயங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும், இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு மின்னஞ்சல் வசதியும் ஏற்படுத்தியுள்ளதாக” மாண்புமிகு சுரேஸ் பிரேமச்சந்திரன் வேறு தெரிவித்துள்ளார்.

என்னே மக்கள் கருத்துப்பால் உள்ள அவரது கரிசனை!

அச்சுவேலி, யாழ்மையப் பகுதிகளுக்கு அப்பால் வன்னி கிளிநொச்சி, மற்றும் கிழக்கில் வாழும் ஏழைகளையும், பல்வேறு பாட்டாளி மக்களையும், அச்சுவேலிக் கிளைக்கும்,  மார்ட்டின் வீதிக்கும் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க வரும்படி அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்குமபடி கூறியிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் புத்திதீட்சண்யத்தை, அறிவுக்கூர்மையை, மக்கள்பால் உள்ள அன்பை, ஈடுபாட்டை,  மக்களை வழிநடாத்தும் தலைமைப்பாங்கை மிக மெச்சாமல் இருக்க முடியவில்லை!.

–இப்படியான ஒருவர், இவரைப் போலவே பலரை, தமிழினத்தைக் காக்க வந்த,  காக்க வல்ல ரட்சகர்கள் எனத் தமிழ்மக்கள் நம்புவதை யாருடைய தலவிதி என்று கூறுவது?

வேறு விசேஷமாக ஒன்றுமில்லை, இதுவெல்லாம் அடுத்த தேர்தலுக்கான முஸ்தீபுகள்!. தமிழர்களின் தொடர்ந்த வீழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பவை!!.

அண்மையில், இலங்கையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய பிரமுகரிடம் கேட்கப்பட்ட கேள்வி-

“தமிழர்களின் இனப்பிரச்னைக்கும் இன்னல்களுக்கும் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?”.

அவரால் கூறப்பட்ட பதில்–

“நாம் தேர்தலை எதிர்கொண்டு சிங்கள அரசாங்கத்திற்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்கத் தயாராக உள்ளோம்”.

–தமிழ்மக்களே! நீங்களும் உங்கள் அரசியல் கோரிக்கைகள், இன்னல்கள், தொல்லைகள், துயரங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, உங்களை வழிநடாத்தும் இத்தகைய தலைவர்களை, எதுவித விமர்சனங்களுக்கோ, கேள்விகளுக்கோ உட்படுத்தாமல், நிராகரிக்காமல், உங்களை ‘மேய்ப்பவர்களை’ அடுத்து வரும் தேர்தல்களிலும் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதற்குத் தயாராகுங்கள்!.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com