Contact us at: sooddram@gmail.com

 

100வது சர்வதேச பெண்கள் தினம்100th International Women’s Day!

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!' - பாரதியார்

“Each person must live their life as a model for others”~ Rosa Louise McCauley Parks-February 4, 1913-October 24, 2005, African American Civil rights activist

1911ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம், இந்தாண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடுவது இத்தினத்தின் சிறப்பம்சம்.

இன்று "கல்வி பயிற்சி மற்றம் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் சமவாய்ப்பு; பெண்களுக்கு கண்ணியமான தொழிலுக்கான பாதை'” (“Equal access to education, training and science and technology: Pathway to decent work for women” )என்பதே இன்றைய தினத்துக்கான தொனிப்பொருளாகும். இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க வேண்டும்.

இந்நாள் China, Armenia, Russia, Azerbaijan, Belarus, Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Mongolia, Tajikistan, Ukraine, Uzbekistan and Vietnam மற்றும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.  சில நாடுகளில் அன்னையர் தினத்திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவில் சிறப்பாக பணியாற்றிய சின்னப்பிள்ளையின் காலை தொட்டு அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் வணங்கினார். இதையே இந்தியாவில் ஏழை எளிய பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதலாம். ஏழ்மையிலும் நாட்டில் தலைசிறந்த பெண்மணியாக உருவாகலாம் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.

 இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை
குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது ஒழுங்கமையக் கடைபிடிக்கப்படுகிறது.
 
 
அதே நேரம்
மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்பதும் உண்மை.  அது என்ன மார்ச் 8  மகளிர் தினம்? என்று கேட்பவர்குள் உண்டு.

ஆனால் சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பிக்கின்றன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கோள்விக்குறியாகவே காணப்பபடும் நிலையில் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள் என்று சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக் கின்றன.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்!

 அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது.  (Great unrest and critical debate was occurring amongst women. Women's oppression and inequality was spurring women to become more vocal and active in campaigning for change. Then in 1908, 15,000 women marched through New York City demanding shorter hours, better pay and voting rights).

 1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-ல்கொண்டாடப்பட்டது.
அதன் பின்
 பிப்ருரவரி  கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. (In accordance with a declaration by the Socialist Party of America, the first National Woman's Day (NWD) was observed across the United States on 28 February. Women continued to celebrate NWD on the last Sunday of February until 1913). 

அதன் விளைவு 1910 இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கிளாரா தலைமையில் கூடி சர்வதேச பெண்கள் மாநாடு கூடியது. சர்வதேச பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.அதன் பின்
சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. (
In 1910 a second International Conference of Working Women was held in Copenhagen. A woman named a Clara Zetkin (Leader of the 'Women's Office' for the Social Democratic Party in Germany) tabled the idea of an International Women's Day. She proposed that every year in every country there should be a celebration on the same day - a Women's Day - to press for their demands. The conference of over 100 women from 17 countries, representing unions, socialist parties, working women's clubs, and including the first three women elected to the Finnish parliament, greeted Zetkin's suggestion with unanimous approval and thus International Women's Day was the result).

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள்
அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள்
 நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.
(
Following the decision agreed at Copenhagen in 1911, International Women's Day (IWD) was honoured the first time in Austria, Denmark, Germany and Switzerland on 19 March. More than one million women and men attended IWD rallies campaigning for women's rights to work, vote, be trained, to hold public office and end discrimination. However less than a week later on 25 March, the tragic 'Triangle Fire' in New York City took the lives of more than 140 working women, most of them Italian and Jewish immigrants. This disastrous event drew significant attention to working conditions and labour legislation in the United States that became a focus of subsequent International Women's Day events. 1911 also saw women's 'Bread and Roses' campaign).

இதற்கிடையில் 1917-ல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்த சமயத்தில் பெண்கள் ரொட்டிக்காவும் அமைதிக்காவும் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி  கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்குள்ளவர்கட்கு  ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ம் நாள்.
 
ஆகவேதான் மார்ச் 8ல் சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

(On the eve of World War I campaigning for peace, Russian women observed their first International Women's Day on the last Sunday in February 1913. In 1913 following discussions, International Women's Day was transferred to 8 March and this day has remained the global date for International Wommen's Day ever since. In 1914 further women across Europe held rallies to campaign against the war and to express women's solidarity).
(
On the last Sunday of February, Russian women began a strike for "bread and peace" in response to the death over 2 million Russian soldiers in war. Opposed by political leaders the women continued to strike until four days later the Czar was forced to abdicate and the provisional Government granted women the right to vote. The date the women's strike commenced was Sunday 23 February on the Julian calendar then in use in Russia. This day on the Gregorian calendar in use elsewhere was 8 March.)

அதன் பின் சர்வதேச பெண்கள் தினம் உலக முழுவதும் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் வருடாவருடம் அதன் வளர்ச்சியும் கூடிய வேளையில் ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்களின் அரசியல், சமத்துவ, பொருளாதார கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அத்துடன் பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐ.நா உழைத்துள்ளது.
1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது.
(
Since its birth in the socialist movement, International Women's Day has grown to become a global day of recognition and celebration across developed and developing countries alike. For decades, IWD has grown from strength to strength annually. For many years the United Nations has held an annual IWD conference to coordinate international efforts for women's rights and participation in social, political and economic processes. 1975 was designated as 'International Women's Year' by the United Nations. Women's organisations and governments around the world have also observed IWD annually on 8 March by holding large-scale events that honour women's advancement and while diligently reminding of the continued vigilance and action required to ensure that women's equality is gained and maintained in all aspects of life.) 

இந்தியாவை எடுத்துக்கொண்டால்,  இந்திய வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதியாகவும், பிரதம ராகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலைவராகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனையாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். மேலும் பெண்கள் தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப் பாளர்களாகவும், குடும்பத்தலைவியாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், விளம்பர மாடலிங்காகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். பெண்கள் இன்று வேலைக்கு சென்று குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உலக பெண்கள் தினமானது முழுமனதுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் காலம் பெண்களுக்கு பிரகாசமான, சமமான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சமஅந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வியறிவுடையவர்களாகவும், தங்களது எதிர்காலத்துக்கு நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்கள் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ள நிலையில் சற்று மெதுவாகவே முன்னேற்றம் அடைந்து வருகிறது. பொருளாதார முன்னேற்றத்திலும் சற்று பின்தங்கியே உள்ளனர்.  பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

எமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கெளரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றன. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புகள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

அதே நேரம்
, ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

பெண்களுக்கெதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பல மட்டங்களிலும் பல விதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், உடல் உள ரீதியான துன்புறுத்தல்களாக பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக:

* யுத்தமும் இடப்பெயர்வும்

* பாதுகாப்பற்ற நிலைமை

* அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை

* பொருளாதார நெருக்கடிகள்

* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை

* ஆண்கள் தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்

* நல்ல சுகாதார வசதிகளின்மை

* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை

போன்றவை காணப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.

* வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள்

* வலதுகுறைந்த,

* கர்ப்பிணிப் பெண்கள்

* வயோதிபப் பெண்கள்

* சிறுபிள்ளைகளின் தாய்மார்

* சிறுமியர்

போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படு கின்றனர். உலகளாவிய முறையில் நடத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

 சர்வதேச மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் போன்றவை பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடுகளா கும். எனவே இத்தகைய தினங்களில் பெண்க ளின் உரிமைகளைப் பாதுகாக்க தமது பங்களி ப்பை குடும்பம், வேலைத்தளம், சமூகம், அரசு உள்ளிட்ட அனைவரும் வழங்குதல் வேண்டும்.

எமது நாடு  இலங்கையைப் பொறுத்த வரையில் பொறுத்தவரையில் பெண்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் இன்னமும் நிறையவே உள்ளன. நாட்டில் நடந்த 30ஆண்டு போர்ச் சூழலில் பெண்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவர்களிலும் கடந்தகாலங்களில் கிழக்கு மாகான பெண்களே பிள்ளைகளை  இழந்தும், கணவனை இழந்தும் பாதிக்கப்படுள்ள நிலையில், தற்போது நடந்த கடைசி யுத்தத்தில் வன்னி பெண்கள் இக்கிழக்குமாகான பெண்களைப்போல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. அரசியல், பொருளாதார ரீதியில் பெண்கள் நம்பிக்கையீனமானவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் நோக்கப்படும் ஒரு போக்கு காணப்படுகின்றது. வாழ்நாள் முழுவதும் கடினமான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இயந்திரங்களாகவே பெண்கள் கணிக்கப்படுகின்றனர். இலங்கையில் மனைவியைத் தாக்குவதை நியாயமெனக் கருதும் 54 சதவீத கணவர்கள் இருப்பதாக யூனிசெப் அறிக்கையொன்று அண்மையில் தெரிவித்திருந்தது. ஆண்களுக்கு கிடைக்கும் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்துக்கும் பெண்களும் உரியவர்கள் என்பதை ஏற்கமறுக்கும் மனோபாவத்தினாலேயே இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன. உலகம் முழுவதும் ஆண்களால் பெண் என்பவளை அதிகாரம் செய்யும் தன்மை கொண்டவன் என்ற தோற்றப்பாடே காணப்படுகின்றது. பெண் அடிமைத் தனமானது கருத்துருவம்,உயிரியல், சமூகவியல், வர்க்கம்,பொருளாதாரமும் கல்வியும்,சக்தி,மானுடவியல், உளவியல் என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக பிரபல பெண்ணிய ஆய்வாளரான கேட்மில்லட் குறிப்பிடுகின்றார். பெண்ணுக்கு "இல்லம்' என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை ஆண் கட்டுப்படுத்தி விட்டதாகவும் குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் கணவனை சார்ந்திருக்க வேண்டியுள்ளதால் அவளை சுய சிந்தனை இல்லாதவளாக, கையாலாகாதவளாக சமூகம் கருதத் தொடங்கியதாகவும் கேட்மில்லட் குற்றம் சாட்டுகின்றார்.

அனைத்திலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் மகளிர் பிரிவினர் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தங்கள் கோரிக்கை ஒன்றை சர்வதேச சமூகம், அரசியல்வாதிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் முன் முன்வைத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கை:

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களான நாங்கள் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது!.

காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறிய முடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரோடு கவலைகளே சொந்தமாகிப் போன நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

எங்களைப் போன்ற பல பெண்கள் இலங்கையில் பல சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை இழந்து அடுத்தது என்ன என தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எம்மில் பலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிய நிலையில் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் கருவிலேயே குழந்தையை சுமக்கும்போது கைதுசெய்யப்பட்டவர்கள்; சிறையிலேயே தங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள்.

பல பெண்கள் சிறைச்சாலைகளில் தங்கள் குழந்தைகளுடன் துன்புற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருசில பெண்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் மனநோயாளியானார்கள்.

எமது விவகாரம் தொடர்பாக பலரும் பல வாக்குறுதிகளை மாத்திரமே தருகின்றவர்களாய் உள்ளனர். கடந்த காலங்களில் அவ்வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாற்றமடைந்து விரக்தியான மனநிலையில் உள்ளோம். எவரும் எமக்காக எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாம் பேச்சளவிலேயே உள்ளன.

நாம் எமது குழந்தைகளை சிறையில் வைத்துக்கொண்டு வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றாக சிறை வைக்கப்பட்டிருப்பதனால் பிள்ளைகளின் மனநிலையும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

பெற்றோருடன் நண்பர்களுடன் ஓடி விளையாடி சந்தோசமாக இருக்கவேண்டிய குழந்தைகள் அந்த சந்தோசமும் இல்லாமல் ஒரு சமூகத்தின் அரவணைப்பு கூட இல்லாமல் சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாடும் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது.

அம்மா, அப்பாவை நாம் எப்போது பார்ப்போம்? அப்பா எங்கே? என கேட்கும் என் பிள்ளைகளின் ஏக்கங்களை எல்லாம் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு ஆரம்ப கல்லியைக் கூட வழங்க முடியவில்லை. ஆரோக்கியமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூட கொடுக்கமுடியவில்லை.

இன்று சில குழந்தைகள் தங்கள் தகப்பனாரை இறுதி யுத்தத்தில் இழந்துள்ளனர். இன்னும் சிலரின் தந்தையர் கை, கால்களை இழந்து அங்கவீனர்களாகவோ அல்லது காணாமல் போயோ உள்ளனர்.

நடந்த பிரச்சினைகளுக்கு ஒரு தரப்பினரை குற்றம் கூறுபவர்கள் ஏன் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள்? இருந்தவைகள் எல்லாம் இழந்து போயள்ள எங்களுக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.

எம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள். சிலருக்கு கணவரும்கூட சிறையில் உள்ளார். இருவரும் வேறு வேறு இடமாக சந்திக்கவே முடியாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல பெண்கள் திருமணமாகாமல் இளவயதிலுள்ளவர்கள் இவர்களின் நிலைமைகளை எண்ணிப் பாருங்கள்.

இவ்விளவயதில் நாம் எமது இளமையை தொலைத்தவர்களாகவும் ஆற்றல்கள் ஆளுமைகள் எல்லாம் மூளையிலேயே கருகி விடுவதுமான நிலையில் வாழ்க்கையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எப்போது நாம் விடுதலையாகி எம்வாழ்வில் எப்போது வசந்தம் மலரும் என்ற அங்கலாய்ப்புக்களும் ஏக்கங்களும் எம்மைச் சூழ்கின்றன. நாம் விடுதலையாகி வீடு போகையிலும் ஒரு பெண் என்ற வகையில் இச்சமூகத்தில் எமக்கு என்ன பெயர் கிடைக்குமென எண்ணிப் பாருங்கள்.

இது தவிர வாலிபம் கடந்தும் வயோதிபம் தள்ளாடும் வயதினிலும் சிலர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். எங்களை அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

குற்றத்தை எம்மீது சுமத்தி எங்களுக்கு தண்டனையைத்தர எண்ணுபவர்கள் எமக்கு வாழ்க்கையைத் தர எண்ணியதுண்டா?

கடந்தகால யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது வாழ்க்கையை தொலைத்து அதை எப்படி மீளக் கட்டியெழுப்புவதென்று தெரியாமல் தவிர்த்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கின்றோம்.

எமக்கு ஏன் இந்த வாழ்க்கை இந்த இருள்மயமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வருவார்களா?

சர்வதேச மகளிர் தினத்தில் எங்களது கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

அரசியல் கைதிகள் (குழந்தைகளுடன் உள்ள தாய்மார்)
அரசியல் கைதிகள் மகளிர் பிரிவு
வெலிக்கடை
கொழும்பு

இதே நேரம், இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலேயே... பெண் பைலட்டுகள், பெண் சிப்பந்திகள், பெண் இன்ஜினியர்கள் கொண்ட சிறப்பு விமானத்தை இயக்குகிறது. டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் கனடாவின் டொரண்டோ நகருக்கு செல்கிறது. ஏ.ஐ- 187 என்ற விமானத்திற்கு கேப்டன் ராஷ்மி மிராண்டா மற்றும் கேப்டன் சுனிதா நருலா பைலட்டுகளாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் 157 பெண் பைலட்டுகள் இருக்கின்றனர். பைலட்டுகள் தவிர 5300 பெண் ஊழியர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் விமானமான  AI -187   (மும்பை - டொராண்டோ) சேவையை, குடிமைப் பறணைத்துறை (Civil Aviation) யின் செயலர் நசீம் ஜய்தி  கொடி அசைத்துத்  தொடங்கி வைக்கிறார்.

AI 409/410  Delhi-Patna-Delhi , AI-469  Delhi-Raipur-Nagpur-Delhi ,
AI-811/812   Delhi-Lucknow-Delhi , AI-603/604  Mumbai-Bangalore-Mumbai , AI-569/167 Chennai-Mumbai-Chennai, AI804/506  Bangalore-Delhi-Bangalore மற்றும்  Air India Express flight IX302  Kozhikode and மும்பை ஆகியவையும் முற்றிலும் பெண் ஊழியர்களுடனே இன்று பறக்குமாம்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கடந்த வருடம் இதே நாளில் முதன்முறையாக  ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலேயே மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு தொடர்ந்து 14 மணி நேரம் பயணம் செய்யும் விமானம் ஒன்றை அனுப்பினார்கள். அந்த விமானத்தில் 4 பைலட்டுகளும் பெண்கள். அவர்களுக்கு உதவி செய்யும் அதிகாரிகள், உதவியாளர்கள் அனைவரும் பெண்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெண்ணுரிமைக்கும், மனித உரிமைக்குமான போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உத்வேகத்தை சர்வதேச பெண்கள் தினம் உருவாக்கட்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மார்ச் 8 சர்வதேச  பெண்கள் தின நூற்றாண்டு நிறைவையொட்டி, போராட்ட வாழ்த்துக்களைத் தமிழகப் பெண்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

பெண் உழைப்பாளிகளின் பல்வேறு பிரச்சனைகளோடு, பெண்களுக்கு வாக்குரிமை மற்றும் உலக சமாதானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 1910ம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் கூடிய 2வது சோசலிசப் பெண்கள் மாநாட்டில், சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட வேண்டுமென்ற பிரகடனம் செய்யப்பட்டது. 1911 முதல் உலகெங்கிலும் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கிளாரா செட்கின் அவர்களோடுஇப்பிரகடனத்தை முன்மொழிந்த அலெக்சாண்ட்ரா கொலந்தாய் பேசியதன் ஒருபகுதியை நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்  

பெண்களுக்கு வாக்குரிமை என்பதை முன்வைத்து சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை, சோசலிசப் பார்வையோடு, பெண்களின் இதர பிரச்சனைகளுடன் இணைக்க வேண்டும். இந்த தினத்துக்கு, ஒரு சர்வதேச குணாம்சம் உள்ளது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் தாக்கத்தால் உணவு வேலை இரண்டுமே கேள்விக்குறியாகி வருகிறது. பெண்கள் மீதான வன்முறை குடும்பத்திலும், சமூகத்திலும் மிகக்குரூரமானதாகவும், கூடுதலாகவும் நடைபெறுகிறது. அன்றைக்குப் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு, வாக்குரிமை அடையாளமாக நின்றது என்றால், இன்றைக்கு இன்னும் நிறைவேற்றப்படாத 33 சதவிகித சட்டம் அடையாளமாக முன்னுக்கு நிற்கிறது. உழைப்பாளி பெண்கள்பணி தொடர்பான பலவித சுரண்டல்களோடு, பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கும் ஆளாகின்றனர். தலித் பெண்கள் இதர ஒடுக்குமுறைகளுடன், சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர். நுண்நிதி நிறுவனங்களின் துன்புறுத்துல்களால் ஏழை பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதேசமயம் எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த மக்கள் கிளர்ச்சியில், அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் நடுவே பல்லாயிரம் பெண்கள் பங்கேற்ற நிகழ்வுகள் உத்வேகமூட்டுபவை. தமிழகத்திலும், உலகமயத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்வரிசைப்படையில் பெண்கள் எழுச்சியோடு பங்கேற்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, பெண்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்த்து, உறுதியோடு போராடி வருகிறது. வரும் காலத்தில் பெண்ணுரிமைக்கும், மனித உரிமைக்குமான போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உத்வேகத்தை சர்வதேச பெண்கள் தினம் உருவாக்கட்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது  அறிக்கையில்: இன்று இந்தியப் பெண்கள் மாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், பல நூற்றாண்டுகளாக திணிக்கப்பட்டுள்ள பாலினப் பாகுபாடு என்கிற அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, விடுதலை, அதிகாரமளிக்கக்கூடிய புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்ற நிலையில் ஆண் - பெண் சமத்துவத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி உலக பொருளாதார மன்றம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ முன்னணியில் வந்துள்ளதென்பதும், முஸ்லிம் உலகில் முற்போக்கான நாடாகப் பார்க்கப்படும் துருக்கி, இப்பட்டியலில் மிகவும் கீழாக வந்திருப்பதென்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உரிமைகளில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கக் கூடிய வெற்றியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிறிய ராஜ்ஜியமான லெசோதோ எட்டாவது இடத்தில் வந்துள்ளது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாட்டை விடவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகளை விடவும் ஆண்- பெண் சமத்துவத்தில் இந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பலருக்கு வியப்பைத் தந்துள்ளது.

இந்த நாட்டின் ஜனத்தொகை 18 லட்சம் மட்டுமே, அந்த சிறிய தொகையிலும் பாதிக்கும் அதிமானோர் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனாலும் ஆண்-பெண் சமத்துவத்தில் பல செல்வந்த நாடுகளை லெசோதோ விஞ்சியுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி நிலை, சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள உரிமைகள் போன்றவற்றை மதிப்பிட்டு ஒரு சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் எந்த அளவில் உள்ளதென்பதை உலக பொருளாதார மன்றம் கணக்கிட்டிருந்தது.

அந்த நாட்டின் அமைச்சர்களில் ஐந்தில் ஒருவர் பெண். காவல்துறையின் தலைமை அதிகாரி பெண், ஆண் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவான பெண் பிள்ளைகள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனராம்.

லெசோதோவில் ஆண் பெண் சமத்துவச் சூழல் வியக்கவைக்கும் நல்ல நிலையில் இருக்கிறதென்றால், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் துருக்கியோ இந்தப் பட்டியலில் மிகவும் கீழே வந்திருக்கிறது.

பெண்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதில் துருக்கிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையே இது காட்டுவதாக அந்நாட்டின் பெண்ணுரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து பெண்களை குடும்ப உறுப்பினர்களே கொல்லும் சம்பவங்கள் அங்கு தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டதாம். துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கடைப்பிடித்துவரும் இஸ்லாமியப் பழமைவாதக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் என்று ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துருக்கியப் பிரதமர் ரெஜெப் தயிர் எர்தோவான் ஆற்றிய ஒரு உரையில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.

இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இன்று எமது நாட்டை எடுத்துக்கொண்டால் அரசியலிலோ... பாராளுமன்றத்திலோ எத்தனை வீதமான பெண்கள் பிரதிநிதிப் படுத்துகிறார்கள் என்றால் கேள்விக் குறியே... மேலும் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் ஆண்களுக்கு ஈடாக தொழில்கள் செய்யும் போதும் ஆண்களை விட குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

 உலகளாவிய ரீதியில் பெண்கள் அமைப்புகள், அரசாங்கங்கள் மார்ச் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமேயாகும். இவை காலப்போக்கில் கல்வி பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் சமவாய்ப்பு; பெண்களுக்கு கண்ணியமான தொழிலுக்கான பாதையில் சமநிலையை அடையும் போதுதான் பெண்கள் மீதான அடக்குமுறையும்... ஆணாதிக்கமும் ஒழிந்து பெண்கள் இச் சமுதாயத்தில் ஆண்களுக்கு சமமாக தலை நிமர்ந்து நிற்க முடியும்...!!!

This year’s theme of International Women’s Day is “Equal access to education, training and science and technology: Pathway to decent work for women”

So make a difference, think globally and act locally...!!!

Make everyday International Women's Day...  Do your bit to ensure that the future for girls is bright, equal, safe and rewarding...!!!

 -       அலெக்ஸ் இரவி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com