Contact us at: sooddram@gmail.com

 

ரோஹிங்யா முஸ்லிம்கள் 1

சுமார் 6 கோடி மொத்த மக்கள் தொகை உள்ள மியான்மரில் (முன்னாள் பர்மா) வெறும் 4 சத அளவே உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை ஒழித்துக் கட்டபர்மியப் பேரினவாதம் பவுத்தத்தை எவ்வாறெல்லாம் திரிக்கிறது எனப் பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. புத்தன் இருந்தால், பாவம் அந்தப் போதி மரத்தில் நாண்டு கொண்டு செத்துப்போயிருப்பான். பவுத்தத்தில் வன்முறைக்கும் போருக்கும் இடமில்லை. அது சீலங்களின் மதம். தனது பாதையை 'மஜ்ஜிம பதிபாதம்' (நடுநிலைப் பாதை) என அறிவித்தவர் அந்த போதி மாதவர்.

அவர் துறவு பூண்டது குறித்த அந்த "நான்கு தரிசனங்கள்" எனும் பவுத்த நம்பிக்கையை விரிந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டவிழ்க்கும் அண்ணல் அம்பேத்கர் உலகின் அந்த ஆகப் புகழ் பெற்ற துறவிற்குப் பின்புலமாக இருந்த சம்பவத்தை இப்படி உரைப்பார்: ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட நாள் பகை. அப்போதைக்கப்போது பிரச்சினை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சினை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம்.

முடிவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளோவோ
மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.
இனக்குழு மரபுப் படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவதே அது.

புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:
” 1. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது.இந்த மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று”

இலங்கையிலும், மியான்மரிலும் புத்த பிக்குகள் அதத கண்ட சுத்தத்தை புத்த வாக்குகளின் தொகுப்புகளிலிருந்து அழித்து விட்டார்களா? இல்லை ரோஹிங்யா முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகள் மேல் பெறக்கூடாது, அதுவும் 36 மாத இடைவெளிக்குப் பின்னேதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தடை விதித்துள்ளார்களே அப்படி அத்தகண்ட சுத்தத்தை யாரும் உச்சரிக்கக் கூடாது என மியான்மரிலும் இலங்கையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரின் வடக்கே, வங்க தேசத்தை ஒட்டியுள்ள உள்ள ராகின் மாநிலத்தில் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தில் அவர்கள் 60 சதம். ஆனால் இப்போது இந்தத் தாக்குதல்களுக்குப் பின் அது 30 சதமாகக் குறைந்துள்ளது.
பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் பர்மியப் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துபவர்களாக இனவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்றனர். அப்பட்டமான பொய். கட்டுமானப் பணியில் உள்ள மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்களைத் தவிர பிற ரோஹிங்கியாக்கள் தொழிலாளிகள், சிறு கடைக்காரர்கள் அவ்வளவுதான்.."
"அவர்கள் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களால் அவர்கள் லாபம் அடைகிறார்கள். வசதியாகிறார்கள். பர்மிய பவுத்தப் பெண்களைக் கவர்கிறார்கள். பின் அவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.." -
"இவர்கள் ஏராளமாகப் பிள்ளை பெறுகிறார்கள். இனத்தைப் பெருக்கிறார்கள். விரிவாக்க நோக்குடன் செயல்படுகிறார்கள்..."
இப்படிச் செல்கிறது இனவாதிகளின் பிரச்சாரம்.
இவை எங்கேயோ கேட்ட குரல்கள் போல் இல்லை?
ஆம். கேட்ட குரல்தான். மக்களைப் பிளவுபடுத்தி, இரத்த ஆறு பெருகச் செய்து அதிகாரச் சுகங்காணும் இயக்கங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இதைத்தான் செய்கின்றன. எனவே இது நாம் பல இடங்களிலும் கேட்ட குரல்தான். இந்தியாவில் நாம் தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்தான்.
மியான்மரில் இந்தக் குரலை உரத்து ஒலிப்பது பிக்கு அஷின் விராத்து என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள "969" எனும் இயக்கந்தான். விராத்து 2003 ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012ல் தான் செய்ன் அரசு அளித்த பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை ஆனபின் மீண்டும் அங்கு பெரிய அளவில் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் ஏவப்பட்டன. உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு ஓடியும் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
இன்று உள்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள். கடந்த 25 ஆண்டுகளில் வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00.000. தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா முதலான நாடுகளில் 3,00,000ம் மேற்பட்டோர் அகதிகளாய்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com