|
||||
|
இந்தியாவின்
மனமாற்றம்?
(பரம்
ஜி)
ஜ.நாவில் சிறீலங்காவின்
போர்க்குற்றங்களுக்கு
எதிரான தீர்மானத்திற்கு
தாம் ஆதரவாக
வாக்களிக்கப்போவதாக
இந்தியா அறிவித்துள்ளதானது,
மக்கள் சக்த்தியே
மகேசன் சக்தி என்பதனை,
ஆயுத சக்தியை
நம்பும் அல்லது விரும்பும்
மனிதர்களுக்கு
மீண்டும்
ஒரு முறை
ஞாபகப்படுத்தி
இருக்கின்றது
எனலாம். மதில்மேல்
பூனையாக இதுவரை காலமும் இருந்து வந்த இந்தியா
எந்தப்பக்கம்
பாயும் என்பது கோள்விக்குறியாக
சென்ற வாரம் வரை
இருந்ததனால்,
அமெரிக்காவின்
தீர்மானத்திற்கு
எத்தனை நாடுகள் ஆதரவு கொடுத்தாலென்ன,
எத்தனை நாடுகள் எதிர்ப்பு
தெரிவித்தாலென்ன,
அதாவது சிறீலங்காவிற்கு
ஆதரவு தெரிவித்தாலென்ன,
உலக நாடுகள்
பார்த்து
கொண்டிருப்பது
இந்தியா என்ன செய்யப்போகின்றது
என்பதையே
பிரதமர் மன்மோகன்சிங்
இப்போது தந்து இருப்பதானது
ஜ.நாவில் சிறீலங்காவின்
போர்க்குற்றங்கள்
பற்றிய தீர்மான நிலைமைகளை
சூடேற்றி
வைத்துள்ளது
எனலாம். இந்தியாவிடம் இந்த மனமாற்றத்தை
கொண்டு வரவைப்பதற்கு
பல விடயங்கள்
காரணமாக இருந்திருப்பதாவே
எண்ணத்தோன்றகின்றது.
முதலாவது காரணமாக,
மக்கள் சக்தியையும்
மனிதத்தையும்
மதித்து, சிறீலங்காவில்
ஏற்பட்ட தமிழர்களின்
அழிவுகளுக்கு
காரணமாக இருந்தவர்களை
தண்டித்து
மனித இனத்திற்கு
உண்டான மாசினை துடைக்கும்
வகையில் மனுநீதி தேடவேண்டும்
என இந்தியா
நினைத்து
இருக்குமோ
எனில் நிச்சயமாக
இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். காரணம், இலங்கை தீவில் தமிழர்களின்
அழிவுகளுக்கு
ஒருவகையில்
தாமும் காரணமாக இருந்ததுடன்
போர் முடிவுக்கு
வந்தும் கடந்த மூன்று
வருட காலங்களாக
இலங்கையில்
வாழும் தமிழர்களின்
அரசியல் தேவைகளுக்கு
தீர்வாக ஜனாதிபதி மகிந்தாவின்
சிறீலங்கா
அரசு கொடுத்து
வந்த சப்பைக்கட்டு
வாக்குறுதிகளையே,
ஆதாவது பதின்மூன்றாவது
திருத்த சட்டத்திற்கும்
அப்பால் சென்று தீர்வு காணுவது பற்றி, சொன்னவற்றை
திரும்பவும்
சொல்லும்
கிளிப்பிள்ளைகள்
போல இவர்களும்
சொல்லி காலத்தை கடத்தி வந்திருக்கின்றனர்.
எனவே மனிதத்தை
காக்கும்
நோக்கில்
இந்தியா எடுத்த முடிவானது
இந்த மனமாற்றங்களுக்கு
காரணமில்லை
என்பது தெளிவாகின்றது.
ஆனால் மக்கள்
சக்திதான்
மனமாற்றங்களுக்கான
முதல் காரணம் என்பதானால்
அது நிச்சயமாக
இந்திய நாட்டு மக்களின் சக்தி என்றுதான்
சொல்ல வேண்டும்.
தமிழகம் முதலாக
இந்தியாவில்
இதுவரையில்
மாறி மாறி
நடைபெற்று
வந்த மாநில
தேர்தல்களில்,
மத்திய அரசில் ஆட்சியில்
இருக்கும்
காங்கிரஸ்
கட்சியினரும்
தமிழகத்தின்
தி.மு.க போன்ற அவர்களது
தோளமை கட்சிகளும்
வாக்காளர்கள்
நம்பிக்கைகளை
தொலைத்து
மக்கள் சக்தியை இழந்ததனால்
அடைந்து வரும் தேர்தல்
தோல்விகள்
கொடுத்த அழுத்தங்களுடன்,
தற்போது தமிழகத்தின்
முதல்வர்
ஜெயலலிதா
உட்பட பல முன்னணி
கட்சிகளின்
அரசியல்வாதிகள்
காங்கிரஸ்
கட்சியினரின்
தமிழர் விரோதப்போக்குகளுக்கு
எதிராக கொடுத்து வரும் ஆர்ப்பாட்ட
எதிர்ப்பு
கோச அழுத்தங்கள்
காரணமாகி
தமிழகத்தில்
தாம் கூட்டு
வைத்துள்ள
தி.மு.காவின்
எதிர்கால
அரசியல் இலாபங்களுக்கு
வேட்டு வைத்து அதன் மூலம்
தமது கட்சியும்
பாதிக்கப்பட்டு
விடுவதனை
தவிர்ப்பதற்காக
எடுத்த ஒரு முடிவுதான்
சிறீலங்காவிற்கு
எதிரான வாக்களிப்பு
என சொல்லலாம். அதே வேளை, ஜ.நாவில்
மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்க
போவதாக பிரதமர் மன்மோகன்சிங்
தெரிவித்த
பின்னரும்
சிறீலங்காவிற்கு
எதிராக கண்டனங்கள்
தெரிவிக்கவில்லை
என அ.தி.மு.காவின்
முதல்வர்
ஜெயலலிதாவும்,
எதிர்த்து
வாக்களிப்பதே
போதுமானது
என தி.மு.காவின்
தலைவர் கருனாநிதியும்
தொடர்ந்து
அறிக்கைகள்
மூலம் மோதிக்கொள்ளுவது,
ஜ.நா வாக்களிபு;பு மூலம்
இலங்கை தமிழர்களுக்கு
ஏதாவது நன்மைகள் நடைபெறின்
அதற்கான உரிமைகளை தாம் கோரிக்கொள்ளத்தான்
என்பது எந்த முட்டாள்களும்
விளங்கி கொள்ள வேண்டிய
விடயம்.
ஆரம்பத்தில் காங்கிரஸ்
ஆட்சியின்
போக்குகளுக்கு
எதிராக குரல் கொடுத்ததுடன்
ஆதரவுகளையும்
வாபஸ் பெறபோவதாக
அறிவித்திருந்த
தி.மு.க தலைவர் கருனாநிதி,
பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியா காந்தி போன்றவர்களிடம்
இருந்து கிடைத்த விளக்கங்களை
தொடர்ந்து
இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருப்பதை
காணக்கூடியதாக
இருக்கின்றது.
கொடுக்கப்பட்ட
விளக்கம்
ஒரு கேள்வியாகவும்
அதே வேளை
எச்சரிக்கையாசவும்
இருந்திருப்பின்
அது, சிறிலங்காவில்
ஆட்சிமாற்றம்
வரும்வரை
பொறுமையாக
காரியங்களை
கையாளுவதா
அல்லது அந்நாட்டில்,
மகிந்தா சகோதரர்கள்
சீனா இரஸ்யா
போன்ற நாடுகளின்
ஆதரவுகளுடன்
இன்று சிரியாவில்
நடப்பதை போன்றதொரு
இராணுவ ஆட்சியை நிறுவ வழிவகுப்பதா
என்றும் இருந்திருக்கும்.
அதே வேளை தமிழக மீனவர்களை
இன்று கச்சதீவு பகுதிகளில்
சிங்கள கடற்படை வீரர்கள் துன்புறுத்துவதா
அல்லது சீனக்கடற்படை
தொல்லையாக
இருப்பதா
மேல் என்பனவையாகவும்
இருந்திருக்கலாம். ஏதோ பல அரசியற்காரணங்களுக்காக
மகிந்தா அரசு சொல்லி
வந்த சல்ஜாப்புகளை
எல்லாம் இந்தியா இதுவரை பொறுத்து கொண்டே வந்திருக்கின்றது. உலக
அரங்கில்
ஒரு வல்லரசுக்கு
ஒப்பான தானத்தை இந்தியா வகித்து வருகின்ற போதும் இந்திய அரசு சிறீலங்காவில்
இழைத்த சில அரசியல்
தவறுகள் காரணமாக இந்தியாவின்
பரம எதிரிகாளான
மக்கள்சீனக்குடியரசு
சிறீலங்கா
ஊடாக இந்து
சமுத்திர
பிராந்தியத்தில்
ஊடுருவ வழிசெய்ய வைத்தது. அதன் காரணமாக
சிறீலங்கா
ஒரு சிறிய
வறிய நாடாக
இருந்தபோதும்
அந்நாட்டு
ஆட்சியாளர்களை
இந்தியா மதிப்பளித்து
நடாத்தி வந்திருக்கின்றது.
இன்று தமது தீர்மானத்திற்கு
ஜ.நாவில் ஆதரவினை தரும்படி ஜக்கிய அமெரிக்கா
தூதுவர்களை
அனுப்பி இந்தியாவிடம்
பல முறை
கேட்டிருந்தபோதும்
நேரடியாக
பதில் ஏதும் சொல்லாமல்
இந்தியா இருந்து வந்தது. ஆனால் ஜக்கிய
அமெரிக்கா
சிறீலங்காவிற்கு
எதிரான தனது ஜ.நா
தீர்மானத்திற்கு
இந்தியா தவிர்ந்த மற்றய நாடுகளின்
ஆதரவுகளை
பெற்று வாக்கெடுப்பில்
வெல்லுமாயின்
இந்தியாவின்
செல்வாக்கு
செல்லாக்காசாகி
விடும் என்பதையும்
இந்தியா உணர்ந்திருக்க
கூடும். அதுவும் வாக்களிப்பில்
சிறீலங்காவிற்கு
எதிராக வாக்களிக்க
முன்வந்ததன்
காரணங்களில்
ஒன்றாக இருக்கலாம். ஜக்கிய அமெரிக்காவின்
சிறீலங்கா
மீதான போர்க்குற்ற
பிரேரணை ஒரு வேளைஆடு
நனைகிறது
என ஓநாய்
அழுத கதை
போன்றதாக
இருக்குமோ
என சந்தேகம்
கொள்ள வைக்கிறது. ஆயிரத்து
தொள்ளாயிரத்து
அறுபதுகளில்
இலங்கையின்
மன்னார் தங்காலை கடற்பரப்புகளின்
அடியில் மசகு எண்ணை
வளங்கள் இருப்பதாக
வந்த இரகசிய
கதைகள் இன்றய காலகட்டத்தில்
பரகசியமாகி,
இந்தியா சீனா போன்ற
நாடுகள் அவ்வளங்களை
தமது நாடுகளுக்கு
சாதகமாக்கி
நன்மை அடையும் நோக்கிலேயே
சிறீலங்காவின்
தான்தோன்றி
தனமான நடப்புக்களுக்கு
எல்லாம் ஆதரவுகளை கொடுக்கின்றன
அதன் காரணமாகவே
விடுதலைப்புலிகளை
அழிப்பதற்கு
வேண்டிய ஆயுதங்களையும்
ஆதரவுகளையும்
கொடுத்தன
என்றும் கூறப்படுகின்றது.
அந்த எண்ணை
வளத்தை கருத்தில்
கொண்டே ஜக்கிய அமெரிக்காவும்
சிறீலங்காவை
தனது ஜ.நா
போர்க்குற்ற
மிரட்டல்களால்
பணிய வைக்கவும்
முடிவில்
தனது கைப்பொம்மை
அரசியல்வாதி
ஒருவரை ஜனாதிபதி பதவியில் அமரவைப்பர்
எனவும் எதிர்பார்க
படுகிறது.
யார் இடித்தாலும்
பறவாயில்லை
பிச்சை எடுக்கும்
நிiயில் இருக்கும்
தமிழர்களுக்கு
அரசி கிடைத்தால்
சரி.
இலங்கை தீவில்
இருக்கின்ற
மக்களின்
தலைவிதிகளை
நிர்ணயிக்கும்
உரிமைகளை
தமது கைகளில்
இதுவரைகாலமும்
வைத்திருக்கும்
சிங்கள தமிழ் அரசியல்வாதிகள்,
சேகுவேரா
ஜே.வி.பி மற்றும் தமிழீழ விடுதலை போரளிகள் போன்ற சிங்கள
தமிழ் விடுதலை இயக்கங்கள்
போன்றவைகள்
எல்லாம் அரசியல் சூனியர்களாக
இருந்ததுடன்
இனவெறியை
மக்களிடையே
பரப்பி வளர்த்து விடுவதே அரசியல் தந்திரங்களாக்கி
அந்நாட்டையும்
மக்களையும்
அழிவுப்பாதையிலேயே
இட்டு சென்று இருக்கின்றனர்.
இன்று தமது நாட்டு
நிலவரங்களை
சரிவர புரிந்து கொள்ளாமல்
ஜக்கிய அமெரிக்கா
இந்தியா போன்ற நாடுகளின்
பலம் இராஜ
தந்திரங்கள்
பற்றி உணராது அவர்களை ஏதோ தம்மை
ஒத்த தெருச்சண்டியர்களாக
எண்ணி வம்புக்கு
இழுப்பது
தூசிப்பது
சவால்கள்
விடுவது போன்ற நடந்து
கொள்ளும்
ஜாதிக ஹெல உறுமய
போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள்
தகுந்த பாடங்கள் விரைவில் படிக்கும்
காலங்கள்
வரவேண்டும்.
கடைசியாக கிடைத்த
தகவல்களின்
படி இந்தியாவின்
ஆதரவுடன்
ஜ.நாவில் ஜக்கிய அமெரிக்கா
சிறீலங்காவிற்கு
எதிரான தீர்மானத்தில்
போதிய வாக்குகளை
பெற்று வெற்றி கண்டுள்ளதாக
தெரிய வருகிறது. முப்பது வருடங்களுக்கு
மேலாக தமிழர்கள்
கற்றுக்கொண்ட
பொறுமை எனும் பாடம்
வேண்டிய காரியங்கள்
ஆகும் வரையில் இனித்தான்
தேவைப்படும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |