Contact us at: sooddram@gmail.com

 

விளம்பரப்படங்களில் நடிக்கிற கலைஞர்கள்

சட்ட நுணுக்கங்களின்படி, விளம்பரப்படங்களில் நடிக்கிற கலைஞர்கள் அந்தப் பொருள்கள் தீங்கானவை என்று கண்டுபிடிக்கப்படுகிறபோது, அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் போல தண்டனை நடவடிக்கைக்கு உரியவர்கள் அல்லதான். அவர்கள் தங்களுக்கான சம்பளத்தொகை, விளம்பர ஒப்பந்தக் காலம் போன்றவற்றைத்தான் கவனிக்கிறார்கள், அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். பொருளின் தரம் என்ன என்று சோதனை நடத்திவிட்டுத் தெரிந்துகொண்டு கையெழுத்திடுவதில்லை. அது குளிர்பானமாக இருந்தாலும் சரி, நூடுல்ஸ்சாக இருந்தாலும் சரி. அதற்காக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றால், அவற்றை விளம்பரம் செய்த நிறுவனங்கள், விளம்பரங்களை வடிவமைத்தவர்கள், ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், வெளியிட்ட பத்திரிகைகள், உள்ளூர் வியாபாரிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பார்களா?

இன்று உலகமே கார்ப்பரேட்டுகள் பிடியில்தான் இருக்கிறது. உலகச் சந்தையும் பொருளாதாரமும் மட்டுமல்ல, பண்பாடுகளும் கூட கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகக் கலைஞர்களும் கார்ப்பரேட்டுகளால் இயக்கப்படுகிறார்கள். திரைப்பட நட்சத்திரங்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் நட்சத்திரங்களும் கூட.

பல பெரிய நட்சத்திரங்கள் தாங்களே தனிமனித கார்ப்பரேட்டுகளாக இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு பெரிய திரைப்பட நடிகர் தனது படங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது, தன்னை யாரும் மிமிக்ரி செய்யக்கூடாது என்றெல்லாம் வக்கீல் நோட்டீஸ் விளம்பரம் கொடுத்தார். ஆக, இன்றைய கார்ப்பரேட் சுரண்டல் அமைப்பின் அங்கமாக இப்படிப்பட்ட நட்சத்திரங்களும் தெரிந்தோ தெரியாமலோ பங்களிக்கிறார்கள். அப்படி இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், கலை இலக்கியவாதிகளுக்கு உள்ள சமூகப் பொறுப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களை மகிழ்விப்பதோடு, அரசியல், சமுதாய அக்கறை உள்ள செய்திகளைச் சொல்லி வந்திருக்கிற மகத்தான பாரம்பரியம் இங்கு உண்டு. விஸ்வநாததாஸ் ஜானகியம்மாள் போன்ற நாடகக் கலைஞர்கள் மேடையில் விடுதலைப்போராட்டக் கருத்துகளைக்கொண்டுசென்றார்கள். திரையுலகில் எம்.ஆர். ராதா ஒரு வில்லன் நடிகர் என்ற போதிலும் அவருடைய பகுத்தறிவுக் கருத்துகளையும் மூடநம்பிக்கை எதிர்ப்பு விமரிசனங்களையும் மக்கள் வரவேற்றார்கள். என்.எஸ். கிருஷ்ணன் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தார்.

அதே போன்ற அக்கறை இருக்குமானால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறதோ இல்லையோ, உள்நாட்டு சிறுதொழில்களை அழித்து, அவற்றின் லட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் நிறுத்துகிற பன்னாட்டு நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடிக்கலாமா என்ற உறுத்தல் கலைஞர்களுக்கு இயல்பாக வரவேண்டும்.

-தந்தி தொலைக்காட்சியின் இளைஞர் முழக்கம் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் நான் கூறியது, (Comrade Kumaresan)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com