|
||||
|
யாழ்.தமிழ் மக்களுடன்
பிட்டும்
தேங்காய்ப்பூவும்
போல இணைந்து
நல்ல உறவுடனேயே
வாழ்ந்து
வருகிறோம்
- ஒஸ்மானியா
கல்லூரி அதிபர் பெருமிதம்
வடபகுதியின் கடந்த
கால துரதிர்ஷ்டவசமான
நிலைமைகளினால்
பரம்பரை பரம்பரையாக
யாழ்ப்பாணத்தில்
வாழ்ந்து
கொண்டிருந்த
முஸ்லிம்
மக்கள் வெளியேற்றப்பட்டமையும்,
பின்னர் நிலைமைகள்
வழமைக்குத்
திரும்பியதாகவும்
படிப்படியாக
அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு
வந்து கொண்டிருப்பதும்
வரலாற்றுப்
பதிவாக அமைந்துள்ளது.
முஸ்லிம் மக்கள்
பலர் யாழ்ப்பாணத்தை
சொந்த இடமாகக் கொண்டிருந்தவர்கள்
என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது ஏராளமான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்திற்கு
திரும்பிவிட்டதால்,
பழுதடைந்த
நிலையிலிருந்த
பள்ளிவாசல்களும்,
முஸ்லிம்
பாடசாலைகளும்
திருத்தம்
செய்யப்பட்டு,
மீளவும் இயங்க ஆரம்பித்திருப்பது
ஒரு சிறப்பான
நிகழ்வாகும்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான முஸ்லிம் பாடசாலையாக
திகழ்வதுதான்
ஒஸ்மானியாக்
கல்லூரி. இதன் அதிபராகக்
கடமையாற்றும்
எம். எஸ். ஏ.
எம். முபாரக் யாழ்ப்பாணத்தை
சொந்த இடமாகக் கொண்டவர்.
யாழ். பெரியகடை ஜும்ஆ பஸ்ஜித் பள்ளிவாசலின்
பிரதம இமாம் பதவியையும்
இவர் வகித்து
வருகிறார்.
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில்
கல்வி பயின்றவர்.
இவரது தகப்பனார்
யாழ். மஸ்றஉத்தீன் முஸ்லிம்
வித்தியாலயத்தில்
அதிபராகக்
கடமையாற்றியவர்.
இவரை சந்தித்த போது ஒஸ்மானிய
கல்லூரி பற்றியும்,
யாழ். மக்களுடனான தனது நட்புறவு பற்றியும்
சிறப்பாக
எடுத்துச்
சொன்னார்.
‘யாழ்.
ஒஸ்மானியா கல்லூரி
1963 ஆம் ஆண்டில்
ஸ்தாபிக்கப்பட்டது.
1200 முஸ்லிம்
மாணவர்களுடனும்
40க்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுடனும்
இயங்கிவந்த
இக்கல்லூரியில்
தரம் ஆறு
முதல் க. பொ. த. உயர்தரம்
வரையில் அமைந்திருந்தது.
அன்றைய கால துரதிர்ஷ்டவசமான
சூழ்நிலைகளினால்
1990 அக்டோபர்
30ஆம் திகதியுடன்
மூடப்பட்டது.
அப்போது அதிபராகக்
கடமையாற்றி
வந்தவர் எம். ஹாமீம் என்பவராகும்
என்கிறார்
இப்போதைய
அதிபரான எம். எஸ். ஏ.
எம். முபாரக்.
மீண்டும் இக்கல்லூரி
இயங்க ஆரம்பித்திருப்பது
பற்றி அதிபரிடம்
கேட்ட போது, 2003 செப்டம்பர்
25ஆம் திகதியன்று
கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு
முன்பதாக
2002 ஆம் ஆண்டில்
ஏ9 பிரதான வீதி மீண்டும்
திறக்கப்பட்டதால்
யாழ்ப்பாணத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்
மக்கள் தங்கள் சுயவிருப்பத்தின்பேரில்
படிப்படியாக
இங்கு வந்து மீளக்
குடியேறத்
தொடங்கினார்கள்.
கொழும்பு டி.
பி. ஜாயா மகா வித்தியாலயத்தில்
பகுதித் தலைவராகக்
கடமையாற்றிக்
கொண்டிருந்த
நான், யாழ்.
முஸ்லிம் மக்களின்
வேண்டுகோளுக்கு
இணங்க யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின்
அதிபராக பதவியேற்க
நேரிட்டது.
சேதமடைந்த பாடசாலை கட்டடங்களை
திருத்தியமைத்தோம். அரசாங்கத்தினதும், சமூக, கல்வி சிந்தனையாளர்களினதும்
நலன் விரும்பிகளினதும்
உதவியுடன்
கட்டடங்கள்
மீளவும் புதுப்பிக்கப்பட்டு
வருகிறது.
குடிநீர் வசதி, மலசலகூட வசதி, நூலகம்
என்பனவும்
மீளமைப்பு
செய்யப்பட்டுள்ளது’
என்று மகிழ்ச்சியுடன்
சொன்னார்.
இப்போது எத்தனை
மாணவர்கள்,
கல்வி கற்கிறார்கள்,
என்ற கேள்விக்கு
‘முன்பு ஆண் பிள்ளைகள்
மட்டும் கல்வி கற்றுவந்த
இக்கல்லூரி
கடந்தகால
சூழ்நிலைகளினால்
ஏற்பட்ட மாற்றங்களைத்
தொடர்ந்து
இப்போது ஆண், பெண்
பிள்ளைகள்
பயிலும் கலவன் பாடசாலையாக
இயங்கி வருகிறது.
175
ஆண் பிள்ளைகளும்
147 பெண் பிள்ளைகளுமாக
மொத்தம் 322
மாணவர்கள்
இங்கு கல்வி பயிலுகிறார்கள். முதலாம் தரத்திலிருந்து
பதினொராம்
தரம் வரையில்
இங்கு இயங்கி வருகிறது.
இப்போது 13 ஆசிரியர்களுடன்,
4 தொண்டர் ஆசிரியர்களும்
இணைந்து பணியாற்றி
வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக
மாணவர்களின்
தொகையும்
படிப்படியாக
அதிகரித்து
வந்திருக்கிறது. இவ்வருடம் மாணவர்களின்
தொகை நூறால்
அதிகரித்திருப்பதையும்
சிறப்பாகச்
சொல்லலாம்’
என்று பதிலளித்தார்
அதிபர் எம். எஸ். ஏ.
எம். முபாரக்.
பாடசாலையின் வளர்ச்சிக்கு
கிடைத்துவரும்
பங்களிப்புப்
பற்றி கூறுகையில்,
‘யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த உலமாக்கள்,
சமூகக் கல்வி அபிவிருத்தி
அமைப்பு, அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத்
நிறுவகம்,
மக்கள் பணிமனை, சமூக கல்வியாளர்கள்,
நலன்விரும்பிகள்
மற்றும் பிரமுகர்கள்
எல்லோருடைய
ஆலோசனையும்,
வழிகாட்டலும்,
பங்களிப்பும்
கல்லூரியின்
வளர்ச்சிக்கு
துணைநிற்கின்றன.
அத்துடன் வலயக்
கல்வி அலுவலகம், கோட்டக் கல்வி அலுவலகம்,
மாகாண கல்வித் திணைக்களம்,
மாகாண கல்வி அமைச்சு
என்பனவும்
கல்லூரியின்
முன்னேற்றத்திற்கும்
சிறப்பான
இயக்கத்திற்கும்
அக்கறையுடன்
செயற்பட்டு
வருவதையும்
குறிப்பிட
வேண்டும்’
என்று நன்றி பாராட்டினார்.
ஒஸ்மானியா கல்லூரியின்
வருடாந்த
இல்ல மெய்வன்மை
போட்டி பெப்ரவரி 12ஆம்
திகதியன்று
நடைபெற்றிருந்தது. கல்லூரியின் ஜின்னா
மைதானத்தில்
இடம்பெற்ற
இந்த நிகழ்வின்
போது யாழ்.
கல்வி வலயப் பணிப்பாளர்
திருமதி அ.
வேதநாயகம்
முதன்மை விருந்தினராகவும்,
யாழ். கோட்டக் கல்விப்
பணிப்பாளர்
திருமதி வ.
சிவபாலன்
சிறப்பு விருந்தினராகவும்,
பேஷ் இமாம்
அல்ஹாஜ் ஏ.
எம். அப்துல் அமஸ் கெளரவ விருந்தினராகவும்
கலந்துகொண்டு
சிறப்பித்திருந்ததாக
அதிபர் குறிப்பிடுகிறார்.
பெப்ரவரி 16ஆம்
திகதியன்று
கல்லூரியில்
மீலாத் துன் நபி
விழாவும்
சிறப்பாக
நடைபெற்றுள்ளது. வைத்திய கலாநிதி
எம். ஏ. சி. எம். றம்ஸி கொழும்பிலிருந்து
வருகை தந்து இந்த
நிகழ்வில்
பிரதம விருந்தினராகக்
கலந்துகொண்டு
சிறப்பித்திருந்தார்
என்றார் அதிபர்.
அதிபரிடம் யாழ்ப்பாண
மக்களைப்
பற்றியும்,
அவர்களுடனான
தொடர்புகள்
பற்றியும்
கேட்டபோது,
எனக்கு யாழ்ப்பாணத்தில்
ஏராளமான நண்பர்கள்
இருக்கிறார்கள். சிலர்
இப்போது வெளிநாடு சென்றுவிட்டார்கள்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடன்
பிட்டும்
தேங்காய்ப்பூவும்
போல இணைந்து
நல்ல உறவுடனேயே
வாழ்ந்து
வருகிறேன்.
இதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்
என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.
மீலாத்துன் - நபி
விழாவையொட்டி
கல்லூரி மாணவர்களிடையே
கட்டுரைப்
போட்டி பேச்சுப் போட்டி, அரபுப் பாடல் போட்டி
என்பனவும்
ஏற்பாடு செய்யப்பட்டு
நடத்தப்பட்
டிருந்ததுடன்
போட்டியில்
வெற்றிபெற்றவர்களுக்கான
சான்றிதழ்கள்
எம். றம்ஸியால் வழங்கப்பட்டன.
ஒஸ்மானியா கல்லூரி அதிபர் முபாரக்கின்
மனைவியும்,
யாழ்ப்பாணத்தை
சொந்த இடமாகக் கொண்டவர். யாழ்.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில்
கல்வி பயின்ற இவர், இப்போது
கொம்பனித்தெரு
அல்இக்பால்
மகளிர் வித்தியாலயத்தில்
ஆசிரியராகக்
கடமையாற்றி
வருகிறார்
என்ற தகவலையும்
அதிபர் சொல்லி வைத்தார்.
சந்திப்பு : அ.
கனகசூரியர் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |