|
||||
|
‘அபிமன்யு
பதில்கள்’
புத்தக வெளியீடு
– முன்னுரை
கண்ணோட்டம் பத்திரிகையில்
மே 2007 இலிருந்து
டிசம்பர்
2012 வரை வெளியிடப்பட்டஅபிமன்யு
பதில்கள்
பகுதி மொத்தமாக முப்பது தொகுப்புக்கள்
இந்நூலில்
உள்ளன. இதில்ஒரு சில பகுதிகள் கண்ணோட்டம்
வெளிவராமையினால்
வெளியிடப்பட
முடியவில்லை
எனநம்புகின்றேன்.
இந்த கேள்வி பதில்
பகுதியில்
அங்காங்கே
கலை, இலக்கியம்,
சினிமா விளையாட்டு
எனதொடப்பட்டு
இருந்தாலும்
பிரதானமாக
மேற்குறிப்பிட்ட
கால பகுதியில்
தமிழ் பேசும்மக்களின்
அரசியல் போக்கு மற்றும் நிலவி வந்த
சிந்தனைகள்
தொடர்பாக
எழுந்த நியாயமானகேள்விகள்,
வாதப்பிரதிவாதங்களை
விளங்கிக்கொள்ள
முயல்வோருக்கு
ஒரு சாளரமாக
இப்பதிவுகள்உள்ளன.
வரலாறு என்பது
தொடர்ச்சியானது எப்பொழுதும்
கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும்
எதிர்காலத்திற்கும்
தொடர்பு இருந்துகொண்டே
இருக்கும்
எனினும் வரலாற்றுபோக்குகளை
கட்டங்களாக
பிரித்து
பார்க்கலாம்.
தமிழ் பேசும் மக்களின் போராட்டம்
1940 களிலிருந்து
கிட்டத்தட்ட
ஏழு தசாப்தங்களாக
நடைபெற்று
வருகின்றது
என்றுபொத்தாம்பொதுவாக
கூறப்பட்டாலும்,
இக்காலகட்டத்தை
இரு பெரும்
கூறுகளாக
பிரிக்கலாம்.
1990 வரையான தமிழரசு கட்சிக்காலம்
இதில் 1950 களின் நடுப்பகுதியிலிருந்து
1990 வரை தமிழரசு
கட்சியும்
அதன்இன்னுமொரு
வடிவமான தமிழர் விடுதலை கூட்டணியும்
அதன் தலைவர்களது
சிந்தனை ஓட்டங்களும்தமிழர்
அரசியலில்
செல்வாக்கு
செலுத்தியது
எனலாம். இந்தக்கால கட்டத்தின்
முக்கியஅம்சங்களை
சுருக்கமாக
பின்வருமாறு
கூறலாம்.
1950 களின் நடுப்பகுதியில் தமிழரசு கட்சியின் தோற்றம்
அறுபது, எழுபதுகளில்நடைபெற்ற
சாத்வீக போராட்டங்கள்
அதற்கு எதிர்வினையாக
ஸ்ரீ லங்கா
அரசு மேற்கொண்டநடவடிக்கைகள்
ஆயுத எதிர்ப்பு
பற்றிய எண்ணங்கள்
ஆரம்பமாக
காரணமாயின.
இந்த காலகட்டத்தில்
பூகோள அரசியலில்
பனிப்போர்
ஒரு உக்கிரமான
கால கட்டத்தை
அடைந்த வேளையில்இந்திய
அரசும், ஜேஆர் தலைமையிலான
ஸ்ரீ லங்கா
அரசும் எடுத்துக்கொண்ட
முரண்படுநிலைகளே
தமிழ் போராட்டத்தையும்
அதனது இராஜ தந்திர
உள்ளடக்கத்தையும்
புதியபரிமாணங்களுக்கு எடுத்துசென்றது
இதன்விளைவாக 1985 இல்
திம்பு பேச்சு வார்த்தையில்
தொடங்கி
1987இல் இலங்கை
இந்தியஒப்பந்தமும்
அதன் விளைவாக
இலங்கை அரசியல் யாப்பில் தமிழ் பேசும்
மக்களின்அதிகாரப்பகிர்வு
தொடர்பான
13வது திருத்தமும்
ஏற்ப்படுத்தப்பட்டன.
தமிழ் பேசும்மக்களுக்கு
மனப்பூர்வமான
திருப்தியை
கொடுத்ததோ
இல்லையோ அதுவரை நடைபெற்றபோராட்டத்தின்
பயன் – நிகர
இலாபம் -அவ்வளவு தான். அது வரை நடைபெற்ற
போராட்டம்சாதித்தது
இது ஒன்றைத்தான்.
இந்த அதிகார
பரவலாக்கலுக்கான
அரசிலமைப்பு
மாற்றத்தின்
சிற்பிகள்
தமிழர் விடுதலைகூட்டணி
தலைவர்களான
திருவாளர்கள் அமிர்தலிங்கம்,
சிவசிதம்பரம்,
இராஜவரோதயம்சம்பந்தன்,நீலன் திருச்செல்வம் ஆனந்தசங்கரி போன்றவர்களே. ஏனைய
அரசியல்தலைவர்களிடமிருந்தும்,
அறிவுஜீவிகள்
மற்றும் சட்ட வல்லுனர்கள்
ஆகியோரிடமும்ஆலோசனைகள்
பெறப்பட்டு
இருப்பினும்
ஜேஆர் இனதும் இராஜீவ் காந்தியினதும்
நேரடியானநெறிப்படுத்துதலில்
அவர்களினது
ஆலோசகர்களால்
வடிவமைக்கப்பட்ட
இந்த பதின்மூன்றாவதுதிருத்த
ஆலோசனைகளில்
தமிழர் விடுதலை கூட்டணியினரின்
பங்கு மிக முக்கியமானது.
இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின்
விளைவாக இந்திய அமைதி படையினரின்
வருகையும்
வடக்குகிழக்கு
இணைந்த மாகாண தேர்தலும் அதில் EPRLF இன்
தோழர் வரதராஜபெருமாள்
தலைமையிலானமாகாண
அரசும் நிறுவப்பட்டன.
அதிகார பரவலாக்கலை
அர்த்தமுள்ளதாக
ஆக்க மாகாண
அரசுஎடுத்துக்கொண்ட
முயற்சிகள்
அதிகார பரவலாக்கலுக்கு
எதிரான பிரேமதாச அரசுடன்முரண்பாடுகளை
தோற்றுவித்தது.
இந்த பின்னணியில்
LTTE யினரும்
பிரேமதாசா
அரசும்இணைந்து
தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண
அரசை பலவீனமாக்கினர்.
அதனை தொடர்ந்துஇந்திய
மத்திய அரசில் ஏற்றபட்ட மாற்றம்,1990 இல் இந்திய அமைதி படையினரின்வெளியேற்றம்,
மாகாண அரசு கலைக்கபட்டமையுடன்
இந்தகட்டம்
முடிவுக்கு
வருகின்றது
இன்னும் ஐம்பது,
நூறு வருடங்களின்
பின்னராவது
எதிர்கால்
வரலாற்று
ஆசிரியர்கள்தற்போதைய LTTE யினரின்
பிரச்சாரங்களின்
ஆதிக்கத்திற்கு
வெளியே நின்று நிதானமாக பார்த்தால்
1990 ஆம் ஆண்டு
வரலாற்று
ஓட்டத்தின்
ஒரு முக்கியமைல்கல்லாகும்
என்பது உணரப்படும். இந்த காலப்பகுதியில் LTTE வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரம் பிரேமதாச அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான
மாகாண அரசை கலைத்து
இந்திய அரசை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி,
ஐக்கிய இலங்கைக்குள்
தமிழ் மக்களுக்கு
நியாயமான
தீர்வு அவசியம் என்றநிலைப்பாட்டை
கொண்ட பெரும்பாலான
சிங்கள மக்களை செயல் அற்றவர்களாக்கி அதன்
பின்னர் ஏற்பட்டஅனைத்து
அழிவுகளுக்குமான
ஆரம்பப் புள்ளியை இட்டு வைத்தமைதான்
என்பது துல்லியமாகஉணரப்படும்.
1990- 2009
வரையான புலிகளின்
காலம்-இருண்ட
காலம்
1990 இலிருந்து
2009 ம் ஆண்டு
வரையான கால கட்டத்தில்
நிர்ணயகரமான
சக்தியாகஇருந்தவர்கள்
LTTE யினரும் அதன் பங்காளிகளாக
இருந்த TNA எனும் தமிழ்
தேசியகூட்டமைப்பினரும்
என்பதில்
சாதாரண பொது அறிவுள்ள
எவருக்கும்
சந்தேகம்
இருக்கமுடியாது.
2012 ம்
ஆண்டுடன்
ஏறத்தாழ மூன்று வருடங்களின்
பின்னர் இன்னமும், பத்தொன்பதுவருடங்களாக
நடந்த இந்த பெரும் பிரளையத்தில்
எமது மக்கள்
இழந்தவை, அழிந்தவை, மீளப்பெற முடியாமற்போனவை
என எதனையுமே
நிதானமாக
கணித்துக்கொள்ள
முடியாமல்
உள்ளது. அதற்கு இன்னும்
பல வருடங்கள்
ஆகலாம்.
எமது மக்களுக்கு
நடந்த இப்பேரழிவுக்கான
புறக்காரணிகளை
இலகுவாக அடையாளம்கண்டுகொள்ளலாம். அல்லது
புறக்காரணிகளே
இந்த அனர்த்தத்தை
நடத்தி முடித்தன என்றுஎம்மை
நாமே திருப்திப்படுத்திக்கொண்டு
வரலாற்றின்
குருடர்களாகபல்வேறு நியாயப்படுத்தல்களையும் முன்வைத்துக்கொண்டு
இருப்பதுதான்
சுகமென்றால்
அவ்வாறுபயணித்துக்கொண்டே
இருக்கலாம்.
அவ்வாறு பயணிப்பவர்களை
யாராலும்
நிறுத்தவும்முடியாது
மாறாக இந்த
பேரனர்த்ததிற்கான
அகக்காரணிகள்
– தமிழ் பேசும் மக்களிடையேபுரையோடிப்போயிருந்த
போக்குகள்
– நிர்ணயகரமான
சக்தியாக
இருந்த LTTE யினதும் அதன்பங்காளர்களாக
இருந்த TNA போன்றவர்களினதும்
அடிப்படை
தவறுகள் என்ன? தார்மீக பொறுப்புக்கள்
என்ன? என்பதையும்நிதானமாக பகுத்தறிந்து
பார்ப்பது
சமூக அக்கறை
உள்ளவர்களின்
கடமையாகும்.
அது மாத்திரமில்லாமல்
இந்த பத்தொன்பது
வருடத்தில்
மேலாதிக்கம்
பெற்றிருந்தசிந்தனை
போக்கின்
பல கூறுகள்
பற்றிய முழுமையான
கிரகித்தலும்
அவசியமானதாகும்.
நாகரீகமான
வளர்ச்சியடைந்த
அரசியற் சிந்தனை போக்குகளையும் தமிழ் அரசியலில்
ஆதிக்கம்
பெற்றிருந்த
சிந்தனை பிறழ்வு நிலைமைகளையும்
நாம் நிதானமாக
வேறுபடுத்தி
பார்க்க வேண்டும்
அபிமன்யு பதில்கள்
எழுதப்பட்ட
காலகட்டமான 2007 இலிருந்து
2012 வரையான காலகட்டம்
தமிழ் பேசும் மக்களின் சமகால வரலாற்றில்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும்.
எதிர்காலத்தில் தமிழ்
பேசும் மக்களுக்கு
ஒரு கௌரவமான
வாழ்வை நிலை நாட்ட
விரும்பும்
இளைய தலைமுறையினனருக்குஇந்த
அனர்த்த காலங்களில்
எழுப்பப்பட்ட
நியாயமான
சந்தேகங்கள், LTTE சிந்தனை
ஓட்டம் எமது மக்களை
மீள முடியாத
பலவீனமான
நிலைக்கு
கொண்டு போவது மட்டுமல்ல
நினைத்து
கூட பார்க்க
முடியாத அளவு பேரழிவுக்கும்
வழி வகுக்கும்
என்று கூறப்பட்டவிடயங்கள்
எமது சமூகத்தினால் எவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டது என்பதையும் உணர்த்த இவ்வெளியீடு ஓரளவிற்கு உதவும்
உதாரணமாக 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாத கண்ணோட்டத்தில்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்
20 ஆம் ஆண்டு
நிறைவு பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் இவ்வாறு
முடிகின்றது
அப்பொழுதே,
“புலிகளே! மக்களே!
வேண்டாம்
இந்த வினை”
எனச் சொன்னோம்,
கத்தினோம்;
எழுதினோம்;
குமுறினோம்!. கேட்டார்களா?- ‘சனியன்’
பிடித்ததுபோல்
‘சன்னதம்’ ஆடினார்களே!-
இப்பொழுதும்
அனுபவிக்கிறோம்!
இவ்வாறான பதிவுகளும் எழுத்து
நடையும் இந்த இருண்ட
காலம் பற்றிய கிரகித்தலை
இலகுவாக்கும்,
வாசிப்போரின்மனங்களில்
பதிய வைக்கும் என்று நம்புகிறேன்
அபிமன்யு பதில்களின்
ஆசிரியர்
தோழர் சிவா; தமிழ்
பேசும் மக்களுக்கு
ஒரு கௌரவமான
தீர்வு வேண்டும் என்ற இலக்கு
வெறுமனே தமிழ் வீரம்
பற்றியதோ
அன்றேல் சிங்கள மக்களை பழி வாங்க
வேண்டும்
என்ற எண்ணத்தின்
அடிப்படையிலானதல்ல
மாறாக ஸ்ரீ லங்காவில்
வாழும் அனைத்து மக்களும் சமமாக கௌரவமாக
வாழும் செழுமையான
எதிர் காலத்தை உருவாக்குவது
– என்று அவாவி நின்ற
ஒரு செயற்பாட்டளர்.
இவர் நீண்ட
காலமாக,
1970 ஆம் ஆண்டுகளிலிருந்துமறைந்த
தலைவர்கள்
தமிழரசு கட்சி தலைவர்
கதிரவேற்பிள்ளை , EROS ஸ்தாபகர்
தோழர் ரட்ணா, தோழர்
நாபா, தோழர்
கேதீஸ் , தோழர் சுபத்திரன்
போன்றவர்களுடன்
நேரடியாக
பழகி நன்கு
பரிச்சயமானவர்,எமது போராட்ட வரலாறு பற்றிய ஆழ்ந்த அனுபவமும்
உண்டு. இந்த வெளியீட்டில் பல இடங்களில் தோழர் சிவாவினது
அனுபவ திரட்சியும்
தெளிவான
சிந்தனை போக்கும் பிரதிபலிப்பதை
அவதானிக்கக்கூடியதாக
இருக்கின்றது.
மறைந்த தோழர் உமாகாந்தன்
கூறியது போல “யாரும்
புத்தகம்
வெளியிடலாம்
ஆனால் எழுத்து என்பது இதயத்திலிருந்து
வருவது” இதற்கு எடுதுக்காட்டானது
சிவாவினது
எழுத்துக்கள்.
யாழ்
மேயர்
துரையப்பா
கொலை செய்யப்பட்டபோது
அரசியல் கொலைகளை எதிர்த்தவர்கள்
அன்றும் இருந்தார்கள்
தான் ஆனால்
கணிசமான தமிழர்கள்
இதனை ஏற்றுக்கொண்டார்கள்.
இது மறக்கப்பட
வேண்டிய வெட்க்கப்பட
வேண்டிய விடயமாக இன்று தெரிந்தாலும்
அதுவே அன்றைய யதார்த்தமாக
இருந்தது.
இந்த விடயம்
பற்றி 2008 ஆம் ஆண்டு
பெப்ரவரி
கண்ணோட்டத்தில்
எழுதும்போது
“துரையப்பா
ஒரு தமிழனத்
துரோகி என்ற அரசியல்
பிரச்சாரத்தால்
எடுபட்டு
அதனை அங்கீகரித்த
தமிழ்மக்களில்
நானும் ஒருவன். பின்னர் எத்தனையோர்
தமிழீழ விடுதலைப்
போராட்டம்
என்ற பெயரில்
படுகொலை செய்யப்பட்டபோதுதான்
துரையப்பாவின்
கொலையை அங்கீகரித்த
என் அறியாமையை
உணர்ந்தேன்.
பல தடவைகள்
இதனையிட்டு
நொந்துள்ளேன” இவ்வாறான சில பதிவுகள்
இதயசுத்தியுடன்
கடந்த காலத்தை படம்பிடித்து
காட்டுகின்றன.
இந்நூல் நாவல்
வடிவிலோ அல்லது கட்டுரை வடிவிலோ தொகுக்கப்படவில்லை
ஆனால் வெளியிடப்பட்ட
காலக்கிரமத்தில்
தொகுக்கப்பட்டுள்ளது , ஆகவே
இந்தநூலை
எங்கிருந்தும்
தொடங்கி படிக்கலாம்.
அத்துடன் இந்த
நூலின் விடயதானங்கள்
அரசியல் ஆர்வலர்களை
நோக்கி எழுதப்படும்
ஆய்வு கட்டுரை நடையில் அல்லாமல் சாதாரண பொதுமக்களின்
மனங்களில்
எழும் கேள்விகளுக்கான
பதிலாக உள்ளமை கருத்துக்களை
வாசிப்போர்
மனதில் பதிய வைக்க
உதவும் என்று நம்புகிறேன்.
இந்த நூல்
செழுமையாக
வடிவமைக்கப்பட்டு
பரவலாக விநியோகிக்கப்படும்
என்ற நம்பிக்கையுடன்
சாந்தன் தம்பையா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |