Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாதீர்!

(கி.இலக்குவன்)

எண்ணெய் வள நாடுகளில் எல்லாம் தனது கட்டளைப்படி இயங்கக்கூடிய ஆட்சிகளைத் திணிப்பதற்காக ஆட்சிமாற்றங்களைக் கொண்டுவருவதையே தனது அயலுறவுக் கொள்கையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதன் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடு ஈரான். இந்த நாடு யுரேனியத்தை செறிவூட்டும் பணியைக் கைவிட மறுத்ததால் அதற்கு எதிரான கடுமையான வர்த்தகத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ளன. ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்று இந்தியாவின் மீது அமெரிக்கா வெளிப்படையான நிர்ப்பந்தங்களைக் கொண்டுவந்ததை அடுத்து மிகவும் இக்கட்டான சூழலில் இந்தியா வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலிருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலம் தான் இந்தியா தனது பெட்ரோலிய எண்ணெய்த் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறது. இந்தியாவின் எரிசக்தித்தேவை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஈரானிலிருந்து இறக்குமதியை நிறுத்திக்கொள்வது இந்திய நாட்டின் பொருளாதார நலன்களுக்கு ஊறு விளைவிக்கும். ஐ.நா. சபையின் அங்கீகாரம் இன்றி தன்னிச்சையான முறையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத்தடைகளைப் பொருட்படுத்துவதை விட தனது நாட்டு நலன்களுக்கு எது உகந்ததோ அந்த அடிப்படையிலேயே இந்தியா செயல்படவேண்டும்.

உண்மையில் ஓராண்டுக்கு மேலாக இதற்கான நிர்ப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டன. மேலை நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கிகள் எண்ணெய்க்காக ஈரானுக்கு தரவேண்டிய பணம் அதனைச் சென்றடையும் வழிகளை அடைத்துவிட்டன. ஒரு துருக்கிய வங்கியின் மூலம் பணத்தை அனுப்புவதற்கு இந்தியா ஏற்பாடு செய்தது. துருக்கியின் மீதும் அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்ததையடுத்து இறக்குமதியின் மதிப்பில் பாதியை இந்திய ரூபாய் மூலம் பட்டுவாடா செய்வதற்கு ஈரானும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இப்போது ஈரானிலிருந்து இறக்கு மதியை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கொண்டுவரப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் மீதும் இப்போது நிர்ப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனது இறக்குமதியின் ஒரு பகுதிக்கு தடையிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று அமெரிக்காவுடன் ஜப்பான் பேரம் பேசிவருகிறது. சீனா இந்த நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும் அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு இந்தியா அடிபணிந்துவிடும் என்பது போலத் தோன்றுகிறது. மிகப்பெரும் அளவில் ஈரானிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து சுத்திகரித்து வரும் மங்களூர் சுத்திகரிப்பாலை தனது அடுத்த ஆண்டு இறக்குமதியை சரிபாதியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில்

12 சதவீதம் ஈரானிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய எண்ணெய்ச்சந்தை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சூழலில் இந்த அளவு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் எளிதானதாக இருக்காது. அதன் விலையும் அதிகரிக்கக்கூடும். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு ஆட்சியாளர்கள் அடிபணியக்கூடாது. ரஷ்யா போன்ற நாடுகள் எண்ணெய்க்கு பதிலாக கோதுமையை வழங்கும் பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாம் உணவுதானியங்களை ஏற்றுமதி செய்யாவிட்டாலும் ஈரானிய கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ள ஈரானில் அதனை சுத்திகரிப்பதற்கான வாய்ப்பு வசதிகள் போதுமானவையாக இல்லை. எனவே கச்சா எண்ணெய்க்காக கொடுக்கவேண்டிய பணத்துக்கு பதிலாக ஈரானிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதனை சுத்திகரித்துத் திரும்ப அனுப்பலாம். காப்பீடு தொடர்பான பிரச்சனைகளால் கப்பல் களை வாடகைக்கு அமர்த்த முடியவில்லை என்றால் தனது சொந்தக் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய்யை அனுப்பி வைக்க ஈரான் தயாராக உள்ளது. இவ்வாறு கடந்த சில வாரங்களாக ஈரான் இந்தியாவுக்கு எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிகிறது. இறக்குமதிக்கு பணம் கொடுப்பதற்கும் எண்ணெய்யை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. எனவே அமெரிக்கா தனது ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்காக கொண்டு வரும் சுயநல சூழ்ச்சித் திட்டங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் இந்திய நாட்டின் நலன்களுக்கே இந்திய ஆட்சியாளர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

ஆதாரம்: ‘இந்து’ (12.03.2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com