|
||||
|
ஈழத்துக்கான
படுகொலைகள் - சர்வதேசத்தின்
தீர்மானம். -
தேவன் (கனடா) ‘ கூட்டமைப்பில்
இருக்கும் தலைவர்கள்
புலிகளால் கொல்லப்பட்ட
தமது தலைவர்களுக்கே
இரங்கல் கூட்டம்,
கண்டிப்பு தெரிவிக்காதவர்கள்.
பொறுப்பு கூறல்கள்
பற்றி கதைப்பது
வேடிக்கையாக இருக்கிறது.
அத்துடன் போர்
பற்றி சாட்சி சொல்ல
முன்வராதவர்கள்
இன்று அதைப்பற்றி
கதைப்பது அபத்தமாக
இருக்கிறது. அவசியமான
கருமங்களைப் பற்றி
என்று நாம் நிசப்தமாகி
நிற்கின்றோமோ
அன்றே மநது வாழ்வின்
அஸ்தமனம் ஆரம்பமாகிறது’
- மாட்டின் லுதர்
கிங். மனச்சாட்சிக்கும்
பொறுப்பு கூறலுக்கும்
சமூக நீதிக்கான
குரலுக்கும் ஒப்பான
கருத்து நாட்டுக்கு
நாடு தலைவர்களுக்கு
தலைவர் மனிதருக்கு
மனிதர் வேறுபடுகிறது. இந்தக்
கருத்து மேற்கிலுள்ள
தலைவர்களையும்
ஐரோப்பிய தலைவர்களையும்
பாதிக்காதவாறு
ஐ.நா சபையும் உலக
மன்னிப்பு சபையும்
சர்வதேச மனித உரிமை
சபையும், உலக நெருக்கடிகளுக்கான
அமைப்பும் அரணாக
நின்று பாதுகாத்து
வருகிறது. மனித உரிமை
விடையங்களையும்
போர்க்குற்றங்களையும்
அமெரிக்கா தலைமையிலான
நேசநாடுகள் ஒருதலைப்பட்சமான
ஆயுதமாகவே பாவித்து
வருகிறது. இதன்
பின்புலமாக ஐரோப்பிய
யூனியனின் அரசியல்
அதிகாரம், பொருளாதாரம்,
ஆக்கிரமிப்பு,
பொருளாதார சுரண்டல்,மேலாண்மை தமது
கட்டுப்பாட்டுக்குள்
வராத தேசங்களை
மிரட்டுதல் இராணுவ
ஆக்கிரமிப்பு,
விடுதலை, மனித
உரிமை பெற்றுத்
தருவதாக யுத்தங்களை
ஆரம்பித்தல் போன்ற
நிகழ்சி நிரல்களை
அடிப்படையாகக்
கொண்டு இயங்கிவருவதை
அவதானிக்கலாம்.
உலக பொலிஸ்காரனான
அமெரிக்கா வியட்நாம்,
கியூபா போன்ற பல
தேசங்களிடம் பாடம்
கற்றும் பொலிஸ்காரன்
வேஷத்தை இன்னும்
கைவிடவில்லை. உலகின்
மிகக் கொடூரமான
30 வருட புலிப் பயங்கரவாதத்தை
அழித்த ஒரு தேசத்திடம்
போரின் இறுதியில்
நடந்த அத்துமீறல்களுக்கு
பொறுப்பு கூறவேண்டும்,
சுயாதீனமான போர்க்குற்ற
விசாரணை நடத்தப்படவேண்டும்
என அமெரிக்காவும்
அதன் கூட்டாளிகளும்
இலங்கைக்கு அரசியல்
ரீதியகவும் பொருளாதார
ரீதியாகவும் நெருக்கடிகளை
கொடுக்க எத்தனிப்பது
பல்லின தீவின்
மக்கள் நலன் கருதியது
அல்ல என்பதை யாவரும்
அறிவர். போரின்
பின்பான ஒரு தேசம்
பெரிய அளவில் பொருளாதார
நெருக்கடியில்,
வறுமையில் சிக்காது
அமைதியாக மெல்ல,
மெல்ல அபிவிருத்தியடைந்து
முன்னேறி வருவதும்,
மேற்கையும் ஐரோப்பிய
யூனியனையும் பொருளாதார
தேவைக்கு தங்கியிருக்காது
மத்திய கிழக்கு,
சீனா, இந்தியா,
ரஷ்சியா, ஆபிரிக்கா,
லத்தின் அமெரிக்கா
போன்ற தேசங்கிடம்
பொருளாதார ரீதியாகவும்
வேறு நலன்களிலும்
உறவுகளிலும் நெருக்கம்
காட்டுவதினால்
ஒரு சிறிய தேசத்தை
பழிவாங்கவும்
தண்டிக்கவும்
அமெரிக்கா தலைமையிலான
கூட்டாளிகள் மகிந்த
அரசுக்கு பல்வேறு
வழிகளில் அழுத்தங்களை
கொடுத்துவருகிறது. இவைகள்
தவிரவும் மேற்கின்
அரசியல் இராணுவ
நலன்களுக்காக
இலங்கை புவியியல்
ரீதியாக முக்கிய
கவனத்தை பெறவதாலும்
தற்போதைய அரசுக்கு
மேற்குக்கு வளைந்து
கொடுக்காததாலும்
தனக்கு ஏற்ற ஒரு
பொம்மை, அடிவருடி
அரசை உருவாக்கி
சீனாவின் செல்வாக்கை,
ஆதிக்கத்தை மட்டுப்படுத்த
அமெரிக்கா தலைமையிலான
கூட்டணி தலையால்
மண்ணைக்கிண்டுகின்றன. மேலும்
ஐ.நாவின் 19வது அமர்வு
மனித உரிமைக் கவுன்சில்
கூட்டத் தொடரில்
அமெரிக்கா தலைமையிலான
மேற்குலகு இலங்கை;ககு எதிராக
கொண்டுவரப்பட்ட
தீர்மானத்தில்
சர்வதேச மனித உரிமை
அமைப்புக்களும்
புலம்பெயர் புலி
அமைப்பின் நிழல்
அமைப்புக்களான
உலகப் பேரவை, கனடிய
தேசிய அவை, கனடிய
காங்கிரஸ், த.தே.
கூட்டமைப்பு
இலங்கைக்கு எதிராக
இணைந்து கொண்டது
இலங்கைக்கும்
தமிழ் மக்களுக்கும்
செய்த மிகப்பெரிய
துரோகம். கூட்டமைப்பில்
இருக்கும் தலைவர்கள்
புலிகளால் கொல்லப்பட்ட
தமது தலைவர்களுக்கே
இரங்கல் கூட்டம்,
கண்டிப்பு தெரிவிக்காதவர்கள்.
பொறுப்பு கூறல்கள்
பற்றி கதைப்பது
வேடிக்கையாக இருக்கிறது.
அத்துடன் போர்
பற்றி சாட்சி சொல்ல
முன்வராதவர்கள்
இன்று அதைப்பற்றி
கதைப்பது அபத்தமாக
இருக்கிறது. இலங்கையில்
வட – கிழக்கில்
தமிழ் மக்களை பிரதிநித்துவம்
செய்யும் கூட்டமைப்பு
மாற்றுக் கட்சி
தலைமைகளும், புலம்பெயர்
புலித் தேசியவாத
நிழல் அமைப்புகளும்
அண்மைக் காலமாக
பர்மாவில் ஏற்பட்டுவரும்
அரசியல் மாற்றங்களையும்,
சீர்திருத்தங்களையும்
கூர்ந்து கவனித்து
அதில் இருந்து
கற்றுக்கொள்ள
வேண்டும். பல தசாப்த
காலமாக இராணுவ
ஆட்சி நடைபெற்ற
தேசத்தில் அமைதிக்காகவும்
மனித உரிமைக்காகவும்
ஜனநாயகத்துக்காவும்
நோபல் பரிசு பெற்ற
ஆன் சான் சூகிக்கு
எத்தகைய இராணுவ
அடக்கு முறைகளை
கட்டவித்து விட்டது
என்பதை வரலாறு
பதிவு செய்திருக்கிறது. பார்மாவின்
இராணுவ ஆட்சி தலைவர்களால்
அத்தேசத்துக்கும்
ஆன் சான் சூகியின்
ஜனநாயகக் கட்சிக்கும்
பத்திரிகைதுறைக்கும்
மாற்று தலைவர்களுக்கும்
எத்தகைய பாதிப்புகள்
ஏற்பட்டது எத்தகைய
நெருக்கடிகள்
உயிர் இழப்புக்கள்
நடந்தது என்பது
உலகம் அறிந்த விடையம்.
இதில் சிறப்பு
என்னவென்றால்
பல்வேறு ஒடுக்குமுறைகளை
நெருக்கடிகளை
சந்தித்த இந்தத்
தலைவர்கள் தேசத்தையும்
காட்டிக்கொடுக்காது
யாரையும் பகைக்காது
இராணுவத் தலைவர்களுடன்
இணைந்து பல அரசியல்
மாற்றங்களையும்
சீர் திருத்தங்களையும்
முன்னெடுத்து
வருகிறார்கள்.
இதை உலகமே மிக
உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.
இந்த விடையத்தில்
மேற்கின் நலன்
ஒரு புறமிருக்க
நமக்கு தேவையான
அனுபவத்தை மட்டும்
எடுத்துக்கொள்ள
வேண்டும். இது போன்ற
முன்னுதாரணங்களும்
மாற்றங்களும்தான்
இலங்கைக்கு தேவைப்படுகிறது. தற்போது
ஜெனிவாவில் நடக்கும்
19வது மனித உரிமைக்
கூட்டத் தொடரில்
நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கையில் சொல்லப்பட்ட
முன்னேற்றகரமான
விடையங்களை வேகமாகவும்,
விரைவாகவும் ஒரு
குறிப்பிட்ட கால
அட்டவணையில் அமுல்படுத்தும்
படி மகிந்த அரசுக்கு
ஒரு நிர்ப்பந்தத்தை
கொடுக்கும் வகையில்
அமெரிக்காவும்
அதன் பரிவாரங்களும்
ஒரு பிரேரணையை
மனித உரிமை கவுன்சிலில்
நிiவேற்றியிருக்கிறார்கள். இந்தப்
பிரேணைக்கு ஆதரவாக
24 நாடுகளும் எதிராக
15 நாடுகளும் வாக்களித்துள்ளன. இதில் இந்தியாவின்
நிலைப்பாட்டால்
இலங்கை குழப்பமடைந்துள்ளது.
இந்தியாவுக்கும்
சீனாவுக்குமான
பனிப்போரை தனக்கு
சாதகமாக பயன்படுத்தியிருக்கிறது
அமெரிக்கா. இந்த
ஆண்டுக்கான நகைச்சுவை
என்னவெனில் இந்த
வெற்றிக்காக கூட்டமைப்பு
எப்படி உழைத்தது
என்பதை இனியாவது
தமிழ் மக்கள் உணர்ந்திருப்பார்கள்
என்று கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்
கூறியதுதான். மனித உரிமை கவுன்சிலில்
அங்கம் வகிக்கும்
நாடுகளுக்கு கடிதம்
எழுதியதைத்தான்
ஐயா குறிப்பிடுகிறார்.
ஒரு கடிதத்தை எழுதி
அரசாங்கம் கொடுத்த
‘போட்டோகொப்பி’
இயந்திரத்தில்
நகலெடுத்து அந்தந்த
நாடுகளுக்கு அனுப்பியது
கூட்டமைப்பின்
மிகப்பெரிய உழைப்பு!
‘கேக்கிறவன் கேனையனா
இருந்தா பசுமாடும்
ஏரோப்பிளேன் ஓடுமாம்’ எது
எப்படி இருப்பினும்
மனித உரிமை கவுன்சிலில்
நிறைவேற்றப்பட்டுள்ள
இத் தீர்மானத்தின்
மூலம் இங்கையை
தண்டிக்க வேண்டும்,
யுத்தக் குற்றங்களை
புரிந்தவர்களை
விசாரிக்க வேண்டும்
சம்பந்தப்பட்டவர்களை
மின்சார நாற்காலியில்
அமர்த்த வேண்டும்
என்று கனாக்காண்பவர்கள்
ஒரு விடையத்தைக்
கவனத்தில் கொள்ள
வேண்டும். இது
போன்ற விடையங்களால்
யுத்தத்துக்கு
பின்பான இலங்கையில்
சமூகங்களுக்கிடையில்
இன்னும் ஆழமான
வெறுப்பு, பகைமை
உணர்வு, இனவாதம்
வளருமேதவிர மேற்குலகம்
நினைப்பது மாதிரி
ஏதும் அதிசயம்
உடனடியாக நடந்துவிடப்போவதில்லை.
உண்மையாகவே
மேற்கு இலங்கை
மீதும் தமிழ் மக்கள்
மீதும் உண்மையான
அக்கறை இருந்தால்
இதுபோன்ற விடையங்களை
ஜே.ஆர் காலத்தில்
எடுத்திருக்க
வேண்டும். அப்படி
ஒரு அற்புதத்தை
நிகழ்த்தியிருந்தால்
83 இனக் கலவரத்திலிருந்து
புதுமாத்தளம்
வரையிலான பெரும்
மானுடத்துயரையும்
தவிர்திருக்கலாம். பொறுப்புக்கூறம்
பிரச்சினையும்
ஏற்பட்டிருக்காது. ‘நம்புங்கள்
தமிழ் ஈழம் நாளை
பிறக்கும்’ என்ற
கோஷம், வெல்ல முடியாத
தலைமை, தோற்கடிக்கப்பட
முடியாதவர்கள்,
உலகின் 4வது பெரிய
இராணுவத்தை அடித்து
விரட்டியவர்கள்
போன்ற பிரமைகள்
கலைந்து வரலாற்றின்
துன்பியலாக ஈழப்போர்
பொறுப்பு கூறலில்
முடிந்திருக்கிறது.
இந்த பொறுப்பு
கூறல் விவகாரத்தில்
சட்டமும் சமூக
நீதியும் நேர்மையாக
பக்க சார்பின்றி
இயங்குமாக இருந்தால்
மகிந்த அரசு மட்டும்
அல்ல சர்வதேச பரப்பிலும்
உள்நாட்டிலும்
பலபேர் தண்டிக்கப்படவும்
பொறுப்பு கூறவும்
வேண்டும். மேற்கு
ஒரு விடையத்தை
முக்கியமாக இலங்கை
வரலாற்றில் இருந்து
புரிந்துகொள்ள
வேண்டும். சந்திரிகா அதிபராக
இருந்தபோது வட-
கிழக்கு பிராந்திய
சுயாட்சி அல்லது
சம்ஷ்டி அடிப்படையில்
இனப்பிரச்சினைக்கு
தீர்வாக ஒரு பொதி
அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது சந்திரிகாவுக்கு
பாராளுமன்றத்தில்
பெரும்பான்மை
பலம் இல்லாததாலும்
எதிர்கட்சிகள்
இனவாதக் கட்சிகள்,
தமிழ் தரப்பில்
கூட்டமைப்பு, புலிகள்
இம் முயற்சிக்கு
ஆதரவு வழங்காதாலும்
தீர்வு பொதியை
நாடாளுமன்றத்தில்
தீயிட்டு எரித்ததாலும்
தற்போதைய தீர்வான
13வது திருத்தச்சட்டத்துக்கு
மேலாக அருமையான
சந்தர்ப்பத்தை
தவறவிட்டதற்கு
சம்பந்தன் தலைமையிலான
கூட்டமைப்பு தமிழ்
சமூகத்துக்கு
பொறுப்பு கூறவேண்டும்.
அத்துடன் இத்தகைய
ஒரு சிறப்பான தீர்வை
புலிகளும் புலிகளின்
ஆலோசகர் அன்ரன்
பாலசிங்கமும்
சதைகள் நீக்கப்பட்ட
எலும்பு என நிராகரித்து
யுத்தத்தையும்
ஆரம்பித்து தமிழ்
சமூகத்தை நந்திகடல்
அழிவுவரை இழுத்துச்
சென்றார்கள். இதற்கு யார்
பொறுப்புக்கூறுவது? இலங்கையின்
நீண்டகால அமைதியை
சீர்குலைத்துவந்த
புலிகளை மகிந்த
அரசு வெற்றி கொண்டதன்
பயனாக இலங்கை மக்கள்
பெரும்பான்மை
பலத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த
பெரும்பான்மை
அரசியல் அதிகாரத்தை
மகிந்த அரசு இனங்களுக்கிடையில்
நல்லுறவை ஏற்படுத்துவதற்கும்,
இனமுரண்பாட்டை
தீர்ப்பதற்கும்
பதிலாக ஜனாதிபதிற்கு
மேலதிகமான அதிகாரத்தை
ஏற்படுத்துவதிலும்
தேசியப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதில்
அலட்சியப் போக்கை
கடைப்பிடிப்பதாலும்
மேற்குலக கழுகுகள்
இலங்கை விவகாரத்தில்
தலையீடு செய்வதற்கு
வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. மேற்குலகுக்கு
இலங்கை மக்கள்
மீது உண்மையான
அக்கறை இருக்குமானால்
அல்லது ஆக்கபூர்மாக
செய்ய ஏதாவது நினைத்தால்
ஐநா சபை மனித உரிமை
கவுன்சிலின் ஊடாக
மகிந்த அரசுக்கு
நெருக்கடிகள்
கொடுத்து ஸ்திரத்தன்மைiயையும்
இனங்களுக்கிடையில்
பிளவுகள் ஏற்படுத்துபதற்குப்
பதிலாக மகிந்த
காலத்திலேயே தேசிய
இனப்பிரச்சினைக்கு
தீர்வை எட்டுவதற்கு
தார்மீக ஆதரவு
கொடுக்க வேண்டும். மகிந்த
ஆட்சி அதிகாரத்துக்கு
வரும்போது அடுத்த
தலைமுறைக்கு பயங்கராத
பிரச்சினையை விட்டுவைக்கபோவதில்லை
எனக் கூறினார். அவர் கூறியதுபோல
செயலிலும் செய்து
காட்டினார். ஆகவே
இதைப்போல அடுத்த
தலைமுறைக்கு இனப்பிரச்சினையை
விட்டுவைக்கக்கூடாது
இன்னொரு கிளர்சியை
இலங்கை தாங்காது
என எடுத்துக்கூறி
‘தீதும் நன்றும்
பிறர்தர வாரா’
எனும் தாரக மந்திரத்தை
புரிந்துகொண்டு
இலங்கை தேசத்தை
ஒரு குறிப்பிட்ட
இனத்துக்கு மதத்துக்கு
ஆட்சியில் அதிக
முக்கியத்துவம்
கொடுக்காது பல்லின
சமூகத்தின் உரிமையை
பாதுகாப்பை சமத்துவத்தை
சமூக நீதியை உறுதிப்படுத்தல்
மற்றும் மதச்சார்பின்பை
போன்ற விடையங்களில்
கவனம் செலுத்துவதே
இன்றைய அவசர தேவையாகவுள்ளது. சுதந்திரத்தின்
பின்னரான தேசத்தை
ஆட்சி செய்த தென்
இலங்கைத் தலைவர்கள்
டட்லி தொடக்கம்
மகிந்த வரை பெரும்பான்மை
இன, மத, மொழி நலன்களை
மட்டுமே பிரதானமாக
பிரதிபலித்து
வந்துள்ளார்கள். சுமார்
2500 வருடங்களுக்கு முன்பு கௌதம
புத்தர் மானுடத்தை
நோக்கி இவ்வாறு
கூறுகிறார். துன்பத்தின்
மூல காரணங்கள்
மூன்று. அவை
பேராசை, அறியாமை
மற்றும் கோபம்.
நூம் இவற்றை
நம்முடைய சிந்தனையிலும்
பேச்சிலும் செயலிலும்
வெளிப்படுத்திகிறோம்.
புத்தமதம்
வலியை மேம்போக்காக
குறைக்கும் வேலையைச்
செய்யவில்லை.
உண்மையாக வாழ்வது
எப்படி என்பதை
புத்தர் உரைத்தார்.
உன்னத வாழ்க்கை
என்பது வலியற்றதல்ல
அதே சமயத்தில்
அர்த்தமுள்ளதாகும். புத்த
வரலாற்றை ஆய்வு
செ;யும் ஆய்வாளர்கள்
ஏற்றத்தாழ்வற்ற
சமூகத்தை உருவாக்கவதற்குப்
பல வழிகளிலும்
பங்களித்துள்ளதாக
கூறுகிறார்கள்.
புத்தர் சாசுவதமான
விடுதலையை உலக
சமூதாயத்துக்குக்
கொண்டுவர அவர்
பாடுபட்டார்.
மனித சமூதாயம்
போற்றிய அந்த மாமனிதர்
கடவுளைப் பற்றி
ஆராயமல் மனிதனின்
யதார்த்த வாழ்வை
சிந்தித்த முதல்
புரட்சியாளர்
அவர். யுத்தத்துக்கான
மூலத்தையும் இவ்வாறு
கூறுகிறார், மனித
விருப்பம் கலைகளில்
தொடங்கி கடைசியில்
போரில் முடிகிறது. புண்பாட்டில்
தொடங்கி மயக்கத்தில்
முடிகிறது. இன்று நம்பிக்கைய+ட்டும்
விதமாய் ஏதேனும்
ஒன்று நடக்காதா
என்று ஏங்கிறோம்.
இத்தகைய புத்த
பாரம்பரியத்தை
கொண்ட தேசத்தில்
மூன்று ஆயுதக்
கிளர்சிகள் நடைபெற்றதும்,
பெரும் இரத்தக்
களரி ஏற்பட்டதும்
வரலாற்றின் துரதிஸ்டம்.
அதேசமயம் தெற்காசியாவின்
பல சிறப்புக்களை
கொண்ட தேசத்திடம்
அமெரிக்கா தலைமையிலான
மேற்குலகம் ஜனநாயகம்,
போர் குற்றம்,
பொறுப்பு கூறல்,
நம்பகத்தன்மை,
வெளிப்படைத்தன்மை
பற்றி போதனை செய்வது
அபத்தமானது. இரண்டாம்
உலகப் போரின்போது
அமெரிக்கா, ஜப்பான்
சரண் அடைய முடிவு
எடுத்த சமயத்தில்
அதாவது 1945ல் ஆகஸ்ட்
மாதத்தில் அணுகுண்டுகளை
வீசி பல்லாயிரக்கணக்கான
மக்களை கொன்றுகுவித்தது. பல்லாயிரம்
பேர் அங்கவீனமானார்கள்.
இன்றும் அதன்
சுவடுகள் மறையவில்லை.
இந்த வரலாற்றுச்
சோகத்திற்காக
யாரும் தண்டிக்கப்படவில்லை
பொறுப்புக்கூறவும்
இல்லை. நல்லவேளையாக
ஐநா பாதுகாப்புச்
சபையில் சீனாவுக்கும்
ரஷ்யாவுக்கும்
‘வீற்டோ’ அதிகாரம்
இருப்பதால் அமெரிக்காவின்
அதிகாரப்பசிக்கு
ஈராக், லிபியா,
ஆப்கானிஸ்தான்
தேங்களுக்கு ஏற்பட்ட
நிலை உலகின் பிற
தேசங்களுக்கு
ஏற்படவிருக்கும்
பாதிப்பு தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மனிதகுல எஜமானர்களின்
‘எல்லாம் நமக்கே
மற்றவர்களுக்கு
ஏதுவுமில்லை’ என்று
ஐநா உரையில் தாமரா
குணநாயகம் கூறியதுபோல
அமெரிக்கா தலைமையிலான
மேற்க்குலகம்
செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும்
இந்தப் பொறுப்புக்கூறல்,
மனித உரிமை, பேர்க்குற்றம்,
நம்பகத்தன்மை
போன்ற விடையங்களில்
உலகில் எந்தத்
தலைவர்களின் கையும்
சுத்தமாக இல்லை. இது ஒரு பொருளாதார
இருப்பு சார்ந்த
அரசியல் கோசம்.
இலங்கையைப்
பொறுத்தவரை இனப்பிரச்சினை
தீர்வில் பல ஒப்பந்தங்கள்
தோல்வி கண்டிருக்கின்றன.
பல ஆணைக்குழுக்களின்
தீர்மானங்கள்
செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விடையங்களில்
சிங்களத் தலைவர்கள்
தேசமக்களிடம்
பொறுப்பும், மன்னிப்பும்
கூறப்படல் வேண்டும்.
அதேபோல தமிழ்த்
தலைவர்களும் துரையப்பாவில்
தொடங்கி நந்திக்கடல்
வரையிலான பெரும்
துயத்திற்கு பொறுப்புக்கூற
வேண்டும். போருக்குப்
பின்பான ஒரு ஐநா
சபையின் கூட்த்தொடரில்
மகிந்த உரையாற்றும்போது,
இலங்கையில் உள்ள
தமிழர்கள்தான்
உலகிலேயே சந்தோசமாக
வாழ்வதாக கூறினார். ஆனால்
ஜெனிவா 19வது கூட்டத்தொடரில்
போர் புரிந்தவர்களும்
போரைத் தூண்டியவர்களும்
மனித உரிமை, பொறுப்புக்கூறல்,
யுத்தக் குற்றம்
போன்ற ஆரவாரங்களில்
ஈடுபட்டக்கொண்டிருக்கும்போது
போர் தந்த கொடுமையால்,
வறுமையால் கிளிநொச்சி,
வரணி பகுதிகளைச்
சேர்ந்த இரண்டு
தாயும் பிள்ளைகளும்
தற்கொலை செய்துகொண்டார்கள்.
இந்தச் சம்பவம்
எந்தத் தலைவர்களுக்கும்
கவiலையளித்ததாக
தெரியவில்லை.
இதற்கு யார்
பொறுப்புக் கூறவது. தமிழ்
சமூகத்தின் தற்போதைய
அரசியல் முறைமை
எதிர்ப்பு அரசியல்
மற்றும் சரணாகதி. இதிலிருந்து
விடுபட்டு பன்முக
தர்க்கரீதியான
தேசிய அரசியலுக்கு
மாறவேண்டும்.
இணக்கப்பாடு
எனக்கூறிக்கொண்டு
மௌனம் ஆக இருக்கமுடியாது.
ஒடுக்கப்பட்ட
அனைத்து மக்களுக்காகவும்
குரல் கொடுக்க
வேண்டும். பொறுப்புக்கூறல்
என்பது தனியே யுத்தத்தின்
இறுதிக்கட்டத்தில்
நடைபெற்றதற்கு
மட்டுமல்ல. 60 வருடத்துக்கு
மேலாக சோசலிச ஜனநாயக
திருநாட்டில்
நடைபெறும் அiஉத்து
ஒடுக்கு முறைகளுக்கும்
பொறுப்பு கூற வேண்டும்.
அத்துடன் புலிகள்
கடந்த முப்பது
வருடமாக தமிழ்
சமூகத்திற்கும்
சக பல்லின சமூகங்களுக்கும்
செய்த கொலை வெறியாட்டங்களுக்கும்
பாசிச வெறியாட்டத்திற்கும்
பொறுப்புக்கூறவேண்டும். இவ்வுலகம்
எப்படி இயங்குகிறது
என்பதற்கு அண்மையில்
இறந்த செய்தியாளர்
மேரி கொல்வின்
ஒரு குறியீட்டை
உலகுக்கு விட்டுச்
சென்றுள்ளார். அதாவது போரில்
ஒரு கண்ணை இழந்து
ஒரு கண்ணுக்கு
கறுப்பு பட்டி
அணிந்திருந்தார்.
அவர் அரச தரப்ப
குற்றங்களை மட்டுமே
வெளிக்கொணந்தார்.
புலிகளின்
குற்றங்களை வெளிக்கொணரவில்லை.
அதனால்தான்
தமிழ் தேசியவாத
பக்தர்கள் மேரியின்
இழப்பை தாங்கமுடியாமல்
துடிக்கிறார்கள்.
தார்மீக உணர்வும்
பொறுப்புணர்வும்
ஒரு வழிப்பாதையல்ல
அது பன்முகத்தன்மையானது.
தமிழ் சமூகம்
போலல்லாது தேசியவாத
மாயையில் இருந்து
விடுபடவேண்டும்
அப்போதுதான் வானம்
வசப்படும். (நன்றி:
தேனி இணையத்தளம்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |