|
||||
|
உலகக் கோப்பையில்
இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 9வது வெற்றி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று ஹாமில்டன் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது . இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் நியூசிலாந்து அணியும் இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக எதிராணிகளை ஆல்அவுட் செய்துள்ளது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷிகன் தவான், ரோகித் சர்மா ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை பின்னி எடுத்தது. 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஷிகர் தவான் 84 பந்துகளில் சதமடித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.ஆனால் அடுத்த பந்தை சந்தித்த ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் விராட் கோலியுடன் ரஹானே இணைந்தார். இந்த ஜோடி எளிதாக இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர். இந்திய அணி 36.5 ஓவரில் 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 44 ரன்களும், ரஹானே 33 ரன்களும் எடுத்தனர். இத்துடன் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 9வது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 ஆட்டங்களும் இந்த உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களும் அடங்கும். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கங்குலி தலைமையில் 8 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்திய தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அயர்லாந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ் தானை சந்திக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |