Contact us at: sooddram@gmail.com

 

மனித உரிமைகள், மீறல்கள்

எமக்கென்ற நிலைப்பாடு வேண்டும்

(ரவி சுந்தரலிங்கம்)

எமக்கான சவால்

1989 இலங்கை நிகழ்வுகளின் பின்னடியில் ஐ.நா. மனித உரிமைச் சபையின் ஒவ்வொரு இருப்பும், வட்டரங்குக் காட்சிகள் வித்தைகளாகிடுவது (circus) வழக்கமாகி வருகிறது. வட்டரங்கில் மேற்கத்தைய நாடுகள் கதாபாத்திரங்களாகிட, இந்தியா நடன-நடிகையாகவுமாக, உண்மையான கதாபாத்திரமான தமிழ் மக்கள் சிறிது சிறிதாக பெயர் முகம் இழந்து போவதுடன், அவர்களது உடமைகள் அவற்றின் மேலான அவர்களது உரிமைகள் குறித்த கோரிக்கைகள் வலுவிழந்து எல்லைகளின் தொலைவிற்கு தள்ளப்படுவதும் வழக்கமாகி வருகிறது. இவ் வட்டரங்கிற்கு அவ்வப்போது புதுமுகம் கொடுத்திட, விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்திடவே C4 (UK) தொலைக்காட்சி நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது என்ற பலரது ஊகமும் ஆதாரம் பெறுவதாக நிறுவனத்தின் நடத்தைகள் காட்டுகின்றன. எந்த நாடகத்திலும் வட்டரங்கிலும் இடத்தை நிரப்புவதற்கும் உயிரற்ற பாத்திரங்களுக்கு சுற்றாடல் தரவும், கதைக்கு பரபரப்பு சேர்த்திடவும், வெற்று நடிகர்கள் (extras) அவசியம்.

இவ்வகையில் இக்கட்டுரையாளர் உட்பட, (மனித உரிமை: புலிசார்பு அமைப்புகளிடையே ஒரு பலப் பரீட்சை: த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=44085) ‘கருத்துச் சொல்பவர்கள் பலர். அவர்களுள், ‘ஜேர்னலிஸ்ட்’, ‘அவதானிகள்’, ‘ஆய்வாளர்கள்’ என பல்வித தலைப்பாக்களுடன், ‘அறிவு, விளக்கம், அவற்றிலான நாட்டம், தேடல், சுய-பரிசீலனை, புத்தி-ஜீவிதச்-சுத்தி’ என்பன உண்டோ இல்லையோ கருத்துச் சொல்பவர்களும், கருத்துகளுக்கு கருத்து சொல்பவர்கள் மேலதிகம்.

இவ்வாறு வெறும் extra களாக வட்டரங்கில் எம்மையும் சேர்த்துக் கொள்ள விளையும் நாம், எம்மை அறியாமலே எம்மகத்தே, வெளியார் யாரும் சிறிது கூட அவதானியாத ஒரு சிறிய வட்டரங்கை ஏற்படுத்தி விடுவதும் சகஜமானதே. இவ்வாறான தருணங்களைத் தவற விட்டுவிட்டால் வேறு என்ன எம்மிடம் சொல்ல இருக்கின்றன என்பதாலான அவா பெரியது?

ஆனால், எமக்குள்ள சவால், புலிகளது ஆதரவாளர்கள் அல்லது ஏதாவது உளவு ஸ்தாபனங்களின் கையாளர்கள் என்று மட்டும் பேசி காலம் கடத்திடாது எமது மக்கள், எமது மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உரித்தான இலங்கைத் தீவு என்பவற்றிக்கும், இவ்வட்டரங்கிற்கும் உள்ள தொடர்புகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமா?” என்பதே ஆகும்.

C4 நிறுவனம்:
மனித-உரிமை மீறல் ஆவணப் படங்கள்

C4 ஆவணப் படங்கள்,
1. சிறீலங்காவினது யுத்தகால மனித உரிமை மீறல்களை உலகின் முன்னர் நிறுத்தின.

2. கோரச் சம்பவங்களுக்கு சாட்சியமான பல படங்கள் உண்மையானவை என்பதை தர்க்க ரீதியிலும், நுண்ணறிவு (forensic) ரீதியிலும் நிரூபித்தன.

3. அவை “புலிகளது ஆதரவாளர்களால் சமைக்கப்பட்டவை” (doctored) என்ற சிறீலங்காவின் எதிர்-வாதத்திற்க்கு முற்றும் வைத்தன.

4. மனித உரிமை அத்து மீறல்களில், தனிப்பட்ட சிறீலங்கா அரசியல் இராணுவ அதிகாரிகளது பங்குகளையும் ஆதாரங்களுடன் முன்நிறுத்தின.

இவற்றினூடாக,
1.யுத்த காலத்தில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்களும் (UN Charter),
2. யுத்த தர்ம அத்துமீறல்களும் (Geneva conventions), இடம்பெற்றன என சட்டரீதியில் நிரூபிக்க முடியும் என்ற நிலைப்பாடும் நிலைநாட்டப்பட்டன.

இவை C4 நிறுவனத்தின் ஆவணக் காப்பாளர்கள், படம் தயாரிப்பவர்கள், இயக்குனர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரது முயற்சிகள்.

மனித உரிமைகள், அவற்றின் அத்து மீறல்கள் பற்றி இவர்களிடம் தனிப்பட்ட ரீதியில், திடமான ஆரோக்கியமான கருத்துகள் நம்பிக்கைகள் உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

John Snow “புலிகளது கைக்கூலி” அல்லது “பிருத்தானிய உளவாளி” என சில்லறைத் தனமாக சிங்கள இணையத் தளங்கள் போல, அல்லது தமிழ் இணையத் தளங்களில் யாராவது தனி மனிதர்கள் அமைப்புகள் பற்றி தான் தோன்றித் தனமாக சிந்தனையே இல்லாது எழுதிவிடுவது போல நாமும் கூறிட முடியாது. அவற்றிக்கான ஆதாரங்களோ, தொடர்புகளோ எம்வசம் இல்லை.

மேலும், அவ்வாறான தகவல்களை ஏதாவது உளவு ஸ்தாபனங்களுக்கு வேலை செய்பவர்களாலேயே பெற்றுக் கொள்ள முடியும். மிகுதி யாவும் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அமையும் வெறும் ஊகங்களும் பிரச்சாரங்களுமே.

C4 நிறுவனம்
ஆனால், C4 நிறுவனம் நடுநிலையானதா என்ற கேள்வி நியாயமானது.

ஆனால், இதனை சிறீலங்கா சார்பில் தேசம் போன்ற தமிழ் இணையத் தளங்களில் சரி, மற்றைய இலங்கை இணையத்தளங்கள் தொடர்பு சாதனங்களில் எழுதுபவர்கள் எழுப்புவதில்லை. காரணம், (i) தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சர்வதேசிய ரீதியில் வலுவற்றவர்கள், (ii) அவ்வாறான அரங்குகளில், இயங்கில் ரீதியில் எதுவித மாற்றத்தையும் தரமுடியாதவர்கள், (iii) தனிப்பட்ட ரீதியில், தமது அறிவு ஆற்றல்கள் குறித்து தம்மகத்தே முற்றாக அவநம்பிக்கை உள்ளன, என்பவற்றை உள்-மனோவியல் ரீதியில் (sub-consciously) இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

இவற்றின் விளைவாகவே, மக்களாகவும் தனி மனிதர்களாகவும், தம்முள்ளேயும் தம்மிடையேயும் வெறுப்பையும் தம்மையே சமைத்துவிடும் ஆத்திரத்தையும், அவதூறுகள், வாய்க்கு வந்தபடியான கருத்துகள், வன்முறைகளையும் கொட்டுவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.

அதனால், தமது சிறு வட்டங்களுள் புலிகளையும், தனி மனிதர்களை ‘றோ’ MI5, CIA என உளவு ஸ்தாபனங்களுடன் தொடர்புபடுத்தி பற்றியே எழுதி தரமற்ற பிரபல்யத்தை மட்டுமே சம்பாதிக்க, அல்லது தமது காலடிச் சுவடுகளை மறைக்க முனைபவர்களால் C4 நிறுவனத்தின் நடுநிலைமை பற்றிய கேள்வியை எழுப்புவதற்கான ஆத்ம தெம்போ அறிவோ ஒரு போதும் இருக்க முடியாது. எந்த நியாயங்களுக்காக, மனித உரிமைகள் பற்றி பேசும் உரிமை புலிகளுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கிடையாதோ, அது போலவே இவர்களுக்கும் நடுநிலைமை, உளவு ஸ்தாபனங்களுடன் உறவு போன்ற விடயங்கள் பற்றி பேசும் ஆத்மீக-உரிமைகள் கிடையாது.

மேலும், சிறீலங்கா ஆதரவாளர்களாக அல்லது அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து செயற்படும் இவர்கள் ஆயிரக் கணக்கில் இடம்பெற்ற படுகொலைகளை இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாதமை இவர்களுக்கு வாய்கட்டாக அமைந்துள்ளது.

எனவே, C4 நிறுவனத்தின் நடுநிலைமை பற்றி கேள்வி எழுப்பும் பொறுப்பு சிங்கள எழுத்தாளர்களது, சிறீலங்கா சார்பான இந்தியர்கள் அல்லது ‘றோ’ சார்ந்த ஆய்வு நிறுவன எழுத்தாளர்களது கடமையாக மாறி உள்ளது. ஆனால் இவர்களால் கூட தர்க்க அல்லது சித்தாந்த அல்லது நுண்ணறிவு ரீதியில் இக் கேள்வியை முன்னெடுக்க முடியாதுள்ளது. மாறாக, தமது மேற்கத்திய மக்களுக்கு எதிரான இனவாதத்தை காலனித்துவத்துவத்திற்கு எதிரான பேச்சாக மாற்றி தம்மையும் குழப்பி, குளறியடிக்கும் சிறுபிள்ளைகள் போலாகி விடுகிறார்கள்.

ஆனால் இவர்களது பின்தங்கிய நடத்தைகளும், அவர்களுடன் கூடவே பிறந்த இயலாமைகளும், C4 நிறுவனத்தின் நடுநிலமை பற்றிய கேள்வியை மழுங்கடித்து விடாது. ஆகவே, இக் கேள்வியின் பின்னணியில் உள்ள ஓட்டத்தில் எழும் கேள்விகளுக்கான பதில்களை பூரண ஆதாரங்கள் தர்க்க ரீதியிலான சான்றுகளுடன் பின்னி, தம்மை நியாயப்படுத்த C4 நிறுவனம் முன்வர வேண்டும் என்பது எமது கருத்து. ஆனால், C4 நிறுவனம் எமக்கு விளக்கம் தரப்போகிறது என்ற கற்பனையிலோ நாமில்லை.

C4 நிறுவனத்தின் நடுநிலைமை கேள்விக்கு உள்ளாகுவதற்கு இங்கே நான்கு விடயங்களை நாம் முன்வைக்கிறோம்.

1. ஆவணப் படங்களை முக்கியமான சர்வதேசிய அரசியல் நிகழ்வுகளுடன் ஒட்டிய காலங்களில் வெளியாக்குவது.

2. மனித உரிமை மீறல் என்பதோ சர்வதேசிய கேந்திர அரசியலுக்கு அப்பாற்பட்டது என ஐ.நா.வால் பிரகடனப்பட்டுள்ள விடயம் என்றுள்ளபோது, அவற்றினை சர்வதேசிய கேந்திர (strategic) அரசியலுடன் ஈடுபடுத்துவது.

3. மேற்கத்திய நாடுகளது அத்துமீறல்களை அவற்றின் மக்களிடம் மட்டுமின்றி, அரசியல்வாதிகள் மத்தியிலும் இதேபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

4. மனித உரிமைகளையே ஏற்றுக்கொள்ளாத அமைப்புகள், தனி மனிதர்களுடன் இணைந்து செயற்படுவது.

குறிப்பு 1: (i)சர்வதேசிய நிகழ்வு என இங்கே குறிப்பிடப்படுவது ஐ.நா. வின் மனித உரிமை சபையின் இருப்பன்றி, ஏதாவது நாட்டின் அல்லது சில நாடுகளின் சந்திப்பல்ல.” (ii) ஆவணப் படங்களை முக்கியமான சர்வதேசிய அரசியல் நிகழ்வுகளுடன் ஒட்டிய காலங்களில் வெளியாக்குவதற்கான காரணம் வெளிப்படையானது “அவ்வாறான நிகழ்வுகளை அண்டி வெளியாக்குவதாலேயே இவ்வாறான ஆவணப் படங்களுக்கு முக்கியத்துவம் கிட்டும்” என்ற இரு விளக்கங்கள் எமக்கு புரியாமல் இல்லை.

குறிப்பு 2: ஆனால், இவ்வாறு யதார்த்த ரீதியில் மனித உரிமை, அவற்றின் மீறல் ஆகியவற்றை அணுகினாலே “காரியம் நடைபெறும்” என்ற வாதம் தவறானது என்பது எமது விளக்கம். ஏனெனில், குறிப்பிட்ட நாடுகளின் அரசியல் சார்புகளைத் தேடுவதால், மனித உரிமைகளுக்கும் அவற்றின் அத்துமீறல்களுக்கும் அவற்றிக்கென்றே உரித்தான பிரத்தியேகத் தன்மை மழுங்கடிக்கப் பட்டுவிடும் என்பது நிச்சயம் என்பது எமது வாதம்.

மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் என்பதை “தமது நாடுகளில் வாழ்பவர்களது, குறிப்பாக வெள்ளையர்களது உரித்தாகவே பாராமரிக்கின்றன. தமது எல்லைகளுக்கு அப்பால் உள்ளவர்களது உரிமைகளை தாமே நிச்சயம் செய்வது என்ற உரிமையையும் கொண்டவையாகவே செயற்படுகின்றன” என்ற வாதத்தை எமது மனித உரிமைகள் பற்றிய ஆங்கில தமிழ் கட்டுரைகளில் பல தடவைகள் சுட்டிக் காட்டி உள்ளோம் (southasiaanalysis.org; thesamnet.co.uk; & lankaguardian). எனவே, இது பற்றிய விளக்கங்களை இங்கு மீண்டும் தர வேண்டியதில்லை. ஆனால், சில முக்கிய உதாரணங்களும் குறிப்புகளும் அவசியம்.

(i) அண்மைக் காலங்களில், பயங்கரவாதி என தமது உளவு ஸ்தாபனங்கள் இனங்கண்டவரை விசாரணைக்காக கடத்தி மூன்றாம் நாடுகளில் இரகசியமாக சிறையிடுவது ஒரு வழியாக மேற்கத்திய நாடுகள் செய்ததை நாம் அறிவோம். விசாரணை என்பது சித்திரவதைகள் என்பதையும், சிலவேளைகளில் கைதிகள் இறந்து போகும் நிலைமையும் உண்டு என்பதும் புரிந்த விடயம். Rendition எனப்படும் இம்முறையால் ஏற்ப்படும் மனித உரிமை மீறல்கள் யாவும் அந்த சிறைகள் உள்ள நாடுகளுக்கே சேருமன்றி, மேற்கத்திய நாடுகளது சட்ட மீறல்களாக அமைந்துவிடக் கூடாது என்பதே அவ் வழிமுறையின் முக்கிய நோக்கம். இதுபற்றி அண்மையில் ஆவணப் படங்களும், ஹொலிவூட் வெண்திரைப் படமொன்றும் வெளியானதை நாம் அவதானித்திருப்போம்.

எனவே, இம்முறை மனித உரிமைகள் மீறல் என்ற பூரணமான விளக்கத்துடனேயே வகுக்கப்பட்டது, நடாத்தப்பட்டது என்பதில் ஐயமிருக்க முடியாது.

இவ்வாறான திட்டத்தில் ரூமேனியா, ஹங்கேரி போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ஈஜிப்ற், கடாபியின் லிபியா, சவூதி அரேபியா போன்ற பல அரேபிய நாடுகளும் பங்குபற்றின என்பது இன்று உலகறிந்த விடயம்.

ஆனால், சிறீலங்காவும் அமரிக்க உளவு ஸ்தாபனங்களால் பாவிக்கப்பட்டன என்ற தகவல், சர்வதேசிய அரசியல் ஓட்டங்களின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஆச்சரியமானதாகவே இருக்கும் (Daily Mirror, Sri Lanka, 01.03.13).

அதிலும், ஐ.நா. மனித உரிமை மீறல் குறித்து அமரிக்க – சிறீலங்கச் சர்ச்சைகள் பகிரங்கமாக இருப்பதாக பொதுப்பட்ட தொடர்பு ஸ்தாபனங்களும், சகல தமிழ் தொடர்பு ஸ்தாபனங்களும் அன்றாடம் தெரிவித்தவண்ணம் இருக்கையில், தமது மனித உரிமை மீறல்களுக்கு சிறீலங்காவின் உதவியை அமரிக்கா நாடியிருந்தால், திரைகளின் பின்னால் இரு நாடுகளினதும் உறவு எவ்வகையானது என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

மேலும், படுகொலைகளுக்கு உள்ளாகியவர் பற்றியே C4 நிறுவனம் உட்பட மேற்கத்தைய நாடுகள் குரல் தருவதும், சிறீலங்கா தடுப்பு முகாங்களில் இருப்பவர்கள் பற்றியும், அவர்களது தொகை பெயர்ப் பட்டியல் என்பவற்றை சிறீலங்கா தராமல் இருப்பது பற்றி வார்தைகளை விழுங்கியே பேசுவதும், அல்லது பாரிய பிரச்சாரம் செய்யாது இருப்பதும் ஏன் எனக் காரணங்கள் தேடுபவர்கள், இத் தகவலில் இருந்து தமது ஊகங்களைப் பெற்றுக் கொள்வர்.

மேற்கத்தைய நாடுகள் அவற்றின் ஸ்தாபனங்களைப் பொறுத்தவரை, மூன்றாம் உலக நாடுகளில் மனித உரிமைகள் என்பது, (i) தமது நாடுகளது கேந்திர அரசியலை மையம் கொண்டு அமைந்தவையாகவும், (ii) படுகொலைகளின் பின்னர் இறந்து போனவர்கள் பற்றியதும், (iii) கைதிகள் தடுப்பு முகாங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி அல்லாததும், (iv) பாதிக்கப்பட்ட மக்களது உடமைகள் பற்றி அல்லாததும், என்ற நடைமுறை கோட்பாடாக உள்ளது.

அண்மையில் சிறீலங்கா, எந்தவொரு சர்வதேச அல்லது அரச-சார்பற்ற ஸ்தாபனங்களது (NGO) ஆதாரங்கள் பெறாத ஒரு பட்டியலை முன்வைத்தமை குறிப்பிட வேண்டியது.

மாறாக, எமது கட்டுரைகளை SAAG, தேசம்(thesamnet.co.uk), Lanka Guardian இணையத் தளங்களில் தொடர்பாக வாசித்து வந்தவர்கள், நாம் இக் கைதிகள் பற்றி தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியும், TNA மற்றும் தமிழ் அரசியற் கட்சிகளை இவ்விடயம் பற்றிய செயற்திட்டத்தை முன்வைக்குமாறு கோரியும் வந்ததை தெரிந்திருப்பார்கள்.

எமக்கான விளம்பரத்திலும் பார்க்க இங்கு எமது கவனத்தில் இருக்க வேண்டியது, மேற்கத்திய நாடுகள் – சிறீலங்கா, மற்றும் இந்தியா – சிறீலங்கா பற்றிய பின்புற உறவுகளாகும் (இவை பற்றி பின்னர் தொடர்வோம்).

(ii) Drone எனும் ஓட்டியற்ற விமானத் தாக்குதல்களால் தனிமனித படுகொலைகள் செய்தல். இவ்வாறான கொலைகள் நடந்த பின்னரே, சில வேளைகளில் அவைபற்றிய விளக்கங்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத் தலைப்புகளுடன் வெளிவருவதையும் நாம் அவதானித்திருப்போம்.

இங்கே, பாக்கிஸ்தான் பகிரங்கமாக அமரிக்கர்களுடன் சர்ச்சை போட்டுக் கொண்ட போதிலும், இரகசிய உடன்பாட்டில் தனது விமானத் தளங்களிலிருந்து தனது மக்கள் மீதே டோர்ன் தாக்குதல்களை அனுமதித்தமையும், அண்மையில் சவூதி அரேபியர்கள் தமது நாட்டிலிருந்து சுற்றாடலில் அமரிக்கரது இத்தகைய டோர்ன் தாக்குதல்களை அனுமதித்ததையும் அம்பலமாகியதை பலர் அறிந்திருப்பர் (New York Times, 07.02.13).

இவ்வாறான அனுபவங்களில் இருந்து, “நாடுகளிடையே உள்ள உறவுகளின் வெளித் தோற்றத்திற்கும், பின்புற உடன்பாடுகளுக்கும் பாரிய வேறுபாடுகளும், தோற்றத்தில் முரணான நிலைப்பாடுகளும் இருக்கும் என்ற அவதானிப்பை ஒரு இயங்கியல் விதியாகக் கூட ஏற்றுக் கொள்ளலாம்”.

குறிப்பு 3: தனது ‘புதிய’ ஆவணப்படத்தினை புலிகளது ஆதரவாளர்களது அமைப்புகளுடன் முதற்பார்வைக்கு பகிர்ந்து கொள்வது எவ்வாறு நடுநிலைமை ஆகும்? என்பது தகுந்த கேள்வியே.

“நடுநிலைமை என்பது உண்மைக்கும் பொய்க்கும் இடையில், அரைக்கு அரைவாசியாக இடம்பெறும் நிலைப்பாடல்ல” என்பது எமக்கு நன்கு புரிந்த விடயம். ஆகவே, C4 நிறுவனம் தவறிழைக்கப்பட்ட மக்களுடன் தன்னை அடையாளம் காட்டுவதில் தவறில்லை என்ற வாதத்தை நாமே முன்வைக்க முடியும்.

ஆனால், புலிகளது ஆதரவாளர் அமைப்புகளுடன் தன்னை அடையாளம் காட்டுவதும் தமிழ் மக்களுடன் அடையாளம் காட்டுவதும் முற்றாக வேறுபட்ட விடயம் என்பதும் எமக்கு நன்கு புரிந்த விடயம். நாம் முக்கியஸ்தர்கள் இல்லாத இவ்விடத்தில், பிருத்தானிய அரசின் நிலைப்பாடும் இதனையே கூறுகின்றது என சுட்டிக் காட்டுவது இங்கு பொருத்தமானதாக அமையும். எனவே, அண்மையில் Alsister Birt (பிரித்தானிய மந்திரி) வன்னி சென்று “புலிகளை இல்லாமல் செய்தது சரியே” என்ற விளக்கத்தை நாம் கவனித்தாக வேண்டும்.

பிரித்தானியா இன்றும் இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

ஆகவே, பிருத்தானியாவைப் பொறுத்தவரை “புலிகள் அழிக்கப்பட வேண்டும்”, “ஒருநாடாக சிறீலங்காவின் பல்லின மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்”, “மனித உரிமைகளை மீறும் சிறீலங்காவிற்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வது தகும்”, என்பவை அன்றும் இன்றும் சரியான நிலைப்பாடுகளாகவே உள்ளன. அமரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகளும் இவற்றிலிருந்து வேறுபட்டவை அல்ல என்பதும் விபரமாக வெளியான விடயம்.

எனவே, புலிகள் – சிறீலங்கா என்ற விடயத்தில் மேற்கத்தைய நாடுகளிடையே எதுவித வேறுபாடுகளும் இல்லை என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். அதேவேளை, இந்நிலைப்பாட்டையே இலங்கை தீவில் தமது எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள இந்தியா, தென் ஆபிரிக்கா, ரஸியா, சீனா, ஒஸ்ரேலியா போன்ற மற்றைய முக்கியமான நாடுகளும் கொண்டுள்ளன என்பதில் எமக்கு ஐயம் இருக்க முடியாது.

ஆகவே, பிருத்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலிகளது ஆதரவாளர் அமைப்புகளுடன் இணைந்து தனது ‘புதிய’ ஆவணப்படத்தை அறிமுகம் தருவதால் C4 நிறுவனம் (i) திரிபுபட்ட கருத்துகளை தமிழ், பிருத்தானிய மக்களுக்கும், (ii) தவறான கருத்துகளை சிங்கள மக்கள் மத்தியிலும் பரவிட வழி தரவில்லையா என்பவை பரிசீலனை செய்ய வேண்டியவை.

குறிப்பு 4: Drousman அறிக்கையிலிருந்து சர்வதேசிய அங்கீகாரம் பெற்ற அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கைகள் யாவும் புலிகளது மனித உரிமை மீறல்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தன என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இன்று C4 நிறுவனம் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் யாவும் புலிகளது ஆதரவாளர்களைக் கொண்டமைந்தது என்பதுடன், தனிப்பட்ட ரீதியில் அவ்வாறான அத்து மீறல்களை (i) கண்டும் காணாது இருந்தவர்கள், (ii) வெளிப்படையாக நியாயப் படுத்தியவர்கள், (iii) அவற்றின் பிரகாரம் பணச் சேகரிப்பு, மற்றைய உதவிகள் பெற்றுத் தருவது என முன்நின்று புலி அமைப்பின் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ற விபரங்கள் C4 நிறுவனத்தினர்க்கு புதிய விபரங்கள் இல்லை.

எனவே, புலிகளது ஆதரவாளர்களுடன் இணைந்து செயற்படுவது போன்ற தோற்றத்தை மட்டுமின்றி, ஆதாரங்களையும் தருவதால்,
(i) மனித உரிமைகள், மீறல்கள் பற்றிய பொதுப்பட்ட கோட்பாடுகள் மாசுபடுத்தப்படுகிறன,
(ii) இலங்கை தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்கனவே சிதைந்து போயுள்ள உறவுக்கு மேலும் குந்தகம் விளைவிக்க உதவுகின்றன,
(iii) தமிழ் மக்களது உடமைகள் உரிமைகள் என்பன அவர்கள் கைகளிலிருந்து பிரிந்து போவதற்கான நிலைமைகளையே உருவாக்குகின்றன, என்பதை C4 நிறுவனத்தினர் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது தெரிகிறது.

இவ்வாறு மனித உரிமைகள், மீறல்கள் என்பவற்றை (i) சர்வதேசிய கேந்திர அரசியல் மயப்படுத்துவது, (ii) மனித உரிமைகளையே அங்கீகரியாத அமைப்புகள் தனி மனிதர்களுடன் இணைந்து செயற்படுவது, என்ற முடிவுகளால் C4 நிறுவனம்,
1. தனது நடு-நிலைமை, 2. மனித உரிமைகள் மீறல்கள் என்பவற்றின் கோட்பாடுகள், 3. தமிழ் மக்களது உடமைகள் அவை சார்ந்த உரிமைகள், 4. தமிழ் – சிங்கள மக்கள் உறவுகள் என்பவற்றை குழப்பத்திற்கும், சர்ச்சைகளுக்கும், தீய சக்திகளது நிலை கொள்ளலுக்கு ஒத்தாசையான சூழலையும் இடம் பெற்றுத் தந்துள்ளது என்பது எமது கருத்து.

மனித உரிமைகள், மீறல்கள்

முதலாம்(உலக) மனிதன்
மேற்கத்தைய நாடுகள் பற்றிய வாதங்களை பாரிய குற்றவாளிகளான சிறீலங்கா அரசாங்கத்தினர் முன்வைப்பதால் நிராகரித்துவிட முடியாது.

பல மேற்கத்தைய சமுதாயங்களின் முதிர்ச்சியால் (i) சமுதாயம், சமூகம் (ii) மக்கள் (iii) தனிமனிதன் (iv) தேசம் (v) நாடு (vi) ஸ்தாபனங்கள் என்பவை பற்றியும், அவற்றிடையேயான இயங்கியல் உறவுகள் பற்றியும் எழும் விவாதங்களால் சமூக உடன்பாடுகளால் மனித உரிமைகள் என்ற பெயரில் மனிதர் பெறும் உரித்துகள் அவை.

எனவே, இப்பிரதேச மனிதன் தனது உடமைகள் எனும்போது பாரம்பரிய சமுதாய, சமூக உடமைகளையும் அவை மீதான உரிமைகளையும் ஏற்கனவே கொண்டிருப்பவனாகவே உள்ளான். இதனை அவன், குடியேற்றத்தால் எழும் சர்ச்சைகளின் போது இனவாத அரசியலூடாக தனது அரசாங்கங்களின் கவனத்திற்கு கொண்டுவர முனைவதூடாக அவதானித்துக் கொள்ளலாம்.

எனவே, அவனுக்கு தேசம், நாடு என்பவை பற்றிய சர்ச்சைகள் அவனது தேவைகளால், அல்லது பழைய காலனித்துவ கால நிலைப்பாடுகள் செயற்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிறத்தியாரது குடியேற்றம் குறித்ததாகவே இருக்கிறது.

தனது உடமைகளை நாட்டின் இறைமைகளாக மாற்றியுள்ள அவனுக்கோ, நாட்டின் அரசு அவற்றினை காத்திரமாக்கும் பொறுப்பைக் கொண்ட ஸ்தாபனம். தனது நுகர்வுகளின் தேவைகளை தனதும், தன் நாட்டினதும் இறைமையின் வீச்சாக அவன் அமைத்துக் கொண்டுள்ளான்.

உதாரணமாக, தனது பொருளாதாரத்திற்கு நில-எண்ணை அவசியம் என்ற விடயத்தை, அவன் அதனைப் பெறும் உரித்தாகவே கருதுகிறான். எனவே, மத்திய கிழக்கு நாடுகளது அரசுகள் தமது எண்ணை உற்பத்தியை கட்டுப்படுத்த முயன்றால் அதனை முறியடிக்க தனது நாடு படையெடுப்பதை யதார்த்தமாக ஏற்றுக் கொள்கின்றான். அதேவேளை, எண்ணை உற்பத்தி உலகத் தேவைக்கு மேலதிகமாகினால் அதன் விளைவாக தனது வாழ்கைத் தரத்திற்கும் மற்றைய நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கும் உள்ள இடைவெளியை மாறிடாது பேணிட தனது அரசு இராணுவ ரீதியில் எடுக்கும் நடவடிக்கைகளைக் கூட ஏற்றுக் கொள்கிறான். எனவே, அவன் தனது அரசு மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவற்றினை கேந்திர-அரசியல் நிலைமைகளுக்குள் கணித்துக் கொள்கிறான்.

“இது உண்மையானால், கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் ஈராக் போருக்கு எதிராக அணிநடை செய்திருந்தார்களே அவர்கள் மேற்கத்தியர்கள் இல்லையா? இங்கு இடம் பெறுபவன் வலதுசாரி இனவாதியன்றி சாதாரண மனிதன் அல்ல. இக் கட்டுரையாளனுக்கு முதலாளித்துவத்தின் செயல்பாடுகள் என்பவை பற்றி ஒன்றுமே தெரியாது.” என்ற வழமையான சுலோகங்கள் காதுகளில் படாமல் இல்லை.

ஆனால், இவைபற்றிய எமது முழுமையான வாதங்களை இங்கு நாம் முன்வைக்கப் போவதில்லை. மாறாக, இந்நாடுகளின் அரசியல் மாதிரிவடிவங்களை மாற்றிட மக்கள் பெரும் திரளாக முன்வருவதில்லை என்பதையும், மாக்ஸ் கணிப்பிட்டபடி முதலாவது சமூகப் புரட்சி இங்கிலாந்தில் இடம்பெறவில்லை என்பதையும் கூறி, இவைபற்றிய விவாதங்கள் சித்தாந்த சமூகவியல் ரீதிகளில் மிகவும் குழப்பங்களுக்கு உள்ளாகுபவை என்பதை மட்டும் அவதானிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

எனவே, நடைமுறை ரீதியில் உலகினை வழி நடத்தும் அதிகாரியாக கணித்துக் கொள்ளும் மேற்கத்தைய நாடுகளில் வாழ்பவனது உடமைகள் உரிமைகள் என்பவற்றின் விளக்கங்கள் அவை எவ்வாறான விடயங்கள் மீதானவை, அரசியல் பிராந்திய ரீதிகளில் எவ்வளவு வீச்சுக் கொண்டவை என்பவற்றில் தங்கியவை.

எனவே, அவன் மனித-உரிமைகள் என்று கருதுவதற்கும் மூன்றாம் உலக மனிதன் தனதெனக் கருத்தில் கொள்ள முயல்வதற்க்கும் பாரிய இடைவெளி உள்ளது என்பதில் எமக்கு காத்திரமான நம்பிக்கை.

மூன்றாம் உலகத்தவன்
இவனோ பொதுவாக காலனித்துவர்கள் போட்ட பிராந்திய எல்லைகளுள் வாழ்பவன்.
தனதெனக் கருதும் சமுதாயங்கள் அந்த எல்லைகளால் துண்டாடப்பட்ட, வாழ்க்கை முறைகள் சமுதாயங்கள் அழிக்கப்பட்ட நிலமைகளுள் தனது வாழ்க்கையை தொடர்பவன்.

தனது புதிய வரம்புகளுள் மேலதிகமான சமுதாயங்களது கூட்டு பலம் மிகையானதாக இருப்பின், அவற்றின் இனவாத, மதவாத, இன-மதவாத ஓட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக உள்ளவன்.

ஏனெனில், வட ஐரோப்பிய மக்களது சமூகங்கள் தேசங்களாகவும், இறுதியில் நாடுகளாகவும் மாறிடுவதற்கு இருந்த சூழல்களை அவனது இயற்கை தரமுடிந்ததா என்ற கேள்வியை நாம் அடைய முன்னரே, காலனித்துவத்தால் அதற்கான இயற்கை ஓட்டத்தை இழந்துவிட்டவன் என்ற எமது விளக்கத்துள் அமைபவன்.

அதனால், அவனது உடமைகள் என்பவை பற்றிய ஊர்ஜிதம் இல்லாதவனாகவும், அவற்றின் மேலான உரிமைகளுக்கு தன்னைச் சூழ்ந்த, தன்மீது ஆதிக்கம் கொண்ட சமுதாயங்களின் தயவுகளிலேயே தங்கி உள்ளவன்.

இவற்றையும் தாண்டி, பலவேளைகளில் தனது உயிருக்கே உத்தரவாதம் இல்லாதவனாக இருப்பதுடன், இன்றைய உலகத்தில் தன்னை அழித்தவனே அல்லது அழிப்பதற்கு உதவியவனே ஏதோவிதத்தில் தனக்கு உத்தரவாதம் தருவான் என்ற போலியான எதிர்பார்ப்பில் நம்பி வாழ வேண்டியவனாக இருப்பவன்.

 சிறீலங்காவிற்கு ஆயுதங்கள், சாதகமான சர்வதேசிய அரசியல் சூழ்நிலை, புலிகளது இராணுவம் பற்றி நிலத்திலும் விண்ணிலும் இருந்து பெற்ற தகவல்களைத் தந்து, சிறீலங்காவின் ஒவ்வொரு இராணுவ வெற்றியின் பின்னரும் கொழும்பிலுள்ள தமது உயர்-ஸ்தானிகளிலுள்ள இராணுவ அதிகாரிகளை (military attache) முன்னணி அனுப்பி மேற்பார்வையிட வைத்து, போரிடையே இடம்பெற்ற மனித அழிப்புகளையும் மனித விரோத நடத்தைகள் சம்பவங்களையும் தமது நாடுகளிலிருந்து வந்து NGO களுக்கு சேவை செய்ய வந்த தனி நபர்கள் தந்த அறிக்கைகளை கண்டும்காணது வாழாதிருந்து, சிறீலங்கா அரசின் வெற்றியை நிச்சயம் செய்த மேற்கத்தைய நாடுகள் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபின், தமிழ் மக்களுக்கு உத்தரவாதம் தரப் போகின்றன, என்ற தமது இன்னுமொரு பிழையான முடிவுடன் செயற்படும், எமது இன அழிவின் பங்குதார்களாக இருந்த புலிகளது ஆதரவாளர்கள் நாம் கூறும் மூன்றாம் உலகத்தவனுக்கு பொருத்தமான மாதிரி (modal).

எனவே, இவனது பரிமாண சமுதாய-மாற்றங்களோ தமது உடமைகள் உரிமைகளை தேசியத்துவத்தினூடக (statehood) காத்திரமாக்கிவிட்டு உலகளாவிய ரீதியில் அவற்றிக்கு மேலதிக அர்த்தம் தேடிக் கொண்ட முதலாம் மனிதனது சரித்திரத்திலும் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு, அவனது உத்தரவுடன் எமது இன அழிப்பு நடாத்தப்பட்ட பின், செய்த கரங்களை தண்டிப்பதற்கு அவனையே நாம் அண்ட வேண்டும் என்பவர்கள் எம்மிடையே மிக அதிகமாக உள்ள நிலையே எமக்குச் சான்று பகரும்.

ஆக, மூன்றாம் உலகத்தவனது மனித உரிமைகள் என்பது அவனது பாரம்பரிய உடமைகள் + அவற்றின் மேலான உரிமைகள் + தனிப்பட்ட மனிதனது சர்வதேசிய மானிட உரித்துகள் என்ற மூன்று விடயங்களில் தங்கி உள்ளதாகும்.

இதனை எவ்வாறு ஊர்ஜிதம் செய்வது என்ற மிகவும் அடிப்படையான கேள்விக்கான பதிலோ இதுவரை இல்லை.

1. பாரம்பரிய உடமைகள் என்பது அவனது சமூகம் காலாகாலமாக தனது உழைப்பை மூலதனமாக முன்வைத்து சேகரித்த அல்லது பராமரித்த உற்பத்திக்கான சாதனங்கள், சூழல்கள், முறைகள் என்பவையாகும்.

அதாவது, மீன்பிடித் துறையை எடுத்துக் கொண்டால் நிலத்தைப்போல கடலை தனிப்பட்ட பரப்புக் கணக்கில் மனிதன் உரிமை கோர முடியாது. ஆனால், அவனது உழைப்பை பலனாக்கும் சாதனமாக இருப்பது புரிந்த விடயம். கடலுக்கு தொழில் செய்யப் போவதற்கு கரை அவசியம். இது அவனது தொழிலுக்கான சூழலில் ஒன்று. கடலின், கரையின் சுவாத்தியமும் (enviornment) அச் சூழலின் அங்கங்கள். அவன் தனது உற்பத்தியை, அதனை ‘பணமாக்குவதை’ இயன்றவரை திறமையாகச் செய்வதற்கு தனது சமுதாய உறவுகளை, அவற்றுடன் இணைந்து தொழில் செய்யும் மற்றைய சமுதாயங்களுடனான உறவுகளை நாம் ‘முறை’ என்று அழைக்கிறோம்.

2. அவற்றின் மேலான உரிமைகள் எனும் போது அப் பாரம்பரிய உடமைகளை நுகர்வதற்கு தமக்கென்றே உள்ள உரிமைகளையும் அவற்றினை சீர் செய்வதற்கான உரிமைகளையும் குறிப்பிடுகின்றோம்.

எனவே, கடல் தொழில் செய்பவன் கரையை சுதந்திரமாகப் பாவிக்கக் கூடிய, கடலையும் கரையையும் பாரமரிக்கக் கூடிய உரிமைகள் பற்றியே பேசுகின்றோம்.

3. தனிப்பட்ட மனிதனது உரிமைகளாக சாதாரண வேளைகளில் ஐ.நா. பிரகடனங்கள், ஆயுதம் தாங்கிய சமூகச் சர்ச்சைகளின் போது அல்லது வன்முறை கொண்ட நிலைப்பாடுகளின் போது ஜெனீவா பிரகடனங்கள் போன்ற சர்வதேசிய உடன்பாடுகளைக் குறிப்பிடுகின்றோம்.

மூன்றாம் உலகத்தவனோ இவற்றை அடித்தளமாகக் கொண்ட விடயங்கள் அனைத்தையும் ஒன்றாக அணுகுவது கிடையாது. அதற்கான விளக்கத்தை, சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் பரிணாம வளர்ச்சி கொண்ட சமுதாயச் சூழுலில் அவன் இல்லை. இதனை, “புலி” அல்லது “உளவு ஸ்தாபனத்திற்கு வேலை செய்பவன்” என்ற இரு கீழ்மட்ட-வழிகளைக் (Low base) கொண்டே ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியில் அணுகும் புத்தி-ஜீவிதப் பற்றாக் குறையிலிருந்தே நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

எனவே, அவன் தனது மார்க்கமாக,

i.தனிநாடு கோருகிறான்: சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளின் பேரில், முழுச் சமூகத்தையும் தானே பிரதிபலிப்பதாகக் கருதி, மேற்கத்தைய நாடுகளில் 19ம் நூற்றாண்டுகளில் உருவான தேசிய வாதத்தை தனது அரசியல் மாதிரி வடிவமாக ஏற்று கொள்கிறான்.

அதற்கு சாதகமான சர்வதேசியச் சூழல் பற்றிய அறிவை நாடுவதிலோ, அதன் அவசியம் பற்றியோ அவன் தெரிந்து கொள்வதாக இல்லை. தனது கோரிக்கை நியாயமானது என்ற சரித்திர சமூகச் சான்றுகளே போதுமானது என்ற தனது வாதத்திலேயே தங்கிக் கொள்கிறான்.

உலக பொருளாதார உற்பத்தி விநியோகம் உழைப்பு (production & labour) என்பவற்றை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது, சீர் செய்வது என்ற விடயங்களில், பலம் வாய்ந்த நாடுகள் state என்பதையே இன்று தேர்ந்து கொண்டுள்ளதை அவன் புரிந்து கொள்வதாக இல்லை.

நாடு என எவ்வகையிலும் குறிப்பிட முடியாத மாலி என்ற தேசத்தில் பிரிவினை வாதத்தை தடுத்திட மேற்கத்திய நாடுகள் சார்பில் பிரான்ஸ் நாடு நேரடியாக படையெடுப்பதை அவன் காணும்போது, அதனை இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற விளக்கத்துடன் ஆறுதல் அடைந்திடுவான். ஆனால், இங்கு இஸ்லாமிய வாதங்களிலும் பார்க்க, பலமிக்க நாடுகளின் அதிகாரத்தையும், சர்வதேசிய ரீதியில் unit of production என்பதை ஒழுங்குபடுத்துவது state என்ற கருவியே என்பதையும் நிலை நாட்டுவதே முக்கிய காரணங்கள் என்பதை அவன் கண்டு கொண்டாலும், தனது தற்காலிக பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்துள் வாழ்கின்றான்.

ii. சுயாட்சி கோருகிறான்: தனது நாட்டின் அரசமைப்பு ஜனநாயகத் தன்மை கொண்டது அல்லது, ஜனநாயகத் தன்மைக்கு மாறிடக் கூடியது என்ற நிலைப்பாட்டைக் கொள்கிறான்.

iii. ஏதாவது அரசாங்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, தனது மக்களது “பொருளாதார முன்னேற்றம்” என்ற வெற்றுக் கோஸத்துள் தனக்கு செல்வம் சேர்க்கும் வழி சமைத்துக் கொள்கிறான், அல்லது தனது இயலாமையை ஏற்றுக் கொள்கிறான்.

iv. மனித உரிமை மீறல்கள் என்ற வாதத்தினூடாக மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து தனது உடமைகளை மீட்டிடலாம் எனவும் சில வேளைகளில் செயற்படுகின்றான்.

மேற்கத்திய மனிதனது பார்வையில் தனது மனித உரிமைகள் தான் இறந்த பின்னரே செயற்கையாக கேந்திர அரசியற் காரணங்களுக்காக கடுதாசிகளில் விவாதிக்கப்படும் விடயம் என்பதை, அவன் உயிருடன் இருப்பதால் அவதானிக்காது போய்விடுகிறான்.

தனது இறந்தவர்களின் மனித உரிமை பற்றி தீர்மானங்கள் மேல் தீர்மானங்களை நிறைவேற்றும் மேற்கத்திய நாடுகள் (a) அவனது உடமைகள் பற்றியோ, (b) தடுப்பு முகாங்களில் உள்ள கைதிகள் பற்றியோ, (c) உயிருக்காக அடிமைகளாக வாழும் தன்னைப் பற்றியோ பேசுவதில்லை என்பதையும் அவதானிப்பதில்லை.

ஏன், தான்கூட மனித உரிமைகள் பற்றி எதுவித நம்பிக்கை கொள்ளாதவன், அதற்கான பக்குவம் இல்லாதவன் என்பதை மறந்து போய்விடுகிறான், அந்த மறதியிலேயே தனது கற்பனை வாதங்களை வளர்த்துக் கொள்கிறான்.

உடமைகளை உள்ளடக்கும் மனித உரிமைச் சாசனம்:
எமது ஆலோசனைக் கருத்துகள்

1.மூன்றாம் உலகத்தவனது வாழ்வு சுபீட்சம் பெற, அவன் தன்னைத் தானே சீர்செய்து கொண்டு சரித்திர முன்னேற்றம் காண அவனுக்கென்ற சித்தாந்தம் அவசியம்.

2. இவற்றிக்கான ஆலோசனைக் கருத்துகளை உலகின் எக்கோடியிலிருந்து கடன்பெற்றாலும், அவற்றினை தனதாக்கி உள்வாங்கிடுவதற்கான வாதங்களை தானே உருவாக்கிட வேண்டும் என்பதற்கான பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதற்கான பக்குவத்தை அவன் தேடிக்கொள்ள வேண்டும்.

3.தனக்கும் தன்னுடன் போட்டியிலுள்ள இனத்திற்கும் இடையிலான பிரச்சனைகளை ஒரு வர்க்கப் பார்வையிலிருந்து மட்டும் கணித்துக் கொள்வதைத் தவிர்த்து, தன்னைப் போல சிறுபான்மையான மற்றைய இனங்களது கோணங்களில் இருந்தும் கணித்துக் கொள்ள வேண்டும்.

4.தனக்கும் தன்னுடன் போட்டியிலுள்ள இனத்திற்கும் இடையிலான பிரச்சனைகளை மட்டும் கொண்டு தனது பிரச்சனைகளை அணுகாது, தன்னால் தனது சமுதாயங்களுள் உள்ளே இடம்பெறும் மனிதத்திற்க்கு முரணான நடத்தைகளை போக்கிடுவதையும் கூட்டாகவே முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் சமைக்க வேண்டும்.

5.தனக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவுகளை சமுதாய விதிகளால் ஒழுங்கு அல்லது சீர் செய்வதைக் கைவிட்டு சர்வதேசிய பிரகடனங்களை உள்வாங்கிய புதிய முறைகளை ஏற்படுத்த வேண்டும்.

6.தனது உடமைகளுக்கான போராட்டம் 19ம் நூற்றாண்டின் மேற்கத்தைய நாடுகளின் தோற்றத்திற்கான சூழ்நிலை அல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. ஆதலால், தனது தற்கால எதிரிகளெனக் கருதுபவர்களையும் உள்ளடக்கியே தனது புதிய சித்தாந்தம் இருக்க முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8.தனது போராட்டம், பிராந்திய சர்வதேசிய கேந்திர அரசியலின் இயங்கியல் விதிகளுக்கு உட்பட்டது என்பதையும் தனது புதிய சித்தாந்தத்துள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

9. இவ்வாறு அவன் சமைக்க போகும் சித்தாந்தம் மனித உரிமைகள் எனும்போது அவை அவனது பாரம்பரிய சமுதாய உடமைகளையும் அவற்றின் மேலான உரிமைகளையும் உள்ளடகியதாக இருக்கும்.

10. அதனை சமுதாயங்களும் நாடுகளும் ஒழுகுவதை மேற்பார்வை செய்வது சர்வதேசிய ரீதியிலோ, மேற்கத்திய நாடுகளது நிர்ப்பந்தங்களுக்கு உள்ளான ஐ.நா.வின் அமைப்புகளாலோ அல்லாது, பிராந்திய ரீதியில், ஐரோப்பிய ஒன்றியத்தினது போல, அமரிக்க மக்களுக்கே பிரத்தியேகமான பிரகடனங்கள் போல, அமைந்ததாக இருக்கும்.

இவ்வாறான பிராந்திய மனித உரிமைச் சாசனம் ஒன்றினை உருவாக்குவதாலேயே, பல்லின மக்கள் வாழும் நாடுகளில் அவனது உடமைகளும் உரிமைகளும் காத்திரமாகும். மேலும், அதன் விளைவாக பிராந்திய ஸ்திரமும் (regional stability), சமுதாய ஸ்திரமும் (social stability) உருவாகுவதைக் கூட அவனால் எதிர்பார்க்க முடியும்.

அரசும் அரசாங்கமும்:

அரசும் அரசாங்கமும் வேறானவை.
மூன்றாம் உலகங்களிலோ அவை சமூக – பொருளாதார அரசியல் பின் தங்கல்களாலும், குதர்க்கங்களாலும், சரித்திரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணா நிலைகளாலும் உருவாகும் சர்வாதிகார நிலைப்பாடுகளுள் ஒன்றாக்கப்படுபவை.

அரசமைப்பு மாறாது ஜனநாயக வழிமுறைகள், சமூக அரசியல் பண்பாடுகள் ஆகப் போவதில்லை. அரசாங்கம் மாறிடுவதால் அரசமைப்பு மாறிடும் என்ற உத்தரவாதங்களும் இல்லை.

எமது புதிய மனித உரிமை சாசனங்களை ஏற்றிடுவதற்கு அரசமைப்பில் மாற்றங்கள் நிச்சயமாக வேண்டும். ஆனால், எமது புதிய மனித உரிமைச் சாசனங்களால் சமுதாய மாற்றங்களை ஏற்படுத்திடலாம் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை.

சிறீலங்கா அரசாங்கம் தீவின் அரசினை பாதுகாக்கவே சர்வதேசிய நாடுகளின் ஆதரவைப் பெற்றது. ஆதலால், அந்த அரசாங்கமோ அல்லது இன்றுள்ள அரசமைப்போ சர்வதேசிய நாடுகளால் தேர்ந்து கொள்ளப் பட்டுள்ளன என்பதற்கில்லை. எனவே, நாட்டின் அரசமைப்பை நாட்டின் ஒருமை உடையாதவாறு மாற்றி அமைத்திட சர்வதேசிய நாடுகள் தடையாக இருக்கப் போவதில்லை.ஆதலால், அதனை மாற்றிட அவை முயலும் என்பதற்கும் இல்லை.

மகிந்தாவின் அரசாங்கமோ, புலிகளைப் போலவே தனிமனித, சமூக ஜனநாயங்களை துச்சமென மதித்து நடப்பதால், மக்களது ஆதரவு என்பது புலிகள் கொண்டதை போன்றே அமைகிறது. அதாவது, எதிரிகள் வெறுப்புகள் இறுமாப்புகள் என்பவற்றிலும், பல்லினத்தையும் உள்ளடக்காததாகவும் ஏன், சிங்கள மக்களது பூரணமான ஆதரவை கொண்டது என்ற பெயரிலேயும், தங்கியவையாகவும் உள்ளது என்பது எமது கணிப்பு. இதனை அரசையும் அரசாங்கத்தையும் குழப்பிக் கொள்பவர்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை.

தமது அரசியல் ஜாரிகளை அழித்தொழித்து, பொருளாதாரத்தின் குரல்வளையை கைகளில் கொண்டு எப்படி புலிகள் எமது சமுதாயங்களிடையே வெற்றுவெளியை (vacuum) உருவாக்கினார்களோ, அதேபோன்ற நிலமையே சிறீலங்காவில் மகிந்தாவின் குடும்ப அரசியல் உருவாக்குகின்றது என்பதை அவர்களது சிங்கள ஆதரவாளர்கள் கூட மறுப்பது குறைந்து வருகிறது.

ஆனால், தமிழ் சமுதாயங்களும், அவற்றின் பொருளாதாரமும் ஒப்பிடக் கூடியவை அல்ல. அங்கே மகிந்தா குடும்பங்களைத் தாண்டியும் பொருளாதாரப் – பிரதேசங்கள் உண்டு. ஆயினும், சிறீலங்காவின் பொருளாதாரமோ வெளிநாட்டு ஏற்றுமதி, அந்நியச் செலவாணி-உழைப்பு (remittance), உல்லாசச் துறை போன்றவற்றில் தங்கியது. அதன் துணிவகை உற்பத்தி எவ்வாறு பின்னடைகிறது என்பதையும், தீவிலிருந்து அரசின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படும் பாக்கிஸ்தானியர் பங்களா தேசத்தவர் தமது தொழிலாலைகளை அகற்றுவதையும் அவதானிப்பவர்கள் சர்வதேசிய சந்தையைப் பற்றியும் பிராந்திய அரசியலின் ஓட்டங்களைப் பற்றியும் சற்றே ஊகித்துக் கொள்வர்.

மேலும், சீனாவருகிறது என்ற அமரிக்க இந்தியப் பிரச்சாரத்தை உள்வாங்கியவர்கள் பலர். ஆனால், அமரிக்கரும் இந்தியரும் சிறீலங்காவில் மூலதனம் இடும் நாடுகள் பட்டியலில் முன்னிடம் வகிக்க, சீனா ஐந்தாவதாக இருப்பது கவனிக்க வேண்டியது. இவ்விடத்திலேயே, மனித உரிமைகள் பற்றிய மேற்கத்திய நாடுகளது குரல்கள் பற்றி நாம் முன் கூறிய குறைபாடுகளுக்கு மேலாக, சிந்திக்க வேண்டி உள்ளது. அண்மையில், ஐரோப்பியரது Airbus விமானங்கள் வாங்குவதை ரத்து செய்து அமரிக்கரது Boeing விமானங்களை வாங்குவது என்ற சிறீலங்காவின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளாவது புரிகிறது. அதற்கு முன்னர், அமரிக்க குழு இலங்கை விஜயத்தை மேற்கொண்டதையும், அதன்போது இடம்பெற்ற பேரம் பேச்சில் மகிந்தாவின் அரசாங்கம் அவர்களது வர்த்தக விடயங்கள் குறித்த சகல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது என்ற தகவலும் வெற்றுப் பிரச்சாரங்கள் அல்ல என்பதும் கவனிக்க வேண்டியது. இவ்வாறு, மேற்கத்தைய நாடுகளது விஜயங்கள், உலக அரங்கின் விடயங்கள் குறித்து அவற்றின் முன்னரும் சிறீலங்கா அரசதரப்பினரும் மேற்கத்தைய நாடுகளதும் நடந்த கொள்ளும் விதமும் மாறுபட்டவை என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

ஆக, தன்னுள்ளோ வெற்றிடத்தை ஏற்படுத்தும் அரசாங்கம் வெளியே தனது தேவைகளுக்கு தங்கவேண்டி இருக்கும் என்பதும், தனது குடும்ப அரசியல்-வியாபார நிறுவனத்தை காப்பாற்ற, பிரச்சாரத்திற்கு எதனைக் கூறினாலும், பின்புறத்தில் எதனையும் செய்யத் தயாராக இருக்கும் என்பதும் எமது கணிப்புகள். இவ்வகையிலேயே மனித உரிமைகள் என்ற பெயரில் பலியான தமிழ் மக்களும் பாவிக்கப்படுகிறார்கள் என நாம் ஐயம் கொள்வதில் தப்பில்லை.

ஆகவே, எங்கிருந்து என்னதான் சத்தங்கள் வந்தாலும், ஐ.நா. மனித உரிமைச் சபையில் மேற்கத்தைய நாடுகளின் பிரேரணை (i) கடந்த பிரேரணையிலும் பார்க்க நிபந்தனைகள் என்ற ரீதியில் பலவீனமானதாகவும் (ii) மேற்பார்வை என்ற விடயம் அற்றதாகவும் இருக்கும் என்பது எமது கணிப்பு.

இந்த வட்டரங்கு நாடகங்கள் ஒவ்வொன்றின் போதும் முடிவின் நஸ்டத்தை சந்திப்பவர் தீவிலுள்ள சகல மக்களுமே என்பதில் எமக்கு ஐயமே இல்லை. இங்கே தமிழர் சிங்களவர் இஸ்லாமியர் என பேதம் காண்பவர்கள், மற்றவர் கண்களையும் குருடாக்குவதற்கு முயலும் குருடர்களாகவே இருப்பர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com