|
தேடல் தொடருகிறது
(வருணி கருணாரத்ன)
(பாலசுப்பிரமணியம்
வரதலக்சுமி, அமல்ராஜ் அமலநாயகி, கே. புஸ்பகலா, நிசாந்தினி ஸ்டாலின் ஜோர்ஜ்
மற்றும் சந்தியோகு திரேசம்மா)
ஒரு காலத்தில் காணாமற்போன அல்லது கட்டாயப் படுத்தி காணாமற்
போக்கடிக்கப்பட்ட தங்களின் பிரியமானவர்களைத் தேடும் அவர்களது குடும்பங்களின்
தேடல் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து
அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள், அரசாங்க
உத்தியோகத்தர்கள், அமைச்சர்கள், மற்றும் உயர்மட்ட நபர்கள் ஆகியோர் தங்களது
பிரச்சினைகளுக்கு உதவி செய்து தங்களுக்கு சில பதில்களை வழங்கக்கூடும்
என்கிற நம்பிக்கையோடு அவர்களைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு உள்ளேயும்
வெளியேயும் அலைந்து திரிகிறார்கள். அவ்வாறு காணமற்போயுள்ளவர்கள் விடயத்தில்
நீதியை தேடும் நடவடிக்கைக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்வதற்காக கடந்த
வெள்ளிக்கிழமை ஒரு தொகுதிப் பெண்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்கவை சந்திப்பதற்காக மற்றொரு பயணத்தை
மேற்கொண்டிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட
பெண்களைப் பிரதிநிதிப் படுத்தும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சார்பாக
ரஜனி சந்திரசேகரம் என்பவர் ‘சண்டே லீடருடன்’ பேசுகையில், யாழ்ப்பாணத்தில்
உள்ள குறிப்பிட்ட அமைப்பின் கீழ் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
பல்வேறு உதவிகளையும் வழங்கி வருவதாகச் சொன்னார்.
“பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் வாழ்வாதார
உதவிகள், ஆலோசனைகள் போன்றவை தேவைப்படும் குடும்பங்கள் என சுமார் 49
குடும்பங்களுடன் நான் பணியாற்றி வருகிறேன். சட்ட விடயங்களை கையாள்வதற்கும்
நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குகிறோம். முறையான வழிகளைப்
பின்பற்றுவதற்கு நாங்கள் அவர்களை வழி நடத்துகிறோம்” என்று அவர் சொன்னார்.
சந்திரசேகரத்தின் கூற்றுப்படி, பெண்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று இந்த
பிரச்சினைகளைப் பற்றி முறைப்பாடு செய்வதற்கு மொழித் தடைகள் காரணமாக முடியாத
ஒரு காலகட்டம் இருந்தது மற்றும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறுவதை
காவல்துறையினருக்கு தான் மொழிமாற்றம் செய்து கொடுத்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார். காணாமற் போனவர்கள் பற்றிய விவகாரங்களில், அரசாங்கம் முன்வந்து
இந்தப் பிர்சினையை தீர்த்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் அவர்
தெரிவித்தார்
. “இந்த மக்கள் காணாமற்போன தங்கள் பிரியப்பட்டவர்களை உண்மையில் நீண்ட
காலமாகத் தேடி வருகிறார்கள். அவர்கள் எங்கு போனார்கள் மற்றும் அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதை அவர்கள் அறியவேண்டியது மிகவும் முக்கியமான விஷயம்.
இந்த மக்கள் விரும்புவதெல்லாம் இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்பதுதான். சதா
சர்வ காலமும் அவர்கள் தேடிக்கொண்டே இருக்க முடியாது” என அவர் மேலும்
சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா
குமாரதுங்கவை சந்திப்பதற்காக கொழும்புக்கு வந்த பெண்களில் அநேகர், காணாமற்
போனவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த,
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற
பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். தனது மகனை இழந்த சந்தியோகு
திரேசம்மா எனும் தாய் சண்டே லீடருடன் பேசுகையில், தனது மகனான சந்தியோகு ஜூட்
கொலின் மே, 2009ல் மடு தேவாலயத்தில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகத்
தெரிவித்தார்.
“புனித லோரண்ஸ் தேவாலயத்தை சேர்ந்த பங்குத் தந்தையான பிதா டெஸ்மன்ட் குலாஸ்
அவர்களும் இந்தச் சம்பவத்தை உறுதிப் படுத்தினார். எனது மகன்
பண்டிவிரிச்சானில் வைத்து இரண்டு இராணுவ உத்தியோகத்தர்களால் கூட்டிச்
செல்லப்படுவதை அவர் கண்டுள்ளார். இதை நிரூபிப்பதற்கு என்னிடம் கடித மூலமான
ஆதாரங்கள் உள்ளன” என அவர் சொன்னார். அப்போது முதல் தனது மகனை எல்லா
இடத்திலும் தேடியலைவதாகவும், எனினும் அவனைப் பற்றி ஒரு தகவலும்
கிடைக்கவில்லை என அந்தத் தாய் சொன்னார்.
நிசாந்தினி ஸ்டாலின் ஜோர்ஜ் சண்டே லீடரிடம், அவளது தந்தையான மரிய சூசை
ஸ்டாலின் ஜோர்ஜ் ஒரு கடல் தொழிலாளி எனவும், அவரது மீன்பிடிப் பயணம்
ஒன்றின்போது அவரும் அவரைச் சேர்ந்த வேறு நாலுபேரும் காணாமற்
போய்விட்டதாகவும் தெரிவித்தாள். அவளது கூற்றுப்படி, அவர்கள் ஐந்து பேரும்
16.03.2008ல் எல்.ரீ.ரீ.ஈ இனால் கைது செய்யப் பட்டுள்ளார்கள். இந்தச்
சம்பவம் பற்றி அவளது தாய் எல்.ரீ.ரீ.ஈ இடம் விசாரிக்கச் சென்றபோது, அவளது
தந்தை ஒரு வருடத்துக்குப் பின்னர் விடுவிக்கப் படுவார் என்று எல்.ரீ.ரீ.ஈ
அவளது தாயிடம் அறிவித்ததாம்.
”இறுதிக் கட்ட போரின்போது அவரைத் தேடுவதற்கு எங்களுக்கு ஒரு வழியும்
இருக்கவில்லை, ஆனால் போர் முடிவடைந்த உடனே மன்னார் மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியிடம் இருந்து தன்னை வந்து சந்திக்கும்படி
எனது தாயாருக்கு ஒரு செய்தி வந்தது. எனது தாய் இந்த நோயாளியை சந்திக்கச்
சென்றபோது, தானும் எல்.ரீ.ரீ.ஈ யினால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தான்
விடுதலையாவதற்கு முன்பு ஒரு கட்டத்தில் தான் எனது தந்தையை சந்தித்ததாகவும்
அவர் எனது தாயிடம் சொன்னார். மற்றும் எனது தந்தையும் விரைவில் விடுதலை
செய்யப்பட உள்ளார் என அவர் எனது தாயிடம் தெரிவித்தார்.
அதன் பின் எனது தாய் எனது தந்தையின் புகைப்படத்துடன் இராணுவ முகாம்களுக்குச்
செல்லத் தொடங்கினார் மற்றும் ஓமந்தையில் வைத்து சில பேர் எனது தாயிடம்
அப்படியான ஒருவரை தாங்கள் கண்டதாகவும் ஆனால் எங்கே மற்றும் எப்போது என்பது
சரியாக நினைவில் இல்லை என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் அதன்பின் அவர்
இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்பது எங்களுக்கு மேலும் நிச்சயமானது”
என்று அவள் மேலும் தெரிவித்தாள்.
அப்போதிருந்து அவரைப் பற்றி எவரிடமிருந்தும் எதையும் அவர்கள் கேட்கவில்லை.
அவள் சொல்வதின்படி, அப்போதிருந்து அவளும் அவளது தாயும் அவளது தந்தையைப்
பற்றி விசாரித்து வருவதாகவும் மற்றும் காவல்துறையினர், ஜனாதிபதி செயலகம்,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) மற்றும் அது தொடர்பான அதிகாரிகள்
என சகல இடத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்களாம். “நாங்கள் கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் (எல்.எல்.ஆர்.சி) சென்றபோது,
அவர்களுக்கு எங்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டியிருந்தது, நாங்கள் ஏதாவது
இழப்பீடுகளை பெற்றிருக்கிறோமா மற்றும் சமுர்த்தி உதவி பெற்றிருக்கிறோமா
என்பதைத்தான். எங்கள் நோக்கம் இழப்பீடு பெறுவதல்ல ஆனால் எனது தந்தையை கண்டு
பிடிப்பது அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதுதான்” என்று
நிசாந்தினி மேலும் சொன்னார்.
மற்றொரு காணாமற்போனவரின் மனைவியான அமல்ராஜ் அமலநாயகி தெரிவிக்கையில் தனது
கணவர் மட்டக்களப்பு மாறப்புலத்தில் உள்ள அவரது பண்ணையில் வேலை செய்து
கொண்டிருந்த சமயத்தில் பிடித்துச் செல்லப்பட்டார், அப்போது அவருக்கு வயது
47. “பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தது, அவர் நந்தன
மற்றும் தென்னக்கோன் எனும் பெயர்களையுடைய இரண்டு விசேட அதிரடிப் படையினரால்
(எஸ்.ரி.எப்) பிடித்துச் செல்லப் பட்டார் என்று. அவருடைய உந்துருளியும்
எடுத்துச் செல்லப்பட்டது அந்த வேளையில் எனது கணவரிடம் ஓரளவு பணமும் இருந்தது.
முகாமில் எனது கணவரைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் அவரைக் கடத்தியதை
நிராகரித்தார்கள். நான் இராணுவ தலைமையகத்தில் இதுபற்றி முறைப்பாடு செய்தேன்,
ஆனால் சாட்சிகளை விசாரிக்க அழைத்தபோது சாட்சியமளிக்க வேண்டாம் என எஸ்.ரி.எப்
இனர் அவர்களை அச்சுறுத்தியதால் அவர்கள் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்கள்”
என அவள் குற்றாட்டினாள்.
அவள் காவல்துறையினரிடமும் இதுபற்றி புகார் செய்திருந்தாள், ஆனால் அவர்கள்
அதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்கள். தான் தனது கணவரை
கடத்தியவர்களின் பெயர்களை தெளிவாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், அது
இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்டது என காவல்துறையினர் தங்களது குறிப்பில்
பதிந்தார்கள் என அவள் தெரிவித்தாள். “ கடத்தப்பட்ட தினம் 19.02.2009 என நான்
தெளிவாக குறிப்பிட்டிருந்தேன் ஆனால் காவல்துறையினரின் முறைப்பாட்டில்
அவர்கள் அதை 29.02.2009 என எழுதியிருந்தார்கள். அது பெப்ரவரி 2009ல் நடந்தது
அந்த வருடம் பெப்ரவரியில் 29ம் திகதியே கிடையாது. இப்படிச் செய்வதினால் எனது
முறைப்பாட்டை பயனற்றதாக்க வேண்டும் என அவர்கள் அப்படிச் செய்தார்கள்” என
அவள் குற்றம் சாட்டினாள்.அவள் இப்போது தேடுவதெல்லாம் அவளது கணவர்
எங்கேயிருக்கிறார் அவருக்கு என்ன நடந்தது என்கிற கேள்விகளுக்கான
பதில்களைத்தான்.
கே.புஸ்பகலா முறையிடுவது அவளது சகோதரன் கார்த்திகேசு குகநாதன்,21.07.1996ல்
இராணுவத்தால் கைது செய்யப்படும்போது அவனுக்கு வயது 16 மட்டுமே. “அவன் எனது
தாயின் சகோதரியுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தான்.
அவர்கள் செல்லும் வழியில் சந்தைக்குச் சென்றார்கள், அங்குதான் அவன் கைது
செய்யப்பட்டான். இரண்டு வாரங்களாக அவனுக்கு என்ன நடந்தது என்று நாங்கள்
சாவகச்சேரி முகாமில் கேட்டபடியே இருந்தோம் மற்றும் இறுதியாக அவன் வேறு
முகாமுக்கு மாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். பின்னர் யுத்தம்
காரணமாக எங்கள் குடும்பம் இடம் பெயர்ந்ததினால் எங்களால் அவனைத் தேட
முடியவில்லை. பின்னர் 2002ல் நான் அவனை யாழ்ப்பாணம் உரும்பராய் சந்தியில்
வைத்துக் கண்டேன் மற்றும் அவன் முற்றாக கறுப்பு உடையணிந்து இராணுவ வாகனம்
ஒன்றில் இருந்தான் - ஆனால் அதன் பிறகு அவனைப் பற்றிய எந்தச் செய்தியும்
இல்லை” என அவள் சொன்னாள்.
பாலசுப்ரமணியம் வரதலக்சுமி சண்டே லீடரிடம் தெரிவிக்கையில், அவளது மகன்மார்
காணாமற் போய்விட்டதாகவும் அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை
என்றும் சொன்னாள். “2004ல் பாலசுப்ரமணியம் மயூரன் வன்னிக்கு விவசாயம்
செய்யச் சென்றார் மற்றும் 2006ல் பாலசுப்ரமணியம் தர்ஷன் ஒரு தச்சுத்
தொழிலாளியாக வேலை செய்வதற்காக எல்.ரீ.ரீ,ஈ யினால் பிடித்துச் செல்லப்பட்டார்.
பின்னர் எங்கள் உறவினர் ஒருவரிடம் இருந்து அவர்கள் வன்னியில் பாதுகாப்பாக
இருக்கிறார்கள் என்கிற செய்தியை கேட்டோம் - ஆனால் 2009ல் இராணுவம் அந்தப்
பகுதியை கைப்பற்றியது முதல் அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியையும் நாங்கள்
அறியவில்லை” என்று அவள் மேலும் தெரிவித்தாள்.
இந்த காணாமற் போனவர்களைப் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இழுபட்டு வருகிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் அநேக குடும்பங்கள் வெளியில் வந்து காணாமற்போன
தங்கள் பிரியப்பட்டவர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தார்கள்
மற்றும் இப்போது அதற்கான அhத்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த ஆட்கள்
எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்தக் குடும்பங்களை இருட்டில்
வைத்திருக்காது வெளிப்படுத்த வேண்டியது புதிய அரசாங்கத்தின் கடமை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம
MBBS(Srilanka)
Phd(Liverpool,
UK)
'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........'
(முறிந்த
பனை நூலில் இருந்து)
(இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்)
Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call.
From: Broken Palmyra
வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம்
(சாகரன்)
புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம்
பிரபாகரனுடன்
இறுதி வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத்தில்
தப்பியவரின் வாக்குமூலம்
தமிழகத்
தேர்தல் 2011
திமுக,
அதிமுக, தமிழக
மக்கள் இவர்களில்
வெல்லப் போவது
யார்?
(சாகரன்)
என் இனிய
தாய் நிலமே!
தங்கி
நிற்க தனி மரம்
தேவை! தோப்பு அல்ல!!
(சாகரன்)
இலங்கையின்
7 வது பாராளுமன்றத்
தேர்தல்! நடக்கும்
என்றார் நடந்து
விட்டது! நடக்காது
என்றார் இனி நடந்துவிடுமா?
(சாகரன்)
வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010
(சாகரன்)
பாராளுமன்றத்
தேர்தல் 2010
தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி
1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்......
நடந்த
வன்கொடுமைகள்!
(fpNwrpad;> ehthe;Jiw)
சமரனின்
ஒரு கைதியின் வரலாறு
'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்...
மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும்
(சாகரன்)
இலங்கையில்
'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம்
(சாகரன்)
ஜனாதிபதி
தேர்தல்
எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்?
பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்
ஜனாதிபதித்
தேர்தல்
ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்)
சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள்
(சேகர்)
அனைத்து
இலங்கைத் தமிழர்களும்
ஒற்றுமையான இலங்கை
தமது தாயகம் என
மனப்பூர்வமாக
உரிமையோடு உணரும்
நிலை ஏற்பட வேண்டும்.
(m. tujuh[g;ngUkhs;)
தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா?
(சாகரன்)
ஜனவரி இருபத்தாறு!
விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....?
(மோகன்)
2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!!
'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்'
(சாகரன்)
சபாஷ் சரியான
போட்டி.
மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா.
(யஹியா
வாஸித்)
கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்!
(சதா. ஜீ.)
தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை
மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா?
(சாகரன்)
கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும்
(சாகரன்)
சூரிச்
மகாநாடு
(பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி
(சாகரன்)
பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!!
(மோகன்)
தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு
பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல்
(சாகரன்)
இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம்
(சாகரன்)
ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும்
(சாகரன்)
அடுத்த
கட்டமான அதிகாரப்பகிர்வு
முன்னேற்றமானது
13வது திருத்தத்திலிருந்து
முன்னோக்கி உந்திப்
பாயும் ஒரு விடயமே
(அ.வரதராஜப்பெருமாள்)
மலையகம்
தந்த பாடம்
வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.!
(அ.வரதராஜப்பெருமாள்)
|