Contact us at: sooddram@gmail.com

 

தோழர் றொபேட் குறுகிய எல்லைகளை கடந்து மக்களை நேசித்தவர் தோழர் றொபேட் (தம்பிராஜா சுபத்திரன்) 11வது ஆண்டு நினைவாக 14.06.2014

தனது இளமைக்காலத்திலேயே தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற ஒடுக்குமுறைகள், அநீதிகள், பாரபட்சங்கள் குறித்தும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடப் பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் தோழர் றொபேட் தனது நண்பர்களோடு சேர்ந்து சிந்திக்கவும், செயற்படவும் தலைப்பட்டார். எல்லாகாலங்களிலும் விடலைபருவத்தினரிடையே காணப்படும் குறும்புகள், குசும்புகளுக்காக தோழர் றொபேட்டும் அவரது நண்பர்களும்  ஊரிலுள்ள பெரியவர்களால கடிந்துகொள்ளப்பட்ட காலங்களும் உண்டு. ஆனாலும், அவர்கள் காட்டிய சமூக அக்கறை, கருணை அவர்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது. தனது நண்பர்களில் மிகவும் இள வயதினரான தோழர் றொபேட் அரசியல் ஈடுபாட்டில், சமூக அக்கறையில் மற்ற எல்லோரையும் விடவும் முதிர்ச்சி உடையவராக அவர்களுக்கு வழிகாட்டியாக ஆகியிருந்தார்.
1980 – 81 காலப்பகுதியில் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தோற்றமும், அந்த இயக்கங்கள் இளைஞர்களை அணிதிரட்டும் பணிகளும் வேகம் எடுத்திருந்தன. இந்த காலத்தில் தோழர் ரொபேட்டுக்கு ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் தொடர்பும், அவர்களின் அரசியல் வகுப்புக்களில் பங்குபற்றும் வாய்ப்பும் கிட்டியிருந்தது. மாக்ஸிய, லெனினிய தத்துவத்தை வழிகாட்டும் கோட்பாடாக கொண்டிருந்தமை, பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள், சமூகத்தில் நிலவிய பாரபட்சங்களை இல்லாதொழித்து சமூகமாற்றத்தை வலியுறுத்தும் கருத்துக்கள். தமிழர்கள் இன ரீதியாக முகங்கொடுத்து வந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் அதேவேளை வர்க்கரீதியான விடுதலையையும் சாத்தியமாக்கும் பாட்டாளி வர்க்கத் தலைமையை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் அக்கறையை வெளிப்படுத்திய ஈபிஆர்எல்எவ் இன் கருத்துக்கள் அவரை ஈர்த்திருந்தன.
தலைமறைவு இயக்கம் ஒன்றின் தேவைகளை புரிந்துகொண்டு ஆரவாரமின்றி அவர் செயற்பட்ட விதம், கருத்து ரீதியான தெளிவும், பிடிப்பும், தலைமறைவு இயக்கம் ஒன்றின் இரகசியம் பேணல், பாதுகாப்பு என்பவற்றில் காட்டிய கரிசனை, வேலைதிட்டங்களை நிறைவேற்றுவதில் வெளிப்படுத்திய ஆற்றல் அவரை தலைமை ஸ்தானத்திற்கு உயர்த்தியது.
தோழர் றொபேட் கட்சியின்  எந்தப் பணியையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு, அந்தப் பணியை இதர தோழர்களையும் இணைத்துக்கொண்டு திறம்பட செய்து முடிப்பதில் வல்லவராயிருந்தார். கட்சியில் கடினமான பணிகளை பிறரிடம் சுமத்திவிட்டு லேசான பணிகளை தனக்கு எடுத்துக்கொள்ளும் குணாம்சமும் தோழர் றெபேட்டிடம் இருக்கவில்லை. அவர் சகதோழர்களோடு இன்பத்திலும், துன்பத்திலும் நெருக்கடிகள் மத்தியிலும் சேர்ந்திருந்து பணிகளை மேற்கொள்வார். தோழர்கள் கட்சி பணிகளில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும என்பதை வலியுறுத்திய அதேவேளை சக தோழர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளிலும் உண்மையான அக்கறை செலுத்தினார்.
தோழர்களின் ஆற்றல்களை கணிப்பிடுவதில் அவர் வல்லமை மிக்கவராயிருந்தார் யாரிடம் எந்த வேலையை ஒப்படைப்பது என்பதை கணிப்பிட்டு ஒப்படைத்ததன் மூலம் கட்சி நன்மையடைந்தது. ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என கருதப்படும் பொருத்தமானவர்களிடம் வேலைகளை வழங்குவதையும், அவ்வாறு வழங்கப்பட்ட வேலைகளை செயற்படுத்தப்பட்டிருப்பது குறித்து கண்காணிப்பதையும் நடைமுறையாகக் கொண்டிருந்தார். இதனால் சக தோழர்களின் உழைப்பை ஸ்தாபனத்திற்குப் பலம் சேர்ப்பதற்கும், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார். வாய்வீச்சுக்காரர்களின் குணாம்சத்தை புரிந்துகொண்டு நெருங்கிச் செயற்பட்டார். எனவே, அவர்களது வாய்சவடால்களுக்கு அவர் ஒருபோதும் பலியாகவில்லை. ஒவ்வொரு தோழர்களின் தனிப்பட்ட வாழ்விலும் அவர் அக்கறை கொண்டிருந்தார் ஆனால், எப்போதும் கட்சியின் நலனை, மக்களின் நலனையே முதலிடத்தில் வைத்தார். கட்சியின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருளாதார திட்டங்களுக்கே முன்னுரிமை அளித்தார். தோழர்களின
் கூட்டு உழைப்பை மூலதனமாக வைத்து சாதித்தும் காட்டினார்.

அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவ பிரிவான மக்கள் விடுதலைப் படையில் பொறுப்பான பதவிகளை வகித்திருக்கிறார். காத்திரமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கட்சியின் மத்திய குழு, அரசியல் பீடம் என்பவற்றில் நீண்டகாலம் அங்கத்துவம் பெற்றிருக்கிறார். அவரால் இயக்கத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள், ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர்களின் தலைமையின் கீழ், பின்னர் செயற்பட நேர்ந்தபோதும் அவர் அதையிட்டு சஞ்சலம் அடையவில்லை. கட்சியின் எல்லா முடிவுகளையும் மனமுவந்து ஏற்று செயற்பட்டார். ஒருபோதும், கட்சிக்குள் சக தலைவர்களை அவர் போட்டியாகக் கருதியதில்லை மாறாக தனது ஆளுமையின் மூலம் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தார். நன்மதிப்பை பெற்றார்.
அவர் எனது ஊர், எனது பிரதேசம், எனது இனம் என்ற குறுகிய எல்லைகளை கடந்து நின்றே கடமையாற்றினார். அவரிடம் எந்தக்காலத்திலும் பிரதேச வாதம் குடிகொண்டதில்லை. அவருக்கு கீழ் கட்சிப்பணியாற்றிய தோழர்களிடமும் அவர், அத்தகைய பிற்போக்குத்தனங்கள் அண்டவிடவில்லை. பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் ஏனைய பிராந்தியங்களுக்கே முன்னுரிமையளித்தார். அவர் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சக இயக்கப் போராளிகள் அனைவரோடும் இணைந்து கைதிகளின் நலன்களுக்காகச் செயற்பட்டார்.
யாழ் மாநகர சபை உறுப்பினராக சுமார் 5 வருடங்கள் செயற்பட்ட தோழர் றொபேட் அங்கு ஆளும் கட்சியாயிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனும், மாநகரசபையில் பிரதிநிதித்துவம் வகித்த ஈ.பி.டி.பி., புளொட் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களுடனும், அதிகாரிகளுடனும் ஒத்துழைத்து மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டார்.
இன்று உள்ளுராட்சி சபைகளில் ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மைப் பலம் பெற்றிருப்பினும் ஆழும் கட்சி உறுப்பினர்களுக்குள்ளேயே தலைதூக்கியுள்ள உட் பூசல்களும், குரோதங்களும், குழறுபடிகளும் உள்ளுராட்சி மன்றங்கள் பல மக்களுக்கு கிரமமாக சேவைகளை வழங்க முடியாத நிலையில் முடங்கிப்போயிருப்பதை காண்கிறோம்.
தோழர் றொபேட் யாழ் மாநகரசபை உறுப்பினராயிருந்த போது ஆளுங்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி 9 ஆசனங்களை மட்டும் கொண்டிருந்தது. எதிர்க்கட்சி வரிசையில் ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகள் 14 ஆசனங்களை கொண்டிருந்தன.  சபையின் பதவிக் காலத்தில் சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன், நடராஜா ரவிராஜ், செல்லன் கந்தையா ஆகிய நான்கு மேயர்கள் பதவி வகித்தார்கள், உள்ளுராட்சி மன்றங்களை செயலிழக்கச் செய்யும் நோக்கில் இரண்டு மேயர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு பலத்த அச்சுறுத்தல் நிலவியபோதும் எந்த விதத்திலும் மாநகர சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து செயற்பட்டதை அனைவரும் அறிவர். காலஞ்சென்ற ரவிராஜ், முன்னாள்
மேயர் செல்லன் கந்தையன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் தங்கமுகுந்தன் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் இந்த சபையில் தோழர் றொபேட்டின் பங்களிப்பை பல சந்தர்ப்பங்களில் நினைவுகூர்ந்ததை காணமுடிந்தது.
துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட உன்னத தலைவர்கள், போராளிகளின் மறுபக்கம் எமது சமூகத்தின் கண்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டது. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அனைவருமே துரோகிகள் என தமிழ் சமூகம் கற்பிதம் செய்துகொண்டது. இது படுகொலைகள் மேலும் அதிகரிக்க வழிவகுத்தது. சமூக அக்கறையும் ஆற்றலும் உள்ள தமிழ் மக்களின் சுபிட்சமான எதிர்காலத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த பலரை அழித்தொழித்து அந்த வெற்றிடத்தை பச்சை அயோக்கியர்களை கொண்டு இட்டுநிரப்பி புலிகள் இழைத்த பெருந்தவறும், அதனை கண்டும் காணமலிருந்த தமிழ் சமூகமுமே இன்று தமிழ் மக்களின் அவல நிலைக்கு காரணகர்த்தாக்களாவர்.
தோழர் றொபேட் நெருக்கடியான காலகட்டங்களில் ஒதுங்கிநின்று, சுமுகநிலை உருவானபோது அரசியலில் முன்னரங்கிற்கு வந்த ஒருவர் அல்ல. தோழர் றொபேட் 24.12.1957 இல் பிறந்தவர். இந்த மண்ணில் 46 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த அவர் 2003 யூன் 14 அன்று புலிகளால் படுகொலை செய்யப்படும் வரை ஏறத்தாழ 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மனித சமூகத்தின் சுபிட்சமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்போடு, அயராது உழைத்தவர். அவரது சிந்தனைகளை உள்வாங்கி, அவரது நடைமுறைகளை பின்பற்றி அவர் எந்த இலட்சியத்திற்காக உண்மையாகவும், உறுதியாகவும் கட்சியின் நலனையும், மக்களின் நலனையும் மனங்கொண்டு செயற்பட்டாரோ அந்த இலட்சியத்திற்காக அவரது வழியில் செயற்படுவதே அவரை நேசிப்பவர்களின் கடமையாகும். அவருக்கு செய்யும் அர்த்தமுள்ள அஞ்சலியாகும்.

(மோகன்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com