|
||||
|
மீண்டும் கொம்பு சீவாதீர்கள்
(நடேசன்
தற்போது இலங்கைத்
தமிழ் அரசியலை எழுதுவது மிகவும் சலிப்பான விடயமாகிறது. உமலில் இருந்து
வெளியேறிய
நண்டு மாதிரி பக்கவாட்டிலே
சென்று மீண்டும் அதே புள்ளியை
சென்று அடைகிறது.
எத்தனை வருடங்கள்
கழிந்தாலும்
தொடக்கப்
புள்ளியை
விட்டு முன்னேறாது.
இதில் ஒரு வசதி தமிழ்
நாட்டு மெகா சீரியல்போல்
ஒருமாதம்
விடுமுறை
போகையில்
பார்க்காது
இருந்தாலும்
மீண்டு வந்து கலந்து
கொள்ளமுடியும்.
இரசித்துக் கொள்ள முடியும் தற்போது தமிழ் நாட்டில்
நடக்கும்
நாடக அரசியல்,
அத்துடன்
புலம் பெயர்ந்த தமிழ் புலிபிரமுகர்கள்
இந்த ஜெனிவா
கூட்டத்தொடரை
ஓட்டிய நாட்களில்
நடத்தும்
சின்னமேள
கூத்துகளும்,
ஆழமான சிந்தனையில்லாமல்
பார்ப்பவர்களுக்கு,
இரசிக்கக்
கூடிய விடயங்களாக
இருக்கும்.
இரண்டு தடவைகள் ஜெனிவா கூட்டத்தொடரில்
பார்வையாளராக
பங்கு பற்றிய எனக்கு டைரக்டர் சீமான் புலிக் கொடியோடு நின்றதை போட்டோவில்
பார்த்தபோது
வடிவேலின்
காமடிகளை
இப்ப டைரக்டரே
செய்வது போல் இருந்தது.
அந்தக்காலத்து பாக்கியராஜ்
ஞாபகம் வந்தது. சில நண்பர்கள்
கொண்டைக்கடலை
தின்ற வயிறு மாதிரி
இது கொஞ்ச
நேரத்துக்குப்பின்
அமைதியாகி
விடும். பேசாமல் இரு என்கிறார்கள்.
விமானம் வைத்து வேடிக்கை காட்டி, கப்பலோட்டிய
வல்வெட்டித்துறை
‘தலையே‘ இருந்த இடம்
இல்லாமல்
போய்விட்டது.
இவர்கள் என்ன செய்ய முடியும்
என்கிறார்கள்.
அதுவும் உண்மைதான்.
நான் இங்கே சொல்ல வருவது
சாதாரணமான
சிந்தனைக்கு
அப்பாற்பட்டது.
வருங்காலத்து சந்ததியனருக்கும்
பல வருடங்களின்
பின் பின்பும்
ஏற்படுத்தும்
தாக்கம் பற்றியது. இலங்கைத்தமிழர்கள் மனத்தில் எழுந்த ஆயுதத்தை பற்றிய சிந்தனையும் 83 ன் பின் ஆயுதபோராட்டமும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல மற்றையோரும் ஆதரித்தது. இதற்காக என் போன்றவர்களும் இதில் முடிந்த பங்கை ஏற்றோம். அப்பொழுது இலங்கைத் தமிழன் இலங்கையின் வன்முறையான அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்து தனது வாழும் உரிமைக்காக போராடுகிறான் . ஆயுதம் இலங்கை அரசை பேச்சுவார்தைக்கு கொண்டு வரும் உத்தியாகவும் அரசியல் தீர்வில் பேரத்தில் ஈடுபடுவதற்கான முதல் நடவடிக்கை என்பது தான் பலரது எண்ணமாக இருந்தது.
இந்த
போராட்டத்தில்
தமிர்களுடன்
முஸ்லீம்
மக்கள் சிங்கள மக்களில் கணிசமானவர்கள்
சேர்ந்து
கொண்டார்கள்
மட்டுமல்ல,
சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்
என்பதற்கு
பல ஆதாரங்கள்
உள்ளன. அக்காலத்தில் சிங்கள
மக்களுக்கு
எதிரான இனத்துவேசமோ
முஸ்லீம்
மக்கள் மீது வெறுப்போ
இருக்கவில்லை,
இருக்கவும்
முடியாது.
காரணம் அவர்கள்
ஒன்றாக அரசை எதிர்த்து
ஆயுதம் ஏந்தினார்கள்.
இந்த நிலைமையை
விடுதலைப்புலிகள்
மாற்றினார்கள்
அப்பாவி சிங்கள மக்களை அநுராதபுரத்தில்
கொலை செய்வதின்
மூலம் இந்த ஆயுதப்போராட்டத்தை
சிங்கள இனத்திற்கு
எதிரான போராக மாற்றினார்கள்.
இது சம்பந்தமாக
நான் 2001 ல்
எழுதிய கட்டுரையில்
இருந்து சிறிய பகுதியைத்தருகிறேன்…
84ம்
ஆண்டு நடந்த அனுராதபுர
படுகொலை அன்று சென்னையில்
எனக்கும்
ஜேவிபியில்(JVP) இருந்து பிரிந்த ஒரு சிங்கள
நண்பருக்கும்
நடந்த சம்பாசனையை
இங்கு நினைவுகூர
விரும்புகிறேன்.
தைபோயிட்நோய்
பீடித்தவரை
சுகம் விசாரித்துக்கொண்டிருந்தபோது
அங்கு TELO இயக்கத்தைச்
சேர்ந்த ஒரு இளைஞன்
வந்து அனுராதபுரத்தில்
இருநூறுக்கும்
மேற்பட்ட
சிங்களவர்கள்
கொல்லப்பட்டுள்ளனர்.
இதை விடுதலைப்புலிகள்
செய்துள்ளார்கள்
எனக்கூறிச்
சென்றான்.
சிங்கள நண்பன்
தலையில் கைவைத்துவிட்டு
'ஒக்கம இவறாய்" (எல்லாம் நான் உடனடியாக
இருநூறு சிங்களவர்கள்
கொல்லப்பட்டுவிட்டதற்காக
கூறுகிறாயா
என வினவினேன். இல்லை இதன்பின்
இறக்கப்போகும்
தமிழர்களை
எண்ணி கவலைப்படுகிறேன்
என பதிலளித்தார்.
தயவுசெய்து எனக்கு
விளக்கமளிக்கும்படி
கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில்
தமிழ்ப்போராளிகள்,
விடுதலைப்போராளிகள்
அல்ல. மூன்றாவதாக சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் எப்பொழுதும் அங்கீகாரம் பெறப்போவதில்லை. நீங்கள் குறுகிய காலத்தில் விளம்பரமும் புகழும் பெற்றாலும் காலப்போக்கில் இதனால் ஒரு பயனும் ஏற்படாது. So this is morally, strategically and tactically wrong operation என கூறி முடித்தான்.
அதன் பின் நடந்த இந்தப்
போராட்டம்
பிரபாகள்
குழுவால்
தமிழ் இனத்தினர் இலங்கையில் சமான ஒப்பந்தங்கள்
வந்த போது
பல புத்திமான்கள்
பேச்சு
வார்ததையில்
சமாதானம்
வரும் என நம்பினார்கள் . அதைவிட புலிகள் நிரந்தரமாக இருப்பார்கள்
என்ற மன
நிலையும்
பெற்றார்கள்
இந்த நம்பிக்கையில்தான் ஆரம்பகாலத்திலேயிருந்து
புலிகளை எதிர்த்த கவிஞர்கள்
சேரன், ஜெயபாலன் இன்னும் பெயர் சொல்லாத
பல யாழ்பாணப்
பல்கலைக்கழகத்து
புத்திஜீவிகள், அடிசறுக்கி
தமிழ் தேசியவாதம்
தோலைத் தாங்களே நெய்து அந்த தோலை
தங்களில்
போர்த்திக்
கொண்டு புலிகளுடன்
உறவாடினர். புலம்பெயர்ந்த பன்னாடைகள்
இதை எம்
ஜீ ஆர்
உருவாக்கிய
அண்ணாயிசம்
போல்
கைப்பற்றிக்
கொண்டு புதிய விளக்கம்
கொடுத்தார்கள். புலம் பெயர்ந்த
நாடுகள்
எல்லாவற்றிலும்
அரசியல் ஆய்வாளர்கள்
என பலருக்கு
பட்டமளிப்புகள்
நடந்தது.
புலம் பெயர் வானொலிகள்,
இணையங்கள்
தமிழ்தேசியத்தை
உருவாக்கியவர்களுக்கு
மேலாக அதை முறுக்கி
பெரிய கயிறாக திரித்தார்கள்.
உள்நாட்டைப் பொறுத்தவரை
தமிழ்தேசியவாதம்
பரிசோதனைக்
குழாயில்
உருவாகிய
பிண்டம்.
அது அப்பனும்
ஆத்தையும்
இல்லாத பிண்டமாக தனது முடிவை
தானே தேடிக்கொண்டது . காரணம் மேதகு பிரபாகரனுக்கு
இப்படியான
நுட்பமான
கருத்தியல்களிலோ,
அவை உருவாக்கிய
வாதங்களிலோ
அக்கறையோ
பொறுமையோ
இருக்கவில்லை.
மாவிலாற்றை மூடிவிட்டு
மூதூரில்
உள்ள சில
முஸ்லீம்களுக்கு
பாடம் புகட்டவேண்டும்
என நினைத்து
போரைத் தொடங்கினார்.
அது 2009 ல் தமிழர்களுக்கு
சங்கூதியதாக
முடிவடைந்தது. தற்போதைய நகைச்சுவை
கட்டங்களுக்கு
வருவோம். மூன்று வருடம் கடந்த பிறகு இந்த மூன்று
வருடங்கள்
ஏன் தேவைப்பட்டது? பாலசந்திரனினின் படம் கூட இராணுவ
இணையத்தில்
உடனே வெளிவந்ததே? சரி நான்
கேட்கிறேன் சிங்கள படைகள் குண்டு போடுவார்கள்
என்று தெரியாமல்த்தான்
தமிழர்களை
விடுதலைப்புலிகள்
யுத்த அரங்குக்கு
அழைத்து போனார்கள்
என
தர்க்கத்திற்காக
வைத்துக்கொள்வோம்.
வன்னியில் பாடசாலை
நடக்கவில்லை
பாடசாலைகளை
நடத்திய அதிபர்களும்
கத்தோலிக
மதகுருமார்களும்
பிள்ளைகளை
புலிகளிடம்
பிடித்துக்
கொடுப்பதில்
தீவிரமாக
இருந்தார்கள்.
அவர்களுக்கு சிந்திக்க
நேரமில்லை.
இப்பொழுதுத தமிழகத்தில்
உள்ளவர்களுக்கும்
மற்றும் உருத்திரகுமாரன்
போன்ற
படித்தவர்களுக்கு
அது ஏன்
புரியாமல்போய்விட்டது?. உண்மையில் அக்கறை இருந்தால்
அப்பவெல்லோ
செய்திருக்கவேண்டும்? நீங்கள் அந்தகாலத்தில் இதைப் புரிந்து கொள்ள முடியாத படுமுட்டள்களாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிணங்களில் வருமானம் தேடும் புத்திசாலிகளா? உங்களை பற்றி எழுதுவது எனது வேலை இல்லை அக்காலத்தில் பிரபாகரன் ஒன்றரைக் கோடி சிங்களவரை எதிரியாக்கியதும் பின்பு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை கொன்று இந்திய மக்களை எங்களுக்கு எதிரிகளாக்கிய படுமுட்டாள்தனமான வேலையிலும் பார்க்க மிகமோசமான வேலையை இலங்கைத்தமிழருக்கு எதிராக இப்பொழுது செய்கிறர்கள் .
தமிழ்நாட்டில்
உள்ள
அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில் வைத்து புத்த பிக்குகளை
அடிப்பது
துன்புறுத்துவதின்
மூலம் இலங்கைத் தமிழருக்கு
எதிராக உலகத்தில்
உள்ள அறுபது
கோடி புத்த
மக்களையும்
அவர்கள் அரசாங்கத்தையும்
தூண்டுகிறீர்கள்.
நான் எழுதுவதில்
ஏதாவது தமிழகத்தின் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கோ, அல்லது திராவிட முன்னேற்றகழக அரசில் உள்ள வன்மத்தை தீர்த்துக் கொள்ளவோ, மொத்த இந்தியாவுக்கு எதிரான உங்கள் நோக்கத்தில் பகடைக்காய்களாக்க இலங்கைத் தமிழர்களை பாவிக்கும் நோக்கம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் , கத்தோலிக்க மதகுருமார்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் , இலங்கை தமிழ்த் தலைவர்கள் தயவு செய்து ஏதாவது விடயத்தை செய்ய முதல் அதன் விளைவுகளை தொலை நோக்கத்தில் சிந்தியுங்கள். இலங்கைத்தமிழர்கள் இலங்கையில்த்தான் வாழமுடியும். வேறு வழி அவர்களுக்கு இல்லை. சிங்கள இனவாதத்தின் கொம்பை சீவாதீர்கள். நாங்கள் தான் மீண்டும் இரத்தம் சிந்த வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |