Contact us at: sooddram@gmail.com

 

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது சிறந்தது?

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்துக்கு இம்மாதம் (யூன் -2014) 12ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. கத்லீன் வைன் அம்மையார் (Kathleen Wynne)  தலைமையிலான லிபரல் கட்சியின் (Liberal Party)  சிறுபான்மை அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கி வந்த அன்றியா கோவாத் (Andrea Howath)  அமை;மையார் தலைமையிலான நியு டெமக்கிறாற்றிக் கட்சி (New Democratic Party) தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் (வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மறுத்ததால்) இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

உண்மையில் இது தேவையற்ற, பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒரு தேர்தலாகும். என்.டி.பி கட்சி அரசியல் சுயநலம், பதவி ஆசை மற்றும் காழ்ப்புணர்ச்சி என்பன காரணமாக ஓரளவுக்கு சாதாரண பொதுமக்களுக்கு நன்மை அளித்த லிபரல் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மறுத்து இத்தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

உண்மையில் இத்தேர்தலில் பிரதான போட்டி வைன் அம்மையார் தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ரிம் குடாக் (Tim Hudak) தலைமையிலான புரொக்கிறேசிவ் கொன்சர்வேர்டிக் (Progressive Conservative) கட்சிக்கும் இடையிலேயே நிலவுகின்றது. இந்த நிலைமையில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுவது சகஜம்.

கொன்சர்வேட்டிக் கட்சிதான் மத்தியிலும் பிரதமர் ஸ்ரீபன் கார்பர் தலைமையில் ஆட்சியில் இரு தடவைகளாக இருந்து வருகின்றது. அந்த அரசு இந்ந நாட்டில் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராகவும், சாதாரண தொழில் புரியும் மக்களுக்கு எதிராகவும் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், இயற்றுகின்ற சட்டங்களையும் அனைவரும் அறிவர். மறுபக்கத்தில் பெரும் கோப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகளுக்குச் சார்பாகவே காபரின் அரசு செயற்படுகின்றது. அதே கொள்கைதான் குடாக் தலைமையிலான ஒன்ராறியோ கொன்சர்வேடிக் கட்சியின் கொள்கையுமாகும்.

அதுதவிர, ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஒரு இலட்சம் அரச ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு, தனியார் துறையில் அதைவிடக் கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக குடாக் சொல்கிறார். இது பொதுத்துறையை அழித்து முதலாளிகளுக்கு உதவும் திட்டம் என்பது ஒருபுறமிருக்க, நடைமுறையில் சத்தியப்படாத ஒன்றுமாகும். எனவே குடாக் தலைமையிலான கொன்சவேர்டிக் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

இன்னொரு புறத்தில் என்.டி.பி கட்சியை எடுத்துக்கொண்டு பார்த்தால், கடந்த காலங்களில் தொழில் புரியும் மக்களும், தமிழ் மக்கள் உட்பட பல்வேறு வந்தேறு குடிகளும் அக்கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் அக்கட்சி அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் சுயநலம் காரணமாக தனக்கு வாக்களித்து வந்த மக்களின் எதிர்பார்ப்பைச் சிதறடித்துள்ளது. தனது அரசியல் கொள்கைத் திட்டத்தில் இருந்த 'சோசலிசம்' என்ற சொல்லைக்கூட அது அகற்றியுள்ளது. அதிலிருந்து அது யாருக்குச் சேவை செய்ய விரும்புகின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

என்.டி.பியின் தவறான போக்கிற்கு அது ஒன்ராறியோ லிபரல் அரசாங்கத்தைக் கவிழ்த்ததே சான்று. தற்செயலாக இந்தத் தோதலில் வலதுசாரி கொன்சவேர்டிக் கட்சி வெற்றி பெற்று அதனால் ஒன்ராறியோவின் சாதாரண மக்களுக்கு பாதகங்கள் ஏற்பட்டால், அதற்கு என்.டி.பி கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே இன்றுள்ள நிலைமையில் இந்த மூன்று கட்சிகளிலும் ஓரளவு முற்போக்கானதும், நடைமுறைச் சாத்தியமானதுமான கொள்கைகளைக் கொண்ட வைன் அம்மையாரின் தலைமையிலான லிபரல் கட்சிக்கு வாக்களிப்பதே பயனுள்ளதும், புத்திசாலித்தனமானதுமாகும். அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் மத்தியிலும் லிபரல் கட்சி அரசாங்கமே அமையக்கூடிய வாய்ப்பிருப்பதால், ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் அக்கட்சி பெறுவது கூடுதலான பயனள்ளதாக இருக்கும்.

தமிழர்கள் தமது இனத்தவர்கள் போட்டியிடும் கட்சிக்கு வாக்களிப்பதுதான் சிறந்தது என்ற தவறான கருத்தை விடுத்து, சரியான கொள்கைகளுக்காக வாக்களிக்க வேண்டும். அதுவே கனடாவின் ஜனநாயகத்தைச் சரியாகப் புரிந்து செயல்படும் முறையாகும்.

(மாற்றுச் சிந்தனையாளர் குழாம் - கனடா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com