Contact us at: sooddram@gmail.com

 

செழியன்

தெளியவும் வேண்டும்! தெரியவும் வேண்டும்!!

நீண்ட நாட்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம். பல தடவை இது பற்றி எழுத நினைத்துத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்து விட்டேன் .இப்படியான பொய் கக்கும் தகவல்கள் கசிந்து ....எமது போராட்ட வரலாறு திரிபு படுத்தப்பட்டு புதிய சந்ததியினரைச் சென்றடையும்போது அது எவ்வளவு மோசமான நம்பிக்கையீனத்தை அவர்கள் மத்தியிலே உருவாக்கும் என்பதை மனதில் இருத்தி, வரலாறு படைப்போர் நேர்மைகொண்டு ,புனைவுகள் இன்றி நடந்த உண்மைகளையே மக்கள் முன் வைப்பார்களாக 'ஈழப்போராட்ட நாட் குறிப்புகளாக செழியன் எழுதியுள்ள ,"வானத்தைப் பிளந்த கதையில் வரும் ஒரு பொய்யான பகுதியைப் பார்த்ததும் திகைத்துவிட்டேன் .ஏனென்றால், அவர் குறிப்பிடும் சம்பவத்தில் நேரடியாகக் கலந்துகொண்டோரில் நானும் ஒருத்தி. நேரடிச் சாட்சிகளில் பலர் இன்னும் உயிருடனுள்ளனர்.

 இனி அவர் எழுதியதற்கு வருகின்றேன், இது இப்புத்தகத்தின் 19ம் பக்கத்தில் ஆரம்பிக்கிறது , '"ஒரு நாள் திடீரென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணிவகுத்து எனது வீட்டைத் தாண்டி மயானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து மயானத்துக்குச் சென்றேன். அவர்கள் பொன்.சிவகுமாரனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் "தமிழ் இளைஞர் பேரவையினர் "என்றும் ,அதன் தலைவர் சந்ததியார் என்றும் தெரியவந்தது. அவர்கள் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியபின் ,"தமிழ் ஈழமே இனி நமது இறுதி முடிவு 'என்று எழுதப்பட்ட காங்கேசன்துறை இடைத்தேர்தலின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்துக்காகக் கால் நடையாக முற்றவெளிக்குச் செல்லுகின்றார்கள் என்றும் சந்ததியாரின் பேச்சில் இருந்து தெரியவந்தது.

மந்திரம் சபிக்கப்பட்ட ஒருவனைப் போல அவர்களைப் பின் தொடர்ந்தேன். மேலும் சந்ததியார் புராணம் பாடிக்கொண்டே போகும் இவர் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டுகின்றார் கணக்கு வழக்கின்றி. முதலில் இளைஞர் பேரவைத் தலைவர் சந்ததியார் என்று குறிப்பிடுவதே மிகத் தவறானதாகும். சந்ததியார் அப்போது வட்டுக்கோட்டைத் தொகுதி இளைஞர் பேரவையின் ஒரு உறுப்பினர் மட்டுமே சந்ததியாரின் தலைமையில் அந்த ஊர்வலம் நடக்கவும் இல்லை ..1975 ஜனவரி 10ம் திகதி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட ஒன்பது பேர்களுடைய முதலாவது நினைவு நாள் .அந்த நாளில் நினைவுப் பேரணி ஒன்றை நடத்த தமிழ் இளைஞர்பேரவை தீர்மானித்தது .இந்தப் பேரணி சிவகுமாரனின் இறுதி நிகழ்வுகள் நடந்த உரும்பிராய் மயானத்தில் இருந்து , வரதராஜப்பெருமாளின் தலைமையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருதது. பேரணியைத் தொடர்ந்து ,ஒரு பொதுக் கூட்டமும் நடத்துவதாக முடிவு செய்திருந்தோம். கூட்டத்துக்கான அனுமதியைப் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஆரியசிங்கவிடம் அமிர்தலிங்கம் பெற்றுத்தந்தார். ஆனால், பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அமிர்தலிங்கம் கூட்டம் மட்டுமே நடைபெறும் என்று ஆரியசிங்கவிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனாலும்,இளைஞர் பேரவையினர் தடையை மீறிப் பேரணியை நடத்துவதில் உறுதியாயிருந்தனர். அதைச் செயலிலும் காட்டினர். பேரணி நடந்துகொண்டிருக்கும் போதே , இன்ஸ்பெக்டர் ஆரியசிங்க அமிர்தலிங்கத்துடன் தொடர்புகொண்டும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.உடனே அமிர்தலிங்கம் ,எஸ்.ஜே. வி. செல்வநாயகம் அவர்களையும் அழைத்துக்கொண்டு , பேரணி நடந்துகொண்டிருந்த இடத்துக்கு மிகவும் கோபத்துடன் வந்துசேர்ந்தார் பேரணியை நிறுத்தும்படி சத்தமிட்டவாறே எல்லோரையும் கடிந்துகொண்டார். வரதராஜப்பெருமாளுக்கும் ,அமிர்தலிங்கத்துக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. வரதராஜப்பெருமாள் கட்டாயப்படுத்தப்பட்டு, அமிர்தலிங்கத்தின் காரில் ஏற்றப்பட்டார். பேரணி நிறுத்தப்பட்டது .இதை என்,"அகாலம்' புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

‘சின்னத்தம்பி இந்தக்காருக்குள் ஏறுங்கள்’ என்று செழியனிடம் அமிர் அவர்கள் சொன்னதாக இன்னொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார் .கடும் கோபத்தில் இருந்த அமிர்தலிங்கம் இப்படிச் சொல்லும் நிலையில் அப்போது இல்லை. பக்கத்தில்தானே நாம் நின்றிருந்தோம் சந்ததியாருக்கும், ஆரியசிங்கவுக்கும் இடையில் ஒருமொழிபெயர்ப்பாளர் அமர்த்தப்பட்டதாக இன்னோர்பென்னாம்பெரிய கற்பனை ! வரதராஜப்பெருமாளின் தலைமையிலேயே அன்றைய பேரணி நடத்தப் பட்டதென்பதைத் திரும்பவும் ...மிகத்தெளிவாக இங்கு பதிய விரும்புகின்றேன். எழுந்தமானத்துக்கு வரலாறு என்ற பெயரில் தவறான செய்திகளைத் தந்து மக்களைக் குழப்பவேண்டாம் என செழியன் போன்றோரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

(இந்த வெளியீட்டுக்கான தலையங்கம் மட்டும் சாகரன் வழங்கினார். ஏனைய விடயங்கள் புஸ்பராணி இன் நேரடி இடுகைகள் ஆகும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com