Contact us at: sooddram@gmail.com

 

தெறி மாஸ்..!

'நாக் அவுட்’ ஜுரம் தொற்றிக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகக் கோப்பையில்!

பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணியின் பயணம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்க, உற்சாகத்தில் திளைக்கிறது டீம் இந்தியா. ஆனால், எப்போதும் அல்லாத அளவுக்கு இந்த முறை நியூஸிலாந்து அசுர பலத்துடன் விளையாடுவது அனைத்து முன்னணி அணிகளுக்கும் கிலி கிளப்பியிருக்கிறது. அதுவும் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறினால், நியூஸிலாந்துடன் மோதும் சூழல். அந்தப் போட்டி நியூஸிலாந்திலேயே நடக்கும் என்பதால், சொந்த மண் பலன் உண்டு நியூஸிலாந்துக்கு. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான அந்த மைதானம்தான், இந்தியாவுக்கு உண்மையிலேயே சோதனைக் களம்!

உலகக் கோப்பைத் தொடரின் மெகா ஹிட் விளம்பரம் 'மோக்கா மோக்கா’! 'இந்தியாவை, உலகக் கோப்பையில் இந்த முறையேனும் பாகிஸ்தான் தோற்கடிக்குமா?’ என பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பட்டாசுகளுடன் காத்திருப்பது போன்ற அந்த விளம்பரம் அடுத்தடுத்த போட்டிகளுக்கும் தொடர்கிறது. அந்தப் 'பளிச்’ ஐடியா பிடித்தவர் கேட்டகி என்கிற பெண். இவர் நடத்திவரும் 'பபுல்ராப்’ எனும் நிறுவனம்தான் இந்த விளம்பரத்தைத் தயாரித்தது. 'இந்தியா, பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்தால் ஒளிபரப்பப்பட வேண்டிய விளம்பரத்தையும் எடுத்துவைத்திருந்தோம். நல்லவேளை அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை’ என்கிறார் விளம்பரத்தை இயக்கிய சுரேஷ் திரிவேணி.

உலகக் கோப்பையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் என்ன? ஒரு போட்டிக்கு 4 லட்சம் ரூபாய். களத்தில் நிற்கும் நடுவர்களின் ஒரு போட்டிக்கான சம்பளம் 2 லட்சம் ரூபாய். இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வென்றால், அணியில் இடம்பிடித்திருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். தவிர, மத்திய அரசின் அன்பளிப்பு, மாநில அரசுகளின் அன்பளிப்பு என கோடிகளில் திளைப்பார்கள்.

உலகக் கோப்பை தொடர்பாக 'கூகுளில்’ அதிகம் தேடப்பட்ட விஷயம்..? பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபானின் உயரம் எவ்வளவு என்பதுதான்! அடுத்தபடியாக விராட் கோஹ்லியின் 'மோஹாக்’ ஹேர்ஸ்டைல். முதல்முறையாகத் தீவிரவாதத் தாக்குதல் பற்றி இல்லாமல் நல்ல விஷயத்துக்காக இணையதளத்தில் ஆஃப்கானிஸ்தான் தொடர்பான செய்திகள் பகிரப்பட்டிருப்பதாகச் சொல்கிறது கூகுள். போர் சேதங்களில் இருந்து மீண்டு, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி களத்தில் விளையாடுவது குறித்த செய்திகளுக்கு அவ்வளவு லைக்ஸ் குவிகின்றன!

இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு முக்கியமான அணிகளிடமும் தோல்வியடைந்ததால் விரக்தியில் இருக்கிறார் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏ.பி.டி வில்லியர்ஸ். 'நான் மட்டுமே தென்ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்துவிட முடியாது’ எனப் புலம்பும் டி வில்லியர்ஸின் விளையாட்டு வாழ்க்கை அசரடிக்கிறது. எப்படி பந்து வீசினாலும், படுத்து, புரண்டு, எகிறி அடிக்கும் டி வில்லியர்ஸுக்கு ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் 'மிஸ்டர் 360’. காரணம், டி வில்லியர்ஸ் விளையாடாத விளையாட்டே இல்லை. தென் ஆப்பிரிக்கா கால்பந்து அணி, ஹாக்கி அணிகளில் இடம்பிடித்திருந்தவர் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்கா ஜூனியர் ரக்பி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். அதோடு 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்தவர். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தென்ஆப்பிரிக்கா ஜூனியர் அணிக்காக விளையாடியவர். 19 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான பேட்மிட்டன் போட்டியில் தேசிய சாம்பியன். படிப்பிலும் டி வில்லியர்ஸ் கில்லாடி. தேசிய அளவிலான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருது பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 52.93 சதவிகிதம், ஸ்ட்ரைக் ரேட் 95 சதவிகிதம் வைத்திருக்கும் உலகின் ஒரே ப்ளேயர் டி வில்லியர்ஸ்தான். அம்மாடி!

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல்போனதற்கு தோனி மட்டுமே காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங். அதற்கு அப்போது பதில் சொல்லாத தோனி இப்போது, 'சுயநலத்துக்காக விளையாடுபவர்கள் அவசியம் இல்லை. யுவராஜ் சிங் இடத்தில் ரெய்னா சிறப்பாக ஆடுகிறார்’ எனக் கூறி சர்ச்சைக்குத் திரி கிள்ளியிருக்கிறார். 'ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும் வீரர்கள் இந்திய அணியில் பொதுவாகச் சிறப்பாக ஆடியது இல்லை. ஆனால், அந்த இடத்தில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடினார். விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றவர்களும் முன்னர் ஐந்தாவது பேட்ஸ்மேனாகத்தான் களம் இறங்கினார்கள். அவர்களால் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால், இப்போது அந்த இடத்தில் ரெய்னா சிறப்பாகச் செயல்படுகிறார்’ என ரெய்னாவுக்கு ஓகோ ஆதரவு அளிக்கிறார் தோனி.

இதுவரை இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பையின் கால் இறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளின் அட்டவணையை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள். 'ஏ’ பிரிவின் அணிகள் கால் இறுதிப் போட்டிகளில் எங்கே விளையாடும் என்பது ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதன்படி ஆஸ்திரேலியா எவ்வளவு புள்ளிகள் பெற்றாலும் அவர்கள் மார்ச் 20-ல் நடக்கும் மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் அடிலெய்டில் விளையாடுவார்கள். அதேபோல் புள்ளிப் பட்டியலில் நியூஸிலாந்து எந்த இடம் பிடித்தாலும், அவர்கள் நான்காவது கால் இறுதிப் போட்டியில் வெலிங்டனில் விளையாடுவார்கள். 'கால் இறுதிப் போட்டிகளில் தங்கள் அணிகள் எங்கே விளையாடுகிறது என ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்தால்தான், அவர்கள் டிக்கெட் புக் செய்ய வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு’ என்கிறது ஐ.சி.சி. ஆனால், அது மட்டும்தான் காரணமா என்பது... ஆஸ்திரேலியாவோ நியூஸிலாந்தோ கோப்பை வென்றால்தான் தெரியவரும்!
(சார்லஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com